» »ஆன்மீகச் சுற்றுலா இன்று : மதுரை நவநீத கிருஷ்ணர் கோயில்

ஆன்மீகச் சுற்றுலா இன்று : மதுரை நவநீத கிருஷ்ணர் கோயில்

Posted By: Udhaya

உயிரினங்கள் பூமியில் படைக்கப்பட்டதன் நோக்கமே, சந்ததிகளை கடத்துவதற்காகத் தான் என்கிறது உயிரியல் விஞ்ஞானம். அதிலும் மனிதனாக பிறந்தவர்கள் எல்லாருக்குள்ளும் அடுத்த சந்ததி உருவாவதை எதிர்கொள்ளும் ஆசையும், அதன்மீது கொண்டுள்ள தீராக்காதலும் மனிதர்கள் தங்களை எல்லாவகையிலும் மேம்பாடு கொள்ள அடுத்தடுத்த சந்ததிகளில் முயற்சித்துக்கொண்டிருக்கிறது.

எழுத்துக்கள் கண்களால் பார்க்கப்பட்டாலும், மனதால் நேசிக்கப்படுவதைப்போலத்தான், பெயரளவில் திருமணம் ஆகியிருந்தாலும் இரு மனங்கள் இணைவதன் அடையாளம் என்பது குழந்தைகள்தான்.

திருமணம் ஆகி வருடங்கள் கடந்துவிட்டன வீட்டில் இன்னமும் குழந்தை அழுகை கேட்கவில்லை என்று நம் காதுபட பேசுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் பேச்சு வீட்டில் யாரை பாதிக்காவிட்டாலும், அந்த பெண்ணின் மனம் கூனிக்குறுகி போய்விடும்படி ஆகிவிடுகிறது அல்லவா?

என்னதான் குழந்தையின்மைக்கு பல அறிவியல் காரணங்கள் இருந்தாலும், கடவுள் மேல் உள்ள நம்பிக்கையில் இன்றளவும் பல பக்தர்கள் கோயில்களுக்கு வந்துகொண்டிருக்கின்றனர். அவர்களின் மனம் போலவே கோயிலுக்கு சென்ற சில மாதங்களில் கருவுற்று அந்த வீட்டில் பிள்ளை சத்தம் கேட்கிறது. அது வேறெந்த இடமும் இல்லை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாமதுரைதான். வாருங்கள் பிள்ளைவரம் வேண்டிச் செல்வோம்...

 அருள்மிகு நவநீத கிருஷ்ணர் கோயில்

அருள்மிகு நவநீத கிருஷ்ணர் கோயில்

மதுரையில் அமைந்துள்ள இந்த கோயிலின் மூலவர் நவநீத கிருஷ்ணர், தாயார் மகாலட்சுமி அம்மாள் ஆவர்.

இவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என பக்தர்களால் பெரிதும் கொண்டாடப்படுபவர்கள்.

Thriyambak J. Kannan

 பழமை

பழமை


இந்த கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, பாண்டியர்களின் சாம்ராஜ்யத்தின் அசைக்கமுடியாத பெருநகரமாம் மதுரையில் கட்டப்பட்டுள்ளது.

Reji Jacob

 நடைதிறக்கும் நேரம்

நடைதிறக்கும் நேரம்


காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

Rengeshb

சுற்றுலா வழிகாட்டி

சுற்றுலா வழிகாட்டி


தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து மதுரை ஏறக்குறைய 8 மணி நேரத் தொலைவிலும், கோவையிலிருந்து ஏறக்குறைய நான்கரை மணி நேரத்தொலைவிலும் அமைந்துள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லும் திட்டத்தையும் உடன் இணைத்துக்கொண்டால், ஒரு நாளில் மதுரையின் ஆன்மீக சுற்றுலா சிறப்பாக அமையும்.

 மாட்டுத்தாவனியிலிருந்து

மாட்டுத்தாவனியிலிருந்து

மதுரை மாட்டுத்தாவனி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ, பேருந்து வசதிகள் உள்ளன. தனியார் வாகனங்களிலும் பயணம் செய்து கோயிலை அடையலாம்.

இந்த வழியில் காந்தி நினைவு அருங்காட்சியகம் வரும் என்பது கூடுதல் தகவல்.

 ஆரப்பாளையத்திலிருந்து

ஆரப்பாளையத்திலிருந்து

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து அரசரடி ஆரப்பாளையம் சாலையில் சென்று, அங்கிருந்து டிராவலர்ஸ் பங்களா சாலையை அடைந்தால், அதன் நீட்சியிலேயே கூடல் அழகர் கோயில் வரும். அங்கிருந்து தெற்கு மார்ரெட் தெரு வழியாக கீழ வெளிவீதியை அடைந்தால் இந்த கோயிலை மிக குறுகிய நேரத்தில் சென்றடையலாம்.

Sahulhame1439

 மீனாட்சியம்மன் கோயில்

மீனாட்சியம்மன் கோயில்


மாட்டுத்தாவனி பேருந்து நிலையத்திலிருந்து மேலூர் சாலையை அணுகி, அங்கிருந்து அழகர் கோயில் முக்கிய சாலையை நோக்கி செல்லவேண்டும், தேசிய நெடுஞ்சாலை எண் 85 ஐத் தொடர்ந்து சென்றால் அது மேலமாசிவீதியை அடையும். அங்கிருந்து அவனி மூலை வீதி, அதன்பிறகு சித்திரை வீதி வழியாக சென்றால் வெறும் 20 நிமிடத்தில் மீனாட்சியம்மன் கோயிலை அடையலாம்.

குறிப்பு: வாகன நெரிசல்களைப் பொறுத்து நேரங்கள் மாறுபடலாம்.

 மீனாட்சியம்மன் கோயிலிலிருந்து

மீனாட்சியம்மன் கோயிலிலிருந்து


மதுரை வடக்கு சித்திரை வீதியிலிருந்து கிழக்கு சித்திரை வீதி, தெற்கு மூல வீதி வழியாக நடந்தே சென்று நவநீதன் கோயிலை அடையலாம். வழியில் பல கடைகள் ஷாப்பிங்க்குக்கு இருப்பதால் நடந்து செல்வது அதிக சுமையாக இருக்காது.

வாகனத்தில் என்றால், கிழக்கு மாசி வீதியிலிருந்து கீழவெளிவீதியை அடைந்து செல்வது வாகன நெரிசல் குறைவான வழியாக அறியப்படுகிறது.

 கோயிலின் சிறப்பு

கோயிலின் சிறப்பு

வருடத்தில் மூன்று மாதங்கள் நவநீத கிருஷ்ணரின் மீது சூரிய ஒளி விழுகிறது அந்த சமயத்தில் அருள் பெறுவது சிறந்ததாகும்.

 ராகு கேது பூசை

ராகு கேது பூசை

தோசம் இருக்கிறவர்கள் ராகு கேது பூசை செய்துகொள்கின்றனர். நாகர் சன்னிதியில் மஞ்சள் அபிசேகம் மிகச் சிறப்பாக கருதப்படுகிறது.

Read more about: travel, temple