» »தமிழரின் அசாத்தியம் தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு!

தமிழரின் அசாத்தியம் தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு!

Posted By: Udhaya

கி.பி 1010 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் எனப்படும் பிரஹதீஸ்வரர் கோயில் ஆயிரம் வருடங்களை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. இதனை கட்டியவர் முதலாம் ராஜ ராஜ சோழன் ஆவர். இன்று உலகில் இருக்கும் மிகத்துல்லியமான கணித அளவீடுகளுடன் கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றான இக்கோயிலை பற்றிய சில ஆச்சர்யமூட்டும் தகவல்களை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

216அடி உயர விமானகோபுரம், 80டன் எடையுள்ள கலசபீடம், ஆயிரம் வருடங்களுக்கு முன்னாள் பெரிதாக தொழில்நுட்ப வசதிகள் ஏதும் இல்லாத பொழுது எப்படி இவ்வளவு பெரிய எடையுள்ள பொருளை இத்தனை உயரத்திற்கு கொண்டு சென்றிருப்பார்கள் என்பது இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது. அதே சமயத்தில்தான் கோயிலின் மர்ம சுரங்கம் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த முடிச்சுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

கோயிலின் பெருமைகள்

கோயிலின் பெருமைகள்


சுரங்கம் பற்றி பார்ப்பதற்கு முன், இந்த கோயிலின் அருமை பெருமைகளையும் பார்க்கவேண்டியுள்ளது. அதனுடன் தொடர்புகொண்டுள்ள சுரங்கம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்கும் பாருங்கள்.

sujith

 அஸ்திவாரம்

அஸ்திவாரம்


இந்த கோயில் 1,30,000 டன் எடையுள்ள கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. அப்படியானால் இதன் அஸ்திவாரம் எந்த அளவுக்கு தோண்டப்பட்டிருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்.

sujith

கூர்நுனி விமானம்

கூர்நுனி விமானம்


கர்ப்பகிரகத்துக்கு சரியாக மேலே 216அடியுள்ள கூர்நுனி வெற்று விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அறிவியல் அதிசயங்களை இன்றளவும் கணக்கிடமுடியவில்லை என்றால் பாருங்கள் அந்த கால தமிழர்கள் எந்த அளவுக்கு கணிதத்தில் புலமை பெற்று விளங்கியிருப்பார்கள் என்று.

Sissssou2

 மர்மம் நிறைந்த சுரங்கப்பாதைகள்

மர்மம் நிறைந்த சுரங்கப்பாதைகள்

இந்த கோயிலைச் சுற்றி மர்மம் நிறைந்த சுரங்கப்பாதைகள் 4 இருப்பதாக கூறப்படுகிறது. அவை போர்க்காலத்தில் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக கட்டப்பட்டது எனவும் தெரிகிறது. இந்த சுரங்கங்களுக்கும் கலசத்தின் மேலுள்ள 72ஆயிரம் கிலோ எடைகொண்ட கல்லுக்கும் உள்ள சம்பந்தம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?

72 ஆயிரம் கிலோவாம்

72 ஆயிரம் கிலோவாம்

கிட்டத்தட்ட கோடிக்கணக்கில் எடை கொண்ட கோயிலின் கலசத்தில் 72ஆயிரம் கிலோவை அந்தரத்தில் ஏற்றியது எப்படி? என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. சில அனுமானங்களும் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ளது.

fraboof

 நுண்ணறிவு கணிதம்

நுண்ணறிவு கணிதம்

கலசத்தை ஏற்ற வேண்டும் என்றால் மிக பெரிய சாரத்தை கோவில் விமானம் சுற்றி கட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து இருப்பார்கள், இது போக எவ்வளவு கயிறு,மரக்கட்டை வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும் , இவை அனைத்திற்கும் சிறந்த கணித அறிவு நிச்சயம் தேவைபட்டு இருக்கும்தானே

நந்தி சிலை

நந்தி சிலை

அதேபோல இக்கோயிலில் இருக்கும் நந்தி சிலையும் ஒரே கல்லினால் வடிக்கப்பட்டது ஆகும். இந்தியாவிலிருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றான இது 16அடி நீளமும், 13அடி உயரமும் கொண்டதாகும்.

கிராண்ட் கற்கள்

கிராண்ட் கற்கள்

இதை அமைப்பதற்கு தேவையான கிராண்ட் கற்களை தஞ்சையில் இருந்து 60 கி.மீ தொலைவிலிருக்கும் திருச்சியில் இருந்து வெட்டி எடுத்து வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

கற்களை எப்படி கொண்டு வந்தனர்

கற்களை எப்படி கொண்டு வந்தனர்

அந்த காலத்தில் அந்த அளவுக்கு போக்குவரத்து வசதி இல்லை. யானைகளைத் தவிர அவ்வளவு எடைகொண்ட கற்களை தூக்குவதற்கு வழி ஏதும் இல்லை. அப்படியானால் அவற்றை குறிப்பிட்ட காலத்தில் கட்டிமுடிக்க எத்தனை யானைகள் கொண்டுவரப்பட்டிருக்கும் பாருங்கள்.

