» »மிசோரம் மாநிலத்தின் ஒரே மான் பூங்காவுக்கு ஓர் இன்பசுற்றுலா செல்வோமா?

மிசோரம் மாநிலத்தின் ஒரே மான் பூங்காவுக்கு ஓர் இன்பசுற்றுலா செல்வோமா?

Written By: Udhaya

மிஜோராம் மாநிலத்தில் உள்ள தெஞ்ஜாவ்ல் ஒவ்வொரு சுற்றுலா விரும்பியும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய அழகிய கிராமமாகும். செர்சிப் மாவட்டத்தில் நிர்வாகத்தின் கீழ வரும் இவ்வூர் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளாக இருந்தது. மிஜோராம் தலைநகர் அய்ஜாவ்லில் இருந்து 43கிமீ தொலைவில் இவ்வூர் உள்ளது.

1961வரை மிருகங்கள் வாழ்ந்து கொண்டிருந்த அடர்ந்த காடாக இருந்த இப்பகுதியை 1961 சமப்படுத்தி ஊரக உருவாக்கினார்கள். 1963ல் பெங்குவாயோ சைலோ இவ்வுரை உருவாக்கியதாகவும் நம்பப்படுகிறது. அப்போதிருந்து கைத்தறித் துறையில் இவ்வூர் சிறந்து விளங்குகிறது.

தெஞ்ஜாவ்ல் மான் பூங்கா

தெஞ்ஜாவ்ல் மான் பூங்கா

மாநிலத்தின் ஒரே மான் பூங்கா இதுதான். இவ்வூர் ஒருகாலத்தில் அடர்ந்த காடுகளாக இருந்தது. ஒரு 50ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு மனிதன் வாழத்தொடங்கினான். அதன் காரணமாக இங்கு ஏராளமான மான்கள் தென்படுவதுண்டு. மான்களை பாதுகாப்பதற்காக இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது

தெஞ்சாவ்ல் மான் பூங்காவில் உள்ள 17 மான்களில் 11 பெண் மான்களாகும். இயற்கையான சூழலில் வாழும் இம்மான்கள் கூண்டுக்குள் அடைக்கப்படாம எல்லைக்குள் அடைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இம்மான்களை மிக நெருக்கத்தில் பார்க்கலாம்.

Photo Courtesy: Sankara Subramanian

 பூங்கா

பூங்கா


கிராமத்திற்கு அருகிலேயே இப்பூங்கா இருப்பதால் நடந்தே இங்கு செல்லலாம். அய்ஜாவ்லில் தங்கியுள்ள பயணிகள் பேருந்து மூலமோ, வாடகைக் கார் மூலமோ இங்கு வரலாம்.

Didini Tochhawng

 அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்


வழமைக்கு மாறான, வித்தியாசமான சுற்றுலாவை விரும்புகிறவர்கள் தெஞ்ஜாவ்ல் செல்லலாம். பூக்கள் மற்றும் விலங்குகளுடன் இருக்கும் இவ்வூர் சிறியதாக இருந்தாலும் சில மதிமயக்கும் சுற்றுலா தளங்களைக் கொண்டுள்ளது. வன்டாவ்ங்க் நீர்வீழ்ச்சி என்ற மிஜோராமின் உயரமான நீர்வீழ்ச்சி, தெஞ்ஜாவ்ல் தேசிய மான்கள் பூங்கா, பாம்பிற்கும் ஒரு பெண்ணிற்கும் இடையேயான காதலுக்கு புகழ்பெற்ற சாவ்ங்ச்சி குகை, துவாலுங்கி த்லான் என்ற இடத்தில் தன் கணவனுக்கு அருகில் தன்னைத்தானே புதைத்துக் கொண்ட பெண்ணின் கல்லறை இருப்பதாக நம்புகிறார்கள்.

Didini Tochhawng

வன்டாங் நீர்வீழ்ச்சி - மிஜோராமின் உயரமான நீர்வீழ்ச்சி

வன்டாங் நீர்வீழ்ச்சி - மிஜோராமின் உயரமான நீர்வீழ்ச்சி

மிஜோராமின் மிக உயரமாக நீர்வீழ்ச்சியான வன்டாங், இந்தியாவில் 13வது உயரமான நீர்வீழ்ச்சியாகும். இரண்டு அடுக்குகளாய் விழுகும் இந்நீர்வீழ்ச்சி 229மீ உயரத்தில் இருந்து விழுகிறது. செர்சிப்பில் இருந்து 30கிமீ தொலைவிலும், அய்ஜாவ்லில் இருந்து 137கிமீ தொலைவிலும் உள்ளது.

பார்ப்பதற்கு மிக அழகாய்த் தோன்றும் இந்நீர்வீழ்ச்சி வன்வா நதியில் அமைந்துள்ளது. வன்டாங் என்ற சிறந்த நீச்சல் வீரரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒருமுறை அவரது சாகசங்களில் போது ஒரு பெரிய மரக்கட்டை அவர் மீது விழுந்ததால் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

காட்சிக்கோணத்திற்காகவே சுற்றுலாத்துறை ஒரு கோபுரத்தை அமைத்துள்ளது. வாடகைக்கார் மூலம் பயணிகள் இந்நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம்.

Photo Courtesy: t.saldanha

தெஞ்ஜாவ்ல் அடைய வழி

அய்ஜாவ்லில் இருந்து 43கிமீ தொலைவில் இருக்கும் இவ்வூருக்கு பேருந்து வசதிகளும், தனியார் வாகன வசதியும் உண்டு. அய்ஜாவ்ல் விமானநிலையத்தில் இருந்ந்து கார் மூலமும் பயணிக்கலாம்.

 தெஞ்ஜாவ்ல் வானிலை

தெஞ்ஜாவ்ல் வானிலை


வருடம்முழுதும் இங்கு மிதமான வானிலையே நிலவுகிறது. வெயில் காலங்களில் மிதமான வெப்பமும், மழைக்காலத்தில் அடர் மழையும், குளிர்காலத்தில் இதமான குளிரும் நிலவுவதால் பயணிகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம்.