Search
  • Follow NativePlanet
Share
» »வடகிழக்கு மாநிலங்களும் அவர்களின் அதிர்ச்சியான பழக்கவழக்கங்களும்

வடகிழக்கு மாநிலங்களும் அவர்களின் அதிர்ச்சியான பழக்கவழக்கங்களும்

By Udhaya

இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் வெகுதூரத்தே வீற்றிருக்கும் மலைப்பிரதேசங்கள். விவசாயத்தை தொழிலாக கொண்ட எளிமையான அமைதியான மக்கள் வசிக்கும் இம்மாநிலத்தில் பிரமிக்க வைக்கும் மலை எழிற்காட்சிகள், மயங்க வைக்கும் பூர்வகுடியினரின் பாரம்பரிய கலாச்சாரம் என்று ஏராளம் பார்த்து ரசிக்கவும் அனுபவிக்கவும் காத்திருக்கின்றன. முற்றிலும் மாறுபட்ட இந்த மண்ணிற்கு ஒரு முறை பயணம் செய்தீர்கள் என்றால் காலம் முழுக்க மறக்க முடியாத அளவுக்கு பரவசமூட்டும் நினைவுகளை உங்களுடன் கொண்டு செல்வீர்கள். உண்மையில் இயற்கையை வர்ணிக்க மனித மொழிக்கு சக்தியே இல்லை என்பதை வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

ஒரிசா Vs வடகிழக்கு மாநிலங்கள்

ஒரிசா Vs வடகிழக்கு மாநிலங்கள்

எட்டு வடகிழக்கு மாநில மக்களின் எண்ணிக்கை ஒரிசா மாநிலத்தின் மக்கள் தொகைக்கு சமம். ஒரிசா இந்தியாவின் மக்கள் தொகை அடிப்படையில் 11வது அதிக மக்கள் கொண்ட மாநிலம் ஆகும்.

நாகாலாந்து

இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் வெகுதூரத்தே வீற்றிருக்கும் ஒரு சிறிய மலைப்பிரதேச மாநிலம்தான் நாகாலாந்து. விவசாயத்தை தொழிலாக கொண்ட எளிமையான அமைதியான மக்கள் வசிக்கும் இம்மாநிலத்தில் பிரமிக்க வைக்கும் மலை எழிற்காட்சிகள், மயங்க வைக்கும் பூர்வகுடியினரின் பாரம்பரிய கலாச்சாரம் என்று ஏராளம் பார்த்து ரசிக்கவும் அனுபவிக்கவும் காத்திருக்கின்றன

அஸ்ஸாம்

தனித்தன்மையான கிழக்கிந்திய கலாச்சார பாரம்பரியம் மற்றும் செழிப்பான வனப்பகுதிகள் போன்றவற்றை கொண்டிருக்கும் அஸ்ஸாம் மாநிலம் எல்லாவகையிலும் ஒரு இயற்கை சொர்க்கம் என்பது இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்யாதவர் அனைவரும்கூட அறிந்திருக்கும் ஓர் உண்மை

அருணாசலபிரதேசம்

வண்ணமயமாக மலர்ந்து ஜொலிக்கும் ஆர்க்கிட் மலர்கள், சூரிய ஒளியில் ஒளிரும் பனிச்சிகரங்கள், தூய்மையான பள்ளத்தாக்குகள், செழிப்பான பசுமைக்காடுகள், ஸ்படிகம் போன்ற நீருடன் ஓடிவரும் சிற்றோடைகள், புத்த துறவிகளின் மந்திர ஒலிப்புகள் மற்றும் அன்போடு உபசரிக்கும் பூர்வ குடிமக்கள் போன்ற தனித்தன்மையான அம்சங்களோடு உங்களை அருணாசலபிரதேச மாநிலம் வரவேற்கிறது.

மேகாலயா

1972-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த மேகாலயா மாநிலம் காஸி, ஜைன்டியா மற்றும் கரோ பழங்குடி இன மக்கள் வசிக்கும் பூமியாகும். மடிப்பு மடிப்புகளாய் புரண்டு கிடக்கும் மலைத்தொடர்களை கொண்டுள்ள இம்மாநிலத்தில் பழங்கள் மற்றும் பாக்கு போன்றவை அதிகம் பயிராகின்றன.

