Search
  • Follow NativePlanet
Share
» »கிரானைட் இல்லை, தேங்காய்ச்சிரட்டை கொண்டு கட்டப்பட்ட பிரம்மாண்ட மாளிகை

கிரானைட் இல்லை, தேங்காய்ச்சிரட்டை கொண்டு கட்டப்பட்ட பிரம்மாண்ட மாளிகை

400 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றத்தில் எளிமையாகவும், உட்பகுதி அறைகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டத்தின் உச்சமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ள ஓர் வீட்டைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?.

பொதுவாக, ஒன்று அல்லது இரண்டு படுக்கையறை, சமையலறை, வசதிக்கு ஏற்றவாறு ஹால், இதுதான் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்த வீடு. தற்போது, அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு அளவுகளும், அறைகளும் மாறுபடுகிறது. ஆனால், 400 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றத்தில் எளிமையாகவும், உட்பகுதி அறைகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டத்தின் உச்சமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ள ஓர் வீட்டைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?.

சினிமா வீடு

சினிமா வீடு

மேற்குறிப்பிட்டதைப் போல ஓர் பிரம்மாண்டமான அரண்மனைக்கு நிகரான வீட்ல தற்சமயம் யார் வாழ்வார்கள் ?. இது எங்கே இருக்கும் என எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழும். அந்த மாதிரியான சினிமா வீடுதான் இன்று நாம் பயணிக்கப் போகும் ‘பத்மநாபபுரம் அரண்மனை'.

Nicholas.iyadurai

திருநெல்வேலி - நாகர்கோவில்

திருநெல்வேலி - நாகர்கோவில்


திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவிலுக்குச் செல்லும் வழியில் ஆரல்வாய்மொழி பகுதிக்கு முன்னால் உள்ளது இந்த பத்மநாபபுரம். நாகர்கோவில் மாவட்டத்திற்கு உட்பட்டு காற்றாலைகளும், தென்னை மரங்களும், இதமான வானிலையும் கேரள பாணியிலான வீடுகளும் ஒருங்கே கொண்ட அழகிய மாவட்டம் தான் இது.

Mohamed Shareef

வருஷம் 16

வருஷம் 16


பெரும்பாலும், சினிமா சூட்டிங் என்றாலே செட்டிங் வீடு அமைத்து படம் எடுக்கும் சூழலில், 1989-யில் வெளிவந்த கார்த்திக், குஷ்பூ நடத்த வருஷம் 16 படம் முழுக்க முழுக்க எடுக்கப்பட்ட வீடு இந்த பத்மநாபபுரம் அரண்மனை தான் என்றால் சற்று வியப்பாகத்தானே உள்ளது.

Hans A. Rosbach

அரண்மனை முகப்பு

அரண்மனை முகப்பு


பத்மநாபபுரம் அரண்மனை கி.பி. 1601-யில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட ரவி வர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது. முதலில் தாய்க் கொட்டாரம் மட்டும் கட்டமைக்கப்பட்டிருந்த நிலையில், நூறு வருடம் கழித்து, அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்ற மன்னர், இந்த அரண்மனையை விரிவுபடுத்தியுள்ளார்.

Kumbalam

கோபுரக் கடிகாரம்

கோபுரக் கடிகாரம்


1795 வரை பத்மநாபபுரமே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்திருக்கிறது. பின், திருவனந்தபுரம், தலைநகரமாக‌ மாற்றப்பட்டது. கேரளக் கட்டிட‌கலையை பிரதிபலிக்கும் நேர்த்தியான அரண்மனைகளில் இது முக்கியமானது. இந்த அரண்மனையைக் கூட தற்போது கேரள கட்டிடக் கலைத் துறைதான் பராமரித்து வருகிறது.

Aswanthep

நவராத்திரி மண்டபம்

நவராத்திரி மண்டபம்


முற்றிலும் உள்நாட்டுப் பொருட்களான ம‌ரப்பலகைகள், செங்கற்கள், கருங்கற்கள், சுண்ணக்கற்கள் கொண்டு கட்டப்பட்டது இந்த அரண்மனை. வழு வழப்பான கரிய நிறத்தரையை கொண்டு வர‌ தேங்காய்ச்சிரட்டை, எலுமிச்சை, முட்டை வெண்கரு மற்றும் மரக்கறிகள் சிலவற்றிலிருந்து பெறப்பட்ட சாறு ஆகியவை உபயோகப்பட்டிருக்கிறது.

