Search
  • Follow NativePlanet
Share
» »சிவன், விஷ்ணு, பிரம்மா என மூன்று பாகங்களாக வெடித்துச் சிதறிய சிவலிங்கம்..!

சிவன், விஷ்ணு, பிரம்மா என மூன்று பாகங்களாக வெடித்துச் சிதறிய சிவலிங்கம்..!

பெரும்பாலும் கடவுளின் திருவுருவச் சிலை பிளந்து அதில் இருந்து அம்மனோ, ஆதிபகவானோ புகைமூட்டத்துடன் காட்சியளிப்பதைத் திரைப்படங்களில் காலம் காலமாக நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இதுபோன்ற சம்பவம் ஏதேனும் ஒரு தலத்தில் நடந்ததாக கேள்விப்பட்டிருக்கீங்களா..! இங்கே ஒரு திருத்தலத்தில் இருந்த லிங்கம் மன்னரின் தவறால் பிளந்து அதில் இருந்து சிவபெருமான் காட்சியளித்துவிட்டு மும்முக லிங்கமாக இன்றும் அருள்பாலித்து வருகிறார். அதுவும், ஒவ்வொரு முகத்திலும் சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்முக கடவுளாக அண்டம் காக்கும் ஆதிபகவான் காட்சியளிக்கும் திருத்தலம் நம் தமிழகத்தில் எங்கே இருக்கு ? என்ன சிறப்பு என பார்க்கலாம் வாங்க.

மும்முக லிங்கம்

மும்முக லிங்கம்

முன்னொரு காலத்தில் தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் கடும் வறட்சி நிலவிவந்தது. அப்போது, சித்தர் ஒருவர் அரசமரத்து அடியில் சிவனை வழிபட்டு தவத்தில் ஈடுபட்டிருந்தார். சித்தரின் தவத்தாலேயே நாட்டில் வறட்சி நிலவிவருகிறது என தவறாக நினைத்த மன்னர் தேவதாசியின் மூலம் தவத்தைக் கலைத்தார். இதனால், கோபமடைந்த சித்தர் அப்பகுதியில் இருந்த சிவதலத்திற்குச் சென்று முறையிடவே, லிங்கமாக இருந்த சிவபெருமான் வெடித்துச் சிதறி சித்தரின் கண்முன் தோன்றி அருள்பாலித்தார். அவ்வாறு வெடித்த லிங்கம் இன்றும் சிவன், விண்ணு, பிரம்மா ரூபத்தில் காட்சியளித்து வருகிறது.

Bijay chaurasia

கோவில் வரலாறு

கோவில் வரலாறு

தேவாரப் பாடல்பெற்ற தலங்களில் இது 265-வது சிவாலயமாகும். பிற்காலத்தில் மகாகாளர் என்னும் முனிவர் நாடு முழுவதும் இருந்த சிவதலங்களுக்கு பயணம் செய்தபோது உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறை அருகே அம்பர் மாகாளத்தில் லிங்கம் வைத்து வழிபட்டார். தொடர்ந்து முனிவர் தமிழகத்தின் கிழக்கே வந்தபோது இச்சிவதலத்தில் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். இதனாலேயே இத்தலத்தில் உள்ள சிவபெருமான் மகாகாளநாதர் என்று அழைக்கப்படுகிறார். அம்பன், அம்பாசுரன் என்னும் இரு அரக்கர்கள் பார்வதி மீது அசை கொண்டு திருமணம் செய்ய எண்ணினர். இதையறிந்த கோபமடைந்த பார்வதி தேவி மகாகாளி அவதாரம் எடுத்து அரக்கர்களை வதம் செய்தாள். இதனால், பிரம்மஹத்தி தோஷம் பெற்ற பார்வதி இத்தலத்தின் சிவனை வேண்டி தவத்தில் ஈடுபட்டு தோஷத்தை நீக்கினால்.

