» »டில்லி- முக்தேஷ்வர் !- நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்!!

டில்லி- முக்தேஷ்வர் !- நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்!!

Written By: Balakarthik Balasubramanian

டில்லி- முக்தேஷ்வர் !- நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்!!

தில்லியிலிருந்து முக்தேஷ்வர் செல்ல நாம் கடக்க வேண்டியத் தூரம் 349 கிலோமீட்டர்கள் ஆகும். இந்த 349 கிலோமீட்டரை நாம் கடக்கத் தோராயமாக 9 மணி நேரம் ஆகிறது. பழங்கள் நிறைந்தத் தோட்டமும், ஊசியிலைக் காடுகளும் அதிகம் சூழ்ந்துள்ள ஒரு பகுதியே இந்த முக்தேஷ்வர் ஆகும். நாம் விடுமுறையினை உற்சாகமாகச் செலவழிக்க இடம் வேண்டிக் கண்களை மூடிக்கொண்டு கனவுக் காண்போமாயின், இந்த முக்தேஷ்வர் பகுதி நம் கண்களிற்குப் புலப்படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

முக்தேஷ்வர் ஒரு பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தளமாகும். இந்த இடம், உத்தரகாண்ட் நைனிடால் மாவட்டத்தின் கடல் மட்டத்திலிருந்து 2285 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. ஆம், நைனிடால் மாவட்டத்திலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அழகிய இடம் தான் இந்த முக்தேஷ்வர். இங்கே நகரத்தின் உச்சியில் 350 ஆண்டுகளுக்கும் பழமையான சிவ பெருமான் ஆலயம் ஒன்று உள்ளது. வயது ஆக ஆக, மனிதன் வேண்டுமென்றால் மனதினை விட்டு செல்லலாம். ஆனால், பல சிற்பிக்களின் கைவண்ணத்தால் உருவாக்கப்படும் பழம்பெருமை வாய்ந்த ஒரு இடம் ஒருபோதும் மனதினை விட்டு நீங்குவதில்லை என்பதற்கு இந்த ஆலயம் ஒரு நற்சான்று என்று பெருமையுடன் கூறலாம்.

இந்தக் கோயிலின் பிரசித்தி என்னவென்றால், சிவபெருமான் ஒரு அரக்கனைக் கொன்று அவனுக்கு முக்தித் தந்ததாக ஒருக் கதையும் உண்டு. முக்தேஷ்வர், இமயமலையின் அழகானப் பரந்து விரிந்தக் காட்சியினை நம் கண்களுக்குப் பரிசாகவும் அளிக்கிறது.

நாம் முன்புத் தெரிந்துக்கொண்டதுப் போல, முக்தேஷ்வரைச் சுற்றிலும் பழத்தோட்டமும், ஊசியிலைக் காடுகளும் நிறையக் காணப்படுகிறது. பொதுவாக சிம்லா (அ) மணலி போன்றப் பகுதிகளை, குளிரின் காரணமாக சுற்றுலா இடமாக ஏற்றுக்கொள்ள மறுத்து ஒரு சிலர் தவிர்ப்பது உண்டு. ஆனால், இந்த முக்தேஷ்வரின் வெப்ப நிலை என்றுமே மிதமானதாக இருக்க குளிர்பிரதேஷங்களைத் தவிர்க்கும் ஒருசிலருக்கும் இந்தப் பகுதியினை மிகவும் பிடித்துப் போகிறது.

டில்லி- முக்தேஷ்வர் !- நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்!!

ஆரம்பிக்கும் இடம்: தில்லி
இறுதியாக காணப்போவது: முக்தேஷ்வர்

இந்தப் பகுதியைப் பார்ப்பதற்கு ஏதுவான ஒரு கால நிலை: அக்டோபர் முதல் மார்ச் வரை.

தில்லியிலிருந்து முக்தேஷ்வருக்கு எப்படி செல்வது?

