» »பரவசப்படுத்தும் 12 ஜோதிர்லிங்கங்கள் இந்தியாவில் எங்க இருக்குன்னு தெரியுமா ?

பரவசப்படுத்தும் 12 ஜோதிர்லிங்கங்கள் இந்தியாவில் எங்க இருக்குன்னு தெரியுமா ?

Posted By: Sabarish

ஜோதிர்லிங்க வழிபாடு என்பது இந்து மத கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்றாகும். இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருகிறது. துவாபரயுக ஆரம்பத்தில் விக்கிரமாதித்த மன்னரால் முதல் முதலில் ஜோதிர்லிங்க வழிபாடு ஆரம்பிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. ஜோதி உருவாய்த் திகழும் ஆதி கடவுளான சிவனை மனதார வணங்கி தியானம் செய்வது வழிபாட்டின் உயர்ந்த நிலையாகும். இவ்வாறு மனதையும், சிந்தனையையும் ஒருமுகப்படுத்தும் முறையே இராஜயோக தியானம் எனப்படுகிறது.

சமஸ்கிருதத்தில் ஆரித்ரா என்று குறிப்பிடப்படும் திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை ஜோதிர்லிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் மத்தியில் ஒரு தொன்நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாக திருவாதிரை நாள் ஜோதிர்லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் ஜோதிர்லிங்கங்கள் எங்க இருக்குன்னு தெரியுமா ?இந்தியாவில் ஜோதிர்லிங்கங்கள் எங்க இருக்குன்னு தெரியுமா ?

இந்தியாவில் ஜோதிர்லிங்கங்கள் எங்க இருக்குன்னு தெரியுமா ?இந்தியாவில் ஜோதிர்லிங்கங்கள் எங்க இருக்குன்னு தெரியுமா ?

இந்தியாவில் மொத்தம் 12 ஜோதிர்லிங்க தலங்கள் உள்ளன. அவற்றில் மத்திய பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இரண்டு கோவில்களும், தமிழ்நாடு, ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் 6 ஜோதிர்லிங்க கோவில்களும் உள்ளன.

 கேதார்நாத் கோவில், உத்தரகண்ட்

கேதார்நாத் கோவில், உத்தரகண்ட்


உத்தரகண்ட் மாநிலத்தின் பனிபடர்ந்த இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது கேதார்நாத் கோவில். இந்த கோவிலே 12 ஜோதிர்லிங்க கோவில்களில் சிவனின் கைலாய மலைக்கு மிக அருகில் அமைந்திருக்கும் கோவிலாகும். இப்பகுதியில் நிலவும் தீவிர காலநிலை காரணமாக ஏப்ரல் மாதம் முதல் தீபாவளி திருநாள் வரை மட்டுமே கோவில் திறக்கப்படும். அதோடு இந்தக் கோவிலுக்கு சாலை வழியாக நேரடியாக செல்ல முடியாது. கௌரிகுண்டம் என்னும் பகுதியில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரம் மலை ஏறியே செல்ல முடியும்.

Shaq774

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


உத்தரகண்டின் மையப்பகுதியில் இருந்து 179 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கேதார்நாத் கோவிலை கல்யசவுர் வழியாக அடையலாம். அல்லது,
சட்டோளி, கவுச்சர், ருத்ரபிரயாங் வழியாக 226 கிலோ மீட்டர் பயணதித்தும் சென்றடையலாம். கௌரிகுண்டம் பகுதி வரை பேருந்து மற்றும் தனியார் வாகன வசதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது..

SHUBHANSHU AGRE

நாகேசுவரர் கோயில், உத்தரகண்ட்

நாகேசுவரர் கோயில், உத்தரகண்ட்


உத்தரகண்ட்டின் அல்மோரா மாவட்டத்தில் ஜாகேஷ்வர் எனுமிடத்தில் கொத்தாக அமைந்திருக்கும் 124 வரலாற்றுச் சிறப்புமிக்க கற்கோவில்களின் மத்தியில் நாகேசுவரர் கோயில் அமையப்பெற்றுள்ளது. இந்த கோயிலில் ஜாகேஷ்வர் மழைக்கால திருவிழா, மஹாசிவராத்திரி ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
Dn9ahx

 காசி விசுவநாதர் கோவில், உத்தரப்பிரதேசம்

காசி விசுவநாதர் கோவில், உத்தரப்பிரதேசம்


இந்துக்களின் புனித நகரமாகக் கருதப்படும் வாரணாசியில் கங்கை நதியின் மேற்கு கரையோரத்தில் அமைந்துள்ளது காசி விசுவநாதர் கோவில். 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாகக் கருதப்படும் காசியின் பெயராலேயே இந்தக் கோவில் காசி விசுவநாதர் கோவில் என்றழைக்கப்படுகிறது. மேலும், சிவன் கோவில்களிலே புனிதமான கோவிலாகவும் காசியில் அமைந்துள்ள இந்த கோவில் கருதப்படுகிறது.

Unknown

எங்கிருந்து எப்படிச் செல்வது ?

