» »இந்திய கடலின் நடுவே 105 வருடங்களாக நிகழும் ஒரு அட்டகாச சாகச ரயில் பயணம்! போலாமா?

இந்திய கடலின் நடுவே 105 வருடங்களாக நிகழும் ஒரு அட்டகாச சாகச ரயில் பயணம்! போலாமா?

Posted By: Udhaya

இயற்கையில் அமைந்த அதிசயங்கள் போக, மனிதர்களால் கட்டப்படும் அதிசயங்களில் ஒன்றுதான் பாலங்கள்.

பொதுவாக, பாலங்கள் கணக்கியலின் அடிப்படையில்தான் கடடப்படுகின்றன. எவ்வளவு உயரம், எவ்வளவு நீளம் என்பதும், அந்த பாலத்தில் எந்த வேகத்தில் ரயில் செல்லவேண்டும் என்பதும் திட்டமிடப்பட்டுத்தான் பாலங்கள் கட்டப்படும்.

அப்படி அமைக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழகத்தின் ஒரு பாலம் பற்றிதான் பார்க்கப்போகிறோம். கடலுக்குள் செல்லும் ரயில் பயணம்.

பாம்பன் பாலம்

பாம்பன் பாலம்

இராமேஸ்வரத்தின் பாக் ஜலசந்தியின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது இந்த பாம்பன் பாலம்.


Wandering Tamil

 இயற்பெயர்

இயற்பெயர்

திறந்து மூடும் வகையிலாக நீண்டிருக்கும் புகழ் பெற்ற பாம்பன் பாலத்தின் அலுவல் ரீதியான பெயர் அன்னை இந்திரா சாலை பாலம் என்பதாகும்.

Ashwin Kumar

 தீவு

தீவு

இந்த பாலம் தான் இராமேஸ்வரத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே பாலமாகும். கடல் மீது கட்டப்பட்டுள்ள பாலங்களில் இதுதான் முதல் பாலமாகும்.

Sunciti _ Sundaram

 பெருமை

பெருமை


2.3 கிமீ நீளமுள்ள இந்த பாலம் நாட்டிலேயே இரண்டாவது பெரிய கடற்பாலமாக உள்ளது.

Wandering Tamil

 கட்டப்பட்ட ஆண்டு

கட்டப்பட்ட ஆண்டு

இந்த பாலம் தென்னக இரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியாகவே கட்டப்பட்டுள்ளது. 1887-ம் ஆண்டு துவங்கப் பட்ட இந்த பாலம் 1912-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

Mahesh Pandey

 நீல் மந்திர்

நீல் மந்திர்


இந்த பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த போதே இந்த பணியில் ஈடுபட்டிருந்த வேலையாட்கள், ஏழு வட்ட வடிவ முகடுகளையுடைய நீல்-மந்திர் என்ற புகழ் பெற்ற கோவிலையும் அருகில் கட்டினார்கள்.

BOMBMAN

 உறுதி

உறுதி

இதை கட்டியவர்களின் கடின உழைப்புக்கு சான்றாகவும், உறுதியாகவும் காலத்தை கடந்து இந்த பாலம் நின்று கொண்டுள்ளது.

Arun

 கப்பல் பயணம்

கப்பல் பயணம்

இந்த பாலத்தின் தூக்கி மூடும் வசதியால் இந்த பாலத்திற்கடியில் கப்பல்களும் சென்று வர முடிகிறது.

Ashwin Kumar

 நூற்றாண்டு

நூற்றாண்டு

இந்த பாலம் கட்டப்பட்டு 105 வருடங்கள் ஆகின்றது.

Ashwin Kumar

 கடல் அரிப்பு

கடல் அரிப்பு

உலக அளவில் அதிகமாக கடல் அரிப்பு ஏற்படும் இரண்டாவது பகுதியாக விளங்கும் இந்த இடத்தில் அமைந்துள்ளது பாம்பன் பாலம்.

Ashwin Kumar

Read more about: travel