Search
  • Follow NativePlanet
Share
» »தூத்துக்குடியில் ஒருநாள்: மக்கா.. பாக்க வேண்டிய எடம் நெறய கெடக்கு பாத்துகிடுங்க..

தூத்துக்குடியில் ஒருநாள்: மக்கா.. பாக்க வேண்டிய எடம் நெறய கெடக்கு பாத்துகிடுங்க..

கடல் ஆர்வலர்களுக்கு, தூத்துக்குடி ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. நகரின் துறைமுகம் மிக முக்கியமான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களில் ஒன்று. இந்த நகரம் அதன் பூங்காக்களுக்கு பேர் போனது

By Udhaya

தூத்துக்குடி நகரம் முத்து குளித்தலுக்கு பிரபலமானதினால் 'முத்து நகரம்' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்நகரம் மீன்பிடி மற்றும் கப்பல் கட்டுதலுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. இது சென்னை மாநகரிலிருந்து 600 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. கடல் ஆர்வலர்களுக்கு, தூத்துக்குடி ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. நகரின் துறைமுகம் மிக முக்கியமான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களில் ஒன்று. இந்த நகரம் அதன் பூங்காக்களுக்கு பேர் போனது, அவற்றில் மிகவும் பிரபலமான பூங்காக்கள் துறைமுகம் பூங்கா, ராஜாஜி பூங்கா மற்றும் ரோச் பூங்கா போன்றவை. தூத்துக்குடியில் உள்ள திருச்செந்தூர் கோவில் பக்தர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக விளங்குகிறது. இது சுப்ரமணிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்நகரம் பிரபலமான மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தை தன்னகத்தே கொண்டுள்ளது . மற்ற சுற்றுலா இடங்கள் மானப்பாடு, கழுகுமலை, ஒட்டபிடாரம், எட்டயபுரம், கொற்கை ஆதிச்ச நல்லூர், வாஞ்சி மணியாச்சி, பாஞ்சாலங்குறிச்கி, நவ திருப்பதி போன்றவை. மலையை குடைந்து கட்டப்பட்ட பிரபல ஜெயின் கோவில் அமைந்துள்ள கழுகு மலை, கொற்கை குளம் மற்றும் வெற்றி வேளம்மன் கோவில் முதலியன பிரபலமான சுற்றுலாத் தலங்கள். சரி தூத்துக்குடியில் ஒரே நாளில் எங்கெல்லாம் சுற்றித்திரியலாம் என்று பார்ப்போமா?

கோயில்கள்

கோயில்கள்

முதலில் ஆன்மீகத்தலங்களிலிருந்தே ஆரம்பிக்கலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் பல கோயில்கள் உள்ளன. இவற்றில் சில பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த கோயில்கள் ஆகும். ஆழ்வார் திருநகரி கோயில், தோலவிழிமங்கலம் அரவிந்தலோச்சனார் கோயில், தேவப்பிரியன் கோயில், குலசேகரப்பட்டினம் தேவி முத்தாரம்மன் கோயில், திருச்செந்தூர் திருநெல்வேலி பாதையில் அமைந்துள்ள இரட்டை திருப்பதி, திருவைகுண்டம் கைலாசநாதர் கோயில், கழுகுமலை கழுகாச்சல மூர்த்தி கோயில், தேரிக்குடியிருப்பில் அமைந்துள்ள கற்குவேல் அய்யனார் கோயில், மகரநெடுங்குழைக்காதர் கோயில், குலசேகர முத்தாரம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், திருவைகுண்ட பெருமாள் கோயில், சீனிவாச பெருமாள் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், திருப்புளியங்குடி பெருமாள் கோயில், திருவரகுணமங்கை பெருமாள் கோயில், தூண்டுகை விநாயகர் கோயில், வள்ளியம்மன் குகை, வெட்டுவான் கோயில் என நிறைய ஆன்மீகத் தலங்கள் காணப்படுகின்றன.

Sarvagyana guru

 நவ திருப்பதி கோயில்கள்

நவ திருப்பதி கோயில்கள்

நவ திருப்பதி கோயில்கள் என்பவை 9 கோயில்கள். இவை விஷ்னு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவையாகும். இக்கோயில்கள் தாமிரபரணி ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ளன.

இந்த கோயில்கள் 108 திவ்ய தேசங்கள் மத்தியில் குறிப்பிடத்தக்கதாகும். இந்த 9 கோவில்களுக்கான பயணம் ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து ஆழ்வார்திரு நகரில் நிறைவு பெறுகிறது.

