Search
  • Follow NativePlanet
Share
» »காதலர் தினத்தைக் கொண்டாடனுமா? அப்படின்னா சென்னையின் இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!

காதலர் தினத்தைக் கொண்டாடனுமா? அப்படின்னா சென்னையின் இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!

சென்னை - தமிழக தலைநகராக தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக எப்பொழுதும் பரபரப்பாக சுழன்றுக் கொண்டிருக்கிறது. சென்னை அதிக மக்கள் தொகை கொண்ட பெருநகரம் என்பதால் இங்கே இயற்கையை ரசிக்கவோ அல்லது காதலருடன் சேர்ந்து செல்லவோ தனிமையான இடங்கள் இல்லை என பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல! இந்த காதலர் தினத்தை சென்னையில் உள்ள இந்த அழகிய இடங்களில் ஏதோ ஒன்றிற்கு சென்று ஆனந்தமாக கொண்டாடிடுங்கள்! தனிமை நிறைந்த சென்னையின் ரொமாண்டிக் ஆன இடங்களின் லிஸ்ட் இதோ!

முட்டுக்காடு

முட்டுக்காடு

அழகிய கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த இடம் அற்புதமான வங்காள விரிகுடாவின் உப்பங்கழியாகும். சிறிது நேரம் படகு சவாரி செய்வதை விட வேடிக்கையாக எதுவும் இல்லை, மேலும் இது உங்களை தனியாக சில நேரத்தை ஒன்றாக செலவிட அனுமதிக்கும். கிழக்கு கடற்கரை சாலையில் ஒன்றாக பைக் பயணம் செய்வதே அலாதியானது தானே! உங்களுக்கு துணிச்சலாக ஸ்கைபோட்டிங் செய்வது பிடிக்குமென்றால் நீங்கள் உங்கள் காதலியை அழைத்துக்கொண்டு செல்லலாம்.

தக்ஷிணசித்ரா அருங்காட்சியகம்

தக்ஷிணசித்ரா அருங்காட்சியகம்

நீங்களும் உங்கள் காதலியும் கலை மீது ஆர்வம் கொண்டவர்கள் என்றால் இது தான் உங்களுக்கு சரியான ஸ்பாட். கலை, கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு அனைத்தையும் ஒரே நேரத்தில் கண்டறிய இந்த அற்புதமான இடமாகும். தக்ஷிணசித்ரா அருங்காட்சியகம் தென்னிந்தியாவின் சிறந்த வாழ்க்கை வரலாற்றை காண்பிக்கும் இந்தியாவின் அருங்காட்சியகங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த அழகான இடத்தில் எப்பொழுதுமே ஒரு வித அமைதி சூழப்பட்டு இருப்பதால் உங்கள் மனம் விட்டு பேசி மகிழ இந்த இடம் வாய்ப்பளிக்கிறது.

மால்கள் மற்றும் சினிமா அரங்குகள்

மால்கள் மற்றும் சினிமா அரங்குகள்

ஒரே இடத்தில் அற்புதமான உணவகங்கள், பிராண்டட் ஷோரூம்கள் மற்றும் திரையரங்குகள் அனைத்தையும் பெறக்கூடிய 'ஆல் இன் ஒன்' விருப்பத்தை தான் மால்கள் நமக்கு வழங்குகின்றன. அதிலும் சென்னையில் ஏகப்பட்ட பிரமாண்டமான மால்களும், சினிமா அரங்கங்களும் உள்ளன.

காலையில் காதலருடன் சென்றால், சினிமா, ஷாப்பிங், கேளிக்கை, உணவு என எல்லாவற்றிலும் குதுகலித்துவிட்டு இரவு தான் வெளியே வர முடியும். அந்த அளவிற்கு சென்னையில் சாய்ஸ் உண்டு.

இந்தியாவின் மூன்றாவது பெரிய பொழுதுபோக்கு வளாகமான வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மால், எக்ஸ்பிரஸ் அவென்யு, விஆர் மால், மரினா மால், ஃபோரம் மால், காற்றோட்டமான ஓபன் டிரைவ் - இன் தியேட்டரான பிரார்த்தனா, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய சினிமா பார்க் ஆன மாயாஜால் சினிமாஸ் ஆகியவை உங்களுக்கு ஒரு சரியான தேர்வாக இருக்கும்.

