Search
  • Follow NativePlanet
Share
» »நீங்க சிங்கிளா? அப்படினா இப்போதே கோவா செல்லவேண்டிய 10 அல்டிமேட் காரணங்கள்

நீங்க சிங்கிளா? அப்படினா இப்போதே கோவா செல்லவேண்டிய 10 அல்டிமேட் காரணங்கள்

By Staff

பொங்கி வழியும் சோம பானங்கள், ராக் இசை அதிரும் பார்டிகள், பிகினி உடையணிந்த பெண்கள், அழகுபொருந்திய கடற்கரைகள், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புராதன கட்டிடங்கள் என சுற்றுலாவுக்கு என்றே படைக்கப்பட்ட நகரமான கோவாவில் நாம் கொண்டாடி மகிழ ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

நீங்களும் உங்கள் காதலியும் தனிமையில் அனுபவிக்க ஏற்ற இடங்கள் இவை

நண்பர்களுடன் சென்று வாழ்க்கையை கொண்டாடி மகிழ வேண்டும் என ஆசைப்பட்டால் நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடம் கோவா தான். அங்கே நாம் சென்று கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சபரிமலையில் ஐயப்பன் கோயில் பின்னணியில் மறைந்துள்ள மர்மங்கள் என்ன தெரியுமா?

தண்ணில மிதக்கலாம் :

தண்ணில மிதக்கலாம் :

இங்கே 'தண்ணி' என்று குறிப்பிடப்படுவது தண்ணீரே அன்றி வேறேதும் இல்லை பராபரமே. கோவா என்றதுமே நம் நினைவுக்கு வருவது கடற்கரைகள் தான். பாதி இந்தியாவின் இருபுறமும் கடற்கரைகள் இருந்தாலும் அவை யாவும் கோவாவின் கடற்கரைகளுக்கு நிகராகாது.

தண்ணில மிதக்கலாம் :

தண்ணில மிதக்கலாம் :

அதற்க்கு காரணம் கோவாவின் கடற்கரைகளில் எப்போதும் ஏதாவது நிகழ்ந்து கொண்டே இருப்பது தான். அதிலும் குறிப்பாக 'நீர் விளையாட்டுகள்' சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவரும் அம்சங்களில் ஒன்றாக உள்ளது.

தண்ணில மிதக்கலாம் :

தண்ணில மிதக்கலாம் :

இங்குள்ள கடற்கரைகளில் அலைச்சறுக்கு (Surfing), ஆழ் கடல் மூழ்குதல் ( Scuba Diving), பாய்மர படகு சறுக்கு (Wind surfing) போன்ற ஏராளமான நீர் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. வெறுமனே கடற்கரைகளில் நிற்பதை விட இம்மாதிரியான விளையாட்டுகளில் ஈடுபடுவது சுற்றுலாவை சுவாரஸ்யம் நிறைந்ததாக மாற்றும்.

தண்ணில மிதக்கலாம் :

தண்ணில மிதக்கலாம் :

கோவாவில் இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபட சிறந்த கடற்கரை என்றால் அது கோவா தலைநகரான பனாஜி நகருக்கு அருகில் இருக்கும் டோனா பௌலா கடற்கரையாகும். இந்த கடற்கரை தான் கோவாவின் 'விஐபி' இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. 'ஏக் துஜே கேலியே', அஜய் தேவ்கன் நடித்த 'சிங்கம்' போன்ற ஹிந்தி படங்கள் இந்த கடற்கரையில் படமாக்கப்பட்டுள்ளன.

கோவா :

கோவா :

அடுத்த முறை கோவா செல்கையில் இந்த நீர் விளையாட்டுகளில் நிச்சயம் கலந்து கொள்ளுங்கள். கோவா சென்றால் அங்கே தங்குவதற்கான ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

சூது கவ்வும் :

சூது கவ்வும் :

3000 வருடங்களுக்கு முன்பு நடந்த மகாபாரதத்தில் இருந்து இன்று வரை கேளிக்கையின் ஒரு பகுதியாக சூதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. நம்முடைய அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்கும் போர்க்களமான சூது விளையாட்டில் வென்று வாழ்ந்தோரும் உண்டு, எல்லாம் இழந்து வீழ்ந்தோரும் உண்டு.