Ssriram mt

தலஅமைப்பு

தலஅமைப்பு

மகாகாளேஸ்வரர் ஆலயத்தில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சன்னதியில் லிங்கம் மூன்று பகுதியாக சிதறி, அதில் மூன்று முகங்களுடன் உள்ளது. இந்த மூன்று பாகங்களையும் செம்புப் பட்டயம் மூலம் இணைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. சிவபெருமானின் இந்த முன்முக தரிசனம் மிகவும் பிரசிதிபெற்றது. இத்தலத்தின் ஒரு பகுதியில் சுந்தர கணபதி அருள்பாலிக்கிறார். குயில்மோழி நாயகி, மதுர சுந்தர நாயகி அம்மையார்கள் இத்தலத்தில் உள்ளனர். இவர்களது சன்னதிக்கு முன் நடராஜர் சன்னதியும் உள்ளது. அக்னி வளையம் சூந்து இருக்க அதன் நடுவே நடராஜரும், சிவகாமி அம்மையாரும் இருப்பது சிறப்பாகும்.

Ssriram mt

தோஷம் நீக்கும் சூரியன்

தோஷம் நீக்கும் சூரியன்

நவக்கிரக சன்னதியில் கிரகங்கள் அனைத்தும் மனைவியர்களுடன் உள்ளனர். சூரியபகவான் தன் இரண்டு மடியின் மீது உஷா, பிரத்யூஷா ஆகியோரை அமர்த்திய கோலத்தில் காட்சியளிக்கிறார். சூரிய பகவானின் இந்தத் தரிசனத்தை சனிக்கிழமைகளில் வழிபட்டால் குடும்பத்தில் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். மேலும், திருமணத் தடை, பித்ரு தோஷங்கள் விலகும் என்பது தொன்நம்பிக்கை.

SurendrapuriNavagraha

வழிபாடு

வழிபாடு

திருமணத் தடை, தொடர் மரணம் உள்ளிட்ட இடையூறுகளில் இருந்து விருத்தி பெற மகாகாளேஸ்வரரை வழிபடுவது சிறந்தது. தொழிலில் என்னதான் கவனம் செலுத்தினாலும், ஒரு சில தடங்கள் மூலம் முழுமையான பயன் கிடைக்காமல் இருப்போர் இங்கே வழிபடலாம்.

Ranjithsiji

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்

வேண்டியவை நிறைவேறியதும் மூலவர் மற்றும் அம்மையாருக்கு புது ஆடைகள் சாற்றி, சிறப்பு அபிஷேகங்களுடன் அபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. சிலர் தங்களது வசதிக்கேற்ப கோவிலுக்கு தேவையான பொருட்கள் வழங்கியும், அன்னதானமிட்டும் நேர்த்திக்கடனைச் செலுத்துவர்.

Ramireddy.y

நடைதிறப்பு

நடைதிறப்பு

அருள்மிகு மகாகாளேஸ்வரர் கோவில் நடை காலை 6.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.

FlickreviewR

திருவிழா

திருவிழா

மற்ற சிவன் கோவிலைப் போலவே சிவராத்திரி அன்று சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. திருக்கார்த்திகை, பங்குனி உத்திரமும் இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது.

KennyOMG

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

விழுப்புரம் மாவட்டம், இரும்பை வட்டத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோவில். பாண்டிச்சேரி - விழுப்புரம் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 43 கிலோ மீட்டர் அரியூர், பட்டனூர் வழியாக பயணித்தால் இத்தலத்தை அடைந்துவிடலாம். பாண்டிச்சேரியில் இருந்து சாரம் வழியாக 12 கிலோ மீட்டர் பயணம் செய்தாலும் ஆரோவில் அடுத்துள்ள இக்கோவிலை எளிதில் அடைந்துவிடலாம். விழுப்புரம், பாண்டிச்சேரி என அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இரும்பை சென்றடைய பேருந்து வசதிகள் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more