» »ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அற்புத கலாச்சார நகரமான அர்துனாவைப் பற்றிய தொகுப்பு!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அற்புத கலாச்சார நகரமான அர்துனாவைப் பற்றிய தொகுப்பு!!

By: BalaKarthik

நாட்டின் வடமேற்கு பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயம், வெளி நாட்டவர்களுக்கும், உள் நாட்டு சுற்றுலா ஆர்வலர்களுக்கும் ஏற்ற முக்கியமான இடமாக அமைகிறது. இந்த மாநிலம், கலாச்சாரம், வரலாறு, வேறுபட்ட புவியியல் என காணப்பட தாவரங்களும், விலங்குகளும் விதவிதமாக இங்கே காணப்படுகிறது. இந்த காட்சிகளால் கட்டி ஈர்க்கப்படும் சுற்றுலாப் பயணிகளின் வருகையானது வயது பாராமல், சுவை பாராமலென அனைவரையும் வெகுவாக கவர்கிறது.

கலாச்சார பாரம்பரியமென வரும்பொழுது, ஆலயத்தின் கட்டிடக்கலை முக்கிய கூறுகள் ஒன்றினை தாங்கிக்கொண்டு நிற்கிறது. மாநிலத்தின் தெற்கு பகுதியானது பழங்குடி மாவட்டங்களான பன்ஸ்வாரா மற்றும் துங்கர்பூருக்கு வீடாக விளங்க, இதனை உள்ளூர் பாசையில் 'வகத்' பகுதி என்றழைக்கின்றனர். இவை பின்தங்கிய பழங்குடியினர் நிலையை எடுத்துரைக்க, எண்ணற்ற சுற்றுலா பயணிகள் இங்கே வந்து செல்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அற்புத கலாச்சார நகரமான அர்துனாவைப் பற்றிய தொகுப்பு!!

Christopher Walker

பன்ஸ்வாரா மாவட்டத்தில் காணும் ஒரு கிராமம் தான் அர்துனா ஆகும். இவ்விடம், அழகிய ஆலயங்களை இடிபட்ட நிலையுடன் தாங்கிக்கொண்டு நிற்க, இந்த பகுதியை ஆண்ட பலரால் பதினொன்று மற்றும் பதின்மூன்றாம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டதாகவும் தெரியவருகிறது. இங்கே காணப்படும் ஆலய கட்டுமானங்கள் சில கற்களை கொண்டு மட்டும் தடுப்பமைக்கப்படாமல், கற்களை கொண்டு எப்படி செதுக்க வேண்டும்? எனவும் நமக்கு கவிதையாக வாசித்து மனதினை காட்சிகளால் வருடுகிறது.


இந்த இடத்தின் வரலாறு:


கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இது தொடங்கப்பட, மால்வாவின் ராஜ உபேந்திராவால் இது நிறுவப்பட, இவர் பரமரா வம்சத்தை சேர்ந்தவர் என்பதும் நமக்கு தெரியவருகிறது. அதன்பின்னர், வாகாத், சந்திரவதி, பின்மால் மற்றும் கிரடு பகுதிகளையும் இவர் பிடித்து ஆண்டதாகவும் தெரியவருகிறது. பரமரா வம்சத்தின் ராஜ புன்டரிக் என்பவர் அர்துனாவை அவருடைய தலைமையகத்தில் கட்டியதாகவும், இந்த அர்துனாவின் உண்மை பெயர் அமராவதி அல்லது உத்துங்கா என்றும் தெரிய வருகிறது. அந்த ஆட்சியாளரும், அவருடைய சந்ததிகளும் சேர்ந்து இங்கே காணும் எண்ணற்ற ஆலயங்களை கட்டமைத்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அற்புத கலாச்சார நகரமான அர்துனாவைப் பற்றிய தொகுப்பு!!

