Search
  • Follow NativePlanet
Share
» »இந்த இடத்துல அமலாபால் இன்னும் என்னலாம் பண்ணாங்க தெரியுமா? # தேடிப்போலாமா 12

இந்த இடத்துல அமலாபால் இன்னும் என்னலாம் பண்ணாங்க தெரியுமா? # தேடிப்போலாமா 12

இந்த இடத்துல அமலாபால் இன்னும் என்னலாம் பண்ணாங்க தெரியுமா? # தேடிப்போலாமா 12

அமலாபாலின் அழகிய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. அதற்கு காரணம் அவர் லுங்கியை மடித்து கட்டி, கையில் ஒரு பாட்டிலுடன் நிற்பதுபோன்ற ஒரு புகைப்படம் என கூறி நெட்டிசன்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அமலா பால் அவரது இன்ஸ்டா பக்கத்தில் அவராகவே இட்ட படம்தான் அது. அவர் இட்ட புகைப்படத்தில் இருக்கும் இடம் யாரும் அவ்வளவாக அறிந்திராத ஒரு சுற்றுலாத் தளம். அது எந்த இடம் என அவரது கமண்ட் பகுதியில் ரசிகர்கள் கேள்விகளால் துளைத்திருந்தனர். வாருங்கள் நாமும் அந்த சுற்றுலாத் தளத்துக்கு சென்று, அமலாபால் வேறு என்னவெல்லாம் செய்தார் என்பதையும், நாம் எப்படி சுற்றுலாவை அனுபவிக்கமுடியும் எனவும் இந்த தேடிப்போலாமா பகுதியில் காண்போம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

அமலாபால்

அமலாபால்


இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்ட அமலாபால், அதில் இதுதான் லுங்கியின் மண், எல்லாரும் சரக்கு அடிக்கும் இடம், அப்பமும் மீன் கறியும் சாப்பிடும் இடம். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என எனக்கு தெரியும். லுங்கியின் மண்ணுக்கு வாங்க.. சரக்கடிச்சிட்டு போங்க அப்பிடின்னு குறிப்பிட்டிருந்தாங்க. இது ஒரு பாட்டோட வரிகள்னும் போட்டுருந்தாங்க. அந்த இடம் இடுக்கி மாவட்டத்துல இருக்குற தூவல் பால்ஸ் பக்கத்துல இருக்குற ஒரு பகுதி. வாங்க அந்த பகுதிக்கு சுற்றுலா சென்று என்னவெல்லாம் செய்யலாம்னு பாக்கலாம்.

வெளிநாட்டவர்கள் விரும்பும் பகுதி

வெளிநாட்டவர்கள் விரும்பும் பகுதி

இடுக்கி மாவட்டத்தில் நிறைய நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. இவை பிரபலமான சுற்றுலாத்தளங்களாக விளங்குகின்றன.

கேரளத்துக்கு வரும் வெளிநாட்டவர்கள் பெரும்பாலானோர் மிகவும் ரசிக்கும் ஒரு சுற்றுலாத் தளமாக தூவல் நீர்வீழ்ச்சி இருக்கிறது.

மழைக்காலங்களில் அதிக அளவு நீரும், கோடைக் காலங்களில் மிகக் குறைவான நீரும் வரும் என்றாலும் எப்போதுமே இங்கு சுற்றுலா வருவதற்கு மக்கள் ஆர்வமாகவே இருக்கின்றனர். ஆனால் நீங்கள் நினைப்பது போல கூட்ட நெரிசலெல்லாம் இருக்காது.

சாகசப் பயணங்களை விரும்புபவர்கள் அதிகம் வருகை தரும் இடம் இது.

 ஈட்டுத்தோப்பு

ஈட்டுத்தோப்பு

இடுக்கி மாவட்டத்தின் அழகிய இயற்கை வளங்களுக்கு இடையே ஒளிந்து கிடப்பதுபோன்ற தோற்றத்தைக் கொண்ட ஒரு பகுதி இந்த ஈட்டுத்தோப்பு. பெயரிலேயே இருப்பது போலவே தோப்புகள் நிறைந்த பகுதி. இங்கிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளதுதான் தூவல் நீர்வீழ்ச்சி ஆகும்.

