» »மனிதர் பார்வைபடாத பள்ளிவாசல் அருவி...

மனிதர் பார்வைபடாத பள்ளிவாசல் அருவி...

Written By: Sabarish

மேற்குத் தொடர்சி மலை தன்னகத்தே எத்தனையோ சிறப்புகளை கொண்டுள்ளது. அவை ஒவ்வொரு நாளும் வெளிக்கொணரப்பட்டு வருகிறது. தென்னிந்தியா முழுவதும் பரந்து விரிந்து காணப்படும் இம்மலைத் தொடரே தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலகங்களுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே. இப்படி பல்வேறு பெருமளைக் கொண்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையினால் அதிகம் பயணடைவது தமிழகமும், கேரளமும் என்றால் மிகையாகாது. அந்த வகையில் இரு மாநிலங்களுக்கும் இடையே யாரும் அறிந்திராத வகையில் ஆர்ப்பரித்துக்கொட்டும் அருவியைத் தேடிப் போகலாமா ?.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


தேனியில் இருந்து 82 கிலோ மீட்டர் தொலைவிலும் கேரள மாநிலம் தொடுபுழாவில் இருந்து 85 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது தேவிகுளம். இதனருகேயே பள்ளிவாசல் அருவியும் அமைந்துள்ளது. மலைக் காடுகளின் வழியாக வார இறுதிநாட்களில் நண்பர்களுடன் பயணம் செய்ய விரும்புவோருக்கு ஏற்ற தலமாகவும் இது திகழ்கிறது.

wikipedia

பள்ளிவாசல்

பள்ளிவாசல்


கேரளாவின் முதல் நீர்மின் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட இடமாக இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பள்ளிவாசல் கிராமம் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த கிராமம் மூணார் மலை பிரதேசத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் பள்ளிவாசல் கிராமத்தை சாலை மூலமாக சுலபமாக அடைய முடியும்.

Photnart

தேவிகுளம்

தேவிகுளம்


தேவிகுளம் மலை பகுதிகளின் இடுக்கி குன்றுகளில் கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் மட்டுப்பெட்டி ஏரி அமைதியான சுற்றுலாத் தலமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஏரியின் குறுக்கே 1940-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மட்டுப்பெட்டி அணை பிரபலமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.

Jaseem Hamza

படகு சவாரி

படகு சவாரி


மட்டுப்பெட்டி ஏரியில் மோட்டார் படகு, ஸ்பீட் மற்றும் பெடல் படகுகளில் பயணம் செய்து சுற்றியுள்ள மலைகளையும், ஸ்பைஸ் தோட்டங்களையும் பார்த்து ரசிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. அதோடு இந்த ஏரியில் எதிரொலிக்கும் பறவைகள் கீச்சிடும் குரல்கள் இன்ப கீதமாய் உங்களுடைய மனதிலும் எதிரொலிக்கும்.எனவே இந்த சுகானுபவத்தை தவற விட்டு விடாதீர்கள்.

Christopher Michel - lush

நோய் தீர்க்கும் சீதா தேவி ஏரி

நோய் தீர்க்கும் சீதா தேவி ஏரி


தேவிகுளம் வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தேவிகுளம் ஏரி என்று பிரபலமாக அறியப்படும் சீதா தேவி ஏரியை தவற விட்டுவிடக் கூடாது. இதன் தாதுப் பொருட்கள் நிறைந்த நீரில் நோய் தீர்க்கும் தன்மை உள்ளதாக கருதப்படுகிறது. அதோடு இந்த ஏரிப்பகுதியில் காணப்படும் வெப்ப நீரூற்று தனிமையை விரும்பிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.

Jaseem Hamza

புனித ஏரி

புனித ஏரி


சீதா தேவி ஏரி புனிதமாக கருதப்படுவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது இந்த ஏரியில் இராமபிரானின் மனைவி சீதா தேவி நீராடினார் என்ற புராணச் செய்தியே ஆகும். இங்கு வரும் ஒவ்வொரு பயணியும் இயற்கையின் அற்புதப் படைப்பாய் திகழ்ந்து வரும் இந்த ஏரியின் அழகில் சொக்கிப் போவது நிச்சயம். இந்த ஏரியின் குளிர்ந்த மற்றும் சுத்தமான நீரும், மரங்கள் அடர்ந்த இந்தப் பகுதியில் கேட்கும் பறவைகளின் கீச்சிடும் குரலும் மறக்க முடியாத அனுபவமாக உங்கள் உள்ளங்களில் இன்ப நினைவுகளாய் பதிந்துவிடும்.

Suraj117

தூவானம் அருவி

தூவானம் அருவி


மரயூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயத்தில் இந்த தூவானம் அருவி அமைந்திருக்கிறது. இந்த அருவி சின்னார் சரணாலயத்திற்கு கிழக்கு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் பாம்பார் நதியிலிருந்து உற்பத்தியாகிறது. தூவானம் அருவியின் காடுகளில் பல்வேறு தாவரங்களையும், விலங்கினங்களையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம். அதோடு தூவானம் அருவியிலிருந்து கரிமுட்டி காட்டுப்பகுதிகள் வரை நடைபயணம் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது.

VasuVR

தேயிலைத் தோட்டங்கள்

தேயிலைத் தோட்டங்கள்


தேவிகுளம் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருவதற்கு அதன் தேயிலை மற்றும் ஸ்பைஸ் தோட்டங்கள்தான் முக்கிய காரணம். இங்கு பல்வேறு வகையான தாவரங்களையும், விலங்கினங்களையும் பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதோடு பல ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்தத் தோட்டம் எண்ணற்ற கவர்ச்சிகரமான மரங்களால் இயற்கையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Jaseem Hamza

அருகே உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகே உள்ள சுற்றுலாத் தலங்கள்


தேவிகுளம் அருகே தேயிலைத் தோட்டங்களையும், அருவிகளையும் தவிர இன்னும் பல சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன. அவற்றில் இரவிக்குளம் தேசியப் பூங்கா, லக்கம் நீர்வீழ்ச்சி, மூனாறு, ரோடோ வேலி, இடுக்கு வனப் பகுதி உள்ளிட்டவை பிரசிதிபெற்றது.

Arun Suresh

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து தேனியை பேருந்து மூலம் அடையலாம். தேனியில் இருந்து தனியார் வாகனங்கள் மூலம் தேவி குளத்தையும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தலங்களையும் ரசிக்கலாம். பேரளாவில் இருந்தும் இப்பகுதிக்கு வர போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Shanmugamp7

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்