எங்கிருந்து எப்படிச் செல்வது ?


உத்திரபிரதேசத்தில் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோவிலுக்கு கேதர்நாத்தில் இருந்து 941 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். உத்திரபிரதேசத்தில் இருந்து முங்கரா பத்சல்பூர் வழியாக 310 கிலோ மீட்டர் பயணம் செய்தாலும் இந்தக் கோவிலை சென்றடையலாம். மாநில மற்றும் மத்திய அரசின் சார்பில் ஏராளமான போக்குவரத்து வசதிகள் காசிக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

unknown

 குஷ்மேஷ்வர் கோயில், ராஜஸ்தான்

குஷ்மேஷ்வர் கோயில், ராஜஸ்தான்

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் புகழ்பெற்ற ரணதம்போர் தேசிய பூங்காவுக்கு வெகு அருகிலேயே குஷ்மேஷ்வர் கோவில் அமைந்துள்ளது. 12 ஜோதிர்லிங்க கோவில்களில் கடைசி ஜோதிர்லிங்க ஆலயமாகக் கருதப்படும் குஷ்மேஷ்வர் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில் சிவராத்திரியின்போது வண்ணமயமாகக் காட்சியளிப்பதுடன், விழாக்காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களையும் ஈர்த்து வருகிறது.

Ghushmeshwar jyotirlinga

தில்லி- ராஜஸ்தான்

தில்லி- ராஜஸ்தான்

தில்லியில் இருந்து ராஜஸ்தான் சென்றடை மூன்று வழிப்பாதைகள் உள்ளன. இதில் குறைந்த தூரத்தில் சென்றடைய வேண்டும் என்றால் தில்லி- கோட்புட்லி-யில் இருந்து ஜாலா வழியாக 430 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். ஜன்ஜூனு அல்லது ஷபுரா வழியாக 440 கி.மீட்டர் பயணித்தும் ராஜஸ்தானைச் சென்றடையலாம்.

Bkjit

மஹாகாலேஷ்வர் கோவில், மத்திய பிரதேசம்

மஹாகாலேஷ்வர் கோவில், மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம், உஜ்ஜைன் நகரில் ருத்திர சாகர் ஏரிக்கரையில் அமைந்துள்ளது மஹாகாலேஷ்வர் கோவில். மூன்று அடுக்குகள் கொண்ட இந்த கோவிலில் உள்ள லிங்கம் 12 ஜோதிர்லிங்க கோவில்களிலேயே தானாக உருவான சுயம்பு லிங்கம் என்று கூறப்படுகிறது. மேலும், 12 ஜோதிர்லிங்க கோவில்களில் மஹாகாலேஷ்வர் மட்டுமே தெற்கு நோக்கி அமையப்பட்டுள்ளது.

Ssriram mt

 எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

போபாலில் இருந்து செல்கிறீர்கள் என்றால் 195 கிலோ மீட்டர் சேகூர் வழியாக அஷ்டா, தேவாஸ் சென்று மஹாகாலேஷ்வர் கோவிலை அடையலாம். இந்த இடைப்பட்ட தூரத்தில் மத்திய பிரதேசத்தின் மிகப் பெரிய ஏரியான காளிசிந்து ஏரி உள்ளது. மேலும், மஹாகாலேஷ்வர் கோவிலில் இருந்து 600 மீட்டருக்குள் விக்ரமாதித்யா கோவிலும் உள்ளது.

Unknown

ஓங்காரேஸ்வரர் கோவில், மத்திய பிரதேசம்

ஓங்காரேஸ்வரர் கோவில், மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் நர்மதை ஆற்றில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா எனும் தீவு ஒன்றில் ஓங்காரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அமையப்பெற்றுள்ள தீவின் வடிவத்தை 'ஓம்' என்பதுடன் இந்துக்கள் ஒப்பிட்டுக் காண்கிறார்கள். மேலும், இந்தத் தீவில் ஜோதிர்லிங்க கோவிலான ஓங்காரேஸ்வரர் கோவிலைப் போலவே அமரேஸ்வரர் என்ற மற்றொரு கோவிலும் உள்ளது.

Bernard Gagnon

மஹாகாலேஷ்வர்- ஓங்காரேஸ்வரர் கோவில்

மஹாகாலேஷ்வர்- ஓங்காரேஸ்வரர் கோவில்

மஹாகாலேஷ்வர் கோவிலில் இருந்து சுமார் 940 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓங்காரேஸ்வரர் கோவிலை சென்றடைய ரயில் சேவை உள்ளது. சுற்றுலா பேருந்து உள்ளிட்ட இதர வாகனங்களில் பயணிக்க விரும்புவோர் அஜ்மீர், கோட்டா, ஆக்ரா உள்ளிட்ட மூன்று வழித்தடங்களில் ஒன்றில் பயணிக்கலாம்.