ஆகாய மார்க்கம்:

பாந்த்நகர் விமான நிலையம் முக்தேஷ்வரிலிருந்து 94 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மக்களின் வசதிக்கு ஏற்ப, இந்த விமான நிலையத்திலிருந்து முக்தேஷ்வருக்கு நான்கு சக்கர வாகனங்கள் (டாக்சி) வந்த வண்ணமாகவும், போன வண்ணமாகவும் எப்பொழுதும் இருந்துக்கொண்டே இருக்கிறது.

தண்டவாள மார்க்கம் (இரயில் போக்குவரத்து):
முக்தேஷ்வரிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காத்கோடம் இரயில் நிலையம். தில்லியிலிருந்து காத்கோடம் இரயில் நிலையத்திற்குத் தினமும் இரண்டு இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சாலை மார்க்கம்:
தில்லியிலிருந்து முக்தேஷ்வர் செல்ல இரண்டு வழிகள் உண்டு.

முதல் வழி:

தில்லி - காஸியாபாத் - மொரதாபாத் - ராம்பூர் - நைனிடால் - முக்தேஷ்வர்
குறிப்பு: தேசிய நெடுஞ்சாலை 9இன் வழியாக நாம் பயணித்தால் இந்த 347 கிலோமீட்டரைத் தோராயமாக 8 மணி நேரத்திற்குள் அடையலாம்.ம்.

இரண்டாம் வழி:

தில்லி - பரிதாபாத் - அலிகார் - பரேலி - ஹல்த்வானி - முக்தேஷ்வர். இந்த வழியை நாம் தேர்ந்தெடுத்து மாநில நெடுஞ்சாலை 33இன் வழியாக பயணித்தால், இந்த 475 கிலோமீட்டரைக் கடக்க, தோராயமாக 10 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகலாம்.

இரண்டாம் மார்க்கத்தினை விட முதலாம் மார்க்கம், நாம் அடைய நினைக்கும் இலக்கை குறைந்த நேரத்தில் அடைவதால், அந்த வழியினை நாம் பின்பற்றுவதே சாலச் சிறந்தது. ஆனாலும், இரண்டு மார்க்கத்தின் வாயிலாக நாம் பயணம் செய்வோமாயின் அதனால் கிடைக்கும் இன்பத் துன்பங்கள் இரண்டும் வேறு வேறு என்பதில் துளிக்கூட சந்தேகம் வேண்டாம்.

தில்லியிலிருந்துப் புறப்பட்டு நாம் செல்ல வேண்டிய ஒரு நேரம் அதிகாலை என்பதனை நம் மனதில் நன்றாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும். காரணம், போக்குவரத்து நெரிசல் தொல்லைகளை நாம் தவிர்க்க அதிகாலைப் பொழுதே உகந்த ஒரு பொழுது மேலும் காஸியாபாத்தினை விரைவாக நாம் அடைய அதிகாலைப் பொழுது நமக்கு வழிவகுத்தும் தருகிறது.

அதுமட்டுமல்லாமல் நாம் ஒரு இலக்கை நோக்கி செல்கிறோமென்றால், அந்த இடத்தில் மட்டும் தான் இன்ப உணர்வினை அடைய வேண்டுமென்பது கிடையாது. அந்த இலக்கினை அடையும் வழியில் நமக்குப் பற்பல இயற்கைப் பரிசுகள் காத்திருக்கிறது என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை. அதேபோல் தான் காஸியாபாத்தினை அடையும் நாம், துதேஷ்வர்னாத் மந்திர், துர்கா ஆலயம், சர்வதேச சமூக கிருஷ்ன பக்தி ஆலயம் (ISKON) முதலியவற்றை கண்டுக் களிக்கலாம்.

