» »இவங்களுக்கும் கோயில் இருக்கு தெரியுமா உங்களுக்கு?

இவங்களுக்கும் கோயில் இருக்கு தெரியுமா உங்களுக்கு?

Posted By: Udhaya

இந்தியா ஒரு ஆன்மீக நாடு. இந்தியாவில் இந்துக்கள் பெரும் அளவில் இருந்தாலும் இன்றுவரை அது ஒரு மதசார்பின்மை நாடாக, ஜனநாயக நாடாகவே திகழ்கிறது. எனினும் இந்த நாட்டில் கோயில்களுக்கு பஞ்சமில்லை.


2020ல் உலகம் என்னவாகும் கைப்பட எழுதிய தலையாட்டி சித்தர்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் எனும் பழமொழிக்கேற்ப மீண்டும் மீண்டும் கோயில்கள் கட்டப்பட்ட கும்பாபிஷேகம் நடத்தப்படுகின்றன.

ஆனால் இந்த காலக்கட்டங்களில் உயிரோடு இருப்பவர்களுக்கும் கோயில் கட்டப்படுகின்றன. அதுவும் அரசியல் பிரபலங்களுக்கு...


எல்லோராவை கட்டியது ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசிகளா திடுக்கிடும் மர்மங்கள்

அந்த கோயில்கள் எங்க இருக்குனு தெரிஞ்சிக்கனுமா? முழுசா படிங்க!

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரின் ஆதரவாளர்கள் கோயில் கட்டியுள்ளனர். கோயிலில் வைத்திருக்கும் சிலை ரூ.1.65 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது.

ராஜ்கோட்டில் மோடி கோயில்

ராஜ்கோட்டில் மோடி கோயில்

மோடி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னர் அவரின் உருவப்படத்தை வைத்து பூசை செய்த மக்கள் பின் அவரின் உருவசிலை ஒன்றை அமைத்து மோடி கோயிலை அமைத்துள்ளனர். உங்களுக்கும் வித்தியாசமான ஏதாவது ஒன்றை பார்க்க விருப்பம் இருந்தால் மோடி கோயிலுக்கு சென்று வாருங்கள்.

சோனியா காந்தி

சோனியா காந்தி

விஜயவாடா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான சங்கர் ராவ் என்பவர், தமது நிலத்தில் இந்த கோயிலை கட்டியுள்ளார். இதற்காக தெலுங்குதாய் உருவில் சோனியா காந்தியின் வெண்கல சிலை ஒன்றையும் அவர் அமைத்துள்ளார்.

விஜயவாடாவில் சோனியா கோயில்

விஜயவாடாவில் சோனியா கோயில்

தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்தது. அதனை சோனியா காந்தியே நிறைவேற்றியிருப்பதாகவும்,
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சோனியா காந்தியை கடவுளாக கருதி வழிபடுவதாகவும் சங்கர் ராவ் கூறியுள்ளார்.

கருணாநிதி

கருணாநிதி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, திமுக தலைவர் கருணாநிதிக்கு வேலூர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கோயில் கட்டியுள்ளார்.

வேலூரில் கருணாநிதி கோயில்

வேலூரில் கருணாநிதி கோயில்

"கேட்டால் கொடுப்பார் கடவுள்; கேட்காமல் கொடுப்பார் கருணாநிதி' என, அங்குள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்காக இக்கோயில் கட்டப்பட்டுள்ளது என, கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்ஜியார்

எம்ஜியார்

திருநின்றவூரிலிருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் இடது புறமாக 5 கிமீ தொலைவில் இருக்கும் கிராமம் நத்தமேடு. படு குக்கிராமமான இந்த ஊரில்தான் எம்ஜியாருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.

திருநின்றவூரில் கோயில்

திருநின்றவூரில் கோயில்

"ஓம் ஆயிரத்தில் ஒருவனே போற்றி! ஓம் இதய தெய்வமே போற்றி ! ஓம் இரட்டை இலை தந்தவா போற்றி, இதயக்கனியே நமக" என மந்திரங்கள் ஓத பூசை நடக்கிறது எம்ஜிஆருக்கு...

என்டிஆர்

என்டிஆர்


தெலுங்கு திரைப்பட மாபெரும் நடிகரும், ஆந்திர அரசியலின் முக்கியமானவருமான என்டிஆருக்கு ஆந்திராவில் கோயில் எழுப்பட்டுள்ளது.

Read more about: travel, temple