Search
  • Follow NativePlanet
Share
» »வெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை! 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்!

வெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை! 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்!

வரலாற்று சிறப்பு மிக்க ரயில் பாதைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது செங்கோட்டை- கொல்லம் ரயில் பாதை. 1873-ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்ட செங்கோட்டை- கொல்லம் ரயில் பாதை பணிகள் 27 ஆண்டுகள் நடைபெற்றது. இப்பாதையை அமைத்திட தென்னிந்திய ரயில்வே கம்பெனி ரூபாய் 17 லட்ச ரூபாயும், திருவாங்கூர் நிர்வாகம் ரூபாய் 7 லட்ச ரூபாயும், அப்போதைய திருவாங்கூர் திவான் ராமய்யர் ரூபாய் 6 லட்சம் ஆக ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகள் தொடங்கப்பட்டு 1901-ம் ஆண்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு 1902 ஆம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை தென்காசி - கொல்லம் இடையேயான இந்த ரயில் தடம் கண்ட வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூறும் வகையில் ஒரு பயணம் செல்வோம் வாங்க.

முதல் பயணிகள் ரயில்

முதல் பயணிகள் ரயில்

தென்காசி - கொல்லம் இடையேயான இந்த ரயில் வழித்தடத்தில் முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து 1904-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொல்லம் ரயில் நிலையத்தில் வைத்து 21 குண்டுகள் முழங்கிட ரயில் நிலைய மேலாளர் ராமைய்யா, முதல் பயணிகள் ரயிலை கொல்லத்தில் இருந்து செங்கோட்டைக்கு கொடியசைத்து துவங்கி வைத்தார்.

Arunvrparavur

சூப்பர் கூட்டமைப்பு

சூப்பர் கூட்டமைப்பு

நாட்டிலேயே தனியார் - அரசு கூட்மைப்பில் உருவான ரயில் வழித்தடம் இதுதான். பாதை அமைப்பதில் எழுந்த பிரச்சனைகள் பல. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பணிசெய்தவர்கள் மிருகங்களால் தாக்கபட்டனர். திட்டமிட்டபடி சிறிய மலைகளை குடைந்து குகைகள் அமைப்பது எளிதாக இல்லை. அந்த மலைக்குகைகளின் பக்கவாட்டு சுவர்கள் சரிந்து பாதையை மூடிவிடும் அபாயமிருந்தது. 4 மலைக்குகைகள், 5 பெரிய பாலங்கள், 120 சின்ன சின்னப்பாலங்கள் என்று பயணிக்கும் இந்த ரயில் பாதையின் இரு பக்கமும் பரவிக்கிடக்கும் பசுமைக்காடு. பகவதிபுரம்- ஆரியங்காவு என்ற இரண்டு ஸ்டேஷ்ன்களுக்கிடையே ஒரு கிலோமிட்டருக்கு நீண்ட குகைப்பாதை என திகிலூட்டும் வழித்தடமாக இது இருந்தது.

Balablitz

மண்ணில் புதைந்த சூரன்

மண்ணில் புதைந்த சூரன்

அந்த ரயிலின் பெயர் தூம சகடசூரன் ஆகும். சில மாதங்கள் இப்பாதையில் சென்ற ரயில் தென்மலை- கழுதுருட்டி இடையே உள்ள ஒரு குகையில் மண் சரிவு ஏற்பட்டு அப்படியே பல பயணிகளோடு மண்ணோடு மண்ணாகி புதைந்து போனது.

Bot

13 கண்கொண்ட பாலம்

13 கண்கொண்ட பாலம்

அதன்பின் அருகிலேயே 13 கண் கொண்ட மிகவும் பிரமண்டமான ஒரு பாலத்தை கட்டினர். அப்பாலம் வழியே ரயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இரும்பு கர்டர்களை உபயோகிக்காமல் கட்டபட்ட இந்தப் பாலம் அன்றைக்கிருந்த தொழில்நுட்பங்களில் மிகப்பெரிய சவாலாகும். பாலம் முடிந்தவுடன் தண்ட வாளங்களை பதிக்க ஆரம்பித்துவிட்டனர். இரண்டே ஆண்டுகளில் செங்கோட்டை வரை ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்துவிட்டது.

Sktm14

பகவதிபுரம் - ஆரியங்காவு

பகவதிபுரம் - ஆரியங்காவு

இப்பாதையில் பகவதிபுரம் முதல் ஆரியங்காவு இடையே 1 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு மலை குகையும், கழுதுருட்டி- தென்மலை- இடமண் இடையே 4 மலைக்குகைகளும், 5 பெரிய பாலங்களும், 120-க்கும் மேற்பட்ட சிறிய பாலங்களும் உள்ளன.

