Search
  • Follow NativePlanet
Share
» »இமய மலையில் யாருக்கும் அதிகம் தெரிந்திராத சிறந்த 5 ட்ரக்கிங்க் இடங்கள்!!

இமய மலையில் யாருக்கும் அதிகம் தெரிந்திராத சிறந்த 5 ட்ரக்கிங்க் இடங்கள்!!

இமய மலையில் யாருக்கும் அதிகம் தெரிந்திராத சிறந்த 5 ட்ரக்கிங்க் இடங்கள்!!

By Bala Karthik

இமாலய தொடர்ச்சியின் மீது பயணம் செய்வதென்பது முயற்சியின் அங்கமாக இருக்க, அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக உலகத்திலே பார்க்க போனால் மிகவும் கடினமானதொரு இலக்காகவும் இந்த இமாலய பயணம் அமைகிறது.

அதோடுமட்டுமல்லாமல், பயணத்திற்கு ஏற்ற செயல்களை நாம் பிரசித்திபெற்ற மாபெரும் மலைப்பகுதிகளில் தொடங்க, பல முறை சென்று வந்த பிறகும், ஒரு சில புதிய இடங்களை நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்ட சில குறைவாக தெரிந்துக்கொள்ளப்பட்ட இடங்கள் பயணத்தில் காண, அவற்றுள் எண்ணற்ற மலைப்பாதைகளும், சிகரங்களும், பெருக்கெடுத்து ஓடும் நதிகளும் அடங்கும்.

இந்த ஆர்டிக்கலின் மூலமாக குறைவாக கண்டறியப்பட்ட பயண இடங்களை இமாலயத்தில் கண்டுபிடிப்பதோடு, அந்த மலைப்பகுதிகளின் மீது நாம் காதலும் கொள்கிறோம். அத்தகைய இடங்களை கண்டு நீங்கள் வாயடைத்துபோய் நிற்க, 'நான் யாராலும் தொட்டிராத கன்னி நிலங்கள்' எனவும் அவை காட்சியளித்து, ஒருவருக்கு தேவையான அனைத்து அமைதியையும் தந்து மனதினை அழகிய காட்சிகளால் இதமாக்கவும் முயல்கிறது.

 இந்திரஹார் கணவாய்:

இந்திரஹார் கணவாய்:

தேவதாரு மரங்கள் தோட்டம் சூழ்ந்திருக்கும் இந்த இந்திரஹார் கணவாய், நீர்பரப்புகளையும், பசுமை புல்வெளிகளையும், ரோடோடென்ரான் மரக்காடுகளையும் கொண்டிருக்கிறது. இந்த மறைந்திருந்த இடம், மற்ற இடங்களை காட்டிலும் இமாலய பயணத்தில் இனிமையை சேர்க்க, அழகிய காட்சிகள் இங்கே புதைந்து நம்மையும் மனதோடு சேர்த்து காட்சிகளின் இடையே மறைத்து மனதினை தரவும் மறுக்கிறது.

இந்த பயணமானது களு தேவி ஆலயத்திலிருந்து தொடங்க, இது தர்மசாலாவின் அருகிலே காணப்படுவதோடு, அதன்பின்னர் நம்மை லாஹௌலின் புகழ்பெற்ற கட்டிஸ் நோக்கியும் அழைத்து செல்கிறது.

PC: Ashish Gupta

 பங்கர்சுல்லா சிகரம்:

பங்கர்சுல்லா சிகரம்:

இந்த பயணத்தில் பங்கர்சுல்லா சிகரத்திற்கு பள்ளத்தாக்கின் வழியாக அழைத்துசெல்ல, குருதி நிற ரோடோடென்ரான், மற்ற இனத்தோடு இணைந்து காணப்படுகிறது.

இங்கே பச்சை நிற சாயல் படர்ந்திருப்பது தெரிய, மேலும் ஓக் மரங்களோடும், நீல நிற பைன் மரங்களோடும், போஜ் பாட்ரா என பலவற்றோடு இணைந்து வெள்ளை நிற பனிகளும் காணப்படுகிறது. இங்கே தாவரங்களும், விலங்குகளும் மூழ்கி காணப்பட, அவற்றை இந்த பயணத்தின் போது நாம் காண்கிறோம்.