மிசோரம்

இயற்கை வரைந்த ஓவியமாய் பல வடிவங்களில் ஓங்கி ஜொலிக்கும் மலைகளும், மாசு மருவில்லாது விரிந்திருக்கும் புல்வெளிப்பிரதேசங்களும், நெளிவுகளுடன் வளைந்தோடும் ஆறுகளும் வடகிழக்கு இந்தியாவின் விசேஷ அடையாளங்களாகும்.

மணிப்பூர்

உலகம் முழுமையும் சுற்றித்திரிய விரும்புபவர்களுக்கும், சுற்றுலாவை விரும்புபவர்களுக்கும் மணிப்பூரில் தனித்தன்மையான அனுபவங்கள் ஏராளம் காத்துக்கிடக்கின்றன. ஷிருயி லில்லி, சங்காய் மான்கள், லோக்டாக் ஏரியில் மிதக்கும் தீவுகள், முடிவில்லாத பசுமை விரிப்புகள் , அதன் மிதவெப்பமான பருவநிலை மற்றும் பழங்குடியினங்கள் ஆகியவை இந்த வடகிழக்கு மாநிலத்தின் தனித்துவமான வியக்கத்தக்க குணாதிசயங்களாக உள்ளன.

திரிபுரா

இந்தியாவில் கலாச்சாரப்பாரம்பரியம் நிறைந்த மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று. இந்தியாவின் பன்முக கலாச்சார அடையாளத்தை நிரூபிக்கும் ஒரு அழகு மாநிலம் என்ற பெருமையை இது கொண்டிருக்கிறது. இந்திய மண்ணிற்குள் கலவையான கலாச்சார அம்சங்கள் வேரூன்றியிருக்கும் அற்புதமான உண்மையை இந்த திரிபுரா மாநிலம் பிரதிபலிக்கிறது

சிக்கிம்

புத்துணர்வு பெற விரும்புவோரை சுற்றுலாப் பயணங்கள் எப்போதுமே ஏமாற்றுவதில்லை. முன்னரே அறிந்த இடம் என்றாலும் அறியாத இடம் என்றாலும் பயண விரும்பிகளுகக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கின்றன சிக்கிம் சுற்றுலாத் தலங்கள்.

 சிலிகுரி

சிலிகுரி

வடகிழக்கின் எட்டு மாநிலங்களும் கோழிக் கழுத்தைப் போலுள்ள ஒரு சிறிய பகுதியால் இந்தியாவுடன் ஒட்டியுள்ளன. வடகிழக்கு மாநில பகுதிகளுடன் மேற்கு வங்கத்தின் சிறிய பகுதி ஒன்றும் இணைந்துள்ளது.

காலம்காலமாக மேற்கு வங்கத்தில் குறிப்பிடதகுந்த மலைஸ்தலமாக திகழ்கிறது சிலிகுரி. தன்னிச்சையாக தன் தேவைகளை தீர்த்துக்கொள்ளும் இந்நகரத்திற்கு வருடம் முழுதும் ஏராளமான பயணிகள் வருகை தருகிறார்கள். பக்தோரா விமானநிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகியவை சிலிகுரியின் சுற்றுலா மதிப்பை உயர்த்தியுள்ளன.

இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம் சுற்றுலா தளமாக மட்டுமல்லாமல் சிறந்த கல்வி நகரமாகவும் விளங்குகிறது. நாடெங்கிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் இங்கிருக்கும் கல்வி நிலையங்களில் பயில்கிறார்கள்.

சிலிகுரியைச் சுற்றி ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. இஸ்கான் கோவில், மஹாநந்தா வனவிலங்கு சரணாலயம், விஞ்ஞான நகரம், கரொனேஷன் பாலம், சலுகரா மொனாஸ்ட்ரி, மதுபான் பூங்கா, உம்ரோ சிங் படகு முகாம் என பலவகையான இடங்கள் உள்ளன.

Ujjal Ghosh

எல்லைகள்

எல்லைகள்

வடகிழக்கு பகுதிகளின் 95 சதவிகித எல்லைகள் அயல்நாடுகளுடனே பகிரப்பட்டுள்ளன. சீனா, மியான்மர், பூடான், வங்கதேசம் ஆகியவை இந்த நாடுகளாகும்.

