Search
  • Follow NativePlanet
Share
» »ராஜாவுக்கு கிடைச்ச பரிசுகளுக்கு மட்டும் தனி அருங்காட்சியகம்... யார் அந்த ராஜா ?

ராஜாவுக்கு கிடைச்ச பரிசுகளுக்கு மட்டும் தனி அருங்காட்சியகம்... யார் அந்த ராஜா ?

இந்தியாவில் சிவன் வழிபாடு பெரும்பாலும் லிங்க வடிவிலேயே உள்ளன. வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபட்டு வருகின்

By SABARISH

கலைப்பொருட்கள் மற்றும் கலைப் பண்பாடு, போர் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை தற்காலத்தில் பாதுகாப்பாக வைக்க முக்கியத்துவம் வாய்ந்தவை அருங்காட்சியகங்கள். மற்ற இடங்களில் காணக் கிடைக்காத பொருட்கள், அரிய கண்டுபிடிப்புகள், கைப்பற்றப்படும் வரலாற்று சான்றுகள் அருங்காட்சியகங்களில் மட்டுமே காண முடியும்.

ஒரு காலத்தில் தனிப்பட்ட நபர்களின் சேகரிப்புகளைக் கொண்டு அருங்காட்சியகம் கட்டமைக்கப்பட்டது. பின், முக்கிய நபர்களின் நினைவுச்சின்னங்கள் பார்வைக்காகவும், ஆய்வுக்காகவும் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டன. ஆனால், இன்று நாம் பார்க்கப்போகும் அருங்காட்சியகம் அதுபோல் இல்லை. மற்ற அருங்காட்சியகங்களில் இருந்து இது வேறுபட்டு காணப்படுகிறது. ஆம், இங்குள்ள ஒட்டுமொத்த பொருட்களும் ஒரு மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்ட பொருட்கள். இந்த பொருட்களினாலேயே அந்த காட்சியகம் நிறைந்து காணப்படுகிறது.

நிஜாம் அருங்காட்சியகம்

நிஜாம் அருங்காட்சியகம்

PC:Randhirreddy

மிர் ஒஸ்மான் அலிகான் பகதூர் உலகிலேயே மிகப் பெரிய செல்வந்தராக இருந்தவர். ஒருகாலத்தில் உலகின் மிகப் பெரிய பணக்காரராகவும் அறிவிக்கப்பட்டார். ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் அஸ்மன் அலி கான், அசஃப் ஜான் ஏழுமனின் தனிப்பட்டச் சொத்துக்களை நிஜாம் அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்.

ஒஸ்மான் அலி கான்

ஒஸ்மான் அலி கான்

PC: wikipedia

ஹைதராபாத்தின் ஏழாவது மற்றும் கடைசி ஆட்சியாளரான மிர் ஒஸ்மான் அலி கான் பகதூர் உலகின் மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான உஸ்மான் அலி கான் ஆவார். 184.79 காரட் எடையுள்ள உலக புகழ்பெற்ற ஜேக்கப் என்னும் வைரத்தை காகித எடைக் கல்லாக அவர் பயன்படுத்தினார். கோதி அரண்மனையிலேயே தனது வாழ்நாள் முழுவதும் செலவழித்துள்ளார்.

ஜூபிலி கொண்டாட்டங்களின் பரிசு

ஜூபிலி கொண்டாட்டங்களின் பரிசு

நிஜாம் அருங்காட்சியகம் முழுவதும் மிர் ஒஸ்மான் அலி கான் பகதூருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு அவரது வெள்ளி விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்களால் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது. உலகில் வேறு எந்த அருங்காட்சியகமும் ஒரு மன்னரின் பரிசுப் பொருட்களை மட்டும் கொண்டதாக இல்லை.

1936 கொண்டாட்டம்

1936 கொண்டாட்டம்

PC: Official Site

ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் அருங்காட்சியகம் 1936-வது ஆண்டு, தனது நிர்வாகத்தின் 25-வது ஆண்டு விழாவை கொண்டாடியுள்ளது.

