» »டில்லியில் பழமையான சாந்தினி சௌக்கின் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

டில்லியில் பழமையான சாந்தினி சௌக்கின் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Written By: balakarthik

தில்லி 6 என்றழைக்கப்படும் சாந்தினி சௌக் 110006 அஞ்சல் குறியீட்டில் அமைந்துள்ளது. இங்கே சந்தையானது தில்லியின் பழமையான பகுதியில் காணப்பட ஓய்வெடுப்பதற்கான தனி இடமாக இது விளங்குகிறது. இந்த சந்தையானது மூன்று நூற்றாண்டுகளை கடந்து பழமையுடன் காணப்பட, மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு இடமாகவும் இது காணப்படுகிறது. இந்த சந்தையை துருக்கி, சீனா, ஹோலாந்து போன்ற பல நாடுகளிலிருந்து வியாபாரிகள் வந்து ஒரு முறை பார்த்ததாகவும் தெரியவருகிறது.

நீங்கள் தில்லிக்கு செல்லும் நிலை உண்டானால், இங்கே காணப்படும் நாட்டிலேயே பழமையான சந்தைக்கும் செல்ல மறந்துவிடாதீர்கள். அதன் பின்னர் உங்கள் பொன்னான நேரத்தை எடுத்துக்கொண்டு பழைய தில்லிக்கும் சென்றுவாருங்கள். சாந்தினி சௌக், யாரும் கண்டிராத உண்மை சொர்க்கமாக அமைகிறது. இங்கே காணும் சில இடங்களை பார்த்து ரசித்து, புதிய காட்சிகளால் மனதினில் புதுவித அனுபவத்தையும் படர விடுங்கள்.

சுன்னாமல் மாளிகை:

சுன்னாமல் மாளிகை:

இந்த மாளிகையின் உருவாக்கம் ஆனது கடந்த காலத்தின் ஆடை வியாபாரிகளுக்கு பெயர்பெற்று தந்த ஒரு இடமாக விளங்க; பழைய இந்தியாவின் அழகிய இடங்களை நாம் காண சுன்னாமல் மாளிகை சிறந்ததாகவும் அமைகிறது.

தில்லியை சுற்றி 30 இயல்புகள் சுன்னாமலில் காணப்பட, வெளியில் குறிப்பாக இந்த மாளிகையானது அவருடைய வம்சாவளி இடப் பெருமையை தாங்கிக்கொண்டு இன்றும் நிற்கிறது.

லாலா சுன்னாமலியால் இந்த மாளிகை 1850ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கே 128 அறைகள் காணப்பட, இதன் உள் அறைகள் பெருமையுடன் காணப்பட, இறக்குமதி செய்யப்பட்ட கலைப்பொருட்களும் அவற்றோடு இணைந்து நீண்ட வரலாற்றை நமக்கு அளிக்கிறது

 மாளிகை தரம்புரா:

மாளிகை தரம்புரா:

தில்லி 6 பகுதியில் காணப்படும் மாளிகைகளுள் பல, சேவகர்களால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு அதன் பின்னர் கைவிடவும்பட்டது. அவற்றுள் பல, இன்று இடிபட்ட நிலையில் காணப்படுகிறது.

கி.பி.1887 ஆம் ஆண்டு இந்த மாளிகை தரம்புரா கட்டப்பட, அமைப்புகள் மீட்டெடுக்கப்பட்டவையில் இது மட்டும் தனித்து நிற்கிறது. கடந்த கால பெருமையை தாங்கிக்கொண்டு நிற்கும் இவ்விடம் 6 ஆண்டு கால பெருமையுடன் உயர்ந்து சிறந்து விளங்குகிறது.

இந்த மாளிகை சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க, மற்ற மாளிகைகளுக்கும் இது நம்பிக்கையை தந்து சுற்றி உள்ள இடங்களை மறக்க செய்து மனதினை வரண்ட பாலைவனமாக மாற்றி இந்த மாளிகையின் பெருமையையே மனதினில் பதிய செய்கிறது.

 பகிரத் அரண்மனை:

பகிரத் அரண்மனை:

இன்றைய சூழலில் இந்த பகிரத் அரண்மனையானது மாபெரும் மின்னணு பொருட்கள் அடங்கிய சந்தையாக வலம்வர, நீண்ட நெடிய வரலாற்றையும் தாங்கிக்கொண்டு விளங்குகிறது. இந்த அமைப்பானது உயர்ந்த நுழைவாயிலை கொண்டிருக்க, ரொமானிய தூண்களும் உயர்ந்து பெருமையுடன் காணப்பட; இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி கட்டிடமாக இது இன்று காணப்படுகிறது.

