Search
  • Follow NativePlanet
Share
» »கன்னியாகுமரி மாவட்டத்துல என்னவெல்லாம் பாக்கலாம் தெரியுமா?

கன்னியாகுமரி மாவட்டத்துல என்னவெல்லாம் பாக்கலாம் தெரியுமா?

நாஞ்சில் நாட்டில் ஓர் சாகசப்பயணம் செல்வோமா?

கன்னியாகுமரிக்கு வருகை தரும் பலரும் விவேகானந்தர் சிலையையும், திருவள்ளுவர் சிலையையும் ஒரு ஓரமா நின்னு பாத்துக்கிட்டு, ஒய்யாரமா நடந்து சூரிய மறைவு, உதயம் பாத்துட்டு அப்பாடா கன்னியாகுமரியில கால் நனச்சாச்சினு பெருமிதம் பட்டுட்டு போயிடுறாங்க.

அதுமட்டுமில்லைங்க கன்னியாகுமரி. இங்கு எவ்வளவோ பொக்கிஷங்கள் இருக்கு.

அதான் தெரியுமே.. பச்சை பசேல்னு இடம்.. அருவிகள்..மலைகள். சோலைகள் குயில்கள்னு நிறைய இருக்கு. வேற என்ன இருக்கு அப்படித்தானே கேக்குறீங்க. முழுசா படிங்க... நீங்க நினைக்குற கன்னியாகுமரி இது இல்ல....

 நாகர்கோயில்

நாகர்கோயில்

என்னதான் கன்னியாகுமரினு பிரபலமா ஊருக்கு தெரிஞ்சாலும், இங்க எல்லாமே நாகர்கோயில்தான். மாவட்டத்தின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த ஊரை வைத்துத்தான் மேற்கு கன்னியாகுமரி மாவட்டம், கிழக்குமாவட்டம்னு வகைபடுத்தபடுது.

arunpnair

 பழக்கவழக்கங்கள்

பழக்கவழக்கங்கள்


ஒரே மாவட்டமா இருந்தாலும் இவங்க பேச்சுவழக்குல இருந்து எல்லாமே கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. நாகர்கோயிலுக்கு மேற்கில் வேறு விதமான பேச்சும் (மலையாளம் கலந்த தமிழ்) நாகர்கோயிலுக்கு கிழக்கே வேறுவிதமான பேச்சு வழக்கும் உள்ளது.

Shareef Taliparamba

நாகர்கோவிலைச் சுற்றி

நாகர்கோவிலைச் சுற்றி


அரபிக்கடலுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையே இருக்கும் நாகர்கோவிலைச் சுற்றி அமைந்திருக்கும் இயற்கைச் சூழலின் காரணமாக சுற்றுலாப் பயணிகளால் தமிழ்நாட்டில் பெரிதும் விரும்பப்படும் இடமாக நாகர்கோவில் விளங்குகிறது.

Shareef Taliparamba

நாகர்கோவிலைச் சுற்றி

நாகர்கோவிலைச் சுற்றி


சிறிய குன்றுகளும், பச்சைப் பசேல் என்ற புல்வெளிகளும், நீலக்கல் போன்ற பொழிவுடன் விளங்கும் கடலும் முதல்முறை காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அழகுடன் விளங்குகிறது.

Senthil Kumar

நாகர்கோவிலைச் சுற்றி

நாகர்கோவிலைச் சுற்றி

கன்னியாகுமரிக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகள் நாகர்கோவிலுக்கு வருகை தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இயற்கை அழகினால் சிறந்து விளங்கும் நாகர்கோவிலுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக உலக்கையருவி அமைந்திருக்கிறது.

Shareef Taliparamba

 கன்னியாகுமரியின் வரலாறு

கன்னியாகுமரியின் வரலாறு

கன்னியாகுமரி பாண்டியர்கள், சோழர்கள், நாயகர்கள், சேரர்கள் போன்ற பல அரச சம்ராஜ்யங்களால் ஆளப்பட்டவை. இங்குள்ள கோயில்களும், அவற்றின் கட்டிடக்கலையும் இந்த சாம்ராஜ்யங்களின் கலை மற்றும் நாகரிகத்துக்கு மிகச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.

Prof. Mohamed Shareef

 திருவாங்கூர் அரசு

திருவாங்கூர் அரசு

1729-1758 இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த வேணாட்டின் அரசரான அனிழம் திருநல் மார்த்தாண்ட வர்மாவால் உருவாகப்பட்டது தான் திருவாங்கூர் அரசு

Raj

 சுற்றுலா

சுற்றுலா

கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத் தளங்களாக பல இடங்கள் இருக்கின்றன. கடல்களும் மலைகளும் நீர்நிலைகளும் நிறைந்தது குமரி.

