» »கோவா போயிட்டு இதெல்லாம் செஞ்சுடாதீங்க...

கோவா போயிட்டு இதெல்லாம் செஞ்சுடாதீங்க...

Written By: Staff

நண்பர்களுடன் எப்பவாவது கோவா டூர் போகபோறீங்களா?. அப்போ அங்க போய் என்னெல்லாம் பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சுக்குங்க. காரணம், புதுசா கோவா போனால் நாம் ஏமாறுவதற்கு சாத்தியங்கள் மிக அதிகம். அதுமட்டுமில்லாமல் புதிதாக வெளிநாட்டவர்களை பிகினியில் பார்த்தால் எசகுபிசகாக ஏதாவது செய்து அடிதடியாவதும் நடக்கிறது. இப்படி எந்த பிரச்சனையும் வராமல் இருக்க என்னெல்லாம் செய்யாமல் இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.   

உள்ளூர் ஆட்டோ வேண்டாம்: 

பொதுவாக உள்ளூர்க்காரர்களிடம் ஒரு ரேட்டும், வெளியூர்க்காரர்களிடம் ஒரு ரேட்டும் வாங்கும் வழக்கம் எல்லா ஊர் ஆட்டக்காரர்களிடமும் உண்டு. என்றாலும் கோவாவில் இது மிக அதிகம். காரணம், இங்கே வருபவர்கள் அனைவருமே சுற்றுலாப்பயணிகள் என்பதால் வெறும் 2 கி.மீ தூர பயணத்திற்கு முன்னூறு ரூபாய் ஏமாறுவதெல்லாம் நடக்கும். எனவே,  ஆட்டோவில் ஏறும் முன்பே தெளிவாக விலையை பேசிவிட்டு ஏற வேண்டும்.  

அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்க வேண்டாம்:  

கோவா போயிட்டு இதெல்லாம் செஞ்சுடாதீங்க...

நீச்சல் உடையில் இருக்கும் வெளிநாட்டவர்களை அவர்கள் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது பொதுவாக அங்கு செல்லும் இளம்வயதினர் செல்லும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும். பல நேரங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் காவல் நிலையம் வரை செல்வதால் மற்றவர்களின் சுதந்திரத்தில் எக்காரணம் கொண்டும் தலையிட வேண்டாம்.

ஓவராக எதிர்பார்ப்பது:

கோவாவில் சாதாரண ஹோட்டல்களில் ரொம்ப சுமாரான அளவில் தான் வசதிகள் இருக்கும். எனினும் கட்டணம் அதிகமாக இருக்கும். கோவா சென்ற பிறகு ஹோட்டலை முடிவுசெய்வதற்கு பதிலாக முன்னரே நல்ல ஹோட்டலாக பார்த்து முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது.

குடி,குடி,குடி:  

கோவா போயிட்டு இதெல்லாம் செஞ்சுடாதீங்க...

கோவாவிற்கு பலர் சுற்றுலா குடித்து குமாளமிடத்தான். ஆனால் போய் இறங்கியதில் இருந்து திரும்பி வரும் வரை குடியே கதியென்று இருக்க வேண்டாம். இப்படி செய்வதால் வேறெங்கும் சென்று சுற்றிப்பார்க்க முடியாமல் அறையிலேயே முடங்கிக்கிடக்க நேரிடும்.

பீச்சில் தூங்கிவிடாதீர்கள்: 

கோவா போயிட்டு இதெல்லாம் செஞ்சுடாதீங்க...

விடிய விடிய ஆட்டம் போட்டுவிட்டு அப்படியே கடற்கரையில் தூங்கிவிடாதீர்கள். நள்ளிரவில் நண்டுக்கூட்டத்தின் நடுவே மாட்டிக்கொள்ள நேரிடும். மேலும் சமூக விரோதிகளிடம் செயக்கொள்ள நேரிடும்.

வழிகாட்டுதல் இல்லாமல் சாகசம் வேண்டாம்:

கோவா ஸ்கூபா டைவிங், பாரா செயிலிங், சர்பிங் போன்ற நீர் சாகச விளையாட்டுகளுக்கு பிரபலமான இடமாகும். முறையான வழிகாட்டி இல்லாமல் இதுபோன்ற விளையாட்டுகளில் தானாக ஈடுபட வேண்டாம்.  கொஞ்சம் தவறினாலும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடும். 

டாடூ குத்த ஆசையா?:  

கோவா போயிட்டு இதெல்லாம் செஞ்சுடாதீங்க...

கோவா சென்றதன் அடையாளமாக பலரும் தங்களுக்கு பிடித்த டாடூ குத்திக்கொள்வதுண்டு. இந்த டாடூ குத்த பலவித ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை நம் தோளுக்கு பெரும்பாதிப்பை ஏற்ப்படுத்தலாம். எனவே போலியான டாடூ பார்லர்களுக்கு செல்லாமல் தேர்ந்தேடுத்துச்செல்வது நல்லது.  

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்