» »பெண்ணிடம் பால் திருடிக் குடித்த முருகன்... இரத்தவெள்ளமாக மாறிய கம்மாய்க் கரை...

பெண்ணிடம் பால் திருடிக் குடித்த முருகன்... இரத்தவெள்ளமாக மாறிய கம்மாய்க் கரை...

Written By: Sabarish

நம்மில் பெரும்பாலானோருக்கு முருகன் என்றாலே தனிப் பக்தியும், தமிழ்க்கடவுள் என்றோர் பெருமையும் இருக்கும். பிற கடவுள்களை வழிபடும் சைவ மதத்தினர் கூட அதிகமாக முருகன் மீத பற்றுவைத்திருப்பர். ஏறத்தாழ மலைகளின் மீதே குடிகொண்டிருக்கும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை, குறத்திப் பெண்ணான வள்ளி ஆகிய இரு மனைவிகள் இருப்பது நாம் அறிந்ததே.

21600 தங்க ஏடுகள்! 72000 ஆணிகள்! மறைந்துள்ள மகா ரகசியங்கள்!

இதையெல்லாம் கடந்து இங்கே ஓர் ஊரில் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு பாலைத் திருடிக் குடித்த முருகன் சன்னதி இருப்பது உங்களுக்கு தெரியுமா ? வாங்க, அப்படி என்னதான் அந்த ஊருல இருக்குதுன்னு பார்க்கலாம்.

வீரக்குடி முருகய்யனார் கோவில்

வீரக்குடி முருகய்யனார் கோவில்


விருதுகர் மாவட்டம், நரிக்குடிக்கு அருகே உள்ள வீரக்குடியில் அமைந்துள்ளது முருகய்யனார் கோவில். இக்கோவிலின் மூலவராக வள்ளி தெய்வானை உடன் முருகைய்யா அருள்பாளிக்கிறார். கண்மாய்க் கரையில் இக்கோவில் அமைந்ததால் கரைமேல் முருகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

Michael Coghlan

தலசிறப்பு

தலசிறப்பு


விரத்திடல் என்றழைக்கப்படும் கோவில் உள்ள கண்மாய் கரைப் பகுதி முழுக்க மற்றபகுதிகளைக் காட்டிலும் மண் அதிக சிறப்பு நிறமாக இருக்கும். முருகனின் மனைவியான வள்ளியிடம் இருந்து வெளியேறிய இரத்தமே இப்பகுதி சிறப்பு நிறமாக காட்சியளிக்க காரணம் என்றும் கூறப்படுகிறது.

Marvelmurugan

புராணக் கதை

புராணக் கதை


வீரக்குடியிலிருந்து பெண் ஒருவர் பாலினை வியாபாரத்திற்கு எடுத்துச் செல்வது வழக்கம். ஒருநாள் கண்மாய்க் கரை வழியாக அந்தப் பெண் செல்லும் போது வள்ளிக் கொடியில் கால்பட்டு பால் சிந்தியது. இது அன்றாடம் தொடர்ந்து நிகழ்ந்தது. அதனால் கோபமடைந்த பெண் ஒரு கோடரியால் அந்தக் கொடியை வெட்டியுள்ளார். அப்போது அதில் இருந்து இரத்தம் வெளியேற அதிர்ந்துபோன ஊர் பொதுமக்கள் பொடி இருந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது அங்கு முருகன் சிலை கிடைத்தது. அதக்பின்பே அப்பகுதியில் கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

Prateek Pattanaik

திருவிழா

திருவிழா


வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, ஆடிவெள்ளி, பங்குனி, கார்த்திகை உள்ளிட்ட தினங்களில் சிறப்பு திருவிழா நடத்தப்படுகிறது. குறிப்பாக, மகாசிவராத்திரி அன்று வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இக்கோவிலுக்கு படையெடுத்து வருவர். பக்தர்களுக்கெனவே, சிறப்புப் பேருந்துகளும் திருவிழாக் காலத்தில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Thamizhpparithi Maari

கோவில் அமைப்பு

கோவில் அமைப்பு


ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுர வாசலைக் கடந்ததும் வசந்த மண்டபம், பிரகாரச் சுவற்றில் சங்கிலி கருப்பசாமி, பத்திர காளியம்மன், பெரிய கருப்பு, இருளப்ப சுவாமி, ராக்காச்சி அம்மன் , இருளாச்சி அம்மன், அரசமர விநாயகர் சன்னதிகள் அமைந்துள்ளன.
கோவில் வாயிலுக்கு நேர் எதிரே மயில் வாகன மண்டபமும், அருகே நொண்டி சோணை, அரிய சுவாமி சன்னதிகள் அமைந்துள்து. மயில் வாகனத்தின் இருபுறமும் நந்தீசரும், யானையும் அமைந்துள்ளன.

Vanmeega

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


ஒரே கோவில் தலத்தில் மேற்குறிப்பிட்டவாறு பல்வேறு கடவுள்கள் குடிகொண்டுள்ளதால் சகல தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். நாக தோஷம், நிலம் வாங்குவதில் தாமதம் உள்ளிட்ட பிரச்சனைகளில் வேண்டுதல் நிறைவேறியப்பின் மூலவருக்கு அபிஷேக பூஜை செய்யப்படுகிறது.

Pachaimalai murugan

நடைதிறப்பு

நடைதிறப்பு


வீரத்திடல் கரைமேல் முருகையன்னார் கோவில் நடை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையுலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

SabariStalin

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து சுமார் 556 கிலோ மீட்டர் தொலைவில் சிவகங்கை, மானாமதுரை அடுத்து அமைந்துள்ளது வீரக்குடி முருகன் கோவில். ராமேஷ்வரம் எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ், சென்னை மெயில், வாரனாசி ஜங்சன், புவனேஸ்வர் ராமேஷ்வரம் என்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகள் சென்னை எக்மோர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மானாமதுரை வரை உள்ளது. அங்கிருந்து அரசகுளம் வழியாக 31 கிலோ மீட்டர் பயணித்தால் கோவிலை அடைந்துவிடலாம். இதற்கு ஏராளமான பேருந்து வசதிகளும் உள்ளது.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்