» »பாதாள சுரங்கத்தில் கண்ணுக்கு தெரியாமல் ஒளிந்துள்ள ஜீவ சமாதி !

பாதாள சுரங்கத்தில் கண்ணுக்கு தெரியாமல் ஒளிந்துள்ள ஜீவ சமாதி !

Written By: Udhaya


திருச்சிராப்பள்ளி, தமிழ் நாட்டில் மக்கள் வாழ்ந்த மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இந்நகரத்தின் வரலாறு கிமு இரண்டாம் ஆயிரமாண்டு காலத்துக்கு முந்தையது

கிபி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகேந்திர வர்ம பல்லவன் இங்கிருந்த சமண பள்ளிகளை இடிச்சிட்டு இந்த கோயிலை கட்டியிருக்கிறார். இதை இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

இப்படிபட்ட திருச்சியில் பாதாள சுரங்கத்தில் கண்ணுக்கு தெரியாமல் ஒளிந்துள்ளது ஒருவரின் ஜீவ சமாதி. மர்மங்கள் நிறைந்த திருச்சி மலைக்கோட்டைக்கு ஒரு பயணம் மேற்கொள்வோம்.

 சமண மதம்

சமண மதம்

சமணம் என்பது ஒரு கொள்கையாக கடைபிடிக்கப்படுவது. இதை தற்போது மதமாகவே மக்கள் பார்க்கத்தொடங்கிவிட்டனர். அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் சமணம் தழைத்தோங்கியது என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த திருச்சி மலைக்கோட்டை ஆகும்.

சாட்சி

சாட்சி

இங்கு சமணர்கள் வாழ்ந்ததற்கு ஆதாரமா இங்குள்ள சறுக்குப் பாறைகளில் சிதிலமடைந்த தீர்த்தங்கரர் சிலையும் காணப்படுகிறது.

 சோழநாட்டின் தலைநகர்

சோழநாட்டின் தலைநகர்

சோழநாட்டின் தலைநகராகவும் இந்த திருச்சி இருந்திருக்கிறது.

 பழமை

பழமை

ஏறத்தாழ 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது.

 உயரம்

உயரம்

இந்த மலைக்குன்று வெறும் 83 மீ உயரம் கொண்டதுதான். ஆனால் இதுதான் இன்று இந்த நகரத்தின் அடையாளமாக விளங்குகிறது.

 நோக்கும் விதம்

நோக்கும் விதம்


இதை கிழக்கில் இருந்து பார்க்கும்போது விநாயகர் போலவும், மேற்கில் இருந்து பார்த்தால் நங்கூரம் ஊன்றிய கப்பல் போலவும், வடக்கில் இருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போலவும், தெற்கிலிருந்து பார்க்கும்போது முழங்காலிட்ட காளை போலவும் காணப்படுகிறது.

 விநாயகர்

விநாயகர்

இந்த மலைக்கோயிலில் உள்ள உச்சிப் பிள்ளையார் திருச்சியின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்கிறார்.

 மாணிக்க விநாயகர்

மாணிக்க விநாயகர்


இந்த குன்றின் அடிவாரத்தில் மாணிக்கவிநாயகர் அமர்ந்திருக்கிறார். நடுவில் தாயுமானவரும் அமர்ந்திருக்கிறார். உச்சி பிள்ளையார் கோயிலையும் சேர்த்து மூன்று கோயில்கள் இம்மலைக்குன்றில் அமைந்திருக்கிறது.

 சுகப்பிரசவம்

சுகப்பிரசவம்

இந்த கோயிலுக்கு வந்து சென்றால் பிரசவம் இயற்கை முறையில் நடக்கும் என்பது நம்பிக்கை அதுமட்டுமல்லாது. பெரும்பாலும் இது நடக்கிறது என்பதாக கூறப்படுகிறது.

 தாயுமானவர்

தாயுமானவர்

தாயுமானவரா சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார். அதுமட்டமின்றி மலையும் சிவலிங்கத்தின் வடிவத்தை ஒத்து காணப்படுகிறது.

அடிவாரத்தில் தெப்பக்குளத்துக்கு அருகில் மிகப்பெரிய நந்தியும் காணப்படுகிறது.

 ஜீவசமாதி

ஜீவசமாதி

இங்குதான் தாயுமானவரின் ஜீவசமாதி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோயிலின் கீழே தாயுமானவர் ஜீவ சமாதி அடைந்ததாகவும் பரவலாக பேசப்படுகிறது.

இங்கு தாயுமானவருக்கு தை மாதம் குரு பூஜை நடைபெறுகிறது.

Read more about: travel, temple
Please Wait while comments are loading...