Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் டாப் 20 வனவிலங்கு சரணாலயங்கள்

இந்தியாவின் டாப் 20 வனவிலங்கு சரணாலயங்கள்

By

இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் முன்னர் வீரம் என்ற பெயரில் மிருகங்கள், பறவைகள் வேட்டையாடப்பட்டு பல அரியவகை வனவிலங்குகளும், பறவைகளும் இன்று காணாமல் போய்விட்டன.

இதைத் தடுக்கும் நோக்கத்துடன்தான் இந்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டு இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட வனவிலங்கு சரணாலயங்களை ஏற்படுத்தியுள்ளன.

இவற்றில் 41 சரணாலயங்கள் இந்திய தேசிய விலங்கான புலிகளை பாதுக்காக்கும் திட்டத்தின் அடிப்படையில் புலிகள் பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்தியாவில் உள்ள முக்கியமான 20 வனவிலங்கு சரணாலயங்களை பற்றி இங்கு காண்போம்.

அலிபூர் வனவிலங்கு சரணாலயம்

அலிபூர் வனவிலங்கு சரணாலயம்

அலிபூர் ஜூ மற்றும் கொல்கத்தா ஜூ ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் தொன்மையான சரணாலயமான அலிபூர் வனவிலங்கு சரணாலயம் 1876-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் திறக்கப்பட்டது. இங்கு 2006-ஆம் ஆண்டு வரை வசித்து வந்த இராட்சஸ ஆமை ஒன்றுக்காக இந்த சரணாலயம் உலகம் முழுக்க பிரபலம். அத்வைதா என்று பெயர் கொண்ட இந்த இராட்சஸ ஆமை பிரிட்டிஷ் மாலுமிகளால், கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி ராபர்ட் கிளைவ்வுக்கு பரிசாக வழங்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டு வரை, 250 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழ்ந்த இந்த ஆமை உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்த இராட்சஸ ஆமையாக கருதப்படுகிறது.

படம் : Childzy

கிர் தேசிய பூங்கா

கிர் தேசிய பூங்கா

இந்தியாவில் ஆசிய சிங்கங்களுக்காக புகழ்பெற்ற சரணாலயங்களில் கிர் தேசிய பூங்கா முக்கியமானது. இங்கு ஆசிய சிங்கங்களைத் தவிர காட்டுப் பூனைகள், இந்திய சிறுத்தை புலிகள், கரடிகள், வரிக் கழுதைப் புலிகள், இந்திய நல்ல பாம்புகள், நரிகள், புனுகுகள், இந்திய கீரிப்பிள்ளைகள், பாலைவனப் பூனைகள் உள்ளிட்ட விலங்குகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம். மேலும் ஆசிய சிங்கங்களின் இனவிருத்திக்காக சிறப்பு மறுவாழ்வு நிகழ்ச்சித்திட்டமும் இங்கே மேற்கொள்ளப்படுகிறது.

படம் : Asim Patel

கன்ஹா தேசியப் பூங்கா

கன்ஹா தேசியப் பூங்கா

மத்தியப் பிரதேச மாநிலத்தின் மாண்ட்லா மற்றும் பலாகாட் மாவட்டங்களில் அமைந்துள்ள கன்ஹா தேசியப் பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு வங்காளப் புலிகள், சிறுத்தைகள், செந்நாய்கள் மற்றும் மான்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. புகழ்பெற்ற புதினமான 'தி ஜங்கிள் புக்' இயற்றப்படுவதற்கு கன்ஹா தேசியப் பூங்கா மிகப்பெரிய காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

படம் : Dr. Tarak N Khan

துத்வா தேசிய பூங்கா

துத்வா தேசிய பூங்கா

இந்திய-நேபாள எல்லைக்கு அருகில் இருக்கும் டெராய் பெல்ட் பகுதியில் துத்வா தேசிய பூங்கா அமைந்திருக்கிறது. தற்போது இந்த பூங்கா கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் கட்டர்நிகாத் வனவிலங்கு சரணாலயம் ஆகிய இரண்டு பகுதிகளை உள்ளடக்கி இருக்கிறது. இங்கு ஸ்வாம்ப் மான் சிறுத்தை, மீன் பிடிக்கும் பூனை, ரேட்டில், சிவெட், நரி, ஹாக் மான், குறைக்கும் மான்கள் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. அதோடு இந்தப் பூங்கா பலவகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவை இனங்களுக்கு ஒரு சொர்க்க பூமியாகவும் விளங்குகிறது.

