ஒரு இடத்திற்கு சென்று சுற்றிப் பார்ப்பதை விட அங்கு எப்படி செல்கிறோம் என்பது மிக முக்கியமானது. வசதியற்ற ஒரு முறையை தேர்வு செய்து அப்படி பயணித்தால், செல்கின்ற இடத்தில் சுற்றி பார்க்க இயலாமல் ரூமில் ரெஸ்ட் எடுக்கவே தோன்றும்.ஆகவே, பஸ், ரயில், விமானம் எதுவாக இருந்தாலும், நமக்கு வசதியான இருக்கைகளை தேர்வு செய்வது மிக அவசியம், குறிப்பாக ஜன்னலோர இருக்கைகள் என்றால் கூடுதல் ஸ்பெஷல் தான்!
ஆனால் வசதியாக தூங்குவதற்கு மட்டுமே ஜன்னலோர இருக்கைகள் என்று நினைக்க வேண்டாம். நன்றாக வேடிக்கை பார்ப்பதற்கும் தான். அதுவும் இந்தியாவின் இந்த விமான நிலையங்களில் நீங்கள் விமானத்தில் தரையிறங்கும் போதும், பறக்க ஆரம்பிக்க போதும், சுற்றி இருக்கும் அழகைக் கண்டு மயங்கி போவீர்கள்!
இந்தியாவில் அழகான நிலப்பரப்புகளின் மேல் அமைந்து இருக்கும் இந்த ஏர்போர்ட் அந்த இடங்களுக்கு அழகை மேலும் கூட்டுகின்றன. இயற்கையின் பின்னணி, பசுமை மற்றும் பனி மலைகளின் சூழலில் அமைந்து இருக்கும் இந்த விமான நிலையங்கள் தான் இந்தியாவிலேயே மிகவும் அழகான விமான நிலையங்களாம்!
இந்த விமான நிலையங்களுக்குள் நீங்கள் சென்றால், நீங்கள் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களுக்கு செல்வதற்கு முன்னர், விமான நிலையத்தில் நின்று பார்த்துவிட்டு பத்து போட்டோக்களை எடுத்துவிட்டு தான் செல்வீர்கள்! அவை எங்கெங்கே இருக்கின்றன என்று பார்ப்போமா!

குஷோக் பகுலா ரிம்போச்சி விமான நிலையம், லடாக்
இயற்கை எழில் கொஞ்சும் தரையிறக்கத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை உங்களின் மனதில் இருந்தால் நீங்கள் கட்டாயம் லடாக்கின் குஷோக் பகுலா ரிம்போச்சி விமான நிலையத்திற்கு டிக்கெட் போட வேண்டும்.
இந்தியாவின் ஒரே தனித்துவமான மலைப் பாலைவனமான லடாக்கில் அமைந்துள்ள இந்த விமான நிலையம், சராசரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,256 மீ உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான விமான நிலையங்களில் ஒன்றாகும்.
இயற்கையின் அற்புதமான அழகு, அதன் கண்கவர் நிலப்பரப்பு மற்றும் மலைகளுக்கு நடுவே அமைந்து இமயமலையின் இடையூறு இல்லாத காட்சிகளை இந்த விமான நிலையத்தில் நாம் கண்டு களிக்கலாம்.

வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையம், போர்ட் பிளேர்
வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள அழகிய பசுமையான விரிவாக்கங்கள் இங்கு ஒரு அழகிய தரையிறக்கத்தை உருவாக்குகின்றன. 3290 மீ நீளமுள்ள ஒற்றை ஓடுபாதை, நீல கடல் நீர் மற்றும் பசுமையான மழைக்காடுகள் ஆகியவை உங்களுக்கு ஒரு தனித்துவமான தரையிறக்கத்தை கொடுக்கின்றன.
போர்ட் பிளேயருக்கு தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் நாட்டின் மிக அழகான விமான நிலையங்களில் ஒன்றாகும். தரையிறங்கும் போதும், மேலே பறக்க ஆரம்பிக்கும் போதும் நீங்கள் கண்கவர் காட்சிகளை காண்பீர்கள்.

அகட்டி விமான நிலையம், லட்சத்தீவு
இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அகத்தி தீவின் முடிவில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் உங்களை பிரம்மிப்பில் ஆழ்த்த தவறாது.
அகட்டி ஏரோட்ரோம், முடிவில்லாத நீல நீரில் வழியைக் கண்டுபிடிக்கும் மிகக் குறுகிய நிலப்பரப்பில் அமைந்துள்ளதால் உங்களின் கண்களுக்கு விருந்தாக அமையும்.
அதோடு விமான நிலையத்தை ஒட்டியே வெள்ளை மணல் கடலும், அழகிய நிலபரப்புகளும் இருப்பதால் நீங்கள் அதன் அழகில் சற்று திளைத்து பின்னர் சைட்சீயிங்கிற்கு செல்லலாம்.

சிம்லா விமான நிலையம், சிம்லா
இமாச்சல பிரதேசத்தின் அழகிய தலைநகரான சிம்லாவின் மலையுச்சியில் 546 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய விமான நிலையம் மிகவும் ரம்மியமான சூழலில் அமைந்து இருக்கிறது.
சிம்லாவை பார்க்க வருபவர்கள் சற்று நேரம் விமான நிலையத்தை சுற்றி விட்டு மறு காரியத்தில் இறங்குகிறார்கள். இமயமலையின் பார்வையில் விமானம் தரையிறங்குவதை பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.

லெங்புய் விமான நிலையம், மிசோரம்
இதன் பிரமிக்க வைக்கும் ரம்மியமான அழகு காரணமாக வடகிழக்கு பயணிகளிடம் இந்த விமான நிலையம் மிகவும் ஃபேமஸ். பயணிகள் தரையிறங்கும் போதும், மேலே செல்லும் போது இயற்கையின் உண்மையான அழகை அனுபவிக்க முடியும்.
பச்சை பள்ளத்தாக்குகளால் சூழப்பட்டுள்ள இந்த விமான நிலையம் கடல் மட்டத்திலிருந்து 504 மீ உயரத்தில் அமைந்துள்ளது. அழகான விமான நிலையங்களில் ஒன்றை நீங்கள் கண்டறிய விரும்பினால், இந்த விமான நிலையம் உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும்.
ஆகவே இனி நீங்கள் இந்த இடங்களுக்கு செல்ல திட்டமிடுகிறீர்கள் என்றால், விமானத்தில் சென்று வரவும். அந்தப் பயணம் உங்கள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!



Click it and Unblock the Notifications