Niran V V

 குமரி வரலாற்றுக் கூடம்

குமரி வரலாற்றுக் கூடம்

கன்னியாகுமரி ரயில் நிலையத்தின் தெற்கே சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது இந்த குமரி வரலாற்றுக் கூடம்.

இங்கு வரலாற்று காலத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகள்,உலகத்தின் தோற்றம், குமரியின் அவதாரம்,விவேகானந்தரின் வரலாறு,வைகுண்டரின் வரலாறு,புனித தாமஸ்,மகாத்மா காந்தி,விவேகானந்தர் ஆகியோரின் வருகை உட்பட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் சித்திரங்களாக வைக்கப்பட்டுள்ளன.

Ryan

 மருந்துவாழ்மலை

மருந்துவாழ்மலை

நாகர்கோயிலிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் இருக்கும் பொற்றையடி என்னுமிடத்தில் உள்ளது மருந்துவாழ்மலை.

இது இராமாயண காலத்து வரலாறுடையது என்று நம்பப்படுகிறது. மலையேற்றம் செய்யவிரும்புபவர்கள் இங்கு செல்கின்றனர்.

இம்மலை ஆயிரத்து 800அடி உயரமுடையது. 625 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மலையில் பல்வேறு கோயில்களும்,மடங்களும் அமைந்துள்ளது..

 உதயகிரி கோட்டை

உதயகிரி கோட்டை


தக்கலை அருகில் 93 ஏக்கர் நிலப்பரப்பில் 16 அடி உயரத்தில் கோட்டை சுவர்களால் எழுப்பப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த இடம் உதயகிரி கோட்டை ஆகும்.

திருவிதாங்கூர் வம்சத்தினர் வெடிமருந்து தயாரிக்கும் இடமாகவும், வீரர்களுக்கு போர் பயிற்சி அளிக்கும் இடமாகவும் இது விளங்குகியது.

 பத்மநாபபுரம் அரண்மனை

பத்மநாபபுரம் அரண்மனை


திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக விளங்கிய பத்மநாபபுரம் அரண்மனை,தக்கலையிலிருந்து 2கி.மீ. தொலைவில் சுமார் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

அழகழகான சிலைகளும், சிற்பக்கூடங்களும், அரியவகை பொக்கிஷங்களும் இங்கு காணப்படுகின்றன.

மன்னர் மார்த்தாண்டவர்மா காலத்தில் உபயோகப் படுத்திய மூலிகை கட்டில்,வாள்,கேடயம் உட்பட பல அரிய பொருட்களும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

Martin Maravattickal

 தொட்டிப்பாலம்

தொட்டிப்பாலம்


திருவட்டாரிலிருந்து 3கி.மீ. தொலைவில் மாத்தூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டி பாலமாகும்.இது 115 அடி உயரமும் 1 கி.மீ. நீளமும் உடையது.

இது தண்ணீர் கொண்டு செல்லும் பாலமாகும். அந்த பகுதி மக்களின் வறட்சியை போக்க இது கட்டப்பட்டது.

Infocaster

 வட்டக்கோட்டை கடற்கரை

வட்டக்கோட்டை கடற்கரை


குமரியிருந்து கிழக்கு திசையில் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வட்டகோட்டை. இந்த கற்கோட்டை 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் படைத்தளபதி டிலனாயின் உத்தரவுப்படி கட்டப்பட்ட படைத்தளமாகும்.

Infocaster

 சங்குத்துறை கடற்கரை

சங்குத்துறை கடற்கரை

நாகர்கோயில் நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கடற்கரை.

 சொத்தவிளை கடற்கரை

சொத்தவிளை கடற்கரை

நாகர்கோயிலிலிருந்து 12 கி.மீ தொலைவில் புத்தளம் அருகில் அமைந்துள்ள இயற்கையான கடற்கரை.நாகர்கோவில் மக்களுக்கு இது இயற்கை அளித்த ஓர் வர பிரசாதமாகும்.

 தெக்குறிச்சி கடற்கரை

தெக்குறிச்சி கடற்கரை


நாகர்கோயிலிலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கடற்கரை. ஆரவாரமின்றி காணப்படும் அழகிய கடற்கரையை சுற்றி சவுக்கு மரங்களின் நிழல் பரவசமூட்டும்.

 முட்டம் கடற்கரை

முட்டம் கடற்கரை


நாகர்கோவிலிலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இக்கடற்கரை. இங்கு அமைந்துள்ள கலங்கரை விளக்கம் மிக தனித்தன்மையோடு காட்சியளிக்கிறது.

 தேங்காய்ப்பட்டினம் கடற்கரை

தேங்காய்ப்பட்டினம் கடற்கரை


பைங்குளம் கிராமம் அருகே அமைந்துள்ள இக்கடற்கரை அழகிய தென்னை மரங்கள் அணிவகுக்க காட்சியளிக்கிறது.மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ள இங்கு தாமிரபரணி ஆறு சங்கமிக்கிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X