மொரதாபாத் ராம்கங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது. இதனை பிராஸ் சிட்டி என்றும் அழைப்பர். இங்கிருந்து நாம் பித்தளை அலங்காரச் சாமான்கள், குவளைகள், மரச்சாமான்கள் மற்றும் இதர அலங்காரப் பொருள்கள் அனைத்தினையும் வீட்டிற்க்காக வாங்கி செல்லலாம். இங்குள்ள மான் பூங்கா குழந்தைகளை எளிதில் கவரும் விதமாக அமைந்து இங்கு வரும் குழந்தைகளின் மனதினை ஆட்சி செய்கிறது. நீங்கள் குழந்தைகளுடன் உங்களுடைய சுற்றுலாவைக் களிக்க விரும்பும் ஒருவராயின் இந்த மான் பூங்காவைக் கண்டு மகிழ ஒருபோதும் மறந்துவிடாதிர்கள்.

நீங்கள் வன விலங்குகளின் வாழ்க்கையை வியப்புடன் பார்க்கும் ஒரு வன விலங்கு ஆர்வலரா! அப்படி என்றால் இங்கிருக்கும் ஜிம் கார்ப்பட் தேசியப் பூங்காவை காணத்தவறாதிர்கள். இந்தப் பூங்காவில் உங்கள் பொன்னான நேரத்தினை முதலீடு செய்தால் மகிழ்ச்சி என்னும் இலாபம் உங்களுக்குக் கிடைக்க மன நிறைவுடன் வீட்டிற்கு திரும்புவீர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

இந்த வனத்தின் பாதை சுற்றளவு மிகவும் நீண்ட நெடியதோர் பாதை என்பதனால் செல்வோர்க்கு கவனம் கண்டிப்பாகத் தேவை. இந்தக் கார்ப்பட் தேசியப் பூங்கா இந்தியாவின் மிகவும் பழமைவாய்ந்தத் தேசிய பூங்காக்களுள் ஒன்றாகும். இங்கு வங்காளப் புலிகள் அதிகம் காணப்படுவதால் வங்காளப் புலிகள் தேசிய பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இங்குக் காணப்படும் தாவரங்களும், விலங்குகளும் நம் மனதை நெகிழ செய்கிறது.

டில்லி- முக்தேஷ்வர் !- நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்!!

நீங்கள் சிறுத்தை, புலி, யானை மற்றும் பலக் கம்பீரமான விலங்குகளை பார்க்க ஆர்வம் உள்ளவரா!. அதற்கு விலங்குகளைப் பார்ப்பதற்க்கான ஒரு சவாரியினை இங்குப் பதிவு செய்வதன் மூலம் இந்தப் பூங்காவில் நீங்கள் பல விலங்குகளின் வாழ்க்கையையும், கர்ஜனைகளையும் கண்டு மகிழலாம். குழந்தைகளை முதுகில் ஏற்றிக்கொண்டு ஒய்யாரமாக நடைப்போடும் யானை சவாரியும் இங்கு உள்ளது. ஜீப் சவாரியின் மூலம் பல்வேறு வகையானப் பறவைகளை நாம் இங்குக் கண்டு மகிழலாம். ஆம், நம் மனம் கவலையில் இருக்கும்பொழுது அங்கும் இங்கும் அலைவது கிடையாது. ஆனால், இங்கிருக்கும் பறவைகளின் சிறகுகள் சுதந்திர உணர்வுடன் பறக்க, நாமும் கவலைகளை நொடிப் பொழுதில் மறந்துப் பறவைகளாகவே மாறி வானில் பறக்க ஆசைக்கொள்கிறோம்.

அந்தப் பறவைகளின் அழகை ரசிக்கும் நம் கண்கள் கவலைக்கொண்ட மனதிற்குக் கட்டளையிட, அது கவலையை மறந்து சந்தோஷத்தில் வானில் பறக்கத் தொடங்குகிறது. இந்த கார்ப்பட் தேசிய பூங்காவை உறைவிடமாகக் கொண்டுள்ளப் பறவைகள் மட்டும் அல்லாமல் காலத்திற்கேற்ப வெவ்வேறு இடங்களில் இருந்து பறந்து வரும் பறவைகளும் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைத்து மனதினை அதன் இறகுகளால் வருடுகிறது, சுமார் 650 வகையானப் பறவைகள் (நிரந்தர மற்றும் தற்காலிக உறைவிடம்) வருடாவருடம் இந்தப் பூங்காவில் சுற்றி திரிந்து நம்மையும் இன்பம் நோக்கிப் பயணிக்க வைக்கிறது.