LIC Habeeb

குதிரை விளக்கு

குதிரை விளக்கு


பத்மநாபபுரம் அரண்மனைக்கு அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வருகைதற்தாலும் அங்கு தற்போது வரை ஒரு மின்விளக்கு கூட பொருத்தப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கென இருட்டில்தான் அரண்மனையைச் சிரமப்பட்டு காண வேண்டுமா என பின்வாங்க வேண்டாம். அக்காலத்திலேயே சுரியனின் ஒளி அரண்மனை முழுக்க பரவும்படி கட்டப்பட்டுள்ளது. இதற்காகத்தான், காலை 9 மணி முதல் மாலை 4.30 வரை பொதுமக்கள் உள்ளே அனுமதிப்படுகின்றனர்.

Gopinath Sivanesan

மரக்கலை

மரக்கலை


இந்த அரண்மனை முழுவதும் திருவிதாங்கூர் காலத்து மரப் பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றது. இதில், கவனிக்கத்த விசயம் என்னவென்றால் படுக்கை, இருக்கை, கதவு, ஜன்னல் என ஒவ்வொன்றிலும் கலை வடிவம் உயிர்ப்புடன் இருப்பதை நாம் உணர முடியும்.

Kumbalam

தேக்குச் சிற்பங்கள்

தேக்குச் சிற்பங்கள்


மாளிகையின் உள்ளே எந்த அறைக்குச் சென்றாலும் தேக்கினால் செய்யப்பட்ட நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த கதவுகளும், தூண்களும் நம்மை வியப்படையச் செய்யும். அதுமட்டுமா, இந்த மரச்சட்டகத்தில் செதுக்கப்பட்டுள்ள கடவுள்களிக் உருவம் கோவில்களில் காணப்படுவதைப் போலவே துல்லியமாக்க செதுக்கப்பட்டுள்ளன.

Hans A. Rosbach

அரசியின் அறை

அரசியின் அறை


மாளிகையின் பெரிய அளவிலான அறை தாய்க் கூடாரம் என்றழைக்கப்படுகிறது. இது 1550 ஆம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனருகே உள்ள அரசியின் அறை மற்ற அறைகளைக் காட்டிலும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேலைப்பாடுகள் மிகுந்த கதவுகள், அலமாரிகள், வீணை, கண்ணாடிகள், ஊஞ்சல் போன்றவை இங்கே உள்ளது.

Sreekeshmbi

மன்னரின் மூலிகைக் படுக்கை

மன்னரின் மூலிகைக் படுக்கை


மன்னரின் அறையில் உள்ள படுக்கை மட்டுமே 64 வகையிலான மூலிகைகளைக் கொண்டு செய்யப்பட்டதாகும். டச்சு அரச வம்சத்தினர் இந்த படுக்கையை பரிசாகச் சமஸ்தானத்திற்கு வழங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி நான்கு அடுக்குகளாக உள்ள மன்னரின் கூடாரத்தின் கீழ் தளத்தில் கருவூலமும், போரின் போது தப்பித்துச் செல்ல தனிச் சுரங்கமும் உள்ளது. ஆனால், அதன் கதவுகள் மூடப்பட்டு பார்வையாளர்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது.

Hans A. Rosbach

குளுகுளு அறைகள்

குளுகுளு அறைகள்


வெளியில் எத்தனை டிகிரி வெயில் இருந்தாலும் சரி, அரண்மனையின் உட்பகுதி எப்போதுமே குளிர்ச்சியாகத்தான் காணப்படும். இதன் தரை பகுதியானது சுமார் 450 வருடங்களுக்கு முன்பாக எப்படி இருந்ததோ அதேபோன்று குளிர்ச்சி தன்மை மாறாமல் இப்போதும் கால்பட்டவுடன் சில்லென்று நம்மைப் புத்துணர்ச்சி அடையச்செய்யும்.

MADHURANTHAKAN JAGADEESAN

அரண்மனைக் குளம்

அரண்மனைக் குளம்


தமிழ்நாட்டிற்குள் இருந்தாலும் இந்த அரண்மனை கேரள அரசுக்குச் சொந்தமானது என்பதற்கு ஆதாரமாக உள்ளது அரண்மனைக் குளம்தான் எனலாம். காரணம், பெரும்பாலும், கேரளாவில் உள்ள பழைய வீடுகளின் பின்புறம் குளம், கிணறு இருப்பதை நாம் அறிந்திருப்போம். அதேப்போன்றே இந்த அரண்மனையிலும் ஓர் குளம் உள்ளது.

