» »பார்த்தாலே வாயடைத்துப் போகும் மிகப் பிரமாண்ட திருவிழா! எங்க தெரியுமா?

பார்த்தாலே வாயடைத்துப் போகும் மிகப் பிரமாண்ட திருவிழா! எங்க தெரியுமா?

Written By: Balakarthik Balasubramanian

கேரளாவிலுள்ள திரிசூர் பூரம் பற்றி நீங்கள் செவியின் வாயிலாக உணர்ந்தது உண்டா? ஒருவேளை இல்லையென்றால்...இந்த கீழ்க்காணும் பத்திகளின் மூலமாக நாம் 200 வருடங்களுக்கு பழமை வாய்ந்த இந்த கேரளத்திருவிழாவை பற்றி தெரிந்துகொண்டு மகிழலாம்.

கடிகாரத்தின் முற்கள் முந்திகொண்டு செல்ல...வரவேற்கிறது இந்த மிகவும் பிரசித்திபெற்ற கேரளா திருவிழா. இதனை "பூரங்களின் பூரம்" என்றும் அழைப்பர். இந்த திரிசூர் பூரம் திருவிழா, அலங்காரங்களுக்கும், வண்ணம் தீட்டப்பட்ட அழகிய காட்சிகளுக்கும், உற்சாகத்தை அளிக்கும் உணர்விற்கும், உயர்வான காட்சிகளின் உந்தத்திற்கும், பிளிரிக்கொண்டு திமிரி எழும் யானைகளுக்கும், வெகு திரளான கூட்டத்தினரின் வருகைக்கும் பிரசித்திபெற்று பெருமையுடன் விளங்குகிறது. இந்த பூரம் திருவிழா, இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாக்களுள் ஒன்றாக முதன்மை வகிப்பதுடன்...இந்த திருவிழாவின் சிறப்பம்சமாக 30 யானைகளின் அணிவகுப்பு இருப்பதனை தெரிந்துகொள்ளும் நம் மனம் வாயடைத்து போய் ஆச்சரியம் ததும்ப நிற்கிறது என்று தான் கூற வேண்டும்.

இந்த திருவிழா, 36 மணி நேரம் இடைவிடாது சிறப்பித்து ஒவ்வொரு வருடத்தின் ஏப்ரல் இடையிலிருந்து மே இடைப்பட்ட வரையிலான மாதங்களில் நம் மனதை வண்ணம் ததும்பிய அழகிய காட்சிகளைகொண்டு கவர்ந்து மனதை இனிமையால் வருடுகிறது. இந்த மாதக்கணக்குகள் மலையாள காலண்டரை ஒத்த இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த திருவிழா... தெக்கின்கடு மைதானத்தில் நடைபெறுவதுடன்...பிரசித்திபெற்ற வடக்கும் நாதன் ஆலயத்தையும் சூழ்ந்துள்ளது. இதிகாச காட்சிகளின் மையக்கருத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த திரிசூர் நகரம் நம்மை வியப்பை நோக்கி பயணிக்க வைக்கிறது என்றே கூற வேண்டும்.

திரிசூர் பூரம் திருவிழா பற்றி உங்களுக்கு தெரியாத பல உண்மைகள்:

திரிசூர் பூரம் திருவிழா பற்றி உங்களுக்கு தெரியாத பல உண்மைகள்:

கேரளாவில் கொண்டாடப்படும் இந்த திருவிழா...பெரும் திருவிழாவாகும். ஆனால், இது மிகவும் தொன்மையான திருவிழா என்று கூற முடியாது. இந்த திருவிழா, 1798ஆம் ஆண்டு சக்தி தம்புரான் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டதாகும். இந்த அற்புதமான காட்சிகளின் பின்புலத்தில் இருக்கும் கதைகளை ஆராய்ந்தால்... நம் மனம் அதிசயித்து தான் தவிக்கிறது என சொல்ல வேண்டும். இந்த திரிசூர் பூரத் திருவிழா கொண்டாடும் முன்னர், திரிசூரிலிருந்து தெற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆராட்டுபுழா தர்ம சாஸ்தா ஆலயத் திருவிழா தான் முதலில் நடைபெற்றது என்கின்றனர்.