இந்த ஒரு இடத்திலே இவ்வளவு இனிமையான உணர்வுகள் நமக்குக் கிடைக்கிறது என்றால் செல்லும் வழியில் இன்னும் என்னென்ன அதிசயமெல்லாம் நாம் காண இருக்கிறோமோ!, ஆம், அது உண்மை தான். முக்தேஷ்வருக்கு முன்பே நாம் அடுத்து செல்லப் போகும் ஒரு இடம் நைனிடால் நகரம். பேரிக்காய் பழத்தினை சுற்றும் முற்றும் கடித்து நாம் உண்ண எவ்வளவு ருசியாக இருக்குமோ, அதேபோல் தான் இங்கிருக்கும் நைனிடால் ஏரியும்.

ஆம், பேரிக்காய் வடிவத்தினை போன்று இருக்கும் இந்த ஏரியின் அமைப்பும் இந்த ஏரியினை சுற்றிக் காணப்படும் மலைகளும் நம் கண்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்து மனம் கரை ஏற இயலாமல் ஏரியையே சுற்றிக்கொண்டிருக்கிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள கேபிள் கார் பயணத்தின்போது பனிப்பாறைகளை நாம் உற்று நோக்குவதன் மூலம் நந்த தேவி குன்றுகள், சீனக் குன்றுகளை நாம் இங்கிருந்தபடியேக் கண்டு ரசிக்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல் மலைகளைப் பனி மூடிய காட்சியும் நம் கண்களைக் குளிரூட்டுகிறது.

டில்லி- முக்தேஷ்வர் !- நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்!!

அழகுக்குப் பின்னால் தான் ஆபத்தும் இருக்கும் என்பார்கள். ஆனால், ஆபத்தினைத் தவிர்த்து அழகால் மட்டுமே சூழ்ந்து இருக்கும் ஒருத் தோட்டம் தான் சூழல் குகைத் தோட்டம். நாம் நேரக்குறைவின் காரணமாக வேகமாக இயற்கையை ரசித்து நகர்ந்துவிடலாம் என்று நினைத்தாலும், "ஒரு நிமிடம் நில்லுப்பா!" என நம் குழந்தையே நமக்குக் கட்டளையிடக்கூடிய ஒரு கவர்ச்சி நிறைந்த இடம் தான் இந்த சூழல் குகைத் தோட்டம். காரணம் இதன் அமைப்புக் கோளம், பார்ப்பவர்களுக்குப் பல கேள்விகளை மனதில் உருவாக்கி அதற்கான ஆச்சரியமூட்டும் புதிர்க்கொண்ட பதிலையும் நம் கண்களுக்கு விருந்தாக்குகிறது.

இயற்கை, நாம் அனைவரும் தெரிந்துக்கொள்ளவேண்டிய மூடப்படாத ஒரு புத்தகம். இந்தப் புத்தகத்தின் பக்கங்கள் பின் இருக்கும் சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் காட்சிகள் நம் மனதைவிட்டு நீங்காமல் கடைசிவரை நம்முடனே இருந்து நம் வாழ்க்கையை அமைதியாக வழி நடத்தும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். நைனிடால் உயிரியல் பூங்கா, இங்கு மிகவும் அரிதானப் பனிச் சிறுத்தை, புல்வெளிக் கழுகு, இமாலயக் கரு நிறக்கரடி எனக் கண்கள் ஆச்சரியத்தின் எல்லைக்கே செல்லும் அளவிற்க்கான அரிதான உயிரினங்களை நாம் காண முடிகிறது.

