» »சுற்றுலா பயணிகளை எப்படியெல்லாம் ஏமாத்துவாங்கன்னு தெரியுமா? - வாங்க பாக்கலாம்!!

சுற்றுலா பயணிகளை எப்படியெல்லாம் ஏமாத்துவாங்கன்னு தெரியுமா? - வாங்க பாக்கலாம்!!

Written By: Staff

இந்தியாவில் சுற்றுலா தளங்களுக்கு பேர் போன இடமாக நம் தமிழ்நாடு விளங்குகின்றது. இங்கு எண்ணற்ற சுற்றுலா தளங்கள் உள்ளதால், வெளி மாநிலத்தோர், உள்ளூர் வாசிகள், வெளி நாட்டினர் என பலரும் சுற்றுலா செல்ல இங்கு படையெடுத்து வருகின்றனர். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, நீலகிரி போன்ற ஜில்லிட வைக்கும் தேனிலவு இடங்கள், புகழ் பெற்ற கோவில்கள், வரலாற்று இடங்கள், போன்ற பல்வேறு இடங்களுக்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர்.

இப்படி ஆர்வத்தோடு வரும் சுற்றுலா பயணிகளை அந்தந்த இடங்களில் இருக்கும் ஆசாமிகள் மற்றும் சிலரும் எப்படி ஏமாற்றுகின்றனர்? இதனால் எப்படி மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது என்று என்பதை பற்றி விரிவாக பார்ப்போம் வாங்க:

திருச்செந்தூர் முருகன் கோவில்:

திருச்செந்தூர் முருகன் கோவில்:

திருச்செந்தூரில், குடும்பத்துடன் சுற்றுலா வரும் பயணிகளை ஏமாற்றுவதர்கென்றே, டிப்-டாப் ஆக வெள்ளை வேட்டி கட்டி கொண்டு சில ஆசாமிகள் வலம் வருவர்.அவர்கள் உங்களிடம் வந்து சாமியை அருகில் நின்று தரிசனம் செய்ய 1000 ரூபாய் தந்தால் அழைத்து செல்வதாக கூறுவர். அதை நம்பி, நேரத்தை எண்ணி சிலர் அவர்களுடன் செல்வர். அங்கே தான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

Photo Courtesy : Sa.Balamurugan

Photo courtesy : Rajarajan _Tamilian

திருச்செந்தூர் முருகன் கோவில்:

திருச்செந்தூர் முருகன் கோவில்:

பின்பு தான் தெரியும் கூடுதலாக சிறிது நேரம் வரிசையில் நின்று காத்திருந்து சாமியை கும்பிட்டுவிட்டு வந்திருக்கலாமே என்று.அதனால் இது போன்ற நிகழ்வு உங்களுக்கு ஏற்படாமல் இருக்க உஷாராக இருங்கள்.

Photo Courtesy : Tamizhparithi Maari

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குங்குமம் பிரசித்தி பெற்றது. ஆனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் தரம் குறைந்த குங்குமத்தை பலரும் விற்கிறார்கள். ஒரிஜினல் விலையை விட 100, 200 ரூபாய்க்கு அதிகமாக விற்கும் இந்த குங்குமத்தை வாங்குவோருக்கு அலர்ஜி ஏற்படும் சூழ்நிலை உருவாகும். மேலும் சாதாரண புடவைகளை காட்டி, அம்மனுக்கு சாத்திய புடவை என்று ஏமாற்றி 1000, 2000 ரூபாய் என்று பக்தர்களிடம் விலை சொல்வார்கள். ஆகவே தரமில்லாத துணிகளை வாங்கி ஏமாந்து விட வேண்டாம்.

Photo Courtesy : Jorge Royan

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

இன்னும் சிலர் கைடுகள் என்ற போர்வையில், குறைந்த செலவில் மதுரையிலுள்ள அனைத்து கோயில்களுக்கும் அழைத்துவதாக சொல்லி சில இடங்களுக்கு மட்டுமே அழைத்து சென்று ஏமாற்றுவார். இதை நம்பி சென்று விடாதீர்கள். அதேபோல் சந்து பொந்தெல்லாம் ஜிகர்தண்டா கடைகள் இருக்கும். எல்லாக் கடைகளிலும் மதுரை பேமஸ் ஜிகர்தண்டா என்று சொல்லுவார்கள்.அப்படிபட்ட இடங்களில் ஜிகர்தண்டா சாப்பிடாதீர்கள். இதற்கென்று சில பாரம்பர்ய கடைகள் உள்ளன, விசாரித்தால் சொல்வார்கள்.