தவாங்

இந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் இந்த தவாங் மாவட்டம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் உயரத்தில் இந்த தெய்வீக மலை எழிற்பிரதேசம் அமைந்திருக்கிறது. வடக்கில் திபெத்தையும், தென்மேற்கில் பூடானையும், மேற்கில் சேலா மலைத்தொடர்களையும், கிழக்கில் மேற்கு கேமேங் மலைகளையும் இது எல்லைகளாக கொண்டுள்ளது.

திபாங் வனவிலங்கு சரணாலயம்

அருணாச்சலப்பிரதேசத்தின் இந்த சரணாலயம் சீனாவுடன் தனது எல்லையை பகிர்ந்துள்ளது,. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 8 சரணாலயங்களில் இதுவும் ஒன்றாகும். இது 4149 கிமீ பரப்பளவிற்கு விரிந்துள்ளது. மிசுமி மலையாடு, சிவப்பு மலைக்காட்டாடு, இரண்டு வகையான கத்தூரி மான்கள், சிவப்பு பாண்டா, ஆசிய கருப்புக் கரடி, புலி, அரிய பறவையினங்கள் என காடு பல்லுயிர்த் தன்மை வாய்ந்ததாக உள்ளது.

மோரே

மியான்மாரின் நுழைவாயிலாக இருக்கும் மோரே டவுன் மணிப்பூரின் வர்த்தக நகரமாக விளங்குகின்றது. எல்லைப் பகுதிகளுக்கு அப்பால் இருக்கும் பழங்குடியினர் பலர் ஒன்று கூடி இணக்கமாக வாழ்வதுடன் கலாச்சாரத்தின் மேம்பாட்டை உணர்த்தி வரும் இவ்விடம் சுற்றுலாத் தலங்களின் முக்கிய இடமாக உயர்ந்து வருகின்றது.

Dhrubazaanphotography

அஸ்ஸாம்

அஸ்ஸாம்

1963ம் ஆண்டு வரை வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் அஸ்ஸாம் என்றே அழைக்கப்பட்டு வந்தன. அதன் அருகில் மணிப்பூர், திரிபுரா எனும் இரண்டு சிறிய இளவரச மாநிலங்களும் இருந்தன.

தனித்தன்மையான கிழக்கிந்திய கலாச்சார பாரம்பரியம் மற்றும் செழிப்பான வனப்பகுதிகள் போன்றவற்றை கொண்டிருக்கும் அஸ்ஸாம் மாநிலம் எல்லாவகையிலும் ஒரு இயற்கை சொர்க்கம் என்பது இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்யாதவர் அனைவரும்கூட அறிந்திருக்கும் ஓர் உண்மை. காட்டுயிர் சுற்றுலாவை விரும்பும் இயற்கை ரசிகர்களுக்கு இந்த அஸ்ஸாம் மாநிலம் ஏராளமான வாய்ப்புகளை அளிக்கிறது.

Ujjayan

 காடுகள்

காடுகள்

உலகின் ஏழாவது மிக அடர்த்தி வாய்ந்த காடுகள் பல்லுயிர்த் தன்மை நிறைந்த பகுதியாக வடகிழக்கிந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிரோவில் உள்ள டால்லி பள்ளத்தாக்கு இயற்கையை ரசிப்பதற்கு பல வாய்ப்புகளை அளிக்கிறது. இந்த இடம் நடை பயணம் மேற்கொள்ள புகழ் பெற்று விளங்குகிறது. இங்குள்ள அழகிய ஆல்பைன் காடுகள், பேம்பூகள், ஆர்ச்சிட், ரோடோட்என்டிரான் மற்றும் பிர் மரங்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். புகழ் பெற்ற இந்த டால்லி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜிரோவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடம் மேட்டுநிலத்தில் அமைந்துள்ளது. அருணாச்சல அரசாங்கத்தால் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த இடத்தில் பல வகையான தாவரமும் விலங்கினமும் அருகிவரும் உயிரினங்களும் காணப்படுகின்றன.

Tewu

 பூக்கள்

பூக்கள்

உலகின் 70 சதவிகித பூக்கள் வடகிழக்கு இந்தியாவில் தான் இருக்கின்றன.

நம் நாட்டிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினத்தில் 40% ஆனவையை இந்த இடத்திலேயே காணலாம். பங்கே முகாம் தான் இந்த சரணாலயத்தின் நுழைவாயிலாக திகழ்கிறது. கரிங், சிபு மற்றும் சுபன்சிரி நதிகள் இந்த சரணாலயம் வழியாக பாய்ந்தோடுகிறது. இந்த இடத்தை சுற்றிப் பார்க்க அறுவடை காலமான பிப்ரவரி மற்றும் அக்டோபரில் வந்தால் இயற்கையின் தனித்துவத்தை கண்டு மகிழலாம்.

