Search
  • Follow NativePlanet
Share
» »மொரட்டு சிங்கிள்ஸ் இங்க ஒரு முறை போய்ட்டு வந்தா சீக்கிரம் கமிட் ஆய்டுவாங்களாம்

மொரட்டு சிங்கிள்ஸ் இங்க ஒரு முறை போய்ட்டு வந்தா சீக்கிரம் கமிட் ஆய்டுவாங்களாம்

கணபதி எனும் கேரள மன்னனின் பெண் பாவத்தை போக்கிய திருத்தலம் இந்த திருவிசைநல்லூர் ஆகும். அங்கு சென்று வந்தால், காதல் கைகூடும் என்பது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஒருவர் வாழ்க்கையில் கமிட் ஆகவில்ல

By Udhaya

கணபதி எனும் கேரள மன்னனின் பெண் பாவத்தை போக்கிய திருத்தலம் இந்த திருவிசைநல்லூர் ஆகும். அங்கு சென்று வந்தால், காதல் கைகூடும் என்பது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஒருவர் வாழ்க்கையில் கமிட் ஆகவில்லை என்பதும் தாங்கள் செய்த பாவங்களின் தொடர்ச்சி என்றே கூறப்படுகிறது. எப்படி செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு திருமணம் தள்ளிப்போகுமோ, அதுமாதிரிதான் பெண் பாவம் உள்ளவர்களுக்கு எந்த நலனும் வாழ்க்கையில் அமையாது என்கிறார்கள் ஜோதிடர்கள். அவர்களுக்கு பரிகாரமாக திருவிசநல்லூர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் போதும் என்கிறார்கள். இதுபோன்று தமிழகத்தில் நிறைய கோவில்கள் இருக்கின்றன. தற்போது நாம் திருவிசநல்லூர் கோவிலுக்கு போவது எப்படி என பார்க்கலாம்.

 எங்க இருக்கு இந்த இடம்

எங்க இருக்கு இந்த இடம்


கும்பகோணம் நகரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிமீ தூரத்தில் உள்ளது திருவிடை மருதூர். அங்கிருந்து வட மேற்கு திசையில் 3 கிமீ தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் இருக்கிறது.

திருவிடைமருதூரிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து 10 நிமிடங்கள் பயணித்தால் திருவிசநல்லூர் பகுதியை அடைய முடியும். மொத்தம் 4 கிமீ தூரம் ஆகும்.

 சிவ பெருமான்

சிவ பெருமான்

பெண்களை நம் வாழ்வில் தெரிந்தோ தெரியாமலே ஏமாற்றி வாழ்ந்தால் அவர்களுக்கு காதல், திருமணம் போன்ற விசயங்கள் தாமதமாகுமாம். இது தோஷம் போன்று படாத பாடு படுத்தும் என்றும் அதற்கு சிவ பெருமானை வணங்கினால் தோஷம் நீங்கி நல்வழி பிறக்கும் என்றும் நம்பப்படுகிறது

இந்த தலத்தில் இருக்கும் இறைவன் சிவ பெருமான். சிவயோக நாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சுயம்பு மூர்த்தியாக இருக்கும் இந்த சிவபெருமான் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். அரச மரம் மற்றும் வில்வ மரம் ஆகியவை இங்கு தல விருட்சமாக அமைந்துள்ளன.

The Enforcer

 வீட்டுக் கிணற்றில் பொங்கி வந்த கங்கை

வீட்டுக் கிணற்றில் பொங்கி வந்த கங்கை

வெங்கடேசன் தீட்சிதர் என்பவர் வறியவர் ஒருவர் பசியால் வாட, அவருக்கு உதவி செய்தார். அவரை வீட்டிற்கு அழைத்து உணவு வழங்கினார். இதைக் கண்டு பொறுக்காத தங்களை மேல் நிலை சாதிகள் என கர்வத்தில் ஆடிக்கொண்டிருக்கும் அந்தணர்கள் வெங்கடேசனுக்கு தண்டனை வழங்கினர். அது வட நாடு சென்று கங்கையில் மூழ்கி வர வேண்டும் என்பது. ஏழையான வெங்கடேசனுக்கு எப்படி இது சாத்தியம். உடனே இவர் சோகத்தில் ஆழ்ந்திருந்தார். அந்த நேரத்தில் கடவுளின் அருளால் வெங்கடேசனின் கிணற்றில் கங்கை பொங்கியதாகவும், அதில் குளித்து எழுந்து கோவிலுக்கு சென்றதாகவும் அந்தணர்கள் எழுதிய சில நூல்களில் குறிப்பு இருக்கின்றன.

Ssriram mt

கங்கை பொங்கும் விழா

கங்கை பொங்கும் விழா


இதனால்தான் இந்த ஊரில் கங்கை பொங்கும் விழா என்ற ஒன்று நடத்தப்படுவதாக தெரிகிறது. இது பத்து நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா ஆகும்.

விழா நாட்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. பத்தாவது நாள் கார்த்திகை அமாவாசையில் கங்கை கிணற்றில் பொங்குகிறது. இது விழாவாக கொண்டாடப்படுகிறது.

Ssriram mt

 4 பைரவர்கள்

4 பைரவர்கள்

இந்த ஆலயத்தில் 4 பைரவர்கள் ஒரே சன்னிதியில், ஒவ்வொரு யுகத்திற்கு ஒரு பைரவராக அருள்கின்றனர். எனவே இவர்களை சதுர்கால பைரவர்கள் என்று அழைக்கிறார்கள். ஞான கால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

Ssriram mt

More News

    Read more about: travel temple
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+