Photo Courtesy : Reji Jacob

திருநெல்வேலி

திருநெல்வேலி

திருநெல்வேலி என்றவுடனே நம் நினைவுக்கு வருவது "இருட்டுக்கடை அல்வா" தான்.அல்வாவுக்கு பிரசித்திபெற்ற கடையான சாந்தி ஸ்வீட்ஸ் என்கிற பெயரில், பல கடைகள் இங்கு உள்ளது.திருநெல்வேலிக்கு வரும் மக்கள், நியூ சாந்தி, புது சாந்தி, புதிய சாந்தி, ஶ்ரீசாந்தி என்கிற பெயரில் கடைகளை பார்க்கலாம்.அதனால், ஒரிஜினல் இருட்டுக்கடை அல்வாவை ருசிக்க ஆர்வம்காட்டுவோர் நன்கு விசாரித்து வாங்குங்கள். இப்படி செய்யாமல் உங்கள் நண்பர்களுக்கோ , உறவினர்களுக்கோ அல்வா வாங்கி சென்று கொடுத்தால் உங்களுக்கு 'சிறந்த அல்வா கொடுத்தவர்' என்கிற பட்டம் கிடைக்க கூடும்.

Photo Courtesy : Simply CVR

புதுச்சேரி

புதுச்சேரி

புதுச்சேரி வரும் வெளியூர்காரர்கள், வெளிநாட்டுக்காரர்களை இங்குள்ள ஆட்டோக்காரர்கள் அதிகம் ஏமாற்றுகிறார்கள்.உதாரணமாக பஸ் நிலையத்திலிருந்து அரவிந்தர் ஆசிரமத்துக்கு ஷேர் ஆட்டோவில் சென்றால் 5 ரூபாய்தான். ஆனால் வெளியூர்காரர்களிடம் 200 ரூபாயும்,வெளிநாட்டுக்காரர்களிடம் 350 முதல் 400 ரூபாய் வசூலிக்கின்றனர். மேலும் வாரக் கடைசியில், இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் ஓட்டல்களில் அறை வாடகை சாதாரண விலையை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக வசூலிக்கின்றனர். அதனால் நன்கு விசாரித்து செல்வது நல்லது.

Photo Courtesy : Sankara Subramanian

ஒகேனக்கல்

ஒகேனக்கல்

ஒகேனக்கல் என்றதும், நம் நினைவுக்கு வருவது ஆயில் மசாஜ் மற்றும் படகு சவாரி. இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் உடலில் உள்ள நோய் குணமாக்க ஆயில் மசாஜ் செய்யுங்கள் என்று சிலர் உங்களிடம் கூறி, ஒரிஜினல் 150, 200 ரூபாயிலிருந்து, அதிகபட்சமாக ரூபாய்.௫௦௦ முதல் ௧௦௦௦ ரூபாய் வரை கேட்பர். மேலும் இங்கு படு சவாரி என்ற பெயரில் சில ஆசாமிகள், உங்களுக்கு யாருமே பார்க்காத இடம் காட்டுகிறேன் என அழைத்துபோய், யாருமற்ற இடத்தில் வைத்து பணத்தையெல்லாம் பிடுங்கிவிட்டு, விரட்டி விட்டுவிடுவார்கள் ஜாக்கிரதை.

Photo Courtesy: Mithun Kundu

முக்கொம்பு

முக்கொம்பு

திருச்சி மாவட்டம், கல்லணை முக்கொம்பு செல்லும் தம்பதிகள் / இளம் ஆண், பெண் தனியாக போனால், அங்கு அவர்களை மிரட்டி காசு பறிக்கும் கும்பல் சுற்றுவதாக பல வருடங்களாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இப்போதும்கூட பல நேரங்களில் தம்பதிகள் தனியாக போக முடியாத நிலை இருக்கிறது. எனவே உஷாரக இருக்க வேண்டும்.
Photo Courtesy: Wesleyneo

தேக்கடி

தேக்கடி

தேக்கடியில் டூரிஸ்ட் போகும் இடங்களில் தேன் முதல் ஏலக்காய், மிளகு, கிராம்பு, தேநீர் தூள் என்று பல்வேறு பொருட்களை விற்று வருகிறார்கள். அதில், அதிக விலை கொடுத்து வாங்கும் நிலமை இருக்கிறது. மார்க்கெட் விலையை விட 20 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை கூடுதல் விலைக்கு விற்று வருகிறார்கள். இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

Photo Courtesy : Rossipaulo

தேக்கடி

தேக்கடி

தேக்கடி என்றால் யானை சவாரி என்று ஒன்று உண்டு. அதில் ஒரு நபருக்கு ஐந்து நிமிட சவாரிக்கு ரூ.300 வாங்கினால் அதில் ரூ.150-ஐ டூரிஸ்ட் கைடுகளுக்கும், டிரைவருக்கும் கொடுப்பது வாடிக்கையாக இருக்கிறது.

அதேபோல டூரிட் ஸ்பாட்டில் விற்கும் தின்பண்டங்கள், உணவுப் பொருட்கள் அனைத்தும் கூடுதல் விலையில் இருக்கும். அசைவ உணவை உண்ண வேண்டாம். ஏனென்றால் பெரும்பாலும் சிக்கன், மட்டன் அனைத்தும் பழைய பொருட்களாக இருக்கும்".

Photo Courtesy : Varkey Parakkal

Read more about: சுற்றுலா