» »நயன்தாராவோட சொந்த ஊர்ல பாக்குறதுக்கு என்னலாம் இருக்கு தெரியுமா?

நயன்தாராவோட சொந்த ஊர்ல பாக்குறதுக்கு என்னலாம் இருக்கு தெரியுமா?

Written By: Udhaya

மலையாள திரையுலகில் அறிமுகமானாலும், தமிழுலகின் நீங்கா புகழ் பெற்ற ஒருவர்களில் நயன்தாரா ஒருவர். சமீபத்தில் வெளியான அறம் படத்தின் மூலம் பொதுமக்கள் மனதில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்றுள்ளார். அடுத்த சிஎம் என்று இணையவாசிகள் பேசும் அளவுக்கு புகழ் பெற்ற நயன்தாராவின் பூர்விகம் பற்றியும், அவர் சொந்த ஊரின் சிறப்புகள், சுற்றுலா அம்சங்கள் பற்றியும் இந்த பதிவில் சுருக்கமாக காண்போம்.

பத்தனம்திட்டா

பத்தனம்திட்டா

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது திருவல்லா எனும் நகரம். திருவிதாங்கூரின் கலாச்சார தலைநகர் என்றும் புகழ்பெற்றுள்ளது.

Samson Joseph

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்


கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து, ரயில் மூலம் 2 மணி நேரத்தில் சென்றடையலாம்.

கேரளா விரைவு வண்டி, பிக்கானர் விரைவு வண்டி ஆகியன தினசரி ரயில்கள். ஞாயிறு, திங்கள் நாட்களில் வாராந்திர ரயில்களும் இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து சென்றால்

சென்னையிலிருந்து சென்றால்

திண்டுக்கல், தேனி, குமுளி வழியாக திருவல்லாவை அடையலாம். அல்லது கோயம்புத்தூர் வழியாகவும் வரமுடியும்.

அல்லது விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து பேருந்து மூலம் திருவல்லாவை அடையலாம்.

திருவனந்தபுரத்திலிருந்து 119கிமீ தொலைவில் அமைந்துள்ள திருவல்லாவுக்கு, தேசிய நெடுஞ்சாலை 183 வழியாக சென்றடையலாம்.

தென்னக திருப்பதி

தென்னக திருப்பதி

இந்தியா முழுவதுமே புகழுடன் அறியப்படும் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ வல்லப கோயில் இந்த ஊரில் அமைந்துள்ளது.கண்ணைக்கவரும் கலையம்சத்துடன் இந்த கோயில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள பல சிலைகள் ஒற்றைக்கல்லில் வடிக்கப்பட்டவையாக காட்சியளிக்கின்றன.

Getpraveennair

கதக்களி காண ஓடிவாங்க

கதக்களி காண ஓடிவாங்க

இந்த கோயிலைச்சுற்றிலும் பசுமையான தாவரச்செழிப்பும் மரங்களும் காணப்படுவது ஒரு விசேஷமான அம்சமாகும். வேறு எந்த கோயில்களிலும் இல்லாத ஒரு சிறப்பாக இந்தக்கோயிலில் தினமும் கதகளி நடன நிகழ்ச்சி ஒரு சடங்காகவே நடத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

பளியக்கரா சர்ச்

பளியக்கரா சர்ச்

கி.பி 52ம் ஆண்டிலேயே இந்த பகுதிக்கு அறிமுகமாகிவிட்ட கிறித்துவத்தின் அடையாளமாக பளியக்கரா சர்ச் எனும் தேவாலயமும் இங்கு அமைந்துள்ளது. சிரியன் கிறிஸ்துவ வகுப்பை சேர்ந்தவர்களுக்கான வழிபாட்டுத்தலமாக புகழ்பெற்றுள்ள இந்த தேவாலயம் ஸ்ரீ வல்லப கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருப்பது ஒரு வரலாற்று அதிசயமாகும். புனித தோமா கேரள பூமிக்கு வருகை செய்த காலமாக கருதப்படும் கி.பி 54 ம் ஆண்டு வரை பின்னோக்கி நீள்கிறது. தனித்தன்மையான இதன் கட்டிடக்கலை அம்சம் மற்றும் சிற்பங்களின் அழகு மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.

Pradeep Thomas

திருவல்லாவின் திருவிழாக்கள்

திருவல்லாவின் திருவிழாக்கள்

இந்நகருக்கு மட்டுமே உரிய தனித்தன்மையான திருவிழாக்கலை நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகள் போன்றவற்றையும் திருவல்லா பெற்றுள்ளது. ஆராட்டு, சந்தனக்குடம், சுட்டுவிளக்கு, எழுநல்லாத்து போன்றவை இந்த நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.

உணவு

உணவு

புட்டு கடலை மற்றும் அப்பம் போன்றவை இங்கு முக்கிய காலை உணவுப்பண்டங்களாகும். எல்லா கேரளிய உணவுத்தயாரிப்புகளிலும் தேங்காய் சேர்க்கப்படுவதால் பொதுவாக சாப்பாடு மிகக்கனமானதாகவே இருக்கும். எந்த காயாக இருந்தாலும் அதை வைத்து ஊறுகாய் செய்து விடுகிறார்கள். மாங்காய், எலுமிச்சை மற்றும் நெல்லி போன்ற காய்களில் தயாரிக்கப்பட்ட விதவிதமான ஊறுகாய்களை இங்கு சுவைக்கலாம். இனிப்பான, புளிப்பான, கசப்பான, துவர்ப்பான, மசாலா நிரம்பிய பலவித உணவுத்தயாரிப்புகள் இங்கு பரிமாறப்படுகின்றன.

நீர் சுற்றுலா

நீர் சுற்றுலா

பொதுவாகவே கேரளா,பசுமையான நீர்நிறைந்த இடமாகவே காணப்படுகிறது. திருவல்லாவிலும் மணிமாலா நதி, பம்பா நதி உள்ளிட்ட பல நீர்நிலைகள் உள்ளன.

Harinath r

சபரிமலை அய்யப்பன் கோயில்

சபரிமலை அய்யப்பன் கோயில்

பலருக்கு அறியாத ஒரு விசயம் என்னவென்றால் சபரிமலை அய்யப்பன் கோயில் இவ்வூருக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது என்பதுதான். ஐய்யப்பனான ஐயனார்... மறைந்துபோன உண்மைகள் !|