Search
  • Follow NativePlanet
Share
» »பிரபல சுற்றுலாத்தலங்களில் நாம் செய்ய மறந்திடும் சில விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

பிரபல சுற்றுலாத்தலங்களில் நாம் செய்ய மறந்திடும் சில விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

By Naveen

கோடை விடுமுறை இன்னும் சில நாட்களில் ஆரம்பித்துவிடும்,குழந்தைகளை கூட்டிக்கொண்டு எங்கேனும் இதுவரை சென்றிராத இடத்திற்கு இன்ப சுற்றுலா செல்ல திட்டமிட்டு கொண்டிருக்கிறீர்களா ?. இல்லை கல்லூரி செமஸ்டர் விடுமுறையின் போது நண்பர்களுடன் எங்காவது சென்று ஆசை தீர கொண்டாட முடிவு செய்திருக்கிறீர்களா?. அப்படி சுற்றுலா செல்கையில் அந்த இடங்களில் வழக்கமாக எல்லோரும் செய்திடும் விஷயங்களை தாண்டியும் நாம் நிச்சயம் ரசிக்க வேண்டிய, சென்று பார்க்க வேண்டிய விஷயங்களும் ஏராளமாக உண்டு. அப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தாமஸ் குக் தளத்தில் உள்நாட்டு விமான கட்டணங்களில் ரூ.1000 க்கான தள்ளுபடி கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்.

கோவா :

கோவா :

கடற்கரைகள், கொண்டாட்டங்கள் நள்ளிரவு பார்டிகள் என்றதுமே நம் நினைவுக்கு வரும் இடமென்றால் அது கோவா தான். இந்தியாவின் பார்டி தலைநகரமாக அறியப்படும் கோவாவில் வகடோர், பகா, அஞ்சுனா என அற்புதமான கடற்கரைகள் உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திளுகின்றன.

Photo: Flickr

கோவா :

கோவா :

வெறுமனே கடற்கரைகளை ரசிப்பதை தாண்டி கோவாவின் கடற்கரைகளில் எப்போதும் ஏதாவது நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஸ்க்குபா டைவிங், ஸ்நார்கிலிங்க், பராசெய்லிங் போன்ற நீர் விளையாட்டுகள் சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவரும் அம்சங்களில் ஒன்றாக உள்ளன.

Photo: Flickr

கோவா :

கோவா :

கோவாவில் கடற்கரைகளை தாண்டியும் நாம் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உண்டு. போர்த்துகீசியர்களின் காலநியகமாக இருந்த சயமத்தில் அவர்கள் கட்டிய சர்சுகள் இன்றும் கோவாவில் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்த சார்சுகளை பற்றி அறிந்துகொள்ள அடுத்த பக்கத்திற்கு வாருங்கள்.

Photo:P.S.SUJAY

போம் ஜீசஸ் பசிலிக்கா :

போம் ஜீசஸ் பசிலிக்கா :

போர்த்துகீசிய கட்டிடக்கலைக்கு எடுத்துகாட்டாக சொல்லப்படும் இந்த தேவாலயம் 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். அந்த காலத்தில் போர்துகீசியர்களின் தலைநகரமாக விளங்கிய பழைய கோவாவில் இந்த சர்ச் அமைந்திருக்கிறது. இதனுள் 15ஆம் நூற்றாண்டில் மறைந்த புனித பிரான்சிஸ் சேவியர் கல்லறை அமைந்திருக்கிறது. இதனுள் அவரின் உடலில் இன்றும் சில பாகங்கள் உயிர்ப்புடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Photo:Nima Sareh

போம் ஜீசஸ் பசிலிக்கா :

போம் ஜீசஸ் பசிலிக்கா :

15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பிரபலமான பரோக்கே கட்டிடக்கலை அமைப்பின் படி அமைந்திற்கும் இந்த தேவாலயத்தினுள் ஆச்சர்யமூட்டும் விதத்தில் மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனுள் அழகிய சிறு தோட்டமும், அருங்காட்சியகமும் செயல்படுகின்றன.

Photo:Ruben Swieringa

போம் ஜீசஸ் பசிலிக்கா :

போம் ஜீசஸ் பசிலிக்கா :

தேவாலயத்தின் உட்புறம்.