எங்கிருந்து தோன்றுகிறது தெரியுமா

எங்கிருந்து தோன்றுகிறது தெரியுமா

இந்த நீர்வீழ்ச்சி எங்கிருந்து தோன்றுகிறது என்று கேட்டால் நீங்கள் நிச்சயம் ஆச்சர்யப்படுவீர்கள். கேரளத்தின் பெரியாறு நதியிலிருந்து பல பிரிவுகளாக பிரிந்து இந்த நதி தோன்றுகிறது. பின் மலையிலிருந்து சாடி நீர்வீழ்ச்சியாக விழுகிறது.

தூவல் நீர்வீழ்ச்சியைப் பற்றி

தூவல் நீர்வீழ்ச்சியைப் பற்றி

மழைக்காலம் என்றால் போதும், நம் மனதுக்கு என்னவோ ஆகிவிடும். இந்த உலகம் மிகவும் அமைதியாகவும், குளுமையாகவும் கண்முன்னே திரையிடப்படும். நகர, மாநகரங்களில் இருப்பவர்களுக்கு இதனை புரிந்து கொள்வது சற்று சிரமமானது. இடுக்கி போன்ற பகுதிகளுக்கு பயணிப்பவர்கள் மட்டுமே உணரமுடிவது.

மழை பெய்தால் போதும் இடுக்கிக்கு படையெடுக்கும் ஒரு இளைஞர் கூட்டமே இருக்கிறது. நீர்வீழ்ச்சிகளைத் தேடி தேடி கனவுலகில் சிறகை விரித்து பறப்பார்கள். அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது தூவல் நீர்வீழ்ச்சி. இயற்கையின் ஓரவஞ்சனை இது.. எனினும் நாமும் பயணம் செய்வதனால் குறைந்துவிடப்போவதில்லைதான். வாருங்கள் நாமும் செல்வோம் தூவல் நீர்வீழ்ச்சிக்கு...

இடுக்கியின் நீர்வீழ்ச்சிகள்

இடுக்கியின் நீர்வீழ்ச்சிகள்


இடுக்கி மாவட்டம் கணக்கில் இல்லாத பல நீர்வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது என்றே சொல்லலாம். அவ்வளவு அருவிகளும் அட்டகாச சுற்றுலா அம்சங்களும் நிறைந்து காணப்படும் ஒரு மாவட்டம் இடுக்கி. கேரளத்தின் சுற்றுலாவில் இன்றியமையாத தவிர்க்கமுடியாத ஒரு இடம். இங்கு உலக்கையுருட்டி அருவி, அருவிக்குழி, வளரா அருவி, பூக்குளம் உள்ளிட்ட பல அருவிகள் இருக்கின்றன.

சீசன்களில் கொண்டாட்டம்

சீசன்களில் கொண்டாட்டம்

சீசன்களில் இடுக்கி பயணம் செய்வோர் அருவிகளில் குளித்து மகிழ, அருவிகளை கண்டு நெகிழ்ந்திட நினைப்பார்கள். ஆனால் தூவல் நீர்வீழ்ச்சி பலரது கண்களுக்கு தப்பிவிடுகிறது. இங்கு அவ்வளவாக மக்கள் வருவதில்லை. உள்ளூர் மக்களே இங்கு வருகை தருகின்றனர். மேலும் சாகச விரும்பிகளும் இயற்கை ஆர்வலர்களும் வருவது இயல்பாக நடக்கிறது.

 நெடுங்கண்டம் மலை

நெடுங்கண்டம் மலை

தூவல் நீர்வீழ்ச்சிக்கு வருகை தருபவர்கள் அருகில் காணவேண்டிய இடங்கள் சில இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது நிச்சயமாக நெடுங்கண்டம் மலை ஆகும். இடுக்கி மாவட்டத்திலுள்ள உடும்பன்சோலா தாலுக்காவில் உள்ள இந்த மலைவாழிடம் கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த மலை எங்கே இருக்கு தெரியுமா?

இந்த மலை எங்கே இருக்கு தெரியுமா?