இந்த ஒன்பது கோயில்களின் பெயர்களாவன. ஸ்ரீ வைகுண்டம், திருவரகுணமங்கை, திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, துளைவில்லி மங்களம், திருகுழந்தை, தென் திருப்பதி, திருக்கோலூர்-வித்தம்மானிதி மற்றும் ஆழ்வார் திரு நகரி - நம்மாழ்வார். சமீபத்தில் டிவிஎஸ் குழுமம் இக்கோயில்களின் மராமத்தி பணிகளுக்கு நிதி உதவி செய்ததின் மூலம் இக்கோயில்கள் புது பொலிவுடன் காட்சி அளிக்கின்றன.

செண்பகவல்லி அம்மன் கோவில்

செண்பகவல்லி அம்மன் கோவில் கோயில்பட்டியின் உயரமான இடமான கோவில்மேட்டில் அமைந்துள்ளது. இக்கோயில் பூவன நாதர் சுவாமி மற்றும் செண்பகவல்லி அம்மனுக்காக அர்பணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கோயிலில் செண்பகவல்லியின் பிரபலமான 7 அடி உயர சிலை ஒன்றும் காணப்படுகிறது. அம்பாள் ஆடி பூரணம் திருவிழா மற்றும் சித்திரை தீர்த்த திருவிழாக்கள் இக்கோயிலின் முக்கிய திருவிழாக்கள், இக்காலங்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர்.

பனி மாதா தேவாலயம்

பனி மாதா தேவாலயம் 'பெஸிலிக்கா ஆப் லேடி ஆப் ஸ்னோ' என்று அறியப்படுகிறது. இந்த இடம் 1542 இல் தூய பிரான்சிஸ் வருகை மூலம் புனிதம் பெற்றது என்று கூறப்படுகிறது. பின்னர் 1711ம் ஆண்டு போர்த்துகீசியர் மூலம் இதன் குன்றின் மீது ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. இது 1713 இல் திறக்கப்பட்டது. இந்த தேவாலயமானது மேரி மாதாவிற்கு அர்ப்பணித்து கட்டப்பட்டது. 1555 ல் "சாண்டலினா" என்ற கப்பல் மூலம் தூத்துக்குடி கொண்டுவரப்பட்ட மாதாவின் சிலை இந்த தேவாலயத்தில் இடம் பெற்றுள்ளது. 1982ம் ஆண்டு இந்த சிற்றாலயமானது தேவாலயமாக தரம் உயர்த்தப்பட்டது. ஆகஸ்டு மாத்ம் 5 ம் தேதி கொண்டாடப்படும் ஆண்டு திருவிழாவிற்கு பக்தர்கள் கூட்டம் ஆண்டு தோறும் அலை மோதுகிறது.


மணப்பாடு கடற்கரை மற்றும் தேவாலயம்

மணப்பாடு கடற்கரை மற்றும் தேவாலயமானது திருச்செந்தூரில் இருந்து 18 கிமீ தொலைவிலும் கன்னியாக்குமரியில் இருந்து 70 கி மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த தேவாலயமானது புனித சிலுவை தேவாலயம் என்று அறியப்படுகிறது. இது 1581 ம் ஆண்டு கட்டப்பட்டது. தூய பிரான்ஸிஸ் சேவியரோடு தொடர்புடைய இந்த தேவாலயமானது கடற்கரையில் அமைந்திருக்கிறது. இந்த தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள சிலுவையின் குறுக்கு கட்டைகள் ஜெருசலேம் நகரில் இருந்து கொண்டு வரப்பட்டவை என்று கூறப்படுகிறது

புனித ஹார்ட் கதீட்ரல் பிஷப்

புனித ஹார்ட் கதீட்ரல் பிஷப் நகரில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் புனித இருதய தேவாலயத்தோடு பேராயரின் இல்லமும் அமைந்துள்ளது. தேவாலயத்தின் அடித்தளம் 1849ம் ஆண்டு தந்தை காரோஸின் விருப்பப்படி தந்தை கோரியால் எழுப்பப்பட்டது. பின்னர் தந்தை பிஸினெல்லியால் வேலைகள் தொடங்கப்பட்டு சகோதரர் லாமோத்தால் 1864 ம் ஆண்டு நிறைவு பெற்றது.

balaboss

ஓய்வெடுக்க சிறந்த தலங்கள்

ஓய்வெடுக்க சிறந்த தலங்கள்

மயூரா தோட்டம்

மயூரா தோட்டம் தூத்துக்குடியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு மயில் பண்ணையாகும். 55 ஏக்கர் பெரிய பரப்பளவில் அமைந்துள்ள இப்பண்ணை ஏராளமான மயில்களுக்கு புகலிடமாக அமைந்துள்ளது.