Photo:Paul Simpson

போம் ஜீசஸ் பசிலிக்கா :

போம் ஜீசஸ் பசிலிக்கா :

புனித பிரான்சிஸ் சேவியர் கல்லறை.

Photo:Aviatorjk

சலீம் அலி பறவைகள் சரணாலயம் :

சலீம் அலி பறவைகள் சரணாலயம் :

'சோரோ' என்னும் சிறு தீவில் மண்டோவி நதியின் கரையில் அமைந்திருக்கும் அலையாத்தி காடுகளை உள்ளடக்கி அமைந்திருக்கிறது சலீம் அலி பறவைகள் சரணாலயம். இந்த சரனாலயத்தையும் அங்குள்ள பறவைகளையும் சிறு படகுகள் மூலம் சுற்றிப்பார்க்கலாம். கொஞ்சமும் மாசுபடாத இயற்கையான சூழலில் இந்த சரணாலயம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Photo:Nikhil Prabhakar

சலீம் அலி பறவைகள் சரணாலயம் :

சலீம் அலி பறவைகள் சரணாலயம் :

சலீம் அலி பறவைகள் சரணாலயத்தின் சில அழகிய புகைப்படங்கள்.

Photo:Nikhil Prabhakar

சலீம் அலி பறவைகள் சரணாலயம் :

சலீம் அலி பறவைகள் சரணாலயம் :

சலீம் அலி பறவைகள்சரணாலயத்தின் சில அழகிய புகைப்படங்கள்.

Photo:ptwo

சலீம் அலி பறவைகள் சரணாலயம் :

சலீம் அலி பறவைகள் சரணாலயம் :

சலீம் அலி பறவைகள்சரணாலயத்தின் சில அழகிய புகைப்படங்கள்.

Photo:ptwo

ஆக்ரா - தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்தது போதும் :

ஆக்ரா - தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்தது போதும் :

ஆக்ரா என்றாலே நம் நினைவுக்கு வரும் ஒரே விஷயம் தாஜ்மஹால் தான். முகலாய மன்னன் ஷாஹ் ஜஹானால் தன் மனைவி மும்தாஜின் நினைவாக எழுப்பப்பட்ட காதல் சின்னமான இதனை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.

Photo: Flickr

ஆக்ரா - தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்தது போதும் :

ஆக்ரா - தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்தது போதும் :

யமுனை நதிக்கரையில் பேரழகுடன் வீற்றிருக்கும் தாஜ் மஹாலின் அழகிய காட்சி.

Photo: Flickr

ஆக்ரா - தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்தது போதும் :

ஆக்ரா - தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்தது போதும் :

சதர் பஜார் :

ஆக்ரா நகரின் மிக முக்கிய சுற்றுலாத்தலம் இந்த சதர் பஜார் ஆகும். ஆக்ரா ரயில் நிலையம், தாஜ் மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகிய இடங்களுக்கு அருகிலேயே அமைந்திருக்கும் இந்த பஜாரில் கிடைக்காத பொருட்களே இல்லை என்று சொல்லலாம். இங்கே மிக தரமான தோல் காலணிகள், இனிப்பு பலகாரங்கள், கைவினைப்பொருட்கள் போன்றவற்றை வாங்கலாம். செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தின் ஆறு நாட்களும் காலை 11 மணியில் இருந்து இரவு 11 மணிவரை இந்த சந்தை செயல்படுகிறது.

Photo:Siddhartha Shukla

ஆக்ரா - தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்தது போதும் :

ஆக்ரா - தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்தது போதும் :

பரபரப்பான சதர் பஜார் வீதிகள்.

Photo:Oliver Laumann

ஆக்ரா - தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்தது போதும் :

ஆக்ரா - தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்தது போதும் :

பரபரப்பான சதர் பஜார் வீதிகள்.

Photo:Oliver Laumann

ராஜஸ்தான் - ராஜ போஜனம் :

ராஜஸ்தான் - ராஜ போஜனம் :

ராஜஸ்தான், இந்தியாவில் இருக்கும் ஒரே பாலைவனமான 'தார்' அமைந்திருக்கும் மாநிலம் என்று புத்தகத்தில் நாம் படித்திருந்தாலும் இந்தியாவின் சுற்றுலா தலைநகரும் இந்த மாநிலம் தான். இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் மிகவும் விருப்பத்திற்குரிய இடமாக ராஜஸ்தான் இருக்கிறது.

