Search
  • Follow NativePlanet
Share
» » ஈரோட்டுக்கு பக்கத்தில ஜாலியா குடும்பத்துடன் என்ஜாய் பண்ண 6 குளிர்ச்சியான இடங்கள்!

ஈரோட்டுக்கு பக்கத்தில ஜாலியா குடும்பத்துடன் என்ஜாய் பண்ண 6 குளிர்ச்சியான இடங்கள்!

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் போகிறதே தவிர குறையவில்லை என்று நம்மில் பலரும் உணருகிறோம். இந்த வெயிலுக்கு என்ன தான் செய்வது? எந்நேரமும் ஏ.சி அறையிலும் இருக்க முடியாது, அதுக்கு உடலுக்கு தீங்கு தான். வெயிலுக்கு இதமாக தண்ணீர் தேங்கி நிற்கும் அருவி, அணைகள், குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளில் குளித்து மகிழலாம் அல்லவா!

வெயிலுக்கு இதமாக ஆட்டம் போட்ட மாதிரியும் இருக்கும், வீட்டிலேயே சும்மா அமர்ந்து இல்லாமல் வெளியே சென்று வந்த மாதிரியும் இருக்கும் அல்லவா! அதற்காகத்தான் ஈரோடுக்கு பக்கத்தில் ஒரு நாளில் சென்று வந்தவிடக்கூடிய அளவில் உள்ள, எப்பொழுதுமே தண்ணீர் நிரம்பியுள்ள அசத்தலான ஒரு 6 இடங்களைப் பற்றி பார்ப்போம்! இந்த இடங்களுக்கு எல்லாம் உங்கள் குடும்பம் குழந்தைகளுடன் சென்று இந்த கோடையில் ஒரு ஆட்டம் போட்டு விட்டு வாருங்கள்!

கொடிவேரி அணை

கொடிவேரி அணை

ஈரோடு சத்தியமங்கலத்தில் அமைந்துள்ள இந்த கொடிவேரி அணை ஆண்டின் எந்த நேரத்திலும் நீர் வரத்து கொண்டிருக்கும் ஒரு அணையாகும். இங்கே நீங்கள் 50 ரூபாய்க்கு பரிசல் சவாரி செய்யலாம். அதோடு சுவையான மீன் குழம்பு சாப்பாடு, மீன் வறுவல் ஆகியவையும் இங்கே கிடைக்கும். இந்த அணை ஈரோட்டில் இருந்து 50 கிமீ தொலைவிலும், கோயம்புத்தூரிலிருந்து 70 கிமீ தொலைவிலும், சேலத்திலிருந்து 105 கிமீ தொலைவிலும், மதுரையிலிருந்து 227 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்த இடத்திற்கு நுழைவுக்கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.5 வசூலிக்கப்படுகிறது. உங்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூ.10 பார்க்கிங் கட்டணமாகவும், காருக்கு ரூ.20 பார்க்கிங் கட்டணமாகவும் வசூலிக்கப்படும். இங்கு நீங்கள் உங்களுக்கு பிடித்த இடத்தில் குளித்து மகிழலாம், குறிப்பாக இந்த அணை எப்போதுமே வற்றாமல் இருக்கிறது.

காளிங்கராயன் அணைக்கட்டு

காளிங்கராயன் அணைக்கட்டு

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள காளிங்கராயன் அணைக்கட்டு ஈரோடு மையத்தில் இருந்து 13 கிமீ தொலைவிலும், கோயம்புத்தூரிலிருந்து 66 கிமீ தொலைவிலும், சேலம் மாவட்டத்திலிருந்து 105 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. சுற்றிலும் நீர் நிரம்பியிருக்கும் இந்த அணைக்கட்டில் நீங்கள் குளிக்க மட்டுமே முடியும், அல்லது நீச்சல் தெரிந்தவர்கள் நீச்சலில் ஈடுபடலாம். ஈரோடு மையத்தில் இருந்து வீரபஞ்சற்றம், சூரியம்பாளையம், கருந்தேவன்பாளையம் வழியாக காளிங்கராயன் அணைக்கட்டை அடைந்திடலாம்.