மூனாறுக்கும் தட்டேக்காடு பறவைகள் சரணாலயத்துக்கும் இடையில் சாலையை ஒட்டியே 3 கி.மீ நீளத்துக்கு இந்த நெடுங்கண்டம் எனும் சிறு மலைநகரம் வீற்றிருக்கிறது.

தட்டேக்காடு பறவைகள் சரணாலயம்

தட்டேக்காடு பறவைகள் சரணாலயம்


சலிம் அலி பறவைகள் சரணாலயம் என்றும் அழைக்கப்படும் இந்த தட்டேக்காட் பறவைகள் சரணாலயம் எர்ணாகுளம் பகுதியில் அமைந்துள்ளது. பல இந்திய வகை ஊர்வன ஜந்துகளும், விலங்குகளும் இங்கு வசிக்கின்றன.

Photos taken from

பறவைகள் சரணாலயம் சீசன்

நவம்பர் முதல் ஜுன் மாதம் வரை இங்கு பலவகை புலம்பெயர் பறவைகளும் விஜயம் செய்கின்றன. இவற்றைப்பார்ப்பதற்காகவே இக்காலத்தில் அதிகமான பறவை ஆராய்ச்சியாளர்கள் இந்த சரணாலயத்துக்கு வருகை தருகின்றனர்.

என்னென்ன பறவைகள் பார்க்கலாம்

தட்டேக்காட் பறவைகள் சரணாலயத்தில் கிழக்கு வளைகுடா ஆந்தை எனப்படும் ஒரு அழிந்து வரும் ஆந்தை இனம், மலபார் சாம்பல் இருவாட்சி, இளசிவப்பு மூக்கு பனங்காடை, சிவப்பு தொண்டை குக்குறுவான், பாம்புப்பருந்து, இந்திய மலை இருவாட்சி மற்றும் நீலச்சிட்டு போன்ற அரிய வகை பறவைகள் வசிப்பதால் பார்வையாளர்கள் இவற்றைத் தேடி வருகின்றனர்.

நெடுங்கண்டம் மலையில் என்ன இருக்கு

காபி, ஏலக்காய் மற்றும் மிளகு போன்ற பணப்பயிர் விளைச்சலுக்கு இப்பகுதி பெயர் பெற்று விளங்குகிறது. கேரளாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் இதுவும் ஒன்று என சொல்லலாம்.

விடுமுறைக்கான மலை

கேரளா மற்றும் தமிழ்நாட்டுப் பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்துள்ள விவசாயிகள் சமீபத்தில் இங்கு வசிக்க துவங்கியுள்ளனர். விடுமுறையை வித்தியாசமாக ஓய்வாக ஒரு மலைக்கிராமத்தில் நீங்கள் கழிக்க விரும்பினால் தயங்காமல் இந்த நெடுங்கண்டம் மலை நகரத்துக்கு வந்து சேரலாம்.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

கைலாசபாறை, கல்லுமேகல்லு, நெய்யாண்டிமலை ராமக்கால்மேடு மற்றும் மான்குத்திமேடு போன்ற அருகிலுள்ள முக்கியமான பிக்னிக் தலங்களுக்கு இந்த நகரத்திலிருந்து சிற்றுலா மேற்கொள்ளலாம். இவை ஒவ்வொன்றுமே தனித்தன்மையான இயற்கைக்காட்சிகள் மற்றும் சொக்க வைக்கும் அழகைக் கொண்ட ஸ்தலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகிய நெடுங்கண்டம்


நெடுங்கண்டத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய நெடுங்கண்டம்


நெடுங்கண்டத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய நெடுங்கண்டம்


நெடுங்கண்டத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய நெடுங்கண்டம்


நெடுங்கண்டத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய நெடுங்கண்டம்


நெடுங்கண்டத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய நெடுங்கண்டம்


நெடுங்கண்டத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய நெடுங்கண்டம்


நெடுங்கண்டத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய நெடுங்கண்டம்


நெடுங்கண்டத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய நெடுங்கண்டம்


நெடுங்கண்டத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய நெடுங்கண்டம்


நெடுங்கண்டத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய நெடுங்கண்டம்


நெடுங்கண்டத்தின் அழகிய புகைப்படங்கள்

அழகிய நெடுங்கண்டம்


நெடுங்கண்டத்தின் அழகிய புகைப்படங்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X