Photo: Flickr

ராஜஸ்தான் - ராஜ போஜனம் :

ராஜஸ்தான் - ராஜ போஜனம் :

இங்கே உள்ள ஜெய்சால்மர், ஜெய்பூர், உதய்பூர் போன்ற மிக அற்புதமான சுற்றுலாத்தலங்கள் இங்கே உள்ளன. அந்த காலத்தில் அரசர்கள் வாழ்ந்த அரண்மனைகள் மற்றும் கோட்டைகள், நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த கோயில்கள் போன்றவை ஏராளமாக உண்டு.இங்கிருக்கும் கோட்டைகளை யானை மீது அமர்ந்து சவாரி செய்தபடி ரசிக்கலாம்.

Photo: Flickr

ராஜஸ்தான் - ராஜ போஜனம் :

ராஜஸ்தான் - ராஜ போஜனம் :

இதையெல்லாம் தாண்டி ராஜஸ்தானில் கிடைக்கும் உணவுகளுக்காகவே நாம் அங்கு சென்று வரலாம்.
ராஜஸ்தான உணவுகளை சுவைத்தவர்கள் அதற்க்கு கிட்டத்தட்ட அடியாகி விடுவார்கள். அங்கு ஒரு காலத்தில் அரசர்களுக்கு மட்டுமே பரிமாறப்பட்டு வந்த ராஜ போஜன உணவுகள் இன்று சாதாரண சாலையோர கடைகளிலும் கிடைகின்றன.

photo:Ben Tubby

ராஜஸ்தான் - ராஜ போஜனம் :

ராஜஸ்தான் - ராஜ போஜனம் :

இந்தியாவின் மற்ற இடங்களை விட ராஜஸ்தானில் தண்ணீர் பற்றாகுறை அதிகம் மற்றும் குறைவான வகை தானியங்களே அங்கு விளையும் என்பதால் அவற்றை சமைக்கும் முறையும் சற்றே வேறுபடுகின்றன. சுவையும் அதற்கேற்றார் போல வித்தியாசமாக இருக்கின்றன.

Photo:Tomas Belcik

ராஜஸ்தான் - ராஜ போஜனம் :

ராஜஸ்தான் - ராஜ போஜனம் :

நம்ம ஊர்களில் சிக்கன், மட்டன் எப்படியோ அப்படி செம்மறி ஆடு பிராதான மாமிச உணவாகும். செம்மறி ஆட்டை கொண்டு தயாரிக்கப்படும் லால் மான்ஸ் என்ற உணவின் சுவை நிகரற்றது. நீங்கள் உணவுப்பிரியர் எனில் இதை சுவைப்பதற்காகவே ராஜஸ்தானுக்கு சுற்றுலா செல்ல வேண்டும்.

Photo: Eric Fortin

ராஜஸ்தான் - ராஜ போஜனம் :

ராஜஸ்தான் - ராஜ போஜனம் :

மாமிச உணவுகளை போன்றே ராஜஸ்தானில் கிடைக்கும் இனிப்பு வகைகளும் அதி சுவையானவை. பொதுவாக இனிப்புகளை உணவு சாப்பிட்டு முடித்த பிறகு சாப்பிடுவது வழக்கம். ஆனால் ராஜஸ்தானின் பாரம்பரிய உணவுகளில் இனிப்புகள் பிராதன இடம் வகிக்கின்றன. உணவுக்கு முன்பும், இடையிலும், கடைசியிலும் இனிப்புகள் பரிமாறப்படுகின்றன.

Photo:ૐ Didi ૐ

ராஜஸ்தான் - ராஜ போஜனம் :

ராஜஸ்தான் - ராஜ போஜனம் :

பளுஷஹி, மக்கன் பேடா, பேசன் சக்கி, குஜியா, இமர்த்தி, ஜிலேபி என பாரம்பரிய ராஜஸ்தானிய இனிப்பு வகைகளுக்கு அளவே இல்லை.

Photo:ૐ Didi ૐ

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X