» »பிதுர் சாபம்போக்கும் சொக்கநாதப் பெருமான் எங்கே உள்ளார் தெரியுமா ? #Travel2Temple 9

பிதுர் சாபம்போக்கும் சொக்கநாதப் பெருமான் எங்கே உள்ளார் தெரியுமா ? #Travel2Temple 9

Written By: Sabarish

பிதுர் தோஷம், பிதுர்கள் தோஷம், பித்துரு சாபம், முன்னோர் தோஷம், முன்னோர் சாபம் இவைகள் அனைத்தும் ஒரே பொருள் கொண்டவை தான். நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷமே பித்ரு தோஷம் எனப்படும். இது, குடும்பத்தின் மகிழ்ச்சியை, உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தை முழுமையாக முடக்கி பல துண்பங்களை ஏற்படுத்தக்கூடியது. இதுபோன்ற பிதுர் சாபத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?. உடனே இந்தக் கோவிலுக்கு போங்க...

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


மதுரையில் இருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலும், சிவகாசியில் இருந்து 44 கிலோ மீட்டர் தொலைவிலும், விருதுநகரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிலும் அருப்புக்கோட்டையில் அமைந்துள்ளது மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில்.

Raji.srinivas

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


பல நூற்றாண்டுகளைக் கடந்த கோவில் என்றாலும் இன்றளவும் தன் பொழிவினை இலக்காமல் உள்ளது. மேலும், ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை சூரிய ஒளியானது மூலவரான சொக்கநாதர் மீது விழும் நிகழ்வு நடக்கிறது.

Nsmohan

திருவிழா

திருவிழா


பிற கோவில்களைப் போலவே ஆனி மாத கொடியேற்றத்துடுன் திருவிழா, தேர் வடம் இழுத்தல், மூலவருக்கும் அம்மையாருக்கும் திருக்கல்யாணம், கார்த்திகை மாத தெப்ப உற்சம் உள்ளிட்டவை கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி, நவராத்திரி போன்ற விஷேச நாட்களிலும் சிறப்பு பூஜைகளுடன் விழா கொண்டாடப்படுகிறது.

Ganesan

நடைதிறப்பு

நடைதிறப்பு

மீனாட்சி சொக்கநாதர் கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Ssriram mt

தலஅமைப்பு

தலஅமைப்பு


கோவிலில் கிழக்கு நோக்கி 5 நிலைகள் கொண்ட 5 கலசங்களுடன் கோபுரம் உள்ளது. கோபுரம் கடந்து உள்ளே சென்றால் நந்தி மண்டபும், பலிபீடம், சிவனை நோக்கிய நந்தி சிலை அமைந்துள்ளது. விசனுக்கு வலது புரம் சோமாஸ்கந்தர் சன்னதியும், அடுத்து மீனாட்சி சன்னதியும் அமைந்துள்ளது.

Steve Evans

வழிபாடு

வழிபாடு

பிதுர் சாபமுள்ளவர்கள், குரு சாபத்திற்கு பரிகாரம் தேடுவோர் இக்கோவிலில் உள்ள சொக்கநாதனை வரிபடுவதன் மூலம் பலனடையலாம். கோவில் தலத்தின் ஒரு பகுதியில் உள்ள தட்சிணாமூர்த்தியையும், சரஸ்வதி தேவியையும் வழிபட கல்வியில் முன்னேற்றமடையலாம்.

Ssriram mt

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்

வேண்டிய காரியங்கள் நிறைவேரியவுடன் மூலவருக்கும், மீனாட்சி அம்மையாருக்கும் பட்டாடைகள் சாற்றி, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது.

Nsmohan

கோவில் வரலாறு

கோவில் வரலாறு


சுந்திரபாண்டிய மன்னன் மகாராணியுடன் உரையாடிக்கொண்டிருக்கையில் மன்னரைக் காண பரஞ்சோதி முனிவர் வந்துள்ளார். நீண்ட நேரம் கடந்தும் பரஞ்சோதி முனிவரைக் காண சுந்திரபாண்டிய மன்னன் வெளியே வரவில்லை. பின் அங்கிருந்து முனிவர் சென்றுள்ளார். இதனை அறிந்த மன்னர் முனிவரிடம் மன்னிப்பு கேட்டநிலையில் பிதுர் கோபம் தனிய கோவில் எழுப்பியுள்ளார். அதுவே, அருப்புக்கோட்டையில் அமைந்துள்ளது மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில்.

Nicolas Vollmer

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து விருதுநகருக்கு திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளன. மதுரை விமான நிலையம் விருதுநகரின் அருகில் உள்ள விமான நிலையமாகும். விருதுநகரில் இருந்து பேருந்து அல்லது தனியார் வாகனம் மூலம் புளிச்சகுளத்தில் உள்ள அருள்மிகு பஞ்சமுக விநாயகர் கோவிலை அடையலாம்.

SarThePhotographer

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்