Search
  • Follow NativePlanet
Share
» »மதுரையில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய பத்து இடங்கள் இவைதான்!

மதுரையில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய பத்து இடங்கள் இவைதான்!

By Udhaya

மல்லிகை நகரம், தூங்கா நகரம், கிழக்கின் ஏதென்ஸ் என இன்னும் பல பட்டங்களை தன்னுள் கொண்டிருக்கும் மதுரை இந்த உலகத்தின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இது இன்றும் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது என்றால் நிச்சயம் பெருமை கொள்ளத்தக்கது. சங்க காலத்தில் சங்கங்கள் அமைத்து தமிழ் வளர்த்த பெருமையை கொண்டது மதுரை. இப்போது நாம் படிக்கும் பழைய தமிழ் உரைகள் எல்லாமே பெரும்பாலும் மதுரையில் இயற்றப்பட்டதுதான். அப்படி இருக்க இந்த மதுரையை வெறும் மீனாட்சி அம்மனை மட்டும் தரிசித்துவிட்டு அப்படியே விட்டுவிடக்கூடாது. அலைந்து திரிந்து கண்டு களித்து புத்துணர்வு பெற மதுரையிலும், மதுரையைச் சுற்றிலும் எக்கச்சக்க இடங்கள் இருக்கின்றன. வாருங்கள் அவற்றைப் பற்றி இந்த பதிவில் காண்போம். இந்த பக்கத்தில் மேல் பகுதியில் இருக்கும் பெல் பட்டனைத் தட்டி, இந்த தளத்திலிருந்து தொடர் அப்டேட்டுகளை பெறுங்கள். மேலும் நமது முகநூல் பக்கத்திலும் பின்தொடருங்கள். ஏதேனும் சுற்றுலாத் தொடர்பான சந்தேகங்களுக்கு முகநூல் பக்கத்தின் உள்டப்பியைத் தொடர்புகொள்ளுங்கள். தமிழ் நேட்டிவ் பிளானட்

மீனாட்சி அம்மன் கோயில்

மீனாட்சி அம்மன் கோயில்

1 மீனாட்சி அம்மன் கோயிலின் பரப்பளவு 15 ஏக்கர் ஆகும்.

2 உலக அதிசயங்கள் பட்டியலில் இடம் பெறவேண்டிய அளவுக்கு அத்தனை அம்சங்களையும் கொண்டதாகும்

3 பொற்றாமரைக் குளத்தில் இருக்கும் தாமரையை மையமாக வைத்தே இந்த கோயில் கட்டப்பட்டுள்ளதைப் போல காட்சியளிக்கிறது.

4 கோயிலின் சுற்றுப்புற நான்கு தெருக்களும் தமிழ் மாதங்களின் பெயர்களை தாங்கி உள்ளன.

5 இந்த கோயிலில் மீனாட்சியை முதலில் வணங்கிவிட்டே சுந்தரேஸரை வணங்குகிறார்கள்

6 பத்து கோபுரங்களில் தெற்கு கோபுரம் தான் மிகப் பெரியது. இது 170 அடி உயரமானது.

7 சிறப்பு : பழமை சுவரோவியங்கள் கட்டிடக்கலை பக்தி புனித பொற்றாமரைக் குளம், கோபுரங்கள்

8 நுழைவுக் கட்டணம் : இலவசம்

9 திறந்திருக்கும் நேரம் : காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

10 கோயிலைச் சுற்றிலும் நிறைய பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன,. மேலும் அருகிலேயே அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஆயிரம் தூண்கள், பொற்றாமரைக்குளம் என காண்பதற்கு நிறைய இருக்கின்றன.

Arian Zwegers

பழமுதிர்சோலை முருகன் கோயில்

பழமுதிர்சோலை முருகன் கோயில்

1 பழமுதிர்சோலை, முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்த இடமாக அறியப்படுகிறது

2 மதுரையிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் அமைந்துள்ளது. இது முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று

3 சுட்டப்பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என ஔவையாரை முருகன் சோதித்ததாக நம்பப்படுகிறது

4 இந்த நாவல் மரம் இன்றும் இந்த ஊரில் காணப்படுவது வரலாற்று சிறப்பாகும்

5 இங்கு காணப்படும் நூபுர கங்கை எனும் தீர்த்தத்தில் ஆயிரம் ஆண்டுகளாக நீர் வந்துகொண்டிருக்கிறது.