படம் : Abhishek Shastri

கார்பெட் தேசிய பூங்கா

கார்பெட் தேசிய பூங்கா

உத்தரகண்ட்டின் நைனித்தால் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் பழமையான தேசிய பூங்காவான கார்பெட் தேசிய பூங்கா, பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த புலி வேட்டை மன்னன் ஜிம் கார்பெட்டின் பெயரால் அழைக்கப்படுகிறது. உலகத்திலேயே அதிகமான காட்டுப்புலிகளை கொண்ட இந்தியாவில், கார்பெட் தேசிய பூங்காவில் மட்டும் சுமார் 160 புலிகள் உள்ளன. அதோடு சிறுத்தைப்புலிகள், யானைகள், புள்ளி மான்கள், சம்பார் மான்கள், ஹாக் மான்கள், தேவாங்கு கரடிகள், காட்டுப் பன்றி, குரல், லாங்கூர், ரெசுஸ் குரங்குகள் போன்ற விலங்குகளும் இங்கு காணப்படுகின்றன. இவைத்தவிர 600-க்கும் மேற்பட்ட பறவைகளின் வாழ்விடமாக திகழும் கார்பெட் தேசிய பூங்காவில், 51 வகையான புதர்களையும், 30 வகையான மூங்கில்களையும் மற்றும் 110 வகையான மரங்களையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

பந்திப்பூர் தேசிய பூங்கா

பந்திப்பூர் தேசிய பூங்கா

கர்நாடக மாநிலத்தின் மிகப்பெரிய தேசிய பூங்காக்களில் ஒன்றான பந்திப்பூர் தேசிய பூங்கா 800 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. இங்கு புலிகள், நான்கு கொம்பு மான், ராட்சத அணில், யானை, அரிவாள் மூக்கன், காட்டுப்பன்றி, சிறுத்தை, கரடி மற்றும் காட்டெருமை போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன. இவைத்தவிர ஒரு சில புகலிடப்பறவைகள் மற்றும் காட்டுப்பறவைகளையும் இங்கு கண்டு ரசிக்க முடியும்.

படம் : Yathin S Krishnappa

காஸிரங்கா தேசிய பூங்கா

காஸிரங்கா தேசிய பூங்கா

அஸ்ஸாம் மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கும் இடங்களில் ஒன்றாக காஸிரங்கா தேசிய பூங்கா அறியப்படுகிறது. இந்த தேசிய பூங்கா அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான ஓற்றைக் கொம்பு காண்டாமிருகங்களையும், 2006-ம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு உலகிலேயே அதிக அடர்த்தியில் புலிகளை உடைய இடமாகவும் திகழ்ந்து வருகிறது. இவைத் தவிர மிகப்பெரிய உடலமைப்பை உடைய ஆசிய யானைகள், ஆசிய நீர் எருமைகள் மற்றும் சேற்று மான்கள் ஆகியவற்றையும் இங்கே பார்த்து ரசிக்கலாம்.

படம் : Yathin S Krishnappa

தாண்டேலி வனவிலங்கு சரணாலயம்

தாண்டேலி வனவிலங்கு சரணாலயம்

கர்நாடகாவின் 2-வது மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமாக அறியப்படும் தாண்டேலி வனவிலங்கு சரணாலயம், தலைநகர் பெங்களூரிலிருந்து 462 கி.மீ தொலைவில் உத்தர கன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் கருஞ்சிறுத்தை போன்ற சில அரிய வகை விலங்குகள் வசிக்கும் வனப்பகுதியாக திகழ்கிறது. அதோடு குரைக்கும் மான், சாம்பார் மான், புள்ளி மான் போன்ற விலங்கினங்களும், 200 வகையான பறவை இனங்களும் இங்கு வசிக்கின்றன.

படம் : Cburnett

அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா

அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா

இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாக அறியப்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சென்னைக்கு தெற்கே 30 கீ.மீ தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 170-க்கும் மேற்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன வகைகள் வசித்து வருகின்றன.

