Search
  • Follow NativePlanet
Share
» »கல்விக்கு உகந்த புதன் பெயர்ச்சி: எதிர்காலம் சிறக்க இந்த கோவிலுக்கு போங்க

கல்விக்கு உகந்த புதன் பெயர்ச்சி: எதிர்காலம் சிறக்க இந்த கோவிலுக்கு போங்க

By Udhay

ஒரே ஒரு முறை நீங்கள் இந்த திருத்தலத்துக்கு சென்று வந்தால் போதும் உங்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் ஏற்படும் என்று திருவெண்காடு நோக்கி கைக் காட்டுகிறார்கள் பெரியவர்கள். உண்மையில் திருவெண்காட்டில் அப்படி என்ன இருக்கிறது. அங்கு சென்றால் உண்மையில் என்னவெல்லாம் மாறப்போகிறது, என்ன நடக்கபோகிறது என்பதைப் பற்றியே இந்த பதிவில் நாம் காணப்போகிறோம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள். வாருங்கள் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலின் வரலாறு, பூசை நேரம், ஆன்மீகச் சுற்றுலா அம்சங்கள் மற்றும் புகைப்படங்களைப் பார்க்கலாம்.

அமைவிடம்

அமைவிடம்

சென்னையில இருந்து கடற்கரை மார்க்கமா 254 கிலோ மீட்டர் தூரமும், விழுப்புரம் வழியா 267 கிலோ மீட்டர் தூரத்தலயும் நாகப்பட்டினம் மாவட்டத்துல இருக்கு இந்த திருவெண்காடு. இங்க இருக்குற சிவன் கோவில்தான் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்.

வரம் தரும் நந்தி

வரம் தரும் நந்தி

கோவிலின் நுழைவு வாயிலில் நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. நந்தியின் உடல் பாகத்தில் ஒன்பது தழும்புகளுடன் தாயார் சந்நிதியின் நுழைவுவாயிலில் நிறுவப்பட்டுள்ளது. நந்தி சிலையின் முகம் சிவனை நோக்கியும், அதன் காதுகள் தாயார் சந்நிதியை நோக்கியும் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, சிவபெருமான்- பார்வதி தேவி தம்பதியரின் ஆணைகளை, நந்தி ஏற்று நிறைவேற்றும் என்பதாக உள்ளது.

 சிதம்பரமும் இந்த கோவிலும் ஒன்னுதான்

சிதம்பரமும் இந்த கோவிலும் ஒன்னுதான்

சிவன் 1008 விதமான தாண்டவங்கள் நிகழ்த்திய திருத்தலம் என்பதால் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில் ஆதிசிதம்பரம் என்றழைக்கப்படுகின்றது. சிவபெருமான் ஆனந்தத்தாண்டவம் புரிந்த திருத்தலம். 108 சக்தி பீடங்களில் ஒரு தலம். நவகோள்களில் சூரியன், சந்திரன், புதன் வழிபட்ட திருத்தலம் இதுவாகும்

பாவங்களை கழுவும் இடம்

பாவங்களை கழுவும் இடம்

சிவனுக்குரிய கோவிலாக இது இருந்தாலும், மக்கள் தங்களின் ஜாதகம் மற்றும் குடும்பத்தில் உள்ள பாவங்களை தீர்க்கவும், வாழ்க்கையில் நற்பயன்களை அடையவும், சிறந்த கல்வியினை அடையவும் இக்கோவிலுக்கு கூட்டம் கூட்டமாக வந்தபடி உள்ளனர். குடும்ப தோஷங்கள் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து இங்குள்ள தீர்த்தக்குளத்தில் நீராடி, திதி கொடுப்பதும் மூலம் குடும்ப தோஷங்கள் நீங்கும் என்பது தொண்நம்பிக்கை

 எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

சென்னையில் இருந்து திருவெண்காடு செல்ல கடற்கரை சாலைப் பயணத்தை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் இந்தப் பயணம் ஆன்மீக பயணமாக மட்டுமின்றி ஒரு பொழுதுபோக்கு பயணமாகவும் அமையும். இதன் இடைப்பட்ட தூரத்தில் உள்ள கோவலம், மாமல்லபுரம், பாண்டிச்சேரி வழியான நீண்டதூர கடற்கரைச் சாலை பயணம் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

நடை திறக்கும் நேரம்

நடை திறக்கும் நேரம்

காலை 6 மணிக்கு இந்த கோவிலின் நடை திறக்கிறது. பகல் 12 மணிக்கு அடைக்கப்பட்டு பின் மீண்டும் 5.30 மணிக்கு திறக்கப்படும். அதன்பிறகு இரவு பூசைக்கு பின் 9.30 மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்படுகிறது.

ருத்ரபாதம் - புதன் தரும் யோகம்

ருத்ரபாதம் - புதன் தரும் யோகம்

காசியில் இருக்கும் விஷ்ணு பாதத்தைப் போல இங்கு ருத்ர பாதம் வெகு பிரபலமாக உள்ளது. இங்கு சிவன் சுயம்பாக இருந்து அருள் பாலிக்கிறார்.

இந்த லிங்கம் படிக லிங்கம் ஆகும். உலகின் வெகு சில கோவில்களில் மட்டுமே இந்த வகையான லிங்கம் இருக்கும்

சோழர்கள் கட்டிய பிரம்மாண்டம்

சோழர்கள் கட்டிய பிரம்மாண்டம்

அந்த காலத்தில் சோழர்கள் பிரம்மாண்டமான பல கோவில்களை கட்டியுள்ளனர். அந்த வகையில் ஒரு கோவிலாக திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலும் அடங்குகிறது. மேலும் இங்கு சிவனுக்கு வருடத்துக்கு நான்கு அபிஷேகங்களும், நடராஜபெருமானுக்கு ஆறு அபிஷேகங்களும் நடைபெறுகிறது.

அக்னி தீர்த்தமும் மற்ற தெய்வங்களும்

அக்னி தீர்த்தமும் மற்ற தெய்வங்களும்

இந்த கோவிலின் அருகில் அக்னி தீர்த்தமும் அதன் அருகிலேயே விநாயகர் சன்னதியும் அமைந்துள்ளது. சூரியதீர்த்தலிங்க சன்னதி உள்ளது. அருகில் முருகன் சன்னதியும் உள்ளது.

கல்விக்கு அதிபதி

கல்விக்கு அதிபதி

கல்விக்கு அதிபதியான புதன் தொழில் சிறக்கவும் பிணி நீங்கவும், பிள்ளைப் பேறு பெறவும் புதனை வழிபட்டால் சிறப்பான முன்னேற்றத்தை பெறலாம். இத்தலத்தில் வழிபடும் துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.

Photos are taken from

PC: Wikicommon

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more