vinod kannery

திரிசூர் பூரம் திருவிழா பற்றி உங்களுக்கு தெரியாத பல உண்மைகள்:

திரிசூர் பூரம் திருவிழா பற்றி உங்களுக்கு தெரியாத பல உண்மைகள்:

திரிசூரிலுள்ள பல ஆலயங்கள் இந்த திருவிழாவில் பங்கேற்றதாகவும்...கன மழை பெய்யும் வரையில் இந்த திருவிழா தொடர்ந்ததாகவும் கூறுகின்றனர். சில ஆலயங்கள் குறித்த நேரத்தில் இந்த விழாவில் பங்கேற்க முடியாமல் போக...கோவில் வளாகத்தின் உள்ளே அத்தகைய ஆலயங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கூறுகின்றனர். இதனால் ஏற்படும் பெரும் சங்கடத்தின் காரணமாக...ஆலயத்தின் உரிமையாளர்கள், ராஜ ராம வர்மாவின் கவனத்திற்கு இதனை கொண்டு செல்ல...அதனாலே இந்த திருவிழா தொடங்கப்பட்டது என்றும் ஒரு கதை உண்டு. ஆம், இவர் தான் நான் முன்னே குறிப்பிட்ட அந்த சக்தி தம்புரா என்பது குறிப்பிடத்தக்கது.

Manojk

 பூரங்களின் பூரமான – திரிசூர் பூரத்திருவிழா:

பூரங்களின் பூரமான – திரிசூர் பூரத்திருவிழா:

இவர் இந்த சங்கடத்தை கேட்டறிந்த பின்னர்...உடனடியாக மற்றுமொரு திருவிழாவுக்கு ஏற்பாடுகளை செய்ய தொடங்கினார். மேலும் இந்த திருவிழாவை பெரும் பொருட்செலவிலும், ஆடம்பரமாகவும் செய்ய வேண்டுமெனவும் ஆசைகொண்டார் சக்தி தம்புரா. அதனால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அழகிய திருவிழாவே இந்த பெருமைமிக்க திரிசூர் பூரத்திருவிழா என்பது நம்முள் எத்தனை பேருக்கு தான் தெரியும்?

shankar s.

 பூரங்களின் பூரமான – திரிசூர் பூரத்திருவிழா:

பூரங்களின் பூரமான – திரிசூர் பூரத்திருவிழா:

7 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா, பங்கேற்கும் ஆலயங்களின் அழகிய கொடி அணிவகுப்புடன் இனிதே களைக்கட்ட தொடங்குகிறது. சக்தி தாம்புரான், இந்த திருவிழாவில் பங்கேற்கும் ஆலயங்களை இரண்டாக பிரித்தார். ஆம், கிழக்கு பகுதி ஆலயங்களை ஒரு குழுவாகவும் மேற்கு பகுதி ஆலயங்களின் அணிவகுப்பை மற்றொரு குழுவாகவும் அவர் பிரித்தார்.

commons.wikimedia.org

பூரங்களின் பூரமான – திரிசூர் பூரத்திருவிழா:

பூரங்களின் பூரமான – திரிசூர் பூரத்திருவிழா:

மேற்கு புற குழுக்களின் தலைமையாக திருவம்பாடி பகவதி ஆலயம் இருக்க...அதனை பின்பற்றி கனிமங்கலம் சாஸ்தா, லலூர் பகவதி, அய்யன்தோல் பகவதி, நெதில்லக்காவு பகவதி கோயில்கள் இருந்தது.