சூது கவ்வும் :

சூது கவ்வும் :

நாம் அந்த அளவுக்கு இல்லையென்றாலும் கொஞ்சம் செலவழிக்க தயாராக இருப்பவர்களுக்காகவே கோவாவில் இருக்கும் கேசினோக்களின் கதவுகள் எப்போதும் திறந்திருகின்றன. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போன்ற சூதாட்ட கிளப்புகளை கோவாவில் நாம் காண முடியும்.

சூது கவ்வும் :

சூது கவ்வும் :

கப்பலில் செயல்படும் கேசினோக்கள் ஒரு குட்டி சொர்க்கம் போன்றவை. இங்கே ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி சூதாட்டத்தில் கலந்து கொள்ளலாம். நிறைய அதிர்ஷ்டமும், திறமையும் இருந்தால் எந்த அளவுக்கும் பணம் பார்க்கலாம். வருடத்தின் 365 நாட்களும் திறந்திருக்கும் இந்த கேசினோக்களில் பார்டிகளுக்கும் சற்றும் குறையிருக்காது.

அஞ்சுனாவில் ஷாப்பிங் செய்திடுங்கள் :

அஞ்சுனாவில் ஷாப்பிங் செய்திடுங்கள் :

கோவாவில் பார்டிகளுக்கு புகழ்பெற்ற கடற்கரைகளில் 'அஞ்சுனா' கடற்கரையும் ஒன்று. மிக சமீப காலம் வரை போர்த்துகீசிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த கோவா நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கே ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை அன்று கூடும் சந்தை மிகப்பிரசித்தம்.

அஞ்சுனாவில் ஷாப்பிங் செய்திடுங்கள் :

அஞ்சுனாவில் ஷாப்பிங் செய்திடுங்கள் :

கைவினைப்பொருட்கள், ஆடைகள், அலங்கார பொருட்கள், காலணிகள் என இங்கே விதவிதமான பொருட்கள் கொட்டி கிடக்கின்றன. விலையும் மிக சல்லிசாக இருப்பதால் குறைந்த பணத்திற்கே நிறைய பொருட்களை வாங்கி செல்ல முடியும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் இங்கே ஏராளமான அளவில் நாம் பார்க்கலாம்.

போர்ச்சுகல் நாட்டுக்கு போங்க :

போர்ச்சுகல் நாட்டுக்கு போங்க :

போர்சுகல் ஆளுகையின் கீழ் இருந்த நகரம் என்பதால் இங்கே அவர்கள் கட்டிய ஏராளமான சர்ச்சுகள் இருக்கின்றன. அவற்றிக்கு சென்றால் நாம் ஏதோ போர்சுகல் நாட்டுக்கே சென்றது போன்ற அனுபவம் கிடைக்கும். அதிலும் குறிப்பாக 'போம் ஜீசஸ் பசில்லியா' என்ற சர்ச் 1605 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தியாவில் இருக்கும் மிகப்பழமையான சர்சுகளில் ஒன்றாகும்.

போர்ச்சுகல் நாட்டுக்கு போங்க :

போர்ச்சுகல் நாட்டுக்கு போங்க :

போர்த்துகீசியர்களின் கட்டிடக்கலை மற்றும் ஆன்மீக ஈடுபாடுகளை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் நிச்சயம் இந்த போம் ஜீசஸ் சர்ச்சுக்கு செல்ல வேண்டும்.

சன் பர்ன் பார்டி திருவிழா :

சன் பர்ன் பார்டி திருவிழா :

திருமணமான பிறகு நண்பர்களுடன் பார்டிக்கு கிளம்புகிறேன் என்று சொன்னால் சமையலறையில் இருந்து பூரிக்கட்டை பறந்து வரலாம் என்பதால் திருமணதிற்கு முன்பே நண்பர்களுடன் கோவா சென்று சன் பர்ன் பார்டி திருவிழாவில் கலந்துகொள்ளுங்கள். இந்தியாவில் நடக்கும் பார்டிகளின் உச்சமாக இந்த சன் பர்ன் பார்டி சொல்லப்படுகிறது.

சன் பர்ன் பார்டி திருவிழா :

சன் பர்ன் பார்டி திருவிழா :

கோவாவில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 27-29ஆம் தேதிகளில் கோவா கடற்க்கரையில் நடக்கும் இந்த பார்டி கொண்டாட்டத்தில் உலகின் தலைசிறந்த டீஜெக்கள் கலந்துகொண்டு இசைமாலை பொழிகின்றனர்.

