Search
  • Follow NativePlanet
Share
» »உலகில் அதிகமான மக்கள் சுற்றுலா செல்லும் டாப் 10 நாடுகள் எது தெரியுமா?

உலகில் அதிகமான மக்கள் சுற்றுலா செல்லும் டாப் 10 நாடுகள் எது தெரியுமா?

உலகின் பல நாடுகளுக்கும் பலரும் சுற்றுலா சென்று வருவது உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு நாடு விருப்பமானதாக இருக்கும். அனைத்து நாடுகளிலும் பல சுற்றுலா தலங்கள் இருந்தாலும், அதிக மக்களால் சுற்றுலா செல்லப்பட்ட உலகின் முக்கியமான 10 நாடுகள் என்ன என்று பார்ப்போம். எதற்காக இந்த நாடுகளுக்கு மட்டும் அதிகமான மக்கள் சுற்றுலா செல்கிறார்கள் என்ற ரகசியத்தையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

New York

அமெரிக்கா

அழகான நகரங்கள், இயற்கை அதிசயங்கள் மற்றும் பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரத்திற்கு புகழ்பெற்றது, அமெரிக்கா. இங்கு அதிகம் மக்களால் விரும்பி பார்க்கப்படும் சுற்றுலா பகுதிகள் நயாகரா நீர்வீழ்ச்சி, கிராண்ட் கேனியன் நேஷனல் பூங்கா, சுதந்திர தேவி சிலை, புளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்டு இன் மேஜிக் கிங்டம் உள்ளிட்டவை உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் தீம் பார்க் ஆகும்.

பிரான்ஸ்

பிரான்ஸ் ஒரு பிரபலமான சுற்றுலா தலம் ஆகும். இங்குள்ள ஈபிள் டவர், பாரிஸின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக உள்ளது. இங்குள்ள லூ புரோ அருங்காட்சியகம் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். வெர்சாய் அரண்மனை ஒரு பிரபலமான சுற்றுலா பகுதி. ஆண்டுக்கு சுமார் 85 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமான பிரான்ஸ், சர்வதேச சுற்றுலாத் தலங்களில் முதன்மையானது.

ஸ்பெயின்

ஸ்பெயின், ஆயிரம் ஆண்டுகளாக ஐரோப்பாவின் கலாச்சார மையமாக திகழ்கிறது. இது அழகிய கடற்கரைகள், பிளமிங்கோ நடனம் , இசை மற்றும் காளை சண்டைகளுக்கு மிகவும் புகழ்பெற்றது. இங்குள்ள தட்பவெப்ப நிலை பலரையும் ஈர்த்து வருகிது.

China

சீனா

சீனா அதன் வளமான வரலாறு, பழங்கால கோயில்கள் மற்றும் அற்புதங்கள் நிறைந்த பரபரப்பான நகரங்களுக்கு பெயர் பெற்றது. இங்குள்ள சீனப் பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. மன அமைதி பெற, நகரின் அழகை ரசிக்க ஏற்ற நாடு.

இத்தாலி

இத்தாலி மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். ரோமில் உள்ள பழங்கால அடையாளங்களில் ஒன்றாக கொலோசியம் கருதப்படுகிறது. இங்குள்ள வெனிஸ் கால்வாய்களால் கட்டப்பட்ட நகரம் மிகவும் பிரபலமானது. பைசாவின் சாய்ந்த கோபுரம் அதன் தனித்துவமான தோற்றத்திற்கான புகைப்படம் எடுக்கும் இடமாக உள்ளது. பீட்சா, பாஸ்தா, ஸ்பெகிடி போன்ற உலகப் புகழ்பெற்ற உணவுகளின் தாயகமாக இத்தாலி உள்ளது.

துருக்கி

துருக்கி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாடாகும். இங்குள்ள இஸ்தான்புல் அரண்மனை மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள வளமான வரலாறு துடிப்பான கலாச்சாரம், இயற்கை அழகு மற்றும் விருந்தோம்பல், மக்கள் இதை உலக அளவில் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாற்றியதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

மெக்சிகோ

மெக்சிகோ உலகில் அதிக மக்களால் பார்வையிடப்படும் நகரங்களில் ஒன்றாகும். கலாச்சார சுற்றுலா, ஏராளமான அருங்காட்சியங்கள், கலைக்கூடங்கள் மற்றும் திரையரங்குகளுக்கு தாயகமாக உள்ளது.

தாய்லாந்து

உலகின் சிறந்த கடற்கரைகள், விடுமுறையை அனுபவிக்கும் இடங்களில் ஒன்று தாய்லாந்து. இங்கு மிகவும் அழகிய கடற்கரைகள் கிராமப்புற பொழுதுபோக்கு இடங்கள், புத்த கோயில்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் இங்கு உள்ள தாய் உணவுகள் மற்றும் பரபரப்பான உள்ளூர் சந்தைகள் ஆகியவை மிகவும் பிரபலமானவை.

Germany

ஜெர்மனி

ஜெர்மனி காடுகள், ஆறுகள், மலைத்தொடர்கள் மற்றும் வடக்கடல் கடற்கரைகள் நிறைந்த நிலப்பரப்பை கொண்ட ஒரு ஐரோப்பிய நாடு. இங்குள்ள சிறந்த கட்டிடக்கலை, துடிப்பான திருவிழாக்கள் மற்றும் உற்சாகமான இரவு வாழ்க்கை, சுவையான உணவுகள் போன்ற பல விஷயங்கள் இங்கு பிரபலமாக உள்ளன.

இங்கிலாந்து

இங்கிலாந்து விளையாட்டு மற்றும் இலக்கியத்திற்காக உலகம் முழுவதும் அறியப்படும் நாடாக உள்ளது. கால்பந்து, ரக்பி, கிரிக்கெட், குத்துச்சண்டை மற்றும் கோல்ப் போன்ற அனைத்து விளையாட்டுகளும் இங்கு மிகப் பிரபலம். இங்குள்ள மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்கள் பிக் பென், லண்டன் கோபுரம், பக்கிங்ஹாம் அரண்மனை, லண்டன் ஐ, வின்ஸ்டார் கோட்டை போன்றவை ஆகும்.

More News

Read more about: foreign tour
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+