Search
  • Follow NativePlanet
Share
» »ரஜினியின் "ஆன்மீக அரசியலில்" அடுத்த அதிரடி பிளான் என்ன தெரியுமா?

ரஜினியின் "ஆன்மீக அரசியலில்" அடுத்த அதிரடி பிளான் என்ன தெரியுமா?

By Udhaya

நடிகர் ரஜினிகாந்த், கடந்த ஆண்டின் கடைசிநாள் திடீரென மேடையில் தோன்றி ரசிகர்களின் முன் தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அத்துடன் தானும் தான் சார்ந்த ரசிகர்களும் யாரையும் குறை சொல்லக்கூடாது, ஆன்மீக அரசியலில் ஈடுபடவேண்டும். தேர்தல் வரும்போது களத்தில் இறங்கலாம் என்பது போன்ற சில கொள்கைகளை (???) அறிவித்தார். இந்நிலையில் திடீரென்று அவசரமாக இமயமலை புறப்பட்டுச் சென்றார். அவரின் அடுத்தடுத்த ஆன்மீக அரசியல் பிளான்களை இப்போது காண்போம்.

இமயமலைப் பயணம்

இமயமலைப் பயணம்

கடந்த சனிக்கிழமை ரஜினிகாந்த் இமயமலைப் பயணம் சென்றார். அங்கிருந்து அவர் எங்கெல்லாம் செல்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆன்மீக அரசியல் என்றால் இதுதான்போல என்று சமூகவலைத்தளங்களில் இணைய வாசிகள் கிண்டலடித்துக்கொண்டிருக்கும்போதே நாம் ரஜினிகாந்த் எங்கெல்லாம் செல்கிறார் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

இமயமலை ரகசியங்கள்

இமயமலை ரகசியங்கள்

இமயமலையில் பல ரகசியங்கள் மறைந்திருப்பதாகவும், முழுமையான ஆன்மீகத்துக்குள் இறங்கினால் மட்டுமே அதை உணரமுடியும் என்றும் பலர் கூறி வருகின்றனர். அதிலும் இமயமலைப் பயணத்தின் போது எதிர்கொள்ளவேண்டிய இன்னல்களை சமாளித்துச் செல்வது ஒரு சாதாரணமனிதனுக்கு சாத்தியமில்லை எனவும், இறைவனின் அருள் பெற்றுள்ளவர்கள் மட்டுமே செல்லமுடியும் எனவும் நம்பிக்கை நிலவுகிறது.

மகாஞானி பாபாஜி குகை:

மகாஞானி பாபாஜி குகை:

சூப்பர் ஸ்டார் ரஜினி தன் ஆன்மீக குருவாக ஏற்றிருக்கும் மஹாவதார் பாபாஜியின் குகை உத்தரகண்ட் மாநிலத்தில் இமாலய மலையில் உள்ள துரோணகிரி என்னும் மலையில் அமைந்திருக்கிறது. இங்கு சென்றுதான் பலர் தியானம் செய்து வருகின்றனர். இங்கு செல்லும்போதே மனதில் ஒரு வித அமைதியும் நிம்மதியும் குடிகொள்ளுமாம்.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

உங்கள் பகுதியிலிருந்து விமானத்திலோ அல்லது ரயிலிலோ தலைநகர் டெல்லி சென்றுவிடுங்கள். அங்கிருந்து இரவு நேரத்தில் கிடைக்கும் பழைய டெல்லி - காத்கோடம் ரயிலில் ஏறி பயணியுங்கள். காத்கோடத்திலிருந்து உங்களுக்கு ராணிகேட் செல்ல பேருந்து அல்லது கட்டண மகிழுந்து டாக்ஸி வசதிகள் உள்ளன.

 மகாஞானி பாபாஜி குகை:

மகாஞானி பாபாஜி குகை:

இந்த துரோணகிரி மலையில் குகுசினா என்ற இடத்தில் அமைந்திருக்கிறது பாபாஜியின் குகை. ஒரு நேரத்தில் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே இதனுள் தியானத்தில் ஈடுபட முடியும். பாபாஜியின் குகையில் தியானம் செய்யும் அறிய வாய்ப்பை அனுபவிப்பதற்கு முன்பாக சென்னையில் இருந்து ஹிமாலய மலையில் இருக்கும் பாபாஜியின் இடத்தை எப்படி அடைவது என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இந்த பாதையில் செல்லலாம்

இந்த பாதையில் செல்லலாம்

நீங்கள் டெல்லியிலிருந்து ரிஷிகேஷ் வழியாக பாபா குகைக்கு செல்லவதாக இருந்தால் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதை கணக்கில் கொள்ளுங்கள். நெரிசல் குறைவாக விரைவாக செல்ல டெல்லியிலிருந்து மீரட் வரை வந்து அங்கிருந்து மாற்றுபாதையில் தாருக்கேஸ்வரை அடையுங்கள். அதன்பின் சிறிதளவு நெரிசல் நேர்ந்தாலும் காலநிலைகள்(சீசன்) பொறுத்து விரைவில் சென்றுவிடலாம்