Manojk

பூரங்களின் பூரமான – திரிசூர் பூரத்திருவிழா:

பூரங்களின் பூரமான – திரிசூர் பூரத்திருவிழா:

அதேபோல் கிழக்குபுறக்குழுக்களின் தலைமையாக பரமேக்காவு பகவதி ஆலயம் இருக்க...அதனை தொடர்ந்து, செம்புக்காவு பகவதி ஆலயம், பானகும்பல்லி சாஸ்தா, சூரக்கோட்டுகாவு பகவதி ஆலயம், காரமுக்கா பகவதி ஆலயம் ஆகிய கோயில்கள் இருக்கிறது.

haridas pangayil

 வடக்கும்நாதன் ஆலயம்

வடக்கும்நாதன் ஆலயம்


வடக்கும்நாதன் ஆலயத்தின் அடிவாரத்தில் நடக்கும் இந்த திருவிழாவில் பங்கேற்கும் ஆலயங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக சென்று சிவபெருமானுக்கு தங்களுடைய மரியாதையை தெய்வ வழிபாட்டின் மூலமாக செலுத்துவதாக நமக்கு தெரியவருகிறது.

Malcolm Murdoch

பூரத்தின் முதன்மை:

பூரத்தின் முதன்மை:

பூரத்தின் தொடக்கமாக... கனிமங்கலம் சாஸ்தா, வடக்கும்நாதன் ஆலயத்திற்கு வர...அதன் பின் அங்குள்ள நான்கு கோபுரங்களில் ஒன்றின் வழியாக வெளியில் செல்கிறார். இதனை பின்பற்றி மற்ற தெய்வங்களும் அதேபோல் செய்ய இனிதே கலைகட்டுகிறது பூரம் திருவிழா.

பூரத்தின் முதன்மை:

பூரத்தின் முதன்மை:

எப்பொழுது ஒரு சிறிய தெய்வம் இங்கே வந்து செல்கிறதோ...அதன் பின்னர் தான், பரமக்கேவு மற்றும் திருவம்பாடி ஆலயங்களின் வழிபாடு இனிதே உள்ளே நுழைகிறது. ஒருவருக்கொருவர் பார்த்தமாதிரி நிற்க...வடக்கும்நாதன் ஆலயத்தின் காட்சிகள் பின்புலத்தில் தெரிகிறது.

பூரத்தின் முதன்மை:

பூரத்தின் முதன்மை:

இங்கே நாம் காணும் ஒரு சுவாரஷ்யமான விசயம் என்னவென்றால்...இந்த பூரத்திருவிழா முழுவதுமே வடக்கும்நாதன் ஆலயத்திலே நடைபெறுகிறது என்பது நம்மை வியப்பை நோக்கி இழுத்து செல்கிறது. ஒருவேளை எந்த தெய்வமாவது இந்த விழாவில் பங்கேற்கவில்லையென்றால்...அந்த தெய்வம் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும் என்ற சம்பிரதாயமும் இங்கே கடைப்பிடிக்க படுகிறது.

 பூரத்தின் முதன்மை:

பூரத்தின் முதன்மை:

இந்த தெய்வங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று இறுதி கட்டத்தை எட்ட...இனிதே ஆரம்பமாகிறது தாளங்களின் அழகிய ஓசையுடன் கூடிய மேலக்கச்சேரி. நான்கு மணி நேரம் இடைவிடாது ஒலிக்கும் இதனை "இள்ளஞ்சிதார மேலம்" என்றும் அழைப்பர். அதனை தொடர்ந்து குடைகளின் வண்ண மாற்ற அழகு கோலம் இனிதே அரங்கேற அதன் பெயர் "குடமட்டோம்" என்பதும் நமக்கு தெரிய வருகிறது. இவை முடிந்த பின்னர்...எட்டு திக்கும் பட்டாசுகளின் முழக்கம் கேட்க... வானில் வண்ணமயமான காட்சிகளை கண்களுக்கு சமர்ப்பித்து ஆச்சரியத்தின் எல்லைக்கே அழைத்து செல்கின்றனர் ஆலயத்தின் அறங்காவலர்கள்.

 பூரத்தின் முதன்மை:

பூரத்தின் முதன்மை:


இந்த திருவிழாவின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க...பூரம் திருவிழா ஆரம்பிக்கும் முன்னரே, வான வேடிக்கைகளின் ஒத்திகை காட்சிகளும் இனிதே நம்மை வரவேற்று திருவிழாவிற்கு தயாராக ஓசையை எழுப்பி அழைக்கிறது. இதனை இங்குள்ளவர்கள் "வெடிக்கேட்டு" என்றும் "ஒத்திகை வானவேடிக்கை" என்றும் அழைப்பர்.

