Search
  • Follow NativePlanet
Share
» »கொதிக்கும் நீரை ஊற்றினாலும் பனிக்கட்டியாக மாறும் அதிசயம் – மைனஸ் 70 டிகிரி குளிரால் அவதிப்படும் மக்கள்!

கொதிக்கும் நீரை ஊற்றினாலும் பனிக்கட்டியாக மாறும் அதிசயம் – மைனஸ் 70 டிகிரி குளிரால் அவதிப்படும் மக்கள்!

நம்மால் இந்த மார்கழி மாத குளிரையே தாங்கிக் கொள்ள முடியவில்லையே என்று சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறோம். ஆனால் உலகின் இந்த நகரில் சாதரணமாக மைனஸ் 50 டிகிரி குளிரில் மக்கள் மிகவும் சஜமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கே கார்களின் என்ஜின்களை ஆப் செய்ய முடியாதாம், பிரிட்ஜ் உபயோகிக்காமல் வெளியே பைகளில் பால், பழங்களை வைத்து பதப்படுத்திக் கொள்கின்றனராம், சூடான நீரை வெளியே கொட்டினாலும் பனிக்கட்டி போல சட்டென மாறுகின்றதாம். இந்த வினோத நகரம் எங்கே இருக்கிறது தெரியுமா?

உலகிலேயே அதிக குளிரான நகரம் - யாகுட்ஸ்க்

சுமார் 355,500 மக்கள்தொகையுடன், யாகுட்ஸ்க் ரஷ்யாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பிராந்திய நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அதன் தீவிரமான சபார்க்டிக் காலநிலை காரணமாக, உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதில் சுற்றுலா சிறிய பங்கு வகிக்கிறது. ஆனால் பூமியின் குளிர்ந்த இடத்தில் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பும் சாகசப் பயணிகளை நகரம் இன்னும் ஈர்க்கிறது. ஏனென்றால் குளிர் காலத்தில் யாகுட்ஸ்க் நகரம் மைனஸ் 50 முதல் 70 டிகிரி வரையிலான வானிலையை எதிர்கொள்கிறது. இப்படி ஒரு குளிரை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாதே!

Yakutsk

ரஷ்யாவின் மிக முக்கிய நகரம் - யாகுட்ஸ்க்

கிழக்கு சைபீரியாவில் உள்ள ரஷ்யாவின் சகா குடியரசின் தலைநகரான யாகுட்ஸ்க், உலகின் மிகவும் குளிரான இடங்களில் ஒன்றாக பரவலாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பெரிய பகுதிகள் தற்போது குறைந்த வெப்பநிலையை அனுபவித்து வருகின்றன மற்றும் யாகுட்ஸ்க் அசாதாரணமான நீண்ட குளிர்ச்சியைக் காண்கிறது. ஜனவரி நகரத்தின் குளிரான மாதமாகும், பெரும்பாலானவர்கள் உறைபனிக்கு பழக்கப்பட்டிருந்தாலும், தொலைதூரப் பகுதியில் வசிப்பவர்கள் சூடாக இருக்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Yakutsk coldest city

தீவிரமான குளிர்காலத்தை எதிர்கொள்ளும் யாகுட்ஸ்க் நகர மக்கள்

யாகுட்ஸ்க் குளிர்காலம் தீவிரமானதாக இருக்கலாம் - ரஷ்ய தரத்தின்படி கூட. கடுமையான குளிர் கடுமையான உடல் அபாயங்களை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். வெளிப்படும் தோலை மரத்துப்போகும் அளவுக்கு காற்று குளிர்ச்சியாக இருக்கிறது. வெளியே எங்காவது நடந்து செல்ல வேண்டும் என்றால் மக்கள் பத்திற்கும் மேற்ப்பட்ட ஆடைகளை அணிந்து, ஜாக்கெட்டுகள் அதன் மேல் அணிந்து செல்கின்றனர். உடலின் எந்த பகுதியும் வெளியே தெரியாமல் இருப்பதை உறுதி செய்கின்றனர்.

Yakutsk coldest place

குளிர்காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன?

1. இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்காலத்தில் தங்கள் கார்களை ஆஃப் செய்ய மாட்டார்களாம். தொடர்ந்து 20 நிமிடத்திற்கு ஆஃப் செய்து வைத்திருந்தாலும் கூட, சுற்றி பனி படர்ந்து கார் நின்று விடுமாம். இதனை திரும்பவும் ஆன் செய்ய கோடைகாலம் வரும் வரை காத்திருக்க நேரிடுமாம்.

2. துணிகளை துவைத்து வெளியே காயப் போட்டால், சில நிமிடங்களுக்குள் அவை தட்டு போல உறைந்து விடுகின்றனவாம்.

3. வெளியே அசாதாரணமாக வானிலை மைனஸ் 50 இல் இருந்து 70 வரை இருப்பதால் சூடான நீரை எடுத்து வெளியே ஊற்றினாலும் கூட அது மறுகணமே பனித்துகள்களாய் கீழே வந்து கொட்டுகின்றதாம்.

4. பழம், பால், சாக்லேட் போன்ற குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடிய பொருட்களை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது இல்லையாம். குளிர்காலத்தில் இங்குள்ள மக்கள் குளிர்சாதனப்பெட்டியை ஆப் செய்து வைத்துவிட்டு, ஜன்னலுக்கு வெளியே ஒரு பை அல்லது கூடையில் இந்த பொருட்களை கட்டி வைக்கின்றனர். அவை எல்லாம் கெட்டே போகாது என்று கூறுகின்றனர் அவ்வூர் மக்கள்.

5. குளிர்காலத்தில் வசிப்பதற்கு என அனைத்து வீடுகளிலும் ஒரு அண்டர்கிரவுண்ட் தளத்தையும் அவர்கள் சேர்த்தே கட்டி வைத்து விடுகின்றனர்.

6. வெளியே செல்லும் போது குறைந்த பட்சம் 10 துணியாவது அணிந்து கொண்டு தான் வெளியே செல்கின்றனர். முகம், கை, கால், தலை ஏன் விரல் நுனி கூட வெளியே தெரியாமல் தான் செல்லுவார்களாம்.

7. அதே போல வெளியே இரும்பு கம்பங்களில் தெரியாமல் உடல் பட்டுவிட்டால் கூட தோல் கம்பத்தோடு ஒட்டிக் கொள்ளுமாம் அதனால் வெளியே எந்தப் பொருளையும் தொடுவது கூட இல்லையாம்.

8. வெளியே உள்ள பாத்ரூம்களுக்கு செல்லும் மக்கள் கையேடு ஒரு குச்சியையும் எடுத்துச் செல்கின்றனர். வெளியேறும் நீர் கூட சட்டென கட்டிக் கொள்ளுமாம். அதனை அடித்து உடைப்பதற்கு குச்சி வேண்டும் தானே!

என்ன அதிசயமாக இருக்கிறது இல்லையா? நாம் எல்லாம் இந்த ஊரில் இருந்தால் ஒரு நாள் கூட தாக்கு பிடிக்க மாட்டோம் இல்லவா? உங்கள் கருத்து என்ன?

More News

    Read more about: interesting places russia
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+