Bernard Gagnon

பைத்யநாத் தாம், ஜார்கண்ட்

பைத்யநாத் தாம், ஜார்கண்ட்


இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பைத்யநாத் கோவில் ஜார்கண்டின் தியோகர் நகரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆனி மாதத்தில் சுல்தான்கஞ்ச் என்னும் இடத்திலிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு 100 கிலோ மீட்டர்கள் தூரம் வரை கால்நடையாக இக்கோவிலுக்கு வருகிறார்கள். சிலர் இந்த தூரத்தை 24 மணி நேரத்தில் கடந்து விடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. உத்திரபிரதேசத்தில் வாரனாசி அல்லது அலகாபாத் வழியாக 740 கிலோ மீட்டர் பயணித்தால் ஜார்கண்ட் வந்தடையலாம்.

William Hodges

 சோம்நாத் கோவில், குஜராத்

சோம்நாத் கோவில், குஜராத்

குஜராத் மாநிலம், சௌராஷ்டிரா பகுதியில் சோம்நாத் சிவன் கோவில் அமைந்துள்ளது. ஜோதிர்லிங்க யாத்திரை செல்வோர் முதலில் தரிசிக்க வேண்டிய தலமாக சோம்நாத் கோவில் கருதப்படுகிறது. இந்த சோம்நாத் கோவில் அமைந்திருக்கும் சோம்நாத் கடற்கரையிலிருந்து கடலுக்கு அப்பால் உள்ள அன்டார்டிகா கண்டம் வரை இடையே எந்த நிலப்பகுதியும் இல்லை என அந்த கடற்கரையில் உள்ள கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த சோம்நாத் கோவில் 16 முறை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டதாக சான்றுகள் தெரிவிக்கின்றன.

Anhilwara

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


மஹாகாலேஷ்வர் கோவிலில் இருந்து 795 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு செல்ல அன்கலேஸ்வரர் ஜங்சன் வழியாக ரயில் சேவை உள்ளது. பேருந்து அல்லது பிற வாகனம் மூலம் ராஜ்கோட் வழியாகவும் சோம்நாத் கோவிலை சென்றடையலாம். குஜராத், அகமதாபாத்தில் இருந்து 425 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் உள்ளது.

D.H. Sykes

பீமாஷங்கர் கோவில், மகாராஷ்டிரா

பீமாஷங்கர் கோவில், மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் போர்கிரி எனும் ஊரில் சஹயாத்திரி குன்றுகளின் மீது அமைந்துள்ளது பீமாசங்கர் கோவில். இந்த கோவில் தொன்மையான மற்றும் நவீன கட்டிடக்கலை பாணிகளின் கலவையில் காட்சியளிக்கிறது. இந்த ஜோதிர்லிங்க ஆலயம் ஆன்மீக யாத்திரிகர்களிடையே மட்டுமல்லாமல் இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்கள் மற்றும் மலையேற விரும்புபவர்கள் மத்தியிலும் புகழ்பெற்றது.

ସୁରଥ କୁମାର ପାଢ଼ୀ

திரிம்பகேஷ்வர், மகாராஷ்டிரா

திரிம்பகேஷ்வர், மகாராஷ்டிரா


மகாராஷ்டிராவின் நாசிக் நகரிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் திரிம்பாக் என்னும் நகரில் திரிம்பகேஷ்வர் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய கடவுள்களின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான சிறப்பாகவும், பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டு அழகிய சிற்பங்களுடன் காட்சியளிக்கிறது.

Niraj Suryawanshi

மல்லிகார்ஜுனா கோவில், ஆந்திரா

மல்லிகார்ஜுனா கோவில், ஆந்திரா

ஆந்திரா கர்னூல் மாவட்டத்தில் உள்ள புனித நகரமான ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குவதோடு 18 மகா சக்தி பீடங்களில் ஒன்றாகவும் சிறப்பு பெறுகிறது. இங்குதான் ஆதி சங்கரர் தன்னுடைய புகழ்பெற்ற 'சிவானந்த லஹிரி' எனும் கவிதைகளை படைத்தார் என்று ஓர் சொல் வழக்கம் உள்ளது.

Thejas Panarkandy

ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில், தமிழ்நாடு

ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில், தமிழ்நாடு


12 ஜோதிர்லிங்க கோவில்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது. மேலும், இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலும் குறிப்பிடப்படுகிறது. அதாவது இராவணனைக் கொன்ற பாவத்தினை நீக்க இராமன் மணல்களால் ஆன லிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று தொன்நம்பிக்கை இன்றளவும் அப்பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக ராமன் ஈஸ்வரனை வணங்கிய இடம் என்ற பொருளில் இராமேஸ்வரம் ஆனது.

Ssriram mt

எப்படிச் செல்லலாம் ?

எப்படிச் செல்லலாம் ?

மதுரையில் இருந்து இராமநாதபுரம் வழியாக 172 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். மாநிலத்தில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாகவும் இராமேஸ்வரம் போற்றப்படுகிறது. மேலும், இங்குள்ள 2,065 மீட்டர் கொண்ட கடல் வழி செல்லும் பாம்பன் பாலம் உலக புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

M.Mutta

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more