படம் : VikiUNITED

மானஸ் தேசியப் பூங்கா

மானஸ் தேசியப் பூங்கா

அஸ்ஸாம் மாநிலத்தின் மிகப் பிரபலமான தேசியப் பூங்காவான மானஸ் தேசியப் பூங்கா, புலிகள் சரணாலயம், பாதுகாக்கப்பட்ட இயற்கை வனப்பகுதி மற்றும் யானைகள் சரணாலயம் என பல சிறப்புகளை பெற்றுள்ளது. இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இது, பூட்டான் வரை நீண்டு அங்கு ராயல் மனாஸ் தேசியப் பூங்கா என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பூங்கா முள்ளடர்ந்த முயல், ஓடுடைய அஸ்ஸாம் ஆமைகள், குள்ளமான பன்றிகள் மற்றும் தங்க நிற கரடிக்குரங்கு போன்ற அருகிக் கொண்டே வரும் பல்வேறு வகை விலங்கினங்களின் வசிப்பிடமாகவும் உள்ளது. இவற்றோடு நீர்வாழ் காட்டெருமைகளும் கணிசமான அளவில் இங்கே காணப்படுகின்றன.

படம் : Pankaj

நாகர்ஹோல் தேசிய பூங்கா

நாகர்ஹோல் தேசிய பூங்கா

கர்நாடகாவின் நாகர்ஹோல் பகுதியில் உள்ள நாகர்ஹோல் தேசிய பூங்கா முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக ராஜீவ் காந்தி தேசியப் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. அந்தக் காலங்களில் மைசூர் மகாராஜாக்கள் இங்கு காட்டெருமைகள் உள்ளிட்ட மிருகங்களை வேட்டை ஆடி வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இங்கு வரும் பயணிகள் தேனுண்ணுங் கரடி, கருஞ்சிறுத்தை, நான்கு கொம்புகள் உடைய இரலை மான்கள், காட்டுப் பன்றி, எறும்புத்திண்ணி, காட்டெருமை, புலிகள் உள்ளிட்ட விலங்குகளை கண்டு ரசிக்கலாம். அதோடு இங்கு மலைப்பாம்பு, முதலை, விரியன் பாம்புகள் போன்ற ஊர்வன வகைகளும் வசித்து வருகின்றன. இவைத்தவிர எண்ணற்ற பறவை இனங்களும் இங்கே காணப்படுகின்றன.

படம் : Yathin S Krishnappa

பெரியார் காட்டுயிர் சரணாலயம்

பெரியார் காட்டுயிர் சரணாலயம்

கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள பெரியார் காட்டுயிர் சரணாலயம் அடர்த்தியான பசுமை மாறாக்காடுகளும், பனி படர்ந்த மலைச்சிகரங்களும், பச்சை பசேலென்ற பள்ளத்தாக்குப்பகுதிகளும் சூழ அமையப்பெற்றுள்ளது. இங்குள்ள பெரியார் ஏரியின் கரையை ஒட்டி யானைகள் கூட்டம் கூட்டமாக செல்வதை ஏரியில் படகுச்சவாரி செய்தபடியே பார்த்து ரசிக்கலாம். சமீபத்திய கணக்கெடுப்பின்படி 53 புலிகளும், 62 பாலூட்டி விலங்குகளும் இங்கு வசிப்பதாக தெரிய வந்துள்ளது. அதோடு இந்திய காட்டெருமை, சாம்பார் மான், கீரி, நரி, எலி மான், இந்திய காட்டு நாய் மற்றும் சிறுத்தைகள் போன்ற விலங்குகளும் இங்கு காணப்படுகின்றன.

படம் : Sundar

பாந்தவ்கார் தேசிய பூங்கா

பாந்தவ்கார் தேசிய பூங்கா

பாந்தவ்கார் தேசிய பூங்கா மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள விந்திய மலை முழுவதும் பரவியுள்ளது. இங்கு புலி, ஆசிய குள்ள நரி, கோடுகளுடைய கழுதை புலி, பெங்கால் நரி, ஸ்லோத் கரடி, காட்டுப் பூனை, மற்றும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளை காணலாம்.

படம் : Archith

தடோபா தேசியப் பூங்கா

தடோபா தேசியப் பூங்கா

மகாராஷ்டிர மாநிலத்தின் அமைந்துள்ள தடோபா தேசியப் பூங்கா மாநிலத்திலேயே மிகப்பெரிய தேசியப் பூங்காவாக அறியப்படுகிறது. தடோபா என்பது இங்குள்ள அடர்ந்த வனங்களில் வாழும் பழங்குடியினர் வணங்கும் கடவுளின் பெயராகும்.