நாகர்மறை பண்ணவாடி பரிசல்

நாகர்மறை பண்ணவாடி பரிசல்

தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நாகர்மறை பண்ணவாடி பரிசல் துறை ஈரோடு மாவட்டத்திலிருந்து 72 கிமீ தொலைவிலும், கோயம்புத்தூரிலிருந்து 152 கிமீ தொலைவிலும், சேலத்திலிருந்து 68 கிமீ தொலைவிலும், , மதுரையிலிருந்து 271 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கே நீங்கள் வெறும் 15 ரூபாயில் போட்டிங் செல்லலாம், அதே போல வெறும் 100 ரூபாய்க்கு அருமையான மீன் குழம்பு சாப்பாடு கிடைக்கும். எல்லாவற்றிகும் மேல் உங்களுக்கு பிடித்த இடத்தில் குளிக்கலாம். எந்த கட்டுப்பாடும் கிடையாது.

ஜேதார்பாளையம் அணை

ஜேதார்பாளையம் அணை

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஜேதார்பாளையம் அணை, ஈரோடு மாவட்டத்திலிருந்து 34 கிமீ தொலைவிலும், கோயம்புத்தரிலிருந்து 120 கிமீ தொலைவிலும், சேலம் மாவட்டத்திலிருந்து 85 கிமீ தொலைவிலும், மதுரை 177 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் நீங்கள் குளிக்கலாம், நீச்சல் அடிக்கலாம், சுவையான மீன் குழம்பு சாப்பாடு, முடிந்த அளவிற்கு சூரியன் மறையும் வரையில் தங்கி இருங்கள், மிகவும் அழகாக இருக்கும் அந்த காட்சியாய காண தவறாதீர்கள்.

பூலாம்பட்டி

பூலாம்பட்டி

குட்டி கேரளா எனப்படும் இந்த பூலாம்பட்டி சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அழகிய ஸ்பாட் ஈரோட்டில் இருந்து 43 கிமீ தொலைவிலும், கோயம்புத்தூரிலிருந்து 130 கிமீ தொலைவிலும், சேலத்திலிருந்து 56 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கே நீங்கள் போட்டிங் செய்யலாம். குளிக்கலாம், நீச்சலடிக்கலாம். சுவையான மீன் குழம்புடன் மீன் வறுவல் சாப்பிடலாம்.

ஒகேனக்கல்

ஒகேனக்கல்

தருமபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒகேனக்கல் பற்றி அறியாதோர் யாரும் இருக்க மாட்டார்கள். ஈரோடு மாவட்டத்திலிருந்து 110 கிமீ தொலைவிலும், கோயம்புத்தூரிலிருந்து 198 கிமீ தொலைவிலும், சேலம் மாவட்டத்திலிருந்து 86 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தில் பரிசல் செல்லுவது இங்கே மிகவும் பேமஸ். அதோடு மீன் குழம்புடன் கூடிய மீன் வறுவல் சாப்பாடு மிகவும் ருசியாக இருக்கும் என அனைவரும் சொல்லுவார்கள். அதோடு குறிப்பாக இங்கே ஆயில் மசாஜ் செய்ய மறக்காதீர்கள்.

இந்த வெயிலில் நம் வீட்டு மாடியில் தண்ணீர் டேங்க் கூட வற்றி விடுகிறது. ஆனால் மேற்கூறப்பட்ட இடங்கள் யாவும் இந்த கோடையிலும் வற்றாத நீர்வரத்து கொண்ட இடங்களாகும். இங்கே நீங்கள் நிச்சயமாக உங்கள் வீட்டு குட்டீஸ்களுடன் பெரியவர்களுடன் அல்லது நண்பர்களுடன் செல்லலாம். கம்மியான பட்ஜெட்டில் ஒரு நாள் ட்ரிப் அசத்தலாக அரங்கேற்றலாம். இந்த 6 இடங்களுக்குமே ஒரே நாளில் செல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு வாரத்திற்கு ஒரு ஸ்பாட் என நீங்கள் பொழுதுபோக்கு செய்ய இவை யாவும் பெஸ்ட் ஸ்பாட்ஸ்!

More News

    Read more about: erode tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+