» »வைகுண்ட ஏகாதசிக்கு எந்த கோவிலுக்கு போனால் அதிக புண்ணியம் தெரியுமா?

வைகுண்ட ஏகாதசிக்கு எந்த கோவிலுக்கு போனால் அதிக புண்ணியம் தெரியுமா?

Written By: Udhaya

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் கோவில் அது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திறக்கப்படும் இக்கோவிலின் சொர்க்கவாசலை காண்பது அவ்வளவு புண்ணியம்.

அது ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில். திருச்சியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம், தமிழகத்தின் முக்கிய புனித தலங்களில் ஒன்றாகும்.காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள இந்த தீவு நகரத்தில் அமைந்துள்ளது ரங்கநாதசுவாமி கோவில்.இந்தியாவின் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக இது விளங்குகிறது.

ஒன்பதாம் நூற்றாண்டு

ஒன்பதாம் நூற்றாண்டு

சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களில் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், 9 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுகளில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளே கோயிலில் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, ஹொய்சள மற்றும் விஜயநகர பேரரசுகளின் காலத்தை சேர்ந்தவையாகும். அதுமட்டுமல்லாமல் அரசுகள் மாறினாலும், ஒவ்வொருவரும் கோயிலைப் தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளனர்.


PC: Prabhu B Doss

ராஜகோபுரம்

ராஜகோபுரம்

ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயிலின் கோபுரம் இந்தியாவின் 2-வது உயரமான கோபுரமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மொத்தம் 21 கோபுரங்களை கொண்ட இந்தக் கோயிலின் ராஜகோபுரம் 236 அடி உயரத்தில், கர்நாடகாவிலுள்ள முருதேஸ்வர் கோயிலுக்கு பிறகு ஆசியாவிலேயே 3-வது உயரமான கோபுரமாக அறியப்படுகிறது. எனினும் ஏனைய 20 கோபுரங்கள் 14 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டிருந்தாலும், ராஜகோபுரம் மட்டும் 1987-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதாவது 400 ஆண்டு காலமாக 55 அடி உயரத்தில் கட்டி முடிக்கப்படாமல் நின்றுகொண்டிருந்த கோபுரம் 236 அடி உயரத்தில் அஹோபிலா மடத்தால் முழுமை பெற்றது.

PC: Giridhar Appaji Nag Y

தொண்டைமான்

தொண்டைமான்

சுமார் 120 ஆண்டுகள் வாழ்ந்த ராமானுஜர், தன்னுடைய திருமேனியை அகளங்கன் திருச்சுற்றில் உள்ள தன்னுடைய மண்டபத்தில் வைத்து இறுதி காரியங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். அதுவே தற்போது உடையவர் சன்னதியாக அறியப்படுகிறது.

PC: Todayindian

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இந்த கோவிலின் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இவற்றை அதிகாலையில் எழுந்து புனித நீராடி சென்று முழு பக்தியுடன் பார்ப்பதன் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமியின் அருள் நேரடியாக கிடைப்பதாக நம்பப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு..

சக்கரத்தாழ்வார் சன்னிதி

சக்கரத்தாழ்வார் சன்னிதி

மூலவரான சக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். இவருக்கு பின்புறம் யோக நரசிம்மனின் திருவுருவத்தைக் காணலாம். அதோடு எட்டுத் திருக்கைகள், சங்கு, சக்கரம் மற்றும் அங்குசங்குகளுடன் காட்சியளிக்கும் சுதர்சன ஆழ்வாராக பெருமாள் தோற்றமளிக்கிறார்.

PC: Ryan

கல்வெட்டுக்கள்

கல்வெட்டுக்கள்

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் 9-ஆம் நூற்றாண்டுகளிலிருந்து கிடைக்கப்பெறும் கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, ஹொய்சள மற்றும் விஜயநகர பேரரசுகளின் காலத்தை சேர்ந்தவையாகும். இவற்றில் 105 கல்வெட்டுகள் சோழர்கள் காலத்தை சார்ந்தவை என்று நம்பப்படுகின்றன.

PC: Jean-Pierre Dalbéra

மலைக்கோட்டையிலிருந்து ஒரு பார்வை

மலைக்கோட்டையிலிருந்து ஒரு பார்வை

திருச்சியின் முக்கிய இடங்களுள் ஒன்றான திருச்சி மலைக்கோட்டையிலிருந்து பார்க்கும்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலின் தோற்றம் நம் மனதை ஆர்ப்பரிக்கும் விதத்தில் அமைந்திருக்கும்.

PC: Raj

சுவாமி தரிசனம்

சுவாமி தரிசனம்

வைகுண்ட ஏகாதசியின் போது எழுந்தருளும் பெருமாளைக் காண கூட்டம் அலைமோதும். அதிகாலையில் எழுந்து கோவிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியம் எனவும், அவரது அருள் நமக்கு கிடைக்க எளிய வழி இது எனவும் நம்பப்படுகிறது.

ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலுக்கு ஒரு போட்டோ டூர்

ஆயிரங்கால் மண்டபம்

ஆயிரங்கால் மண்டபம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள 1000 தூண் மண்டபம் இதுவாகும்.

இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

PC: Giridhar Appaji Nag Y

கோவிலுக்கு செல்லும் வழி

கோவிலுக்கு செல்லும் வழி

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலுக்கு எப்படி செல்வது என்பதை அறிவதற்கு இங்கு கிளிக் செய்யுங்கள்

PC: Ryan

Please Wait while comments are loading...