குகுசினா

குகுசினா

இமயமலையில் இயற்கை எழில் ததும்பும் துரோணகிரி மலையில் அமைந்திருக்கிறது குகுசினா என்ற சிறிய கிராமம். அமைதி ததும்பும் இந்த கிராமத்தில் இருந்து குறுகலான பாதையில் கொஞ்ச தூரம் டிரெக்கிங் செய்தால் நாம் பாபாஜியின் குகையை அடையலாம்.

gautamnguitar

மாசில்லாத தூய்மை

மாசில்லாத தூய்மை

இந்த குகையில் தியானம் செய்கையில் வர்ணிக்க முடியாத பேரானந்தம் நமக்குள் பெருகுவதை காணலாம். மாசில்லாத தூய்மையான காற்றை சுவாசித்தபடி, ஷக்தி அலைகள் நிரம்பிய குகையில் தியானம் செய்வது உடலுக்கும் மனதுக்கும் பெரும் புத்துணர்வை அளிக்கும்.

shayargautam

 ரிஷிகேஸ்

ரிஷிகேஸ்

ரஜினிகாந்தின் அடுத்த பிளான் இதுதானாம். டெஹ்ராடூனில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற புண்ணியஸ்தலமான ரிஷிகேஷ், தேவபூமி என்றும் அழைக்கப்படுகிறது. கங்கை ஆற்றின் கரையில் இருக்கும் ரிஷிகேஷ் இந்துக்களுக்கு மிக முக்கியமான இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் இமயமலையைக் காண்பதற்கும், கங்கையில் நீராடுவதற்காகவும், இங்கிருக்கும் மத தலங்களைப் பார்வையிடுவதற்காகவும் இங்கு குவிகிறார்கள். இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ரிஷிகேஷ் ஏராளமான இந்துக் கடவுள்களின் பிரகாரமாகத் திகழ்கிறது. இங்கிருக்கும் ஆசிரமங்களுக்காகவும், பழமைவாய்ந்த கோவில்களுக்காகவும் பல்தூரப் புகழ் பெற்று விளங்குகிறது ரிஷிகேஷ்.

meg and rahul

 குஞ்சாபுரி கோயில்

குஞ்சாபுரி கோயில்

சிவாலிக் மலைகளின் பதிமூன்று முக்கிய கடவுள்களுள் ஒன்றான சதி அம்மனுக்காக இங்கு குஞ்சாபுரி என்ற கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது.. பங்கஜா மற்றும் மதுமதி ஆகிய நதிகள் சந்திக்கும் இடத்தில் நீல்கந்த் மஹாதேவ் கோவில் உள்ளது. இக்கோவிலைச் சுற்றி விஷ்ணுகூத், மணிகூத், பிரம்மகூத் ஆகிய குன்றுகள் அமைந்திருக்கின்றன். இந்துக்களின் முக்கியப் பண்டிகையான சிவராத்ரியின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். திரிவேணி மலைக்கு அருகில் அமைந்திருக்கும் ரிஷிகுண்ட் சுற்றுலாப்பயணிகள் தவறவிடக் கூடாத முக்கிய தளமாகும்..

Amit.pratap1988

ரகுநாத் கோவில்

ரகுநாத் கோவில்

குப்ஸ் என்ற சந்நியாசிக்கு யமுனை நதி பரிசாக அளித்த நீரால் இந்த குளம் நிரப்பப்பட்டதாக நம்பப்படுகிறது. பழபெரும் ரகுநாத் கோவிலின் பிம்பத்தை பக்தர்கள் இக்குளத்தின் நீரில் காணலாம். இங்கிருக்கும் தியான மண்டபத்துடனான வஷிஷ்டர் குகை மற்றொரு முக்கியமான இடமாகும். சாகசப் பிரியர்களுக்கு பிடித்தமான வகையில் இது தங்குமிடமாகவும் திகழ்கிறது. குகைக்கு அருகில் முக்கியமான தியான ஸ்தலமான ஸ்வாமி புருஷோத்தமானந்தா அவர்களின் ஆசிரமம் அமைந்திருக்கிறது. இதுமட்டுமல்லாது ஸ்ரீபாபா விஷுதா நந்தாஜி அவர்களால் உருவாக்கப்பட்ட காளி காம்ளிவாலெ பஞ்சாயத்தி ஷேத்ரா என்ற புகழ்பெற்ற ஆசிரமம் இங்கு உள்ளது.