6 கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம் போன்ற நாட்களில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Santhoshlife91

 திருமலை நாயக்கர் அரண்மனை

திருமலை நாயக்கர் அரண்மனை

1 பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க வம்ச மன்னர் திருமலை என்பவரால் கட்டப்பட்டது இந்த அரண்மனை

2 இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிலப்பதிகார இலக்கியம் மற்றும் திருமலை நாயக்கர் குறித்த ஆவண விளக்கப்பட காட்சிகள் நிகழ்த்தப்படுகின்றன.

3 58 அடி உயரம் கொண்ட 248 தூண்கள் இந்த அரண்மனையில் அமைந்துள்ளன. கூரைகளில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய ஓவியங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

4 கட்டிடக் கலை உங்களை மெய்சிலிர்க்க வைக்கும். அலங்காரமும் சிறப்பாக இருக்கும்.

5 அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களையும் மரச்சாமான்களையும் இன்றும் நீங்கள் இந்த அரண்மனையில் காணலாம்.

6 நாட்டிய அரங்கம், முதன்மை மண்டபம் போன்றவை இந்த அரண்மனையின் முக்கிய சிறப்புகளாகும்.

சிறப்பு : கட்டிடக்கலை

நுழைவுக் கட்டணம் : இல்லை

திறப்பு : எல்லா நாட்களிலும் காலை 9 மணியிலிருந்து 5 மணி வரை

எஸ்ஸார்

காந்தி நினைவகம் மற்றும் அருங்காட்சியகம்

காந்தி நினைவகம் மற்றும் அருங்காட்சியகம்

1 இந்தியாவின் மிகச் சிறந்த அருங்காட்சியங்கள் ஐந்தில் இந்த காந்தி அருங்காட்சியகமும் ஒன்றாகும்.

2 காந்தியடிகள் தொடர்புடைய பல விசயங்களும், பொருட்களும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

3 காந்தியின் புகைப்படங்களும், அவர் வாழ்க்கைத் தொடர்பான நூல்களும் இங்கு கிடைக்கின்றன.

சிறப்பு: கண்காட்சி, கலை பொருள்கள், சுதந்திர போராட்ட புகைப்படங்கள்

நுழைவுக் கட்டணம் : இல்லை

திறப்பு : எல்லா நாள்களிலும் காலை 10 மணியிலிருந்து மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணியிலிருந்து மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Online Catalogue for India

அழகர் கோயில்

அழகர் கோயில்

1 சோலைமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அழகர் கோயில்

2 பல நுணுக்கமான கற்சிற்ப வேலைப்பாடுகளுக்கும், கலையம்சம் பொருந்திய சிலைகளுக்கும் புகழ் பெற்றது.

3 கல்லால் ஆன ஒரு பிரம்மாண்ட விஷ்ணு சிலை இங்கு காணப்படுகிறது. அதுவும் இந்த கோயிலின் சிறப்பாகும்.

4 இந்த கோயிலுக்கு அருகில் இருக்கும் இயற்கை ஊற்றிலிருந்து நீர் எடுத்து அபிஷேகம் செய்யப்படுகிறது.

5 சிறப்பு: பெரியது, வரலாற்று சிறப்பு, ஆன்மீகம், குடைவரை

Richard Mortel

மற்ற இடங்கள்

மற்ற இடங்கள்

ஆன்மீகம், அழகிய வண்ண மயமான கோபுரங்களைக் கொண்ட கூடல் அழகர் கோயில், 6ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த திருப்பரங்குனறம் முருகன் கோயில், காஜிமார் பெரிய மசூதி, புனித மேரி கேதிட்ரல், யானை மலை, இன்மையில் நன்மை தருவார் கோயில், மதுரை மாநகராட்சி பூங்கா, சமணர் மலை, புதுமண்டபம், கோயில் அருங்காட்சியகம், அதிசயம் கேளிக்கை பூங்கா, ராஜாஜி பூங்கா என இன்னும் நிறைய இடங்கள் இருக்கின்றன அவற்றில் எது எது உங்களைக் கவர்கிறதோ அவற்றுக்கெல்லாம் ஒரு விசிட் சென்றுவருவது சிறந்தது.

 திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

1 மதுரைக்கு வெகு அருகில் 8 கி.மீ தூரத்தில் திருப்பரங்குன்றம் எனும் முருகன் ஸ்தலம் அமைந்திருக்கிறது. இங்குள்ள மலைப்பாறை குன்றின்மீது சிறப்பான முருகன் கோயில் அமைந்துள்ளது.

2 முருகன் கோயில் தவிர ஹஸ்ரத் சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் எனும் தர்க்காவும் திருப்பரங்குன்றத்தில் உள்ள முக்கிய ஆன்மீக அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.

