» »ஸ்ட்ராபெர்ரிக்கு பிரபலமான ஊர் இந்தியாவில் எங்கிருக்கு? அங்கே என்னென்ன ஸ்பெஷல்!!

ஸ்ட்ராபெர்ரிக்கு பிரபலமான ஊர் இந்தியாவில் எங்கிருக்கு? அங்கே என்னென்ன ஸ்பெஷல்!!

By: Bala Karthik

கண்கவர் நிலமான குல்மார்க், வண்ணமயமான மலர் தோட்டங்களும், பசுமையான புல்வெளிகளையும், பனி மூடிய மலைகளையும், பள்ளத்தாக்குகளையுமென பலவற்றையும் கொண்டிருக்கிறது. இதனை கௌரிமார்க் என அழைக்க, நாட்டின் முதன்மையான மலைப்பகுதிகளுள் குல்மார்க்கும் ஒன்றாக விளங்குகிறது. பைன் விளிம்பில் பசுமை காணப்பட, மௌன்ட் அபர்வாட்டினால் படர்ந்தும் காணப்பட, இந்த மய நிலமானது நாட்டின் முதன்மையான பனிச்சறுக்குக்கு வீடாகவும் விளங்க, புகழ்மிக்க கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவும், திரைப்பட தொழிற்சாலைக்கான மின்னும் தங்கமாகவும் நீண்ட நாட்களாக காணப்படுகிறது.

இவ்விடமானது இயற்கை அன்னையின் தலைச்சிறந்த அனுபவமாக விளங்க; வாசனையின் மத்தியில் நாம் நடக்க, வண்ணமயமான தோட்டமும் இங்கே காணப்படுகிறது. இதனை கடந்து, இவ்விடமானது பிடித்தமான சாகச பிரியர்களுக்கு முக்கியமான இடமாக விளங்க, எண்ணற்ற பயண ஆர்வலர்களையும், கேபிள் கார் சவாரியுமென, பனிச்சறுக்கையும் கொண்டிருக்கிறது.

குல்மார்க் கொண்டாலாவை நோக்கி ஒரு தாவும் பயணம்:

குல்மார்க் கொண்டாலாவை நோக்கி ஒரு தாவும் பயணம்:

இரு நிலை கயிர் நிலையை இந்த குல்மார்க் கொண்டாலா கொண்டிருக்க, ஒரே நேரத்தில் ஆறு பேரையும் ஏற்றிக்கொண்டு செல்கிறது. இந்த சவாரியானது இரு நிலைகளாக பிரிய, ஒன்று குல்மார்க் ஓய்வு விடுதி முதல் கொங்க்தூரி பள்ளத்தாக்கு வரையும், இரண்டாவது கொங்க்தூரி பள்ளத்தாக்கு முதல் அபர்வாட் சிகரம் வரையுமென காணப்பட, 14,200 அடி உயரத்தில் இது அமைந்திருக்கிறது.

இந்த சவாரியின் இரண்டாம் நிலையானது அதீத அழகுடன் இருக்க இமயமலை தொடர்ச்சியின் ஒட்டுமொத்த காட்சியையும் கொண்டிருப்பதோடு, இந்த பயணத்துக்கான கால அவகாசமாக 20 மணி முதல் 22 நிமிடங்கள் ஆக, இந்த இரு நிலைகளும் முழுமை பெறுகிறது.

புனித ஆலயமான பாபா ரெஷியை பார்க்கலாம்:

புனித ஆலயமான பாபா ரெஷியை பார்க்கலாம்:

இதன் மரபானது 1840ஆம் ஆண்டில் தொடங்கிட, பழங்காலத்து பிரதானம் கொண்ட இந்த பாபா ரெஷி மத முக்கியத்துவம் வாய்ந்து காணப்பட, இதன் சரிவானது குல்மார்க் மற்றும் டெங்க்மார்க்கிற்கு இடையே காணப்படுகிறது. பாபா ரெஷிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், ஒரு இஸ்லாமிய துறவி மற்றும் அறிஞருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்க, இவர் தான் காஷ்மீர் ராஜாவின் அரசவையினரான ஷைன்-உல்-அபிதின் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குல்மார்க் வழியாக காணப்பட, இந்த அமைப்பானது பெர்சிய மற்றும் முகலாய கட்டிடக்கலை வடிவத்தை கொண்டிருக்க, பெயர் பெற்ற மரப்பணிகளையும் கொண்டு, இந்த துறவியின் கல்லறையை அலங்காரப்படுத்தியுள்ளது.