இரு மாநில எல்லைப் பகுதி

இரு மாநில எல்லைப் பகுதி

உயர்ந்த மலைப்பகுதியின் கீழ் புறத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 700 அடி உயரத்திலும் ரயில் செல்லத் தொடங்குகிறது. எஸ் வளைவு என்ற பகுதி இரு மாநில எல்லை பகுதியாகும். இங்கு கீழே பேருந்தும், மேலே ரயிலும் செல்ல தொடங்கும் பாதை. இதிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சென்றல் அடர்ந்த பாறைகளை உடைத்து உருவாக்கப்பட்ட ரயில் பாதை தொடங்குகிறது.

ஆயிரம் பேரைக் காவு வாங்கிய குகை

ஆயிரம் பேரைக் காவு வாங்கிய குகை

இதற்கு அடுத்தற்போல் ஆயிரம் பேரை காவு வாங்கியதாக இன்றும் செவிவழிக் கதையாக கூறப்படும் சம்பவங்களும் உண்டு. 1901 ஆம் ஆண்டு அடர்ந்த 500 அடி உயரம் கொண்ட மலையில் சுமார் 15 அடி உயரமும், 15 அடி அகலமும், கொண்ட 900 மீட்டர் நீளம் கொண்ட முதல் மலைக்குகை குடையப்பட்டுள்ளது.

திகில் கலந்த பயணம்

திகில் கலந்த பயணம்

இந்த மலைக் குகையினுள் ரயில் செல்ல தொடங்கும் போது கொடும் இருட்டில் செல்வது போன்ற உணர்வும், ஒரு திகில் கலந்த விவரிக்க முடியாத உணர்வும் ஒரு சேர ஏற்படுவது வழக்கம். இருப்பினும் இக்குகையின் உறையவைக்கும் குளிர்ச்சி பயத்தால் வெளியேறும் வியர்வையை தடுத்துவிடும் என்தான் கூற வேண்டும்.

Bot

பிரம்மாண்டத்தின் உச்சம்

பிரம்மாண்டத்தின் உச்சம்

சுமார் 300 அடி முதல் 500 அடி நீளமுள்ள ஒரு சிறு மலைக்குகைகளை ரயில் கடக்கும்போது இடப்புறம் திரும்பி பார்த்தால் ஆங்கிலேயரின் பிரம்மாண்டமான செயல்திட்டமும், இருமாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பும், தியாகமும் வரலாற்றை பறை சாட்டுவது தெரியும். மேலும், எவ்விதமான தொடர்பும் இல்லாத அக்காலகட்டத்தில் தரை மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் பாதை அமைத்த திறமை நம் தொழிலாளர்களையே சேரும்.

Rakesh S

பாயும் நதியின் மேல் பாலம்

பாயும் நதியின் மேல் பாலம்

இதனை தாண்டும்போது அழகாய் ஓடி கேரளத்தை நோக்கி பாயும் நதியைக் காண முடியும். அதனை ஒட்டி சாலை, அதையடுத்து தரை மட்டத்தில் இருந்து சுமார் 80 அடி உயரத்தில் 13 வாயிற்கொண்ட கற்களால் கட்டப்பட்ட இராட்சத பாலம் நம்மை வரவேற்கும். இதில் ரயில் ஊர்ந்து செல்லும்போது திக் திக் என்ற மனநிலை நிச்சயம் தோன்றும்.

வெள்ளிக் காசுகளால் அமைந்த பாதை

வெள்ளிக் காசுகளால் அமைந்த பாதை

தென்காசி - கொல்லம் ரயில் பாதை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட பின் வனப்பகுதியை சுத்தம் செய்ய ஆட்கள் இன்றி தவித்த ஆங்கிலேயர்கள் அப்பகுதிகளில் வெள்ளி காசுகளை அள்ளி வீசியுள்ளனர். அந்த தகவலையும் மக்களிடம் பரப்பியுள்ளனர். காட்டுத்தீயாக பரவிய இத்தகவலைத் தொடர்ந்து மக்கள் காடுகளை சுத்தம் செய்து காசுகளை பொறுக்கியுள்ளனர். இப்படிதான் இந்த பாதை உருவானதாக வரலாறுகள் கூறப்படுகிறது.

சுற்றுலாத் தலமான பாதை

சுற்றுலாத் தலமான பாதை

சுமார் 50.5 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த தடத்தில் 2013-ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் ரயில் போக்குவரத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால், குறிப்பிட்ட ஆண்டைக் கடந்து சுமார் எட்டு வருடங்கள் அந்த ரயில் இயக்கப்படாமல் நடப்பாண்டில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு அகல ரயில் பாதை போக்குவரத்துக்கு துவங்கப்பட்டுள்ளது. தேவையிருந்தோ, இன்றியோ தென்காசி - கொல்லம் ரயில் வழித்தடம் ஓர் சுற்றுலாத் தலமாகவே மாறியது. இன்றும் இந்த ரயில் செல்லும பாதையை ரசித்திட பயணிகள் அதிகளவில் பயணிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். நாமும் ஒரு முறை பயணிப்போம். அப்படி அந்த ரயிலிலும், அது செல்லும் பாதையிலும் உள்ள பசுமையையும், பிரம்மாண்டத்தையும் ரசித்திடுவோம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X