» »அப்படி இருந்த அக்பரின் கோட்டை இப்போ எப்படி இருக்கு தெரியுமா?

அப்படி இருந்த அக்பரின் கோட்டை இப்போ எப்படி இருக்கு தெரியுமா?

Posted By: Udhaya

பழங்கால இந்தியாவில் (இந்தியா உருவாவதற்கு முன்பு) இருந்த பல அரசர்களின் கோட்டைகளும், அரண்மனைகளும், போர் நடந்த இடங்களும் இப்போது எப்படி இருக்கிறது. அப்போதிலிருந்து இப்போதைய பரிமாற்றம் எப்படி இருக்கிறது என்பன குறித்து இந்த பதிவில் காண்போம்.

அக்பர் கோட்டை மற்றும் அருங்காட்சியகம் அஜ்மீரில் அமைந்துள்ளது. இது ஒரு காலத்தில் இளவரசர் சலீம் (அக்பரின் மகன்) இல்லமாக இருந்தது.

தற்போது அரிய வகை கலைப் பொருள்களையும், ராஜ்புட் வம்சத்தினரின் அரிய பொருள்களையும் பாதுகாக்கும் அருங்காட்சியகமாக உள்ளது.

எப்போது கட்டப்பட்டது

எப்போது கட்டப்பட்டது

1570ம் ஆண்டு அக்பரால் கட்டப்பட்ட கோட்டை இதுவாகும். இந்த இடத்தில் ஜகாங்கிர் மன்னர் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு வியாபாரம் செய்ய அனுமதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

AdityaVijayavargia

அரசு அருங்காட்சியகம்

அரசு அருங்காட்சியகம்

அக்பர் கோட்டை மற்றும் அரசு அருங்காட்சியகம் அஜ்மீர் நகரத்தின் இதயப்பகுதியில் அமைந்துள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளமாகவும், நகரின் மிக முக்கிய சந்திப்பு பகுதியாகவும் விளங்குகிறது.

AdityaVijayavargia

அக்பரின் ஆட்சி

அக்பரின் ஆட்சி

கிமு 1556ம் ஆண்டுகளில் இரண்டாம் பானிபட் போரில் வெற்றிபெற்று அக்பர் ஆட்சியமைத்தார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அப்போது அக்பருக்கு வயது 13தான்.

Unknown

 மற்ற அரண்மனைகளிலிருந்து வேறுபட்டு நிற்கும் அக்பர் அரண்மனை

மற்ற அரண்மனைகளிலிருந்து வேறுபட்டு நிற்கும் அக்பர் அரண்மனை


பொதுவாகவே கோட்டைகள் அந்த காலத்தில் குன்றுகள் மீதும், மலைகள் மீதும் கட்டப்பட்டிருக்கும். ஒரு வித பாதுகாப்பு காரணங்களுக்காகவே இவ்வாறு கட்டப்பட்டிருக்கும். ஆனால், அக்பரின் கோட்டை அப்படி கட்டப்படவில்லை.

Unknown

அமைதியான இடம்

அமைதியான இடம்

மற்ற கோட்டைகள் போலல்லாமல், இந்த இடம் மிகவும் அமைதியான சூழ்நிலையில் இருப்பது இது போர்ச்சூழலுக்காக கட்டப்பட்ட கோட்டை போல தெரியவில்லை. இளங்குருதி பயம் அறியாது என்பதைப் போல, அக்பர் தனது பதின்பருவத்திலேயே பல வித்தைகள் கற்றுத் தேர்ந்திருந்தார்.

Sita Ram

அஜ்மீர் தர்கா

அஜ்மீர் தர்கா

1568ல், சித்தகார்க் கோட்டையை வென்றபிறகு, அங்கிருந்து அஜ்மீர் தர்காவுக்கு நடந்தே வருவாராம் அக்பர். அவர் ஆன்மீகவழிபாட்டிற்காக இவ்வளவு தூரம் வந்து செல்வாராம். சுற்றிலும் படைசூழ வந்தாலும், வீரதீர செயல்களில் தம் படைக்கு முன் நின்று அதகளம் புரிவார் அக்பர் என்றும் கூறப்படுகிறது.

Unknown

மற்ற கோட்டைகள்

மற்ற கோட்டைகள்

அக்பர் கோட்டையை தவிர்த்து, தாரகார்க் கோட்டை, மன்சிங்க் கோட்டை, பிஜாய் நிவாஸ் கோட்டை என்று பல கோட்டைகள் இந்த பகுதிகளில் உள்ளன,. இவைகளும் மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களாகும்.

A.Savin

பிற சுற்றுலாத் தளங்கள்

பிற சுற்றுலாத் தளங்கள்

கோட்டைகளும், அரண்மனைகளும், பூங்கா, தோட்டம், ஏரிகள், நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் என பல சுற்றுலா அம்சங்களைக் கொண்டது இந்த இடம். நிச்சயம் ஒருமுறை சென்றுவாருங்கள்.

Heman kumar meena

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

சாலை வழியாக

அஜ்மீர் நகரம் தேசிய தங்கநாற்கர சாலை இணைப்பில் ஒரு தேசிய நெடுஞ்சாலை 8ன் பாதையில் டெல்லிக்கும் மும்பைக்கும் இடையில் அமைந்துள்ளது. இது தவிர ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நகரங்களான ஜெய்பூர், ஜோத்பூர், ஜெய்சல்மேர், உதய்பூர் மற்றும் பரத்பூர் போன்ற முக்கிய நகரங்களுடனும் மேலும் படிக்க

ரயில் வழியாக

அஜ்மீர் ரயில் சந்திப்பு ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதான ரயில் சந்திப்பாக அமைந்துள்ளது. எனவே அஜ்மீர் ரயில் நிலையத்துக்கு முக்கிய இந்திய நகரங்களிலிருந்து தினசரி ரயில் சேவைகள் உள்ளன. மேலும் படிக்க

விமானம் வழியாக

அஜ்மீர் நகரத்திலிருந்து 137 கி.மீ தூரத்தில் ஜெய்பூரிலுள்ள சங்கனேர் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து டாக்சிகள் மூலம் அஜ்மீர் நகரத்துக்கு வருகை தரலாம். இது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான போன்ற முக்கிய விமானத்தளங்களுக்கு தினசரி விமான சேவைகளைக்கொண்டுள்ளது. விமானங்கள் புக் செய்ய

எப்போது செல்லலாம்

எப்போது செல்லலாம்

அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட காலம் அஜ்மீர் நகரத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள உகந்த பருவமாக கருதப்படுகிறது. இக்காலத்தில் பருவநிலை குளுமையுடனும் ஈரப்பதம் இல்லாமலும் காணப்படுகிறது. மேலும், மழைக்காலத்தில் நகரம் பொலிவுடன் காட்சியளிப்பதால் மழைக்காலத்திலும் இங்கு பயணம் மேற்கொள்ளலாம். கடும் வெப்பம் தகிக்கும் கோடைக்காலத்தில் அஜ்மீருக்கு பயணம் செய்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்

தற்போதைய வானிலை அறிவிப்புகளுக்கு

Read more about: travel fort

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்