அந்த ஏற்றத்தில் ஏற தொடங்கும் நாம், மலைமுகட்டின் செங்குத்தான வடிவத்தையும், கம்பீரமான இமய மலையையும் பார்த்தபடி அப்படியே நிற்கிறோம் என்பதே உண்மை. அங்கே நமக்கு கிடைக்கும் தூய்மையான மலை காற்று நம்மை இறுக்கி பிடிக்க, ஆல்பைன் காடுகளின் பெரும் எல்லை வழியே நம் பயணத்தையும் தொடர்கிறோம்.

PC: McKay Savage

 கெடார்காந்தா பயணம்:

கெடார்காந்தா பயணம்:

இமய மலை பயணத்தின் பெரும் அழகிய காட்சியால் நம்மை வெகுவாக கவரும் இந்த பயணம், முகாம் தளங்களை அமைக்கவும் நம்மை வரவேற்று திகைப்பூட்டுகிறது. குளிர்காலத்தில் நீங்கள் பயணிப்பீர்கள் என்றால், உங்கள் பயண இடங்களுள் ஒன்றாக இதுவும் அமைவது பயணத்தை மேலும் இனிமையாக்குகிறது.

உலகத்திலேயே காணாத காட்சிகளை தரும் இந்த சிகரம், இயற்கை நிழலையும் கொண்டு அழகை பரிசளிப்பதோடு, ஆராயவும் நம் மனதில் ஆர்வத்தை உண்டாக்குகிறது. இவை நாம் கண்டிராத இடமாக அமைய, இந்த தளத்தின் பனி மூடிய சிகரங்கள், அற்புதமான உணர்வினை மனதில் தந்து உச்சி பகுதியை காண அமைதியையும் விதைக்கிறது.

PC:Kanthi Kiran

ப்ரஷார் ஏரி:

ப்ரஷார் ஏரி:

இமாலய பயணத்தில் குறைவாக தெரிந்துக்கொண்ட அழகிய இடமாக தௌலதார் தொடர்ச்சியில் காணப்படும் ப்ரஷார் ஏரி அமைந்திருக்கிறது. இந்த ஏரியின் வெவ்வேறு விதமான நிறத் தன்மை, மனதில் வித்தியாசம் நிறைந்த ஆச்சரியத்தை தர, அதற்கு நாம் தயாராக வேண்டியதும் அவசியமாக, மாயாஜாலத்தினால் மனதினை ஆளவும் துடிக்கிறது இவ்விடம்.

பரஷரா முனிவரின் பெயரினை இந்த ஏரிக்கு வழங்கப்பட, இங்கே அவர் தவம் புரிந்தார் என்பதும் தெரியவருகிறது. இங்கே உள்ளூர் வாசிகளுடன் நம் நேரத்தை செலவிட, அவர்களுடைய கலாச்சாரம் மற்றும் பல தகவல்களையும் நம்மால் தெரிந்துக்கொள்ள முடிகிறது. இந்த மலைமுகட்டின் அற்புதமான கால நிலையானது பயணத்தை மேலும் இனிமையாக்குகிறது.

PC:Yogeshvhora

 நாக திப்பா பயணம்:

நாக திப்பா பயணம்:

நாக சிகரம் என்றழைக்கப்படும் நாக திப்பா, கார்ஹ்வால் அடிவாரத்தில் அமைந்திருக்க, இமயமலை தொடர்ச்சியின் சிறந்த பயணமாகவும் இது அமைகிறது. இந்த பயணத்தில் நம்மை சுற்றி எண்ணற்ற தாவரங்களும், விலங்குகளும் கூட காணப்படுகிறது.

இங்கே நம் கண்களிற்கு புலப்படும் பந்தர்பஞ்ச் சிகரமானது, ஸ்ரீகாந்த், கெடார்நாத், மற்றும் கங்கோத்ரியுடன் இணைந்தே காணப்படுகிறது. இந்த காட்சிகளில் டூன் பள்ளத்தாக்கும், சங்காபாங்க் எனப்படும் பனி மூடிய சிகரம் காணப்பட, ஓக் மரங்கள், ஆப்பிள், ரோடோடென்ரான், என பல மரங்கள் சூழ்ந்த வழியாகவும் நம் பயணம் சிறக்கிறது.

PC: Paul Hamilton

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X