சன் பர்ன் பார்டி திருவிழா :

சன் பர்ன் பார்டி திருவிழா :

கோவாவின் புகழ்பெற்ற கடற்க்கரைகளில் ஒன்றான வகேடோர் பீச்சில் நடக்கும் இந்த பார்டி திருவிழாவில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து டிக்கெட் பெறவேண்டியதும் அவசியம். வெறுமனே ஆட்டம், பாட்டம் என்பதோடு மட்டும் இல்லாமல் இங்கே பீச் வாலிபால் விளையாடலாம், ஆபத்து நிறைந்த பாறை ஏற்றத்தில் ஈடுபடலாம், இங்கே உள்ள கடைகளில் வித்தியாசமான பொருட்களை ஷாப்பிங் செய்யலாம்.

கொண்டாட்டம் !! கோவா !!

கொண்டாட்டம் !! கோவா !!

கோவாவில் உள்ள கலாட்டாவான வாழ்க்கையை காட்டும் சில புகைப்படங்கள்.

கொண்டாட்டம் !! கோவா !!

கொண்டாட்டம் !! கோவா !!

கோவாவில் உள்ள கலாட்டாவான வாழ்க்கையை காட்டும் சில புகைப்படங்கள்.

கொண்டாட்டம் !! கோவா !!

கொண்டாட்டம் !! கோவா !!

கோவாவில் உள்ள கலாட்டாவான வாழ்க்கையை காட்டும் சில புகைப்படங்கள்.

கொண்டாட்டம் !! கோவா !!

கொண்டாட்டம் !! கோவா !!

கோவாவில் உள்ள கலாட்டாவான வாழ்க்கையை காட்டும் சில புகைப்படங்கள்.

கொண்டாட்டம் !! கோவா !!

கொண்டாட்டம் !! கோவா !!

கோவாவில் உள்ள கலாட்டாவான வாழ்க்கையை காட்டும் சில புகைப்படங்கள்.

கொண்டாட்டம் !! கோவா !!

கொண்டாட்டம் !! கோவா !!

கோவாவில் உள்ள கலாட்டாவான வாழ்க்கையை காட்டும் சில புகைப்படங்கள்.

கொண்டாட்டம் !! கோவா !!

கொண்டாட்டம் !! கோவா !!

கோவாவில் உள்ள கலாட்டாவான வாழ்க்கையை காட்டும் சில புகைப்படங்கள்.

கொண்டாட்டம் !! கோவா !!

கொண்டாட்டம் !! கோவா !!

கோவாவில் உள்ள கலாட்டாவான வாழ்க்கையை காட்டும் சில புகைப்படங்கள்.

கொண்டாட்டம் !! கோவா !!

கொண்டாட்டம் !! கோவா !!

கோவாவில் உள்ள கலாட்டாவான வாழ்க்கையை காட்டும் சில புகைப்படங்கள்.

கொண்டாட்டம் !! கோவா !!

கொண்டாட்டம் !! கோவா !!

கோவாவில் உள்ள கலாட்டாவான வாழ்க்கையை காட்டும் சில புகைப்படங்கள்.

உல்லாச உலகம் உங்களுக்கே சொந்தம். வாங்க! வாங்க! கோவா போகலாம்!

கோவாவில் அந்த மாதிரி என்ஜாய் பண்ண எத்தன பீச்சுகள் இருக்கு தெரியுமா?

கோவாவில் அந்த மாதிரி என்ஜாய் பண்ண எத்தன பீச்சுகள் இருக்கு தெரியுமா?

கோவாவில் அந்த மாதிரி என்ஜாய் பண்ண எத்தன பீச்சுகள் இருக்கு தெரியுமா?

அந்த காலத்து கோவா எப்படி இருந்துச்சினு உங்களுக்குத் தெரியுமா?

அந்த காலத்து கோவா எப்படி இருந்துச்சினு உங்களுக்குத் தெரியுமா?

அந்த காலத்து கோவா எப்படி இருந்துச்சினு உங்களுக்குத் தெரியுமா?

Read more about: goa things to do beaches adventure
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X