படம் : Grassjewel

தி கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க்

தி கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க்

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள குல்லு (பகுதியின்) பகுதியின் முக்கியமான சுற்றுலாத் தலமாக தி கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க் விளங்குகிறது. இந்தப் பூங்காவில் அழிந்து வரும் பறவையினமான வெஸ்ட்டர்ன் டிராகோபான் எனும் காட்டுக்கோழி இனம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதோடு பழுப்புக்கரடி, கருப்புக் கரடி, கஸ்தூரி மான், அருகி வரும் இனங்களான பனிக்கரடி, ஹிமாலயன் தாஹிர் ஆடு உள்ளிட்ட விலங்கினங்களையும் பயணிகள் இங்கு கண்டு ரசிக்கலாம்.

படம் : OpenCage

பென்ச் தேசியப் பூங்கா

பென்ச் தேசியப் பூங்கா

மத்தியப் பிரதேசத்தின் தெற்கு எல்லையில், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அருகில் பென்ச் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 164 வகையான பறவைகள், 10 வகையான நிலநீர் வாழ்வன, 33 வகையான பாலூட்டிகள், 20 வகையான ஊர்வன மற்றும் 50 வகையான மீன் வகைகள் வசித்து வருகின்றன. இங்கு கருஞ்சிருத்தைகள், புலிகள், மான்கள், முயல்கள், கழுதைப் புலிகள், பறக்கும் அணில்கள், நரிகள், காட்டு பன்றிகள், முள்ளம்பன்றிகள், குள்ளநரிகள் போன்ற விலங்குகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

ரணதம்போர் தேசிய பூங்கா

ரணதம்போர் தேசிய பூங்கா

இந்தியாவின் மிகப்பெரிய காட்டுயிர் சரணாலயமாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரணதம்போர் தேசிய பூங்கா அறியப்படுகிறது. இங்கு புலி, குள்ளநரி, சிறுத்தை, கழுதைப்புலி, சதுப்புநில முதலை, காட்டுப்பன்றி மாறும் பலவகையான மான்கள் ஆகிய விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த தேசியப் பூங்காவில் புகைப்படமெடுக்க உரிய ஏற்பாடுகளை வனத்துறை செய்து தருவது ஒரு விசேஷமான அம்சமாகும்.

படம் : Paul Asman and Jill Lenoble

சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயம்

சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயம்

ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் மாவட்டத்தில் உள்ள சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயம், ஆரவல்லி மலைத்தொடரில் 800 ச.கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு சிறுத்தைகள், சாம்பார் மான்கள், சிறுமான்கள், நில்கை மான்கள், நான்கு கொம்பு கலைமான்கள் , காட்டுப்பன்றிகள், ரீசஸ் குரங்குகள், லாங்குர் குரங்குகள், கழுதைப்புலிகள், காட்டுப்பூனைகள் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன.

படம் : Bjørn Christian Tørrissen

பண்ணா தேசியப் பூங்கா

பண்ணா தேசியப் பூங்கா

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தில் பண்ணா தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இங்கு புலிகள், கரடிகள், சம்பார் மான்கள் உள்ளிட்ட விலங்குகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

படம் : Brian Gratwicke

சின்னார் வனவிலங்கு சரணாலயம், பொள்ளாச்சி

சின்னார் வனவிலங்கு சரணாலயம், பொள்ளாச்சி

பொள்ளாச்சியிலிருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில் உள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயத்தில் சிறுத்தைகள், புள்ளிமான்கள், காட்டெருமைகள், புலிகள், யானைகள், தொப்பித்தலை குரங்குகள், நீலகிரி வரையாடுகள், ஹனுமான் குரங்குகள், தலை நரைத்த ராட்சத அணில்கள், உள்ளிட்ட 34 வகையான பாலுட்டிகள் வசித்து வருகின்றன. மேலும் அரிய வகையான தலை நரைத்த ராட்சத அணில்கள், தூவானம் நீர்வீழ்ச்சி, மற்றும் முழு சரணாலயத்தையும் பார்க்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் கவனம் ஈர்க்கும் அம்சங்களாகும்.

படம் : N. A. Naseer

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+