» »கன்னியாகுமரி பாதிப்பு பற்றி முன்பே கணித்த பஞ்சாங்கம் - இன்னும் என்னென்ன?

கன்னியாகுமரி பாதிப்பு பற்றி முன்பே கணித்த பஞ்சாங்கம் - இன்னும் என்னென்ன?

Written By: Udhaya

சுற்றுலாத் தளங்களைப் பாதிக்கச் செய்யும் இயற்கை சீற்றங்கள் பற்றி முன்பே பஞ்சாங்கம் கூறியுள்ளது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எந்தெந்த இடங்கள் இதனால் பாதிக்கப்படவிருக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

கார்த்திகை மாதத்தில் நிகழ்பவை

கார்த்திகை மாதத்தில் நிகழ்பவை

இந்த செய்தியை கூறும் பஞ்சாங்கம் என்று பரப்பப்படும் செய்தியில் கார்த்திகை மாதம் அதிகமான சூறாவளி காற்று மழையால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழியும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் உண்டாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேவையற்ற பீதிகளையும், இடர்பாடுகளையும் தவிர்ப்பதற்காக குறிப்பிட்ட தேதிகள் மறைக்கப்பட்டுள்ளன. மேலும் இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அறிவிப்புகளை மட்டும் நம்புங்கள். வதந்திகளை நம்பவேண்டாம்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி


இதில் டிசம்பர் மாதத்தில் கன்னியாகுமரி மிகவும் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மிகவும் பிரபலமான உலக சுற்றுலாத் தளங்களுள் ஒன்றாகும். இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகின்றனர். இந்த மழையால் சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ளது.

உப்பளம் பாதிப்பு

உப்பளம் பாதிப்பு

கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள உப்பளங்களில் நீர் நிரம்பி உப்பு தொழிலும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்தமான்

அந்தமான்

அந்தமான் அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் எனவும், 1510கிமீ அளவுக்கு புயல் உருவாகும் எனவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வகம் தெரிவிக்கும் கருத்துக்களை மட்டும் நம்புங்கள்.புரளிகளை நம்ப வேண்டாம்.

அந்தமான் சுற்றுலா

அந்தமான் சுற்றுலா

இதனால் அந்தமான் சுற்றுலாவுக்கு தயாராகி இருந்தவர்கள் சற்று சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். நீங்கள் ஒருவேளை சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தால் தவிர்த்தல் நல்லது.

குண்டாறு அணை பாதிப்பு

குண்டாறு அணை பாதிப்பு

குண்டாறு அணை பாதிப்பு

கடல் கொந்தளிப்பு

கடல் கொந்தளிப்பு

கன்னியாகுமரி, திருச்செந்தூர், கடலூர் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என்றும் அந்த பஞ்சாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

1550கிமீ கடலூர்

1550கிமீ கடலூர்

கடலூருக்கு 1550கிமீ தொலைவில் உருவான புயல் சின்னம் வேகமாக உருவெடுத்து நிலப்பரப்பை நோக்கி வரும். இதனால் பாதிப்பு உண்டாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் பிரளயம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அறிவிப்புகளை மட்டும் நம்புங்கள். வதந்திகளை நம்பவேண்டாம்.

 பிரளயம்

பிரளயம்


இந்த மாதம் முடிவதற்குள் பிரளயம் உண்டாகும் எனவும், இந்த பஞ்சாங்க தகவல்கள் குறிப்பிட்டுள்ளது. எனினும் இது வதந்திகள் என்றாலும் படிப்படியே நடந்து பலித்து வருகிறது. பஞ்சாங்கம் எப்போதும் பொய் சொல்லாது எனவும் பலர் நம்புகின்றனர். தற்போது கன்னியாகுமரி மழை, முன்னர் சென்னை வெள்ளம் என அனைத்தும் முன்பு பஞ்சாங்கத்தில் கூறப்பட்டது என்று அடித்து கூறுகின்றனர் இதை நம்புபவர்கள்.

நம்பினால் நம்புங்கள் இந்த ஆண்டு முடிவதற்குள் பிரளயம் ஏற்படப் போகிறதாம்!

 சுற்றுலா தவிருங்கள்

சுற்றுலா தவிருங்கள்

தொடர்விடுமுறை என்றாலும், இந்த மாதம் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால் மழை அறிவிப்புகளை தொடர்ந்து தெரிந்துகொண்டு ஆபத்தான இடங்களைத் தவிருங்கள்.

Read more about: travel, kanyakumari