இந்த பறவைகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் காணப்படுகின்றன. இந்த பண்ணைகளில் தென்படும் மயில்களின் நடனம் பார்வைக்கு விருந்தளிக்கும் விதமாக இருக்கும்.

நேரு பூங்கா

நேரு பூங்கா நகரத்தின் வடக்கு பகுதியில் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. முன்பு இப்பூங்கா " கோட்ஸ் இந்தியா" வினால் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது இதை நகராட்சி பராமரித்து வருகிறது. தூத்துக்குடியில் உள்ள இந்த நேரு பூங்கா ராஜாஜி பூங்கா என்று அழைக்கப்படுகிறது. இந்த பூங்கா உள்ளூர் வாசிகள் மத்தியில் பிரபலமானது ஏனெனில் இங்கு ஒரு பெரிய நீர்தேக்க தொட்டி அமைந்துள்ளது.

ரோச் பார்க்

தூத்துக்குடி நகரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இப்பூங்கா துறைமுகம் செல்லும் வழியில் கடல் கரையில் இருக்கிறது. ரோச் பூங்கா ஒரு பிரபலமான சுற்றுலாத்தளமாக உள்ளது. ஏனெனில் அதன் கண்ணுக்கினிய அழகும் கடற்கரையின் அமைதியையும் மனதை மயக்கும் திருவிழாக்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இங்கு பார்வையாளர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

Wiki

கடற்கரை

கடற்கரை

கடற்கரை

துறைமுக விருந்தினர் இல்லத்திற்கு அருகில் துறைமுக கடற்கரை அமைந்துள்ளது. இதன் அருகிலேயே ஒரு பூங்கா அமைந்திருக்கிறது. மக்கள் இங்கு மாலை நேரங்களில் கடற்கரை காற்று வாங்கி புத்துணர்ச்சியுடன் உலாவ முடியும். இன்று இந்த பூங்கா பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது.

ஹரே தீவு

ஹரே தீவு தூத்துக்குடி நகரத்தின் பழைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து 9 கிமீ தொலைவில் இருக்கிறது, அது துறைமுகத்தின் அருகில் அமைந்துள்ளது. இந்த தீவில் இரண்டு கலங்கரை விளக்கமும் கடல் கரையில் கணக்கற்ற கடல் ஓடுகளும் உள்ளன. இந்த தீவில் மயில்களும் காணப்படுகின்றன. உள்ளூர் வாசிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இந்த தீவு ஒரு பொழுது போக்கு தலமாக விளங்குகிறது. பொங்கல் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் இந்த தீவிற்கு படை எடுக்கின்றனர். இந்த நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நகரில் இருந்து இந்த தீவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன


வல்ல நாடு மான் சரணாலயம்

வல்ல நாடு மான் சரணாலயம் திருநெல்வேலி-தூத்துக்குடி பாதைக்கு இடையே தூத்துகுடியில் இருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மலை பகுதியான இது 64 கி. மீ பரப்பளவு கொண்டது.

மான்களை பாதுகாப்பதற்காக இந்த பகுதி முழுவதும் வனத்துறையால் வேலி அடைத்து பாதுகாப்பாக உள்ளது. மலைப்பகுதியில் மான்கள் மேய்வதை இங்கு காணமுடியும்.

Ramkumar

எப்படி செல்வது?

எப்படி செல்வது?

திருநெல்வேலியிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது தூத்துக்குடி. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 50 நிமிடங்களில் அடையும் தொலைவில் அமைந்துள்ளது தூத்துக்குடி.

திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் 15 நிமிடத் தொலைவில் அமைந்துள்ளது இந்த வல்லநாடு. இங்கு பிளாக் பக் எனப்படும் மான் வகைக்கான சரணாலயம் அமைந்துள்ளது.

திருச்செந்தூரிலிருந்து 15கிமீ தொலைவில் தெற்கே அமைந்துள்ளது இந்த குலசேகரப்பட்டினம் கோயில்.

தூத்துக்குடி மாநகரின் கிழக்கு திசையில் அமைந்துள்ள இந்த துறைமுக கடற்கரை உலக புகழ் பெற்றதாகும். இதன் அருகிலேயே துறைமுகம் அமைந்துள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X