3 எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ள இந்தக்கோயிலில் சிவன், விஷ்ணு மற்றும் துர்க்கா போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம். சந்திரனையும் சூரியனையும் ஒரே நேரத்தில் தரிசிக்க முடியும்

4 முருகப்பெருமானின் திருமணம் இக்கோயிலில் நடைபெற்றதாக நம்பப்படுவதால் திருமண சுபதினங்களில் இங்கு ஏராளமான திருமணசடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

wishvam

 காஜிமார் மசூதி

காஜிமார் மசூதி

1 பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த காஜிமார் மசூதி அமைந்துள்ளது. பழமையான மசூதியான இது ஹஸ்ரத் காஜி சையத் தாஜுதீன் அவர்களால் கட்டப்பட்டிருக்கிறது.

2 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் இறைத்தூதர் முகமதுவின் வழித்தோன்றலாக அறியப்படுகிறார். மதுரையில் உள்ள மசூதிகளிலேயே மிக பழமையானதாக இது கருதப்படுகிறது.

3 ஓமன் நாட்டிலிருந்து வந்த அவருக்கு பாண்டிய மன்னர் குலசேகர பாண்டியன் இந்த மசூதி அமைந்துள்ள இடத்தை கையளித்ததாக சொல்லப்படுகிறது.

4 பெரிய மசூதி அல்லது பெரிய பள்ளிவாசல் என்று இது பிரசித்தமாக மதுரையில் அறியப்படுகிறது. 2500 பேர் ஒரே சமயத்தில் தொழுகை புரியக்கூடிய அளவிற்கு இடவசதியை கொண்டுள்ள இம்மசூதி இப்பகுதியில் மிகப்பெரியதாகும்.

5 மதுரை ஹஸரத் எனும் தர்க்காவும் இந்த மசூதியின் வளாகத்திலேயே அமைந்துள்ளது. மதுரை தர்க்கா என்ற பெயரில் அது அழைக்கப்பட்டு வருகிறது.

Richard Mortel

 வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்

1 வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் எனும் இந்த குளம் 1646-ம் ஆண்டில் வெட்டுவிக்கப்பட்டிருக்கிறது. திருமலை நாயக்கரால் உருவாக்கப்பட்ட இந்த பிரமாண்டமான குளம் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

2 தெப்பக்குளம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கிழக்காக 5 கி.மீ தூரத்தில் உள்ளது. குளத்தின் மையத்தில் விநாயகர் சன்னதி வீற்றிருக்கிறது.

3 திருமலை நாயக்கர் அரண்மனையை கட்டுவதற்கான கற்களை உருவாக்க மண் தோண்டியபோது உருவாகிய குளம் இது என்பதாகவும் பின்னாளில் படித்துறைகளுடன் கூடிய தீர்த்தக்குளமாக வடிவமைக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது.

4 ஒவ்வொரு வருடமும் ஜனவரி/பிப்ரவரி மாதத்தில் இந்த குளத்தில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த குளத்திற்கான நீர் வரத்து வைகை ஆற்றிலிருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது.

5 மதுரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை பார்க்காமல் திரும்புவதில்லை.

எஸ்ஸார்

ஷாப்பிங்

ஷாப்பிங்

1 மதுரை மாநகரில் ஷாப்பிங் செய்வது ஒரு சுவாரசியமான அனுபவம் என்பதை மதுரைக்கு விஜயம் செய்தபின் புரிந்துகொள்வீர்கள்.

2 பொருட்களை வாங்குவதை விடவும் இந்த பழமையான நகரத்தின் கடைவீதிகளையும், பாரம்பரியமான அங்காடிகளையும் வேடிக்கை பார்த்தபடி நடப்பது அலுக்கவே அலுக்காது.

3 இங்கு ஜவுளி மற்றும் கைவினைப்பொருட்கள் முக்கியமான சந்தைப்பொருட்களாக உள்ளன. பட்டு, பருத்தி, பத்திக் மற்று சுங்கிடி புடவைகள் இங்கு வெகு பிரசித்தம்.

4 மதுரை சுங்கிடிப்புடவைகள் பிடிக்காத பெண்கள் வெகு குறைவு எனலாம். வாங்குகிறீர்களோ இல்லையோ மாலை நேரத்தில் குறுகலான இந்த மதுரை வீதிகளை வலம் வந்தால் பழமையின் லேசான ஸ்பரிசம் நம் மனதை லேசாக்கும் மாயத்தை உணரலாம்.

5 நவீனமயமாக்கலின் அடையாளங்களாக சர்வதேச பிராண்டுகளின் ஷோரூம்களும் மதுரையில் நிறைந்துள்ளன.

Francisco Anzola

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X