உலகின் பாரம்பரிய மிக்க நகரங்களுள் ஒன்று மதுரை. தமிழ் கலாச்சாரம், பண்பாடு மிகுந்த நகரான இது தமிழின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றும் சான்றாக நிற்கிறது. மதுரையில் மீனாட்சியம்மன் கோவில், திருமலைநாயக்கர் மாளிகை, காந்தி அருங்காட்சியகம், வைகை அணைக்கட்டு முதலான பல்வேறு இடங்களுக்கு போயிருப்பீர்கள். அல்லது குறைந்தபட்சம் கேள்வி பட்டிருப்பீர்கள்.
சங்ககாலத்தில் கட்டப்பட்ட ஓவியக்கலை மற்றும் கட்டடக் கலைக்கு பெயர்பெற்ற கூடல் அழகர் கோவிலுக்கு போயிருக்கிறீர்களா இல்லைனா நீங்க கட்டாயம் சென்று பார்க்கவேண்டிய இடங்களுள் ஒன்றை மிஸ் பண்ணிட்டீங்கனு தான் சொல்லணும்.

PC: Ssriram mt
தமிழகத்தின் வரலாற்றில் மதுரை மறக்கமுடியாத மற்றும் மறுக்கமுடியாத நினைவுகளை உள்ளடக்கிய நகரம். கட்டடக்கலைக்கு பெயர் பெற்ற பாண்டியர்களின் தலைநகரமான மதுரையில் பல்வேறு ஆன்மீகத் தலங்கள் உள்ளன.
அவற்றுள் ஒன்றுதான் இந்த கூடல் அழகர் விஷ்ணு கோவில். இது சங்ககால தமிழ் புலவர்களால் பாடப்பட்ட 108 திவ்யதேசங்களுள் ஒன்றாக உள்ளது.
2 ஏக்கருக்கு பரந்து விரிந்த இந்த கோவில், நடுவில் ஒன்றும், நான்கு திசைகளிலும் நான்கு என 5 கோபுரங்களைக் கொண்டுள்ளது. கோவிலின் கருவறையில் கூடல் அழகரின் சிலை உள்ளது.
வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் சின்னம்

PC: Ssriram mt
இந்த கோவில் தமிழர்களின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் சின்னமாக திகழ்கிறது. பரிபாடல் மற்றும் சிலப்பதிகாரம் போன்ற தொன்மையான தமிழ் படைப்புகளிலும் மதுரையை பற்றியும் இந்த கூடல் அழகர் பற்றியும் நிறைய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
கூடல் அழகர் கோவில் பற்றி மேலும் சில உண்மைகள்
மதுரையை ஆட்சி செய்த மன்னர்களின் கட்டடக்கலைத் திறமையை பறைசாற்றும் விதமாக இந்த கோவில் உள்ளது.
மதுரை கூடல் அழகர் கோவில், கடந்த 2006 ஆம் ஆண்டு வண்ணமயமாக மெருகூட்டப்பட்டது. இந்த வண்ணங்கள் வேதிப் பொருள்களற்ற இயற்கையான மூலிகை மருந்து பொருள்களால் உருவாக்கப்பட்டு கோபுரங்களில் பூசப்பட்டுள்ளது.
இந்த வண்ணங்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு அப்படியே இருக்குமாம்.

PC: Ssriram mt
சுற்றிலும் அலங்கரிக்கப்பட்ட சன்னல்கள், இந்த கோவிலை தனித்துவத்துடன் காட்டுகிறது. இந்து மத நம்பிக்கைகளின்படி அமைக்கப்பட்ட மரவேலைப்பாடுகள், ஓவியங்கள் அனைத்தும் காண்போரை அசரச் செய்யும் வகையாகும்.
கோபுரங்களின் மீது ராமாயண கதையில் வரும் பாத்திரங்களை சிலையாத வடித்துள்ளனர் சிற்பிகள். இப்படி ஒவ்வொன்றுமே கூடல் அழகர் கோவிலுக்கு நீங்கள் தவறாமல் செல்லவேண்டியதற்கான காரணங்களாகும்.



Click it and Unblock the Notifications