அருங்காட்சியகத்தில் என்ன இருக்கு

அருங்காட்சியகத்தில் என்ன இருக்கு

PC: Official Site

அருங்காட்சியகம் பல மதிப்புமிக்க பொருட்களுடன் நிறைந்து காணப்படுகிறது. நிஸாமின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதிநிதிகள் வழங்கிய நினைவுப் பரிசுகள் இன்றளவும் அந்த வரலாற்றை நினைவுகூறும் வகையில் அருங்காட்சியகத்தில் உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இந்த விழாக்களில் கலந்து கொண்டு நிஸாமிற்கு பரிசுகளை வழங்கியுள்ளது இதன் மூலம் தெரியவருகிறது.

ஹைதராபாத்தில் உள்ள கட்டிடங்களின் மாதிரி

ஹைதராபாத்தில் உள்ள கட்டிடங்களின் மாதிரி

PC: Official Site

நிஸாமின் ஆட்சிக் காலத்தில் ஹைதராபாத்தில் கட்டப்பட்ட வெள்ளித் தகடால் ஆன ஆலயத்தின் மாதிரிகள் கிடைக்கப்பெற்ற தொல்லியல் பொருட்களில் முக்கிய அம்சமாக உள்ளது. மேலும், சில பொருட்கள் உருது மொழியில் கண்டறியப்பட்டுள்ளது சுல்தானின் வருகையை காட்டுகிறது.

தங்க தட்டு

தங்க தட்டு

PC: Official Site

நிஜாமின் கிரீடம் மற்றும் தட்டுகள் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நிஜாம் வெள்ளி விழாவில் இந்த கிரீடம் அணிந்திருந்தார் என்ற தொல்லியல் சான்றுகள் மூலம் தெரியவருகிறது.

அருங்காட்சியகத்தில் காட்சிகள்

அருங்காட்சியகத்தில் காட்சிகள்

PC: Official Site

ஹைதராபாத் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் நிஜாம் ஆட்சியில் கொண்டாடப்பட்ட உலகலாவிய கொண்டாட்டங்களை மட்டுமே பிரதிபளிக்கும் வகையில் உள்ளது. பொதுவான அருங்காட்சியகம் போல் அல்லாமல் முழுவதும் பரிசுப் பொருட்களால் நிறைந்துள்ள இது பெரும்பாலான வரலாற்று ஆய்வாலர்களை ஈர்த்து வருகிறது. இதில், வைரம் மற்றும் தங்கக் கற்கள், அழங்கரிக்கப்பட்ட ஆயுதம், நறுமணப் பொருட்கள், ஓவியங்கள், உருவச் சிலைகள் மற்றும் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் அடங்கும்.

விண்டேஜ் கார்கள்

விண்டேஜ் கார்கள்

PC: Charles01

இந்த அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களை வெகுவும் வியப்பில் ஆழ்த்துவது இங்குள்ள விண்டேஜ் கார்களின் தொகுப்பு தான். 1930 காலகட்டத்து ரோல்ஸ் ராய்ஸ், ஜாகுவார் மார்க் 5 உள்ளிட்ட விலைமதிப்பற்ற பழங்காலத்து கார்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆறாவது நிஜாம் வார்ட்ரோப்

ஆறாவது நிஜாம் வார்ட்ரோப்

PC: Official site

ஆறாவது நிஜாமான மஹ்பூப் அலி கான் பயன்படுத்திய வார்ட்ரோஹோ அனைவரையும் ஈர்க்கும் மற்றொரு அம்சமாகும். பர்மாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தேக்கினால் செய்யப்பட்டுள்ள இது 176 அடி நீளம் கொண்டது. மேலும், இந்த காட்சியகத்தின் மூலம் ஹைதராபாத்தின் பண்டைய கால மக்களின் உடைக் கலாச்சாரத்தையும் அரிந்துகொள்ள முடியும்.

எப்போது செல்லலாம்

எப்போது செல்லலாம்

PC: Official site

வெள்ளிக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இது திறந்திருக்கும். வயதானவர்களுக்கு 65 ரூபாய் மற்றும் குழந்தைகளுக்கு 15 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும். வெள்ளிக்கிழமை இந்த அருங்காட்சியகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வழித்தடம்

வழித்தடம்

Map

நிஜாம் அருங்காட்சியகம் ஹைதராபாத்தில் உள்ள புருனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது பழைய நகரம் மற்றும் டருல் ஷிஃபா அருகில் உள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X