இந்த அரண்மனை, பேகம் சம்ருவுக்கு சொந்தமாக, இவர் ஒரு காஷ்மீரி அக்கை பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரால் மீரட்டின் சரதனாவை ஆட்சிபுரிந்து வளர்ச்சியடைய செய்தவர் என்பது தெரியவர, சக்திவாய்ந்த தலைவர் இவர் என்பதும் வரலாற்றின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

Travelling Slacker

 கினரி பஜார்:

கினரி பஜார்:

வணிக மையமாக முன்பு இந்த கினரி பஜார் காணப்பட, ஷாஜஹனாபாத்தின் இந்து மக்கள் அதிகம் கொண்ட ஒரு இடமும் இதுவே. இந்த பஜார், சமூகத்தின் நிலையை மாற்ற, பிரிட்டிஷ் காலத்தில் இனவாத உறவுகளையும் இது கொண்டிருந்தது. இந்த பஜாரின் பாதை நிறைய முஸ்லிம் குடும்பத்தினருக்கு வீடாக விளங்க, 1857ஆம் ஆண்டு கலகத்தின்போது அவர்கள் இடம்பெயர்ந்தனர் என்றும் தெரியவருகிறது.

அதோடுமட்டுமல்லாமல், முஸ்லீம்களுக்கு பதிலாக இந்துக்கள் இங்கே மாற்றப்பட, அதன்பிறகு இனவாத பதற்றம் இல்லையென்றும், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு இந்த பஜார் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதையும் நாம் உணர்கிறோம்.

Supratim Ghosh

 சிட்லி க்யூபர் பஜார்:

சிட்லி க்யூபர் பஜார்:


தில்லியின் உணவருந்துபவர்களின் ஓரமாக இவ்விடம் விளங்குகிறது. இந்த உணவு வகைகள் கடந்த காலத்தின் பெருமையை நினைவில் கொண்டுவருகிறது. சிட்லி க்யூபர், நான்கு வழிகளுக்கும், க்யூபருக்கு குறுக்குவெட்டில் அமைந்திருக்க, பஜாரின் கல்லறை எனவும் அது தெரியவர பயம்கொள்ளும் நம் மனம், அவை ஆடுகளுக்கானவை என்பதனை தெரிந்து பெருமூச்செறிகிறது.

இவற்றின் கதைகள் நம்பப்பட, கடைக்காரர்களும் அப்பகுதியில் சூழ்ந்திருப்பதோடு மலர்களை எதிர்ப்பார்ப்பின்றி வழங்குகின்றனர், அவர்கள், அந்த கல்லறையில் தினமும் மலர் வைத்து வணங்குவதாகவும் நம்பப்படுகிறது.

Prateek Rungta

 காரி போலி:

காரி போலி:

படிக்கிணறான காரி போலி, 1650ஆம் ஆண்டு லஹோரி கதவுடன் இணைந்து கட்டப்பட்டது. இந்த படிக்கிணறுகள் விலங்குகளின் குளியலுக்காக ஷாஜகான் ஆட்சியின்போது கட்டப்பட்டது என்றும் தெரிய வருகிறது.

பதினேழாம் நூற்றாண்டிலிருந்து இந்த பகுதியானது மசாலா சந்தையாகவும் வலம் வர, ஆசியாவின் மிகப்பெரிய வாசனை பொருட்கள் சந்தை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Jon Connell

 சௌராசி காண்டா மந்திர்:

சௌராசி காண்டா மந்திர்:

ஆலயங்கள் பல காணப்பட அவற்றுள் ஒன்று தான் சௌராசி காண்டா மந்திர் ஆகும். சீதா ராம பஜாரின் வழிகளில் கூட்டம் சூழ, உள்ளூர் மக்களால் பெயர் பெற்று விளங்கும் ஒரு இடம் இது என்பதும் தெரியவருகிறது.

இங்கே காணும் 84 மணிகளால் இந்த ஆலயத்திற்கு இப்பெயர் வர, இந்த அனைத்து மணிகளும் ஒரு சரத்துடன் இணைக்கப்பட்டும் காணப்படுகிறது. இதனால், 84 மணிகளும் ஒரே நேரத்தில் முழங்க, அந்த மணி ஒலியானது 84 இலட்ச சுழற்சிகள் மனித ஆத்மா பிறக்க எடுத்துக்கொள்கிறது என்பதனை குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Greg Willis

Read more about: travel