பூரத்தின் முதன்மை:

பூரத்தின் முதன்மை:


அடுத்ததாக "சமய பிரதர்ஷனம்" அரங்கேறி நம்மை அமர்களப்படுத்த...அவை அலங்காரங்களின் காட்சியாகவும், ஆபரணங்களின் அழகுதன்மை கொண்டதாகவும், கதிரவ ஒளியை மறைக்க பயன்படுத்தும் மெல்லிய குடைகளின் வடிவங்களையும் அமைப்புகளையும் கொண்டதாகவும் விளங்கி களிற்றினை அலங்கரித்து காட்சிகளால் கண்களை வெகுவாக கவர்கிறது.

பூரத்தின் முதன்மை:

பூரத்தின் முதன்மை:

இவை எல்லாம் அற்புதமாக நிகழ...50க்கும் மேற்பட்ட யானைகளின் அழகிய அணிவகுப்பு நம் மனதை, அசையும் வால்பகுதி கொண்டு மறைத்து கருவிழிகளால் தேடவும் வைக்கிறது. இந்த யானைகளின் ஒய்யார நடை வடக்கும்நாதன் ஆலயம் வரை இனிதே அரங்கேறி நம்மை ஆரவாரம் கொள்ள செய்து பின் அமைதியடைய செய்கிறது.
யானைகளின் நெற்றிப்பகுதி அலங்கரிக்கப்பட்டு அழகுடன் காணப்பட, அந்த அழகிய காட்சிக்கு பெயர் "நெற்றிபட்டம்" என்பதும் நமக்கு தெரியவருகிறது. அத்துடன் மற்ற சிகை அலங்காரம் மற்றும் "முத்துகுடாஸ்" எனப்படும் குடைகளின் வண்ணமிகு காட்சிகளும் நம்மை வார்த்தையின்றி தவிக்க வைக்கிறது.

பூரத்தின் முதன்மை:

பூரத்தின் முதன்மை:

மேலும், இங்கே பெரிய மற்றும் உயரமான யானைகளே அணிவகுப்புக்கு தேர்ந்தெடுக்கபடுகிறது என்பதும் நம்மை வியப்பை நோக்கி இழுக்கிறது. அந்த யானைகளின் மேல் தெய்வத்தை தூக்கி செல்லும் காட்சிகள் நம்மை மனதளவில் தெளிவுபடுத்தி அமைதியை தருகிறது. இத்தகைய காட்சிகள் நம்முள் பல வித உணர்ச்சிகளை உண்டாக்க...இந்த திரிசூர் பூரத் திருவிழாவில் பங்கேற்கும் யானைகளுக்கு ஆஸ்கார் விருதே தரலாம் எனவும் நமக்கு தோன்றுகிறது.

 பூரத்தின் முதன்மை:

பூரத்தின் முதன்மை:


இந்த திருவிழா...பாரம்பரியத்தின் ஆடம்பரத்துடனும், விழாக்கோலமும் பூண்டு மனதை நெகிழ செய்ய...சுற்றுலா பயணிகளின் பட்டியலில் பெரும்பான்மை கொண்ட ஒரு இடத்தை இந்த திரிசூர் பூரத்திருவிழா வகிக்கிறது என பெருமையுடன் கூறலாம். உங்களுக்கு ஒரு நற் செய்தியை நான் கூறட்டுமா? அட ஆமாம்...இப்பொழுது இந்த திருவிழா கோலாகலமாக தொடங்கி நடந்து கொண்டிருக்குதுங்க....கிளம்புங்க.. இத்தகைய அழகிய காட்சிகளை கண்களுக்கு தரத்துடிக்கும் ஒரு இடத்தை காண நீங்கள் இன்னும்மா புறப்படவில்லை...ஓஹோ..கிளம்பியாச்சா? அப்படி என்றால்... செல்லும் வழியில் தலைமை தாங்கும் பூரா நகரியையும் காண ஒருபோதும் மறவாதீர்கள்.

Read more about: travel, temple