Sujan Bandyopadhyay

மஜூலி தீவு

மஜூலி தீவு

உலகின் மிகப் பெரிய ஆற்றுநீர்த் தீவு வடகிழக்கு மாநிலங்களில் தான் இருக்கிறது. மஜுலி தீவுதான் அது.

மாஜுலி எனும் இந்த ரம்மியமான தீவுப்பகுதி அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. வரலாற்றுப்பின்னணி மற்றும் கலாச்சார பாரம்பரியம் போன்றவற்றை ஒருங்கே பெற்றுள்ள இந்த தீவுப்பகுதி உலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத்தீவு எனும் பெருமையை பெற்றிருக்கிறது. மாஜூலி தீவு சிறிய சுற்றுலாத்தலம் என்றாலும் பல சுவாரசிய அம்சங்களை தன்னுள் கொண்டிருக்கிறது. அஸ்ஸாம் பகுதியில் புதிய வைணவம் தழைத்தோங்கியிருக்கும் ஸ்தலமாகவும் இது அறியப்படுகிறது

Kalai Sukanta

நதிகள்

நதிகள்

இந்தியா உட்பட மூன்று நாடுகளில் பாயும் பிரம்மபுத்திரா நதி வடகிழக்கு மாநிலங்களில்தான் அதிகம் பாய்கிறது.

மெஹாவோ வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு அங்கமான, தெளிந்த நீல நிற நீரை உடையதான மெஹாவோ ஏரி, இப்பகுதியின் முக்கிய ஈர்ப்புகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இயற்கை அழகினால் சூழப்பட்டுள்ள இந்த நிச்சலனமான ஏரி, குறைவான ஊட்டச்சத்துக்கள் கொண்டது; ஆகையினால் இந்த ஏரியில் மீன்கள் வாழ்வதில்லை.

சுமார் 3000 அடி உயரத்தில் அமைந்துள்ள இது பல்வேறு வகை தாவர வளம் மற்றும் விலங்கின வளங்களைக் கொண்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமான வாத்துக்களைக் காணலாம்.

Samrat4banerjeee

 அதிசய உலகம்

அதிசய உலகம்

வடகிழக்கு மாநிலங்களில் 70 சதவிகித இடங்கள் மலைப்பிரதேசங்கள் ஆகும். வடகிழக்கு மாநில கலாச்சாரம் என்று எடுத்துக்கொண்டால் அது வடகிழக்கிந்திய, திபெத்திய, தெற்காசிய கலாச்சாரம் ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய ஏழு தேசியப் பூங்காக்களும் வடகிழக்கு மாநிலங்களிலே அமைந்துள்ளது. ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் உலகிலேயே வடகிழக்கு மாநிலத்தில் மட்டும் காணப்படுகிறது.

Avisek.Dutta83

கல்வித்தகுதி

கல்வித்தகுதி

நமக்கெல்லாம் ஒரு எண்ணம் இருக்கும். வடகிழக்கு மாநிலத்தவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று. ஆனால் உண்மையில் மிசோரம் 91.50 சதவிகித கல்வியறிவும், திரிபுரா 87.75 சதவிகித கல்வியறிவும் கொண்டுள்ளது. அருணாச்சல பிரதேசம் தவிர்த்து இங்குள்ள மற்ற மாநிலங்கள் 75 சதவிகித கல்வியறிவு கொண்டவை.

flowcomm

 கலாச்சாரம் பழக்கவழக்கம்

கலாச்சாரம் பழக்கவழக்கம்

8 மாநிலங்கள் என்றாலும், இங்கு பேசப்படும் மொழிகளோ 220 ஆகும். வெறும் 8 மாநிலங்களில் 220க்கும் அதிகமான அளவு இனங்கள் வாழ்கின்றனர். இவர்கள் உலகின் மிகப் பழமையான இனங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகின் பாரம்பரிய இசைக்குழுக்கள் அல்லது இசைகள் என எடுத்துக்கொண்டால், இந்தியாவிலேயே அதிக அளவு இசை அம்சங்கள் கொண்டவை வடகிழக்கு மாநிலங்களே. இந்தியாவின் அதிக அளவு தேயிலை உற்பத்தி வடகிழக்கு இந்தியாவில் நிகழ்கிறது

