Search
  • Follow NativePlanet
Share
» »5 பிரிட்டிஷ் தீவுகள் விரைவில் “மெகா சுனாமியால்” அழியப் போகும் ஆபத்தில் உள்ளதாம்!

5 பிரிட்டிஷ் தீவுகள் விரைவில் “மெகா சுனாமியால்” அழியப் போகும் ஆபத்தில் உள்ளதாம்!

இந்தியாவில் புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் என்றால் உலகின் பல பகுதிகளில் பூகம்பம், சுனாமி, சூறாவளி என இயற்கை பேரழிவுகள் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் இது போன்ற பெரிய எந்த வகையான இயற்கை பேரழிவுகளும் இதுவரை பிரிட்டனை தாக்கியது இல்லை. எல்லாம் சேர்த்து வைத்து வருவது போல பிரிட்டனின் உள்ள தீவுகளை எந்த நேரத்திலும் "மெகா சுனாமி" தாக்கி மிகப் பெரிய அழிவை உண்டாக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த தகவல் உலகையே சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது!

tsunamicover

இங்கிலாந்தை நோக்கி வரும் மெகா சுனாமி

இங்கிலாந்து அரசாங்கத்தின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர், சர் டேவிட் கிங், கேனரி தீவுகளில் நிலச்சரிவினால் தூண்டப்பட்ட ஒரு பெரிய நீர்ச்சுவர் இங்கிலாந்தில் மோதலாம் என்று கூறியுள்ளார். பல மீட்டர் உயரமுள்ள ஒரு சுனாமி இங்கிலாந்தின் வழிக்கு அனுப்பப்பட்டு, கடற்கரைக்கு உள்ளேயும் அதற்கு அப்பாலும் பல நகரங்களை அதன் பாதையில் கொண்டு செல்லும் என்று அவர் மேலும் கூறுகிறார். இந்த அலை பிரிட்டிஷ் கரையை அடைய சுமார் ஆறு மணி நேரம் ஆகும் என்று தெரிகிறது.

mega tsunami to hit these british cities, England

லண்டனும் பாதிப்படையும்

இந்த மெகா சுனாமியின் தாக்கம் லண்டனுக்கும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும். என்று கூறப்படுகிறது. ஒருவேளை இது லண்டனை தாக்கினால் இதனால் ஏற்படும் பாதிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்படி ஒரு விஷயம் நடக்க கூடாது என பலரும் கருது தெரிவித்து வருகின்றனர். இந்த மெகா சுனாமி நாளைக்கே வந்தாலும் வரலாம் அல்லது 10,000 ஆண்டுகள் கழித்தும் கூட வரலாம். இயற்கையை நம்மால் கணிக்க முடியாது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

mega tsunami to hit these british cities, England

விழிப்புணர்வை ஏற்படுத்த நினைக்கும் விஞ்ஞானிகள்

அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மற்றும் குடும்பங்கள் இடம்பெயர்வதற்கான சாத்தியக்கூறுகளுடன் கூடுதலாக லண்டன்வாசிகளை பாதிக்கும் சுனாமியின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். சுனாமி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து லண்டன்வாசிகளிடையே அதிக கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் குழு யோசித்து வருகிறது.

mega tsunami to hit these british cities, England

மெகா சுனாமி என்றால் என்ன?

மெகா-சுனாமி என்பது உலகைத் தாக்கும் மிக அரிதான மற்றும் அழிவுகரமான நிகழ்வு. இது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகைத் தாக்கும். ஒரு மெகா சுனாமிக்கு கிட்டத்தட்ட வரம்பற்ற சக்தி உள்ளது, அதைத் தடுக்க நாம் எதுவும் செய்ய முடியாது. ஒரு மெகா சுனாமி என்பது வழக்கமான சுனாமிகளை விட உயரமான அலையுடனும் வேகத்துடனும் தாக்கும். இந்த அலைகளின் உயரம் நூற்றுக்கணக்காண அடிகளில் தொடங்கி ஆயிரக்கணக்கான அடிகளை கூட தொடும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் இவை கடல்களைக் கடந்து உலகின் மறுபக்கத்தில் உள்ள நாடுகளைக் கூட அழிக்க வல்லது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

mega tsunami to hit these british cities, England

மெகா சுனாமியால் பாதிக்கப்பட போவதாக கூறப்படும் நகரங்கள்

1. பிரைட்டன்

2. போர்ன்மவுத்

3. எக்ஸெட்டர்

4. லண்டன்

5. போர்ட்ஸ்மவுத்

6. சவுத்தாம்ப்டன்

இந்த நகரங்கள் யாவும் மிகவும் அபாயகரமான பட்டியலில் உள்ளன. மெகா சுனாமியின் வீசம் பற்றி எவரும் கணிக்க இயலாது. இயற்கையை நம்மால் என்ன செய்ய முடியும்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+