PC: Pethmakhama

குல்மார்க் உயிர்க்கோள சரணாலயத்திற்கு ஒரு ஆய்வுப்பயணம்:

குல்மார்க் உயிர்க்கோள சரணாலயத்திற்கு ஒரு ஆய்வுப்பயணம்:

180 சதுர கிலோமீட்டர் பரந்து விரிந்து காணப்படும் குல்மார்க் உயிர்க்கோள சரணாலயம், பெயர்பெற்ற தாவரங்களையும், விலங்குகளையும் விதவிதமாக கொண்டிருக்கிறது. இங்கே பொதுவாக காணப்படும் பல உயிரினங்களான கங்குல், பழுப்பு நிறக் கரடி, சிவப்பு நிற ஓநாய், என பலவற்றையும் கொண்டிருக்கிறது.

இந்த சரணாலயத்தின் சிறப்பம்சமாக, கஸ்தூரி மான் இருக்க, வனவிலங்கு விரும்பிகளுக்கான சொர்க்கமாக விளங்குவதோடு, விலங்குகளின் அசைவுகளை பதிவு செய்ய ஒரு வாய்ப்பாகவும் அது நமக்கு அமைந்து விலங்கின வாழ்க்கையை பற்றி தெரிந்துக்கொள்ளவும் உதவுகிறது.

PC: Unknown

குளிர்க்கால திருவிழாவில் பங்கேற்கலாமா:

குளிர்க்கால திருவிழாவில் பங்கேற்கலாமா:

2003ஆம் ஆண்டு தொடங்கிய இவ்விழா, நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்த கச்சேரியாக அரங்கேற, ஊக்கமளிக்கும் சாகச விளையாட்டுகளும், இசையுமென சுற்றுலாவானது குல்மார்க்கில் கலைக்கட்ட தொடங்க, ஒவ்வொரு வருடமும் இந்த குல்மார்க் குளிர்க்கால திருவிழாவானது மூன்று நாட்கள் நடக்கிறது. மாபெரும் இமய மலையானது பின்புலத்தில் காணப்பட, இவ்விடமானது இசை கச்சேரியும், நடன நிகழ்ச்சியுமென, உணவு, சாகச விளையாட்டுகள் என எண்ணற்ற செயல்களை கொண்டிருக்கிறது.

Unknown

ஸ்ட்ராபெர்ரி பள்ளத்தாக்கு:

ஸ்ட்ராபெர்ரி பள்ளத்தாக்கு:


கோடைக்காலத்தில் நாம் செல்ல, ஸ்ட்ராபெர்ரி பள்ளத்தாக்கில் காணப்படும் புத்துணர்ச்சியுடனான ஸ்ட்ராபெர்ரிகள் சந்தோஷத்தை நமக்கு தந்திடுகிறது. இது போதவில்லையென்றால், பள்ளத்தாக்கின் கீழ் நாம் நடக்க, குல்மார்க்கில் ஆராய்ந்திடாத பக்கத்தில் காணப்படும் வழியையும் நாம் பார்க்கிறோம்.

இந்த பள்ளத்தாக்கானது ஷ்ட்ராபெர்ரிகளால் மட்டும் வழிந்து நிறைந்திடாமல், ஆச்சரியமூட்டும் மலர்களையும், கம்பீரமான இமய மலை தொடர்ச்சியையுமென சரிவில் சூழ்ந்து பனியுடன் காணப்படுகிறது. இந்த பள்ளத்தாக்கை நாம் பார்வையிட, காஷ்மீரில் காணாத வழியை நாம் கண்டு, அழகால் அழகுக்கு மேலும் அழகு சேர்த்திடவும் கூடும்.

PC: Basharat Alam Shah

ஐஸ்கட்டி சறுக்கு வளையத்தினில் ஒரு குதூகல பயணம்:

ஐஸ்கட்டி சறுக்கு வளையத்தினில் ஒரு குதூகல பயணம்:


குல்மார்க்கில் குறைவான ஈர்ப்பை கண்ட இந்த ஐஸ்கட்டி சறுக்கு வளையமானது கேபிள் கார் நிலையத்தின் அருகாமையில் காணப்படுகிறது. இந்த ஐஸ்கட்டி சறுக்கானது ஒட்டுமொத்த உணர்வையும் நமக்கு இங்கே தர; உறைந்த நதியும், ஓடைகளுமென ஒட்டுமொத்த பகுதியும் ஆகப்பெரிய ஒரு வகை ஐஸ்கட்டி சறுக்கு வளையத்தை கொண்டிருக்கிறது.

PC: EvaEmaden