» »திருச்சியில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய டாப் 7 இடங்கள்!!

திருச்சியில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய டாப் 7 இடங்கள்!!

Written By: Udhaya

திருச்சி அல்லது திருச்சிராப்பள்ளி, தமிழ் நாட்டின் தொழில் மற்றும் கல்வி நகரமாக விளங்கி வருகிறது. இந்நகரம் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் நான்காவது பெரிய மாநகராட்சியாகவும் நகர்புற குழுமமாகவும் இருக்கிறது. திருச்சி நகரம் தமிழ்நாட்டின் பழமையான வசிப்பிடங்களில் ஒன்றாகும். இது ஒரு வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது மற்றும் பல பேரரசுகளின் உயர்வு மற்றும் வீழ்ச்சியை கண்டிருக்கிறது.

திருச்சியில் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் உள்ளன. அவை எல்லாவற்றிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பு மிக முக்கியமான 7 இடங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்

 மலைக்கோட்டை கோயில்

மலைக்கோட்டை கோயில்


மலைக்கோட்டை கோயில் ஒரு தொல்பழங்கால மலைப்பாறை ஒன்றன்மீது கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் என்பவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

M.K.Nigunkumar

 ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில்

ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில்


ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், "ரங்கநாதஸ்வாமி" என்றழைக்கப்படும் மஹா விஷ்ணுவுக்காக எழுப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும். இங்கு மஹா விஷ்ணு, சாய்ந்து பள்ளி கொண்ட நிலையில் காணப்படுகிறார்.

108 திவ்ய தேசங்களில் மிக முக்கியமான தலமாகத் திகழ்கிறது ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத பெருமாள் திருக்கோயில். காவிரி, கொள்ளிடத்துக்கு நடுவே தண்ணீர் சூழ்ந்த பகுதியில் சயனித்தபடி, அகிலம் முழுவதையும் அருள்பாலித்துக் காக்கும் ஸ்ரீரங்கநாதரைத் தரிசிக்க, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

Ajay Goyal

 ஜம்புகேஸ்வரர் கோயில்

ஜம்புகேஸ்வரர் கோயில்


திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவில் நகரம் திருவானைக்கோவில். இங்குதான் ஜம்புகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களில் நீருக்குரிய தலம் இதுவாகும்.

Ssriram mt

 எறும்பீஸ்வரர் கோயில்

எறும்பீஸ்வரர் கோயில்

திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது எறும்பீஸ்வரர் கோயில். இக்கோவில் ஒரு சிறு குன்றின் மீது உள்ளது. இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங் கொண்டு வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை

Hayathkhan.h

 வயலூர் முருகன் கோயில்

வயலூர் முருகன் கோயில்

திருச்சிராப்பள்ளி மாநகரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது வயலூர் முருகன் கோயில்.இங்குள்ள சக்தி தீர்த்தம் முருகப் பெருமான் தமது வேலால் குத்தி உருவாக்கியது எனக் கூறுவர். திருமணத் தடைகளைப் போக்கும் தலமாக இதனைப் போற்றுகின்றனர்.

Ssriram mt

கல்லணை

கல்லணை

கல்லணை திருச்சியிலுள்ள உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது.

Beckamrajeev

புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி

புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி

புளியஞ்சோலை தமிழ்நாட்டின், கிழக்குத் தொடர்ச்சி மலை கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது திருச்சிராப்பள்ளி இருந்து சுமார் 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள நகரம் துறையூர் ஆகும். இது சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது.

www.tn.gov.in/trichytourism

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்


விராலிமலை முருகன் கோயில், மலைகோட்டை கோயில், ஸ்ரீ ரங்க நாதசுவாமி கோயில், ஜம்புகேஸ்வரர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், எறும்பீஸ்வரர் கோயில், வயலூர் முருகன் கோயில், வெக்காளியம்மன் கோயில், குணசீலம் விஷ்ணு கோயில் நாதிர் ஷா மசூதி, புனித யோவான் தேவாலம் மற்றும் புனித ஜோசப் தேவாலயம் முதலானவை இந்த வளமான வரலாற்றின் படைப்புகள் ஆகும்.

Vensatry

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

திருச்சி விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி விமான நிலையம் ஒரு சர்வதேச விமான நிலையமாகும். இது சென்னை, பெங்களூர், இலங்கை மற்றும் கோலாலம்பூர் விமான நிலையங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கிறது.

திருச்சி 45, NH 45B, 67, 210 மற்றும் 227 தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கமான பேருந்துகள் திருச்சியில் இருந்து தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்படுகின்றன.

திருச்சி ரயில் நிலையம் தமிழ்நாட்டின் ஒரு முக்கிய ரயில் சந்திப்பாக உள்ளது. அதோடு நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்துடனும் நல்ல ரயில் இணைப்பை பெற்றுள்ளது.

 எப்போது செல்லலாம்

எப்போது செல்லலாம்

திருச்சியின் வானிலை ஆண்டின் பெரும்பாலான பகுதிகளிலும் சூடாகவும் வறண்டும் காணப்படுகிறது. கோடைகாலம் பகலில் மிகவும் சூடாக இருக்கும் ஆனால் மாலை போது சற்று குளிர்ச்சியாக காணப்படும்.