Aviatorjk

கோட்டைச் சுவர்

கோட்டைச் சுவர்


திருவனந்தபுர சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கிய பத்மநாபபுரத்தில் அரண்மனையைச் சுற்றிலும் கட்டப்பட்டுள்ள கோட்டைச் சுவர் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது என்றாலும், தற்போது கூட தனது கம்பீரத்தை இழக்காமல் காண்போரை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டுள்ளது.

Hans A. Rosbach

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்


மாளிகையின் உள்ளே கேரள அரசால் நியமிக்கப்பட்டுள்ள வழிகாட்டி கூடவராமல் செல்ல முடியாது. அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் மாளிகையின் சுற்றுப்புறத்தை சிறந்த முறையில் பராமரித்து வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. அரண்மனையின் முக்கியத்துவம் அறிந்து சத்தமின்றி கலை வேலைப்பாடுகளை ரசித்து வர வேண்டும்.

Nicholas.iyadurai

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


பத்மநாபபுரத்திற்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் திருவனந்தபுரம் விமான நிலையம் ஆகும். இங்கிருந்து சுமார் 87 கிலோ மீட்டர் பயணித்தால் அரண்மனையை அடையலாம். கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பேருந்துகள் இப்பகுதிக்கு இயக்கப்படுகின்றன. கன்னியாகுமரியில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், திருக்குறள் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில் சேவைகளும் உள்ளது.

Muhammed Suhail

பத்மநாபபுரம் அரண்மனைக் கோவில்

பத்மநாபபுரம் அரண்மனைக் கோவில்

அழகிய கோவில் தூண்கள்

Rengeshb

அரண்மனையின் முன்பக்கம்

அரண்மனையின் முன்பக்கம்


பத்மநாபபுர அரண்மனையின் முன்புற தோற்றம். வீட்டின் முன் அழகிய செடிகள் வைக்கப்பட்டு, புல்வெளிகள் போன்ற அமைப்பும் இருக்கிறது.

Parvathisri

மாளிகையின் உட்புறத் தோற்றம்

மாளிகையின் உட்புறத் தோற்றம்


மன்னர் அமர்ந்து உரையாடும் மாடம்

Balaji.B

கடிகாரக் கோபுரம்

கடிகாரக் கோபுரம்


அரண்மனையின் நுழைவுவாயிலில் கோபுரத்தின் மேல் உள்ள கோபுரம்

Sanandkarun

நுணுக்கம் நிறைந்த தூண் சிலைகள்

நுணுக்கம் நிறைந்த தூண் சிலைகள்

கலை நுணுக்கங்கள் நிறைந்த தூண்கள்

Sekharsujith

கிணறு

கிணறு


அரண்மனையின் ஒரு பகுதியில் கிணறு மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள தென்னை மரத்தைப் பாருங்கள். என்ன ஒரு அழகு.

Akhilan

ஓடுகள்

ஓடுகள்


இந்த அரண்மனை கட்டப்பட்ட ஓடுகள் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடிக்கிறதே பாருங்கள்.

Indu MG

மலை

மலை


அரண்மனையின் பின்புறத்தில் மலைகள் தெரிகின்ற காட்சிகளைக் காண கண்கோடி வேண்டுமே..

ShashankMalathisha

மேடை

மேடை


அரண்மனையின் முன் வைக்கப்பட்டுள்ள மேடை இதுவாகும்.

Rrjanbiah

அரண்மனையின் இன்னொரு பகுதி

அரண்மனையின் இன்னொரு பகுதி


அழகாக கட்டமைக்கப்பட்டிருக்கும் அரண்மனையில் மற்றொரு பகுதியாகும்.

JHILIK

மாடங்கள்

மாடங்கள்


அரண்மனையில் சிறப்பாக கட்டப்பட்டிருக்கும் அடுக்கு மாடிகள். குவிமாடங்கள் என சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள் அரச பரம்பரையினர்.

Kumbalam

முன்பக்கம்

முன்பக்கம்


முன்பக்கத்திலிருந்து அரண்மனையைப் பாருங்களேன். ஒரு கம்பீரத் தோற்றம் வருகிறதல்லவா?

Kumbalam

அரண்மனையில் ஒரு பகுதி

அரண்மனையில் ஒரு பகுதி


அரண்மனையில் ஒரு பகுதியின் புகைப்படம்

Prthpchndr

அரண்மனை

அரண்மனை


மிக துல்லியமாக எடுக்கப்பட்ட அரண்மனையின் புகைப்படம்

Rinjurajanmathew

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X