TeshTesh

இங்கே காணப்படும் கல்வெட்டுக்களை வைத்து பார்க்கையில், சமுந்த ராஜா என்னும் பரமரா அரசியால் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டு இந்த ஆலயம் கட்டப்பட, இதனை மண்தலேஷ்வர் என்றும் அழைப்பர். கி.பி.1079இல் அவருடைய தந்தைக்காக முதலில் இந்த ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டதும் தெரியவருகிறது. கி.பி.1080இல் வடிக்கப்பட்ட இன்னொரு கல்வெட்டு இங்கே காண, ஆனந்தபலா என்னும் அவருடைய அதிகாரியின் மகனால் சிவாவிற்கு இந்த ஆலயம் கட்டப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

ஆலயங்களின் கூடாரம்:

இங்கே ஆலயங்கள் ஆங்காங்கே பிரிந்து காணப்பட, ஆட்சியாளர்களின் மத நம்பிக்கையையும் இது பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது. இந்த அமைப்புகள், சைவ மதம், ஜெய்ன் மதம் மற்றும் வைஷ்ணவ மதத்தின் கலப்பாகவும் இருக்கிறது. 1954ஆம் ஆண்டு, இந்தியாவின் தொல்லியல் துறையால் இந்த அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட, வெவ்வேறு விதமான ஆலயங்கள் இங்கே தென்பட்டதாக தெரியவருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அற்புத கலாச்சார நகரமான அர்துனாவைப் பற்றிய தொகுப்பு!!

TeshTesh

மந்தலேஷ்வர் சிவன் ஆலயம் மிகவும் முக்கியமான மற்றும் பெரிய ஆலயமாக சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு காணப்படுகிறது. இங்கே காணும் கல்வெட்டுகளின்படி, இந்த ஆலயமானது ராஜ் சாமுண்டா ராஜ் என்பவரால் தன்னுடைய தந்தையான ராஜ மன்ட்லிக்கிற்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவிடமாக காணப்பட்டது. இந்த ஆலயம், இன்றும் பராமரிக்கப்பட்டு வர, தினசரி பிரார்த்தனைகளும் நடைபெறுகிறது. மற்றுமோர் ஆலயமும் அருகில் காணப்பட, அது ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றும் தெரியவருவதோடு கி.பி 1107 ஆம் ஆண்டு ராஜ விஜயராஜால் இது கட்டப்பட்டது என்றும் தெரிய வருகிறது.

இங்கே மேலும் ஜெய்ன் ஆலயத்தையும் நம்மால் பார்க்க முடிய, பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டதாகவும் தெரியவருகிறது. ஜெய்ன் ஆலயத்திற்கு அருகில் மற்றுமோர் ஆலயம் காணப்பட, அந்த ஆலயம் சௌசாத் யோகினி அல்லது சிவ பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றும் தெரியவருகிறது. இந்த ஆலயமானது வெவ்வேறு கால நிலையில் கட்டப்பட்டிருக்க, குழுக்களாக இணைந்து இதனை கட்டியதும் தெரிய வருகிறது. அந்த அமைப்புகளுள் ஒன்றான ஹனுமான் கார்ஹி அமைப்பானது, ஹனுமானுக்காக கரு நிற கல் கொண்டு அமைக்கப்பட்ட சிலை என்றும், அதோடு இணைந்தவாறு சிவபெருமான் ஆலயமும் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.


நகரா பாணியில் இதன் கட்டிடக்கலை அமைப்பானது காணப்பட, நாட்டின் பல பகுதிகளில் இக்கலை பரவலானதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தின் அடித்தளமானது, உயரமான சதுரம் அல்லது செவ்வக நடைமேடையை கொண்டிருக்க, முக்கிய ஸ்தலமும் இங்கே கட்டப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அற்புத கலாச்சார நகரமான அர்துனாவைப் பற்றிய தொகுப்பு!!

Pradeepjaiswalpraja

எப்படி நாம் அடைவது?


அர்துனா கிராமத்தை அடைய பன்ஸ்வாராவிலிருந்து 55 கிலோமீட்டர் ஆக, உதய்ப்பூரிலிருந்து 150 கிலோமீட்டரும் ஆகிறது. உதய்ப்பூர் தான் அருகில் காணும் விமான நிலையமாகும். இந்த இடமானது சாலையுடன் சிறந்த முறையில் மாநிலம் முழுவதும் இணைக்கப்பட்டிருக்க, அத்துடன் அருகில் இருக்கும் குஜராத் மாநிலமும் இணைந்தே காணப்படுகிறது.

Read more about: travel