திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா தமிழ்நாட்டின் மிகவும் விமர்சியான கொண்டாட்டங்களில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்! புனித நகரமான திருவண்ணாமலையில் கொண்டாடப்படும், கார்த்திகை தீபத் திருவிழா நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது, ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கும் தெய்வீக ஒளியைக் காண அனைவரும் ஆர்வமாக உள்ளனர். 2024 ஆம் ஆண்டுக்கான மகா தீபத் திருவிழா பற்றிய விவரங்கள் இதோ!
தீப வடிவில் காட்சி தரும் சிவபெருமான்
திருக்கார்த்திகை தீபத்திருநாள் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் காலம் காலமாக கொண்டாடப்படும் ஒரு பழமையான பண்டிகையாகும். சங்க இலக்கியங்களிலும், புராணக்கதைகளிலும் கூட திருக்கார்த்திகை திருநாள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பஞ்சப்பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்ட பின்னரே நாம் அனைவரும் நம் வீட்டில் தீபங்களை ஏற்ற வேண்டும். இந்நாளில் சிவபெருமானின் நாம் ஏற்றும் ஜோதி வடிவத்தில் காட்சி தருகிறார்.

குறிப்பிட்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
திருவண்ணாமலை தலத்தை நினைத்தால் மட்டுமல்ல கார்த்திகை மகா தீபத்தை தரிசித்தாலும் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே பக்தர்கள் மலையேறவும் கோவிலுக்கு உள்ளும் அனுமதிக்கப்படுகின்றனர்.
2024 ஆண்டுக்கான தீபத்திருவிழா
இந்த ஆண்டு திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 01 ஆம் தேதி துவங்கி, 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 04ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. விழாவின் முக்கிய உற்சவங்களில் ஒன்றான மகாதேரோட்டம் டிசம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது. டிசம்பர் 13ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
மகா தீபத்திருவிழாவுக்கான ஏற்பாடுகள்
இந்த கூட்டத்தில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 35 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி, குடிநீர், கழிப்பறை மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் திருவிழாவின்போது கிரிவலப் பாதை மாட வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
மலைக்கு மேல் 2000 பக்தர்களுக்கு மேல் மட்டுமே அனுமதி
இது மட்டுமல்லாமல் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டங்களும் களத்தில் நேரடியாக ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளது தொடர்ந்து கடந்த ஆண்டு மேற்கொண்ட சிரமங்களை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் திருவண்ணாமலை பரணி தீபத்தின் போது கோவிலுக்கு உள்ளே 7050 பக்தர்களும் மகா தீபத்தின் போது 11,500 பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் மலை ஏறுவதற்கு 2000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கபடுவார்கள்
மலையேறும் பாதையில் மருத்துவ குழுவினரின் பரிசோதனைக்குப் பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 85 மருத்துவ குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகா தீபத் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டுக்கான திருவிழா விவரங்கள்
· 01.12.2024: துர்க்கை அம்மன் சன்னதியில் தீபம் ஏற்றுதல்.
· 02.12.2024: பிடாரி அம்மன் சன்னதியில் தீபம் ஏற்றுதல்.
· 03.12.2024: விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதிகளில் தீபம் ஏற்றுதல்.
· 04.12.2024: கோ-பூஜை, வெள்ளி ரதத்தின் ஊர்வலம் மற்றும் சிம்மம் வாகனம்.
· 05.12.2024: தங்க ரிஷப தேர் மற்றும் தங்க இந்திர விமானம் ஊர்வலம்.
· 06.12.2024: தங்க சிம்ம வாகனம் மற்றும் வெள்ளித் தேர் ஊர்வலம்.
· 07.12.2024: தங்க காமதேனு வாகனத்தின் ஊர்வலம்.
· 08.12.2024: தங்க ரிஷப வாகனம் ஊர்வலம்.
· 09.12.2024: வெள்ளி ரதம் ஊர்வலம்.
· 10.12.2024: மஹா ரதம்
· 11.12.2024: பிச்சாண்டவர் சன்னதியில் தீபம் ஏற்றுதல், குதிரை வாகனம் ஊர்வலம்.
· 12.12.2024: கலச வாகனம் மற்றும் காமதேனு வாகனம் ஊர்வலம்.
· 13.12.2024: பரணி தீபம் மற்றும் மகா தீபம் - அருணாச்சல மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டு விழாவின் பிரமாண்ட சிகரம்.
· 14.12.2024: நெபல் சன்னதி மற்றும் சண்டிகேஸ்வராவில் தீபம் ஏற்றுதல்.
· 15.12.2024: நெபல் சன்னதி மற்றும் அண்ணாமலையில் தீபம் ஏற்றுதல்.
· 16.12.2024: நெபல் சன்னதி மற்றும் சப்த்திரிஷியில் தீபம் ஏற்றுதல்.
· 17.12.2024: சண்டிகேஸ்வரருக்கு தீபம் ஏற்றுதல்.



Click it and Unblock the Notifications