கில்பர்ரி என்பதுப் பறவை ஆர்வலர்களின் சொர்க்கம் என்றழைக்கப்படுகிறது. நைனிடாலை நீங்கள் அடைந்துவிட்டால், அதன் பிறகு பசுமையானப் பச்சை பசேல் எனும் பள்ளத்தாக்கினையும், வண்ணம் நீங்கா அழகிய மரங்களையும், அந்த மரங்களில் பூத்துக்குழுங்கும் பூக்களில் இருந்து வெளிப்படும் மகரந்த வாசனையையும் நம் நாசி நுகர்ந்துக்கொண்டே மெய் மறந்து செல்ல, இறுதியாக முக்தேஷ்வரை நாம் அடைகிறோம்.

முக்தேஷ்வரில் நாம் காண வேண்டிய இடங்கள்:

முக்தேஷ்வர் ஆலயம்:

இந்த ஆலயம் 18 பிரசித்திப்பெற்ற சிவப்பெருமான் ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இந்த ஆலயத்தின் கட்டிடங்கள் பிரம்மாண்டமானதாக இல்லையென்றாலும், இந்தக் கட்டிடத்தின் குடில் போன்ற வடிவமைப்புகள் காண்போர் கண்களை கொள்ளைக்கொள்கிறது. இந்த ஆலயத்தின் உச்சியில் இருந்து நாம் கீழே உற்று நோக்க, பச்சை பசேல் எனக்காணப்படும் பள்ளத்தாக்குகள் அசையும் கண்களுக்கு ஓய்வுத்தந்து அதனையே தொடர்ந்து உற்று நோக்க வைக்கிறது.

டில்லி- முக்தேஷ்வர் !- நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்!!

சௌளி கண்ணி:

இதனை நான்காம் போலி என்றும் அழைப்பர். இது முக்தேஷ்வர் ஆலயத்தின் குன்றுகளின் பின்புறத்தில் 250 மீட்டர் தொலைவில் காணப்படுகிறது. "சௌளி" என்றால் பாறை என்று அர்த்தம். அதேபோல், "கண்ணி" என்றால் துளை என்று அர்த்தம். இங்கு சாம்பல் நிறப் பாறைகளில், பாசிப் படிந்தப் பச்சைக் குன்றுகள் காணப்படுகிறது. இந்த இடம் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்துக்கு மிகவும் பிரசித்திப்பெற்ற ஒன்றாகும். மேலும் மலை மேல் ஏறும் ஆர்வலர்களுக்கு இந்த இடம் ஒரு இனியதோர் மறக்கமுடியாதப் பயணமாகவும் அமைகிறது.

தானாச்சுலி:

இது முக்தேஷ்வருக்கு அருகில் காணப்படும் மற்றும் ஒரு மலைப்பகுதியாகும். இது இமய மலையின் இயற்கை அழகை குளிர்கால நிலைகளில் நமக்குத் தந்து நம் மனதினைப் பனிகளால் வருடுகிறது. இந்த மலைப்பகுதியை ரசிக்க ஏதுவான மாதங்கள் அக்டோபர் முதல் மார்ச் வரை ஆகும்.

IVRI: இந்தியக் கால்நடை ஆராய்ச்சிக் கழகம் என்பதன் சுறுக்கமே IVRI ஆகும். இது பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிறுவப்பட்ட ஒன்று. அதுமட்டுமல்லாமல் நேரடி பங்குச் சந்தையினைப் பற்றிய ஆராய்ச்சுக்கு தேவையான முன்னிலை வசதிகள் அனைத்தும் இந்தக் கழகத்தில் இருக்கிறது. மேலும், இந்த ஆராய்ச்சிக் கழகத்தின் உள்ளே அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கேப் பழங்கால ஆராய்ச்சியாளர்களின் பொக்கிஷங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆம், நோபல் பரிசினை வென்ற ராபர்ட் கோச்சின் நுண்ணோக்கிப் போன்ற பல சிறப்பம்சங்களும் இங்குப் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைப் பாதுகாத்தும் வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனத்தால் (TERI) புதி"புதுப்பிக்கத்தக்க பூஙவும் இங்கு உள்ளது.

Read more about: travel, temple