சுரங்கங்களுக்கும் அஸ்திவாரத்துக்கும் என்ன தொடர்பு

சுரங்கங்களுக்கும் அஸ்திவாரத்துக்கும் என்ன தொடர்பு


தஞ்சை பெரிய கோயில் எந்த அளவுக்கு பரந்து விரிந்துள்ளது என்பதை நம்மில் பலர் அறிந்திருக்கிறோம். இவ்வளவு எடை என்றாகும்போது அதன் அஸ்திவாரத்தின் அளவும் அதற்கு குறிப்பிட்ட விகிதத்தில் அமைந்திருக்கும். அதிக எடை கொண்ட இடங்களில் சுரங்கப்பாதைகள் தற்போதைய அறிவியல் தொழில்நுட்பங்களிலேயே பல சமயங்களில் சொதப்பி விடுகிறது. அப்படியென்றால் 1010ம் ஆண்டிலேயே தமிழனிடம் ஏதோ ஒரு சிறந்த தொழில்நுட்பம் இருந்துள்ளதுதானே.

மறையும் அறைகள்

மறையும் அறைகள்


தஞ்சை கோயிலை சுற்றி நிறைய மறையும் அறைகள் பாதாள அறைகள் கட்டப்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர் பலர். ஆனாலும், அதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. இந்த சுரங்கங்கள் மறையும் அறைக்கு செல்லலாம் என்றாலும், அதை இன்று வரை நிரூபிக்கமுடியவில்லை

PC: Fovea Centralis

 சுரங்கப்பாதை எங்கு செல்கிறது

சுரங்கப்பாதை எங்கு செல்கிறது

சுரங்கப்பாதை எங்கு முடிவடைகிறது என்பதில் பல கருத்துக்கள் உள்ளன. தஞ்சை சிஆர்சி பழைய டிப்போவில் இருக்கு பாழடைந்த மாளிகைக்கு இந்த சுரங்கப்பாதை செல்வதாக ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

தரங்கம்பாடி டேனிஸ் கோட்டை

தரங்கம்பாடி டேனிஸ் கோட்டை


தரங்கம்பாடியிலுள்ள டேனிஸ் கோட்டைக்கு இந்த சுரங்கப்பாதை வழியாக செல்லமுடியும் என்று ஒருசாரார் கூறுகின்றனர்.

Eagersnap

படையெடுப்பின்போது

படையெடுப்பின்போது

டேனிஸ் காரர்கள் இங்கு ஆட்சி செய்தபோது தஞ்சை பெரிய கோயிலுக்கும் கோட்டைக்கும் சுரங்கம் அமைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

 மலைக்கோட்டை

மலைக்கோட்டை

தஞ்சாவூரை சோழர்கள் ஆண்டபோது திருச்சி மலைக்கோட்டைக்கும் சுரங்கம் ஏற்படுத்தியதாக ஒரு தகவல் உண்டு. ஆனால் அந்த வழி இப்போது அடைக்கப்பட்டுவிட்டது. மக்கள் பயன்படுத்த தகுந்த பாதை அது இல்லை என்பதால் மூடப்பட்டதாக தெரிகிறது.

Manu Manjunath

 தஞ்சை அரண்மனை

தஞ்சை அரண்மனை

பழையாறில் அமைந்துள்ள தஞ்சை சோழர் அரண்மனை தற்போது பாழடைந்து காணப்படுகிறது. இதன் மர்ம அறைக்கு செல்வதற்காகத்தான் அந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

Melanie M

கைவிரித்த ஆய்வாளர்கள்

கைவிரித்த ஆய்வாளர்கள்

இந்த பாதை பயன்பாட்டுக்கு உகந்ததல்ல என்றும், இங்கு மக்களை அனுமதிக்க முடியாது என்றும் ஆய்வாளர்கள் கைவிரித்துவிட்டனர். எனினும் தொடர்ந்து மக்கள் இதை செப்பனிட கோரிக்கை வைத்துவருகின்றனர்.

Parthiban B

உண்மையில் சோழர்கள் அமைத்த சுரங்கமா

உண்மையில் சோழர்கள் அமைத்த சுரங்கமா


இன்னொரு தரப்பினர், இது சோழர் அமைத்த சுரங்கமே இல்லை. இந்த சுரங்கப்பாதை மராட்டியர் கால அமைப்பு என்றும், இது சோழனின் உருவாக்கம் என்பது கற்பனைகதைதான் என்றும் கூறுகின்றனர்.

Srithern

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

தஞ்சை பெரிய கோயிலிலிருந்து வெறும் 5 நிமிடத் தூரத்தில் உள்ளது இந்த மாளிகை. மேம்பாலம் சாலையிலிருந்து மருத்துமனை சாலைக்கு வலப்புறம் திரும்பி, காந்தி சாலை வழியாக தஞ்சை மாளிகையை அடையலாம்.

அருகிலுள்ள இடங்கள்

அருகிலுள்ள இடங்கள்

இதன் அருகிலேயே மாராத்தா மாளிகை, தமிழ் பல்கலைக்கழகம், வரதராஜாபெருமாள் கோயில்,பெரியார் சிலை ஆகிய சுற்றுலாத்தளங்கள் உள்ளன.