இந்தியாவில் இருந்தும், வடகிழக்கு இந்தியாவில் வரதட்சணை கொடுமை இல்லை. அங்கு வரதட்சணை எனும் பழக்கம் அறவே இல்லை..மேலும் அங்கு ஐயர்கள், பரிகாரங்கள் போன்றவையும் இல்லை. ஆனால் காலம்காலமாக சில விசித்திர பழக்கவழக்கங்களை வைத்துள்ளனர். அதுவும் அறிவியல் சார்ந்தே அமைகின்றன.

Bodoland Territorial

படையெடுப்பு ஆட்சிமுறை

படையெடுப்பு ஆட்சிமுறை

முகலாயர்கள் படையெடுக்காத இந்தியாவின் பகுதி வடகிழக்கு இந்தியாதான். தமிழகத்தின் தென்பகுதியிலும் கேரளத்தின் பெரும்பான்மை பகுதியிலும் கூட படையெடுப்பு நிகழவில்லை என்றாலும், முகலாயர் வம்சத்தினர் குடிபெயர்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் 600 வருடங்கள் தொடர்ந்து ஒரு நாட்டை ஆண்ட வம்சம் என்றால் அது அஹோம் வம்சம். அது வடகிழக்கு இந்தியாவை ஆண்ட வம்சமாகும்.

AmitNimade

ஈரமான பகுதி

ஈரமான பகுதி

மாவ்ஸின்ராம் உலகின் மிக அதிக ஈரமான பகுதி எனும் பெருமையைக் கொண்டுள்ளது. இது வடகிழக்கு மாநிலத்தில் உள்ளது.

ஒரு காலத்தில் உலகிலேயே மிக ஈரமான, அதிக மழைப்பொழிவு பெறும் இடமாக பிரசித்தி பெற்றிருந்த இந்த மாவ்சின்ராம் கிராமம் மேகாலயா மாநிலத்தின் ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ளது. இது ஷில்லாங் நகரத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இயற்கை ரசிகர்களின் கண்களுக்கு இந்த மாவ்சின்ராம் கிராமம் ஒரு பூலோகச்சொர்க்கம் போன்றே காட்சியளிக்கிறது. செங்குத்தாக உயந்தும் மடிந்தும் கிடக்கும் பசுமலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவை இந்த பூமிக்கு வரும் பயணிகளை மயங்க வைக்கின்றன.

Herojit th

மாதுரி ஏரி

மாதுரி ஏரி

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஏரிக்கு மாதுரி ஏரி என்று பெயர். பாலிவுட் நடிகை மாதிரியால் இந்த ஏரி இப்பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் படமான உயிரே இந்தியில் தில்சே தவிர்த்து வேறு எந்த படமும் வடகிழக்கு மாநிலத்தில் படம்பிடிக்கப்படவில்லை. அதற்கு இந்திய அரசு அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Arushi

 பயிர் செய்ய பழகு

பயிர் செய்ய பழகு

காடுகளை எரித்து மீண்டும் வளர்க்கும் பழங்கால பயிர் செய்யும் முறை இன்னும் இங்கே கடைபிடிக்கப்படுகிறது. உலகில் மிக சுத்தமான பகுதிகள் பட்டியலில் இந்த வடகிழக்கு இந்திய பகுதிகள் கட்டாயம் இடம் பெறும். அந்த அளவுக்கு தூய்மையான இடங்களாகும்

மாவ்லின்னாங் கிராமத்தை ஆசியாவிலேயே வெகு சுத்தமான கிராமமாக ‘டிஸ்கவர் இந்தியா' பத்திரிகை சான்றளித்திருக்கிறது. இது ஷில்லாங் நகரத்திலிருந்து 90 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இந்த அழகிய சிறு கிராமம் இந்தோ-பங்களாதேஷ் எல்லைப்பகுதியில் இடம் பெற்றிருக்கிறது. இந்த கிராமவாசிகளின் முக்கியத்தொழில் விவசாயமே ஆகும். பலகாலமாகவே இப்பகுதியின் பூர்வகுடி மக்கள் இந்த கிராமப்பகுதியின் இயற்கைத்தூய்மையை பேணிக்காத்து வருகின்றனர்.

Yapri Debbarma -

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X