Amit.pratap1988

 கார்வால் இமாலயப் பாதை

கார்வால் இமாலயப் பாதை

மலைகளுக்கு நடுவே இருப்பதால் மலையேற்றத்துக்கு ஏதுவான இடமாக திகழ்கிறது. கார்வால் இமாலயப் பாதை, புவானி நீர்குத், ரூப்குந்த், கெளரி பாதை, காலிந்து கால் மலைப்பாதை, கன்குல் கால் மலைப்பாதை மற்றும் தேவி தேசியப் பூங்கா ஆகியவை இங்கு அமைந்திருக்கும் புகழ்பெற்ற மலையேற்றப் பாதைகளாகும். மலையேற்றத்துக்கு தகுந்த மாதங்களாக ஃபிப்வரி முதல் அக்டோபர் வரை கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாது இவ்விடத்தில் படகு சவாரி என்ற சாகச விளையாட்டும் புகழ்பெற்று விளங்குகிறது. அனுபவமிக்கவர்களின் துணையோடு இவ்விளையாட்டை பயணிகள் மேற்கொண்டு மகிழலாம். ரிஷிகேஷ் செல்லும் வழியில், கயிற்றில் நடந்து நதியைக் கடக்கும் 'நதி தாண்டுதல்' என்ற மற்றொரு சாகச விளையாட்டிலும் பயணிகள் ஈடுபடலாம்.

Amit.pratap1988

 தர்மசாலா

தர்மசாலா

ரிஷிகேஸிலிருந்து தர்மசாலா 452கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தின் அழகின் அழகாக விளங்கும் தர்மஷாலா மனதை மயக்கும் ஒரு மலை வாசஸ்தலமாகும். இப்படி ஒரு அழகான இடத்தைப் பற்றி இங்கு படிப்பவர்கள், இதை படித்தவுடன் இன்றே இவ்விடத்தைக் காணக் கிளம்பிவிடுவர். மனதை சொக்க வைக்கும் பல அழகிய இடங்களைக் கொண்ட இவ்விடத்தைக் காண கண் கோடி வேண்டும். பிறந்த பயனை அனுபவிக்க மனிதர்களாகிய நாம் ஒருமுறையாவது இங்கு சென்று வர வேண்டும். சுற்றுலா செல்ல விருப்பமுடைய அனைவருமே காண வேண்டிய இடமான இவ்விடத்தைப் பற்றி பல அரிய மற்றும் சிறந்த தகவல்களை நாம் இங்கு காணலாம்.

Sonium

 அழகு

அழகு

காங்க்ராவின் வடகிழக்கே 27 km தொலைவில் உள்ளது தர்மஷாலா. இமாச்சல பிரதேசத்தின் குறிப்பிடத்தக்க மலை வாசஸ்தலமாக விளங்கும் இத்தலம், சண்டிகரிலிருந்து 251 km தொலைவிலும், மணாலியிலிருந்து 243 km தொலைவிலும், சிம்லாவிலிருந்து 247 km தொலைவிலும், புதுதில்லியிலிருந்து 496 km தொலைவிலும் உள்ளது. காங்க்ரா பள்ளத்தாக்கின் நுழைவு வழியாக கருதப்படும் இந்த இடம், எங்கு பார்த்தாலும் வியப்பை ஏற்படுத்தும் அழகைக் கொண்டுள்ளது. தௌலதர் மலைத்தொடர்கள் இதன் பின்னணியிலிருந்து இதன் கண்ணுக்கினிய அழகை மேலும் அதிகப் படுத்துகிறது. என் மனம் இங்கு பிரமிப்பில் உறைந்து நிற்கிறது. அடடா, என்ன அழகு. சொல்ல வார்த்தைகளே இல்லை.

Unknkown

காங்க்ரா பள்ளத்தாக்கு

காங்க்ரா பள்ளத்தாக்கு

மெக்லியோட்கஞ்ச் மற்றும் ஃபார்சித்கஞ்ச் போன்ற பகுதிகள் பிரிட்டிஷ் புறநகரின் பிரதிநிதித்துவத்தை காட்டுகிறது. தர்மஷாலாவின் பெரும்பான்மை பகுதிகள் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இருப்பதோடு, இக்காடுகளில் நீங்கள் ஓக் மற்றும் ஊசியிலை மரங்களைக் காணலாம். மூன்று பக்கங்களிலும் தௌலதர் மலைத் தொடர்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இங்கிருந்து காங்க்ரா பள்ளத்தாக்கின் மனதை மயக்கும் காட்சிகளைக் நாம் காணலாம். மேலும் இங்கு இவ்விடத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தின் தடயங்களை இங்குள்ள காங்க்ரா அருங்காட்சியகத்தில் காணலாம்.