சென்னையின் கடற்கரைகள்

சென்னையின் கடற்கரைகள்

சென்னை இயற்கையான கண்கவர் காட்சிகளை வழங்கும் ஏராளமான கடற்கரைகளைக் கொண்டுள்ளது. குதிரை சவாரி, காத்தாடி விடுவது, பல வகை சுவையான உணவுகளை ருசிப்பது என பல அமசங்களைக் கொண்ட ஆசியாவின் மிக நீண்ட கடற்கரையான மரினா பீச், நவநாகரீக உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் நிறைந்த சுத்தமான கடற்கரையான எலியட்ஸ் பீச், நீச்சல் மற்றும் சர்ஃபிங்கிற்கு ஏற்ற கோவளம் கடற்கரை ஆகியவை உங்களுக்கும் உங்கள் துனையிற்கும் ஒரு சரியான தேர்வாக இருக்கும்.

மேலும், கூட்ட நெரிசல் இல்லாத அமைதியான சூழலில் அமைந்துள்ள ப்ரீஸி பீச், போட்டோஷூட்டிற்கு ஏற்ற பெப்பில் பீச், அழகான மகாபலிபுரம் பீச் ஆகியவற்றையும் நீங்கள் உங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

உயிரியல் பூங்காக்கள்

உயிரியல் பூங்காக்கள்

நெரிசலான நகரத்திலிருந்து விலகி உங்கள் காதலருடன் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவதில் உயிரியல் பூங்காக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அமைதியான சூழல், வனவிலங்குகள் என இயற்கையின் சாம்ராஜ்யத்தில் அந்த நாளை சிறப்பாக அனுபவிக்க முடியும். அவற்றில் வண்டலூர் உயிரியல் பூங்கா, சென்னை ஸ்நேக் பார்க், கிண்டி தேசியப் பூங்கா, க்ரோக்கடைல் பார்க், புலிகட் லேக், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், இவை யாவும் சென்னைக்கு மிக அருகில் தான் அமைந்துள்ளன.

கேளிக்கை பூங்காக்கள்

கேளிக்கை பூங்காக்கள்

கேளிக்கை பூங்கா என்ற பெயரைப் போலவே, இவை ஒரு பெரிய வளாகத்தில் அற்புதமான சவாரிகள், நீர் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களைக் கொண்ட மெகா கேளிக்கை மையங்களாக திகழ்கின்றன. எல்லாவற்றையும் மறந்து சாகச உணர்வில் திளைத்து நண்பர்களுடன் ஆனந்தாமாக இருக்க இப்பூங்காக்கள் ஒரு இனிய வாய்ப்பை வழங்குகின்றன.

எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்ட், குயின்ஸ்லாந்து, விஜிபி யுனிவர்சல் கிங்டம், விஜிபி ஸ்னோ கிங்டம், கிஷ்கிந்தா தீம் பார்க், வைல்ட் ட்ரைப் ராஞ்ச், டாஷ்-என்-ஸ்பிளாஸ் ஆகியவை முற்றிலும் உங்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மகாபலிபுரம்

மகாபலிபுரம்

கடைசியாக இதைப்பற்றி பேசினாலும், அதிகப்படியான காதலர்கள் கூட்டத்தை நீங்கள் இங்கே தான் காண முடியும். சென்னையில் இருந்து 52 கிமீ தூரத்தில் அமைந்துள்ள மகாபலிபுரம் பல்லவ காலத்து சிற்பங்கள், குடைவரைக் கோயில்கள், பஞ்ச ரதம், கடற்கரை கோவில், சர்ஃபிங், சுடசுட மீன் உணவு, அட்டகாசமான ஷாப்பிங் என எல்லாவற்றையும் வழங்குகிறது. சாதாரண நாட்களிலும் கூட இங்கு காதல் ஜோடிகள் சுற்றுவதை நாம் பார்த்து இருப்போம். காதலர் தினத்தன்று சொல்லவே வேண்டாமே!

மேற்கூறப்பட்ட இடங்களில் ஏதேனும் ஒன்றிற்கு உங்கள் காதலருடன் வெளியே சென்று அன்பை வெளிப்படுத்தி மகிழுங்கள்!

More News

    Read more about: chennai tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+