sanyam sharma

லிட்டில் லாசா

லிட்டில் லாசா

அரியவகை சிற்பங்கள், ஓவியங்கள், நாணயங்கள், மண்பாண்டங்கள், ஆபரணங்கள், சுவடிகள், அரசருக்குரிய ஆடை மற்றும் ஆபரணங்கள் போன்றவற்றோடு விலைமதிப்பற்ற ஐந்தாம் நூற்றாண்டின் கலைப் பொருட்களையும் இங்கு காணலாம். சர்வதேச அளவில் அறியப்பட்டுள்ள தர்மஷாலா "இந்தியாவின் லிட்டில் லாசா" என்று மதிப்புடன் அழைக்கப்படுகிறது. தலாய் லாமா 1960 ஆம் ஆண்டு தன்னுடைய வனவாசத்தின் போது இந்த அழகிய இடத்தை தனது தற்காலிக உறைவிடமாக ஏற்படுத்திக் கொண்டார். பரந்த திபெத்திய குடியேற்றங்கள் காரணமாக இவ்விடம் தற்போது 'லாமாக்களின் பூமி' என்றழைக்கப்படுகிறது.

Alok Kumar

 பல்லுயிர்த்தன்மை

பல்லுயிர்த்தன்மை

தேயிலைத் தோட்டங்கள், பைன் காடுகள் மற்றும் தேவதாரு மரங்கள் இவ்விடத்திற்கு கூடுதல் ஈர்ப்பைச் சேர்க்கிறது. தர்மஷாலாவிற்கு மிக அருகில் 15 km தொலைவில் அமைந்துள்ள விமான தளமாக கக்கல் விமான நிலையம்உள்ளது. இது காங்க்ரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் உள்நாட்டு விமானங்கள் மூலம் புதுதில்லியை இணைக்கிறது. அதனால் வெளிநாடுவாழ் மக்கள் புதுதில்லி வந்து, அங்கிருந்து இவ்விடத்திற்கு வரலாம். தர்மஷாலாவிலிருந்து மிக அருகில் உள்ள ரயில் நிலையமாக, 22 km தொலைவில் உள்ள கங்கிரா மந்திர் உள்ளது.

Shailenguleria3

ஷிம்லா

ஷிம்லா

இமாலய பறவைகளின் சரணாலயம் இமாச்சலப்பிரதேசத்தின் மாநில பறவையாக அங்கீகரிக்கப்பட்ட மோனல் உட்பட பலவகையான பறவை இனங்களைப்பார்த்து மகிழும் வாய்ப்பை வழங்குகிறது. சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் கிளென், ரிட்ஜிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது கவர்ச்சி மிகுந்த நீரோடைகளையும் பசுமையையும் கொண்டுள்ள இடமாகும். சுற்றுலா பயணிகள் அண்ணன்டேலுக்கும் உல்லாச பயணம் மேற்கொள்ள முடியும். பிரிட்டிஷ் ஆட்சியின் போது, ஓட்டப்பந்தயம், போலோ மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் இந்த திறந்த வெளியில் நடத்தப்பட்டது.

Akkida

 பொம்மை ரயில்

பொம்மை ரயில்

வரலாற்றுச்சிறப்பு மிக்க பொம்மை ரயில் (Toy Train) கர்சன் பிரபுவினால் 1903 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த 96 கிலோ மீட்டர் நீளமுள்ள பயணம் அழகான பள்ளத்தாக்குகளையும் மலைகளையும் கடந்து செல்லும் வாய்ப்பை வழங்குகிறது. சோலன் ப்ரேவரி, தர்லாகாட், ஸ்காண்டல் பாயிண்ட், காம்னா தேவி கோவில், ஜக்கு ஹில் மற்றும் குர்க்கா கேட் ஆகியன பிரபல சுற்றுலா ஈர்ப்புத்தலங்களாகும். பஹாரி குறுஞ்சித்திரங்கள், முகலாய, ராஜஸ்தானிய மற்றும் சமகால ஒவியங்கள், ஹிமாச்சல அரசு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Unknkown

கலைகள் சாகசங்கள்

கலைகள் சாகசங்கள்

பல்வேறு கலைநயம் மிக்க வெண்கல வேலைப்பாடுகள், புகைப்படங்கள், சேகரிக்கப்பட்ட தபால் தலைகள், மானுடவியல்சார் பொருட்களை இங்கு காணலாம். பார்வையாளர்களுக்கு பொருட்கள் வாங்க சிம்லா பிரத்தியேக வணிக வாய்ப்பை வழங்குகிறது. தி மால், லோயர் மால் மற்றும் லக்கார் பஜார் போன்ற வணிக வளாகங்கள் தனிப்பட்ட மர கைவினைப்பொருட்கள் மற்றும் நினைவுப்பொருட்களுக்கு பிரசித்தி பெற்றது. புகழ்பெற்ற பனிச்சறுக்குக்களமாக சிம்லா விளங்குகிறது. குளிர்காலத்தில் இந்த இடம் முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும்

Betelgeuse

Read more about: travel temple himalayas
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more