Search
  • Follow NativePlanet
Share
» »சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித்திரிய 5 இடங்கள்!

சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித்திரிய 5 இடங்கள்!

நாடு விடுதலையடைந்து நாளையுடன் (ஆகஸ்ட் 15) 72-வது வருடம் ஆகிறது. இத்தனை வருடங்கள், ஏன், இனி வரும் பல நூற்றாண்டுகள் இச்சுதந்திரத்தை தனி மனிதராகவும், நாட்டுப் பற்றுடனும் கொண்டாட வேண்டும். ஆனால், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். அதே அன்றாடப் பணிகள்... காரணம், நமக்கான சூழ்நிலையும், திட்டமிடலும் தான். இருந்தாலும், இச்சுதந்திர தினத்தை உறுதியான தனிமனித சுதந்திர தினமாக கொண்டாட நாம் எங்கவெல்லாம் சுற்றிப் பறக்கலாம் தெரியுமா?. வேலைப் பளுவில், சுற்றத்தாரின் நச்சரிப்பில், மன அழுத்தத்தில் இருந்து வெளியேறுங்கள், சுதந்திரமாக பறந்து செல்வோம்.

லடாக்

லடாக்

லடாக் என்றாலும் சரி, அதன் சுற்றுவட்டாரம் என்றாலும் சரி வருடம் முழுவதும் இயற்கைக் காட்சிகளும், தனித்து விடப்பட்ட பள்ளத்தாக்குகளும் எந்த மனநிலை கொண்டவராக இருந்தாலும் ஈர்க்கும் வல்லமை கொண்டுள்ளது. லடாக் மாவட்டத்திற்கு உட்பட்ட சோ மோரிரி தனிமையை விரும்பும் நபர்களுக்கு ஏற்ற தலமாகும். பசுமையான புல்வெளிகளும், பனி போர்த்திய மலைகளும், முகடில் வழிந்தோடும் சிற்றாறுகளும் தனிமைக் காதலர்களுக்கு பரவசத் தலம் தான். குறிப்பாக, அடர் பனிப்பொழிவினால் சாலைகள் முழுவதும் பனி மூட லடாக் திட்டத்தட்ட வெளி உலகத்தோடு தொடர்பை இழக்கிறது என்றே சொல்லலாம்.

Karunakar Rayker

ஸ்பிதி பள்ளத்தாக்கு

ஸ்பிதி பள்ளத்தாக்கு

இந்தியாவில் மிக குறைவான மக்கள் தொகை கொண்ட சுதந்திர மக்கள் வசிக்கும் பகுதி என்றால் அது ஸ்பிதி வேளி என்னும் பள்ளத்தாக்கு பகுதி தான். ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள லாகுல் அருகே இந்த ஸ்பிதி வேளி அமைந்துள்ளது. மலைகள் சூழ, பாய்ந்தோடும் நதிகளும், சற்றே தடுமாறினாலும் மரணத்தை பரிசளிக்கும் மலை முகடுகளும் நிறைந்த ஆபத்தான சாலைகள் என நமக்கு தெரிந்த உலகத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது இந்த ஸ்பிதி பள்ளத்தாக்கு.

John Hill

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

உலக அமைதியை வலியுறுத்தும் ஆரோவில், பல்வேறு நாடுகளின் ஒருங்கிணைந்த கலாச்சாரம், இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் சற்று அதிகமாகவே இன்றும் தங்கியிருக்கும் பகுதிதான் பாண்டிச்சேரி. தனிமனித அமைதியை விரும்பும் ஓய்வு பெற்ற பல வெளி நாட்டவர் இங்கு வாழ்ந்து வருகின்றனர். அழகிய இயற்க்கை சூழல், அமைதியான அலைகடல், இந்த நகரத்தை நோக்கி உள்நாட்டு தனிமைப் பயணிகளையும் வரவேற்கும்.

wikipedia

உதய்பூர்

உதய்பூர்

கோட்டைகளும், கோவில்களும், அழகான ஏரிகள் சூழ்ந்த அரண்மனைகளும் தான் உதய்பூரின் அடையாளமே. காட்டுயிர் சரணாலயங்களுக்காக உலகளவில் புகழ்பெற்றதாக இருக்கும் உதய்பூர் தனிமையை விரும்பி பயணப்படும் எவரும் முழு நிறைவைத் தரவல்லது. அரண்மனைகளின்

Pranshu Dubey

செகந்தராபாத்

செகந்தராபாத்

ஹைதராபாத் எந்தளவிற்கு பிரசித்தமான சுற்றுலாத் தலமோ அந்தளவிற்கு இணையான நகரம் தான் செகந்தராபாத்தும். சொல்லப்போனால், ஹைதராபாத்தும், செகந்தராபாத்தும் இரட்டை நகரம் என்றே சொல்லலாம். ஹைதராபாத்திற்கு இணையாக இந்த செகந்தராபாத் இருந்தாலும், நகரின் கலாச்சார அடையாளமும் வரலாற்று பின்னணியும் முற்றிலும் மாறுபட்டது, செகந்தராபாத் நகரம் ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் வசித்த இடம் என்பதால் இன்றும் அவர்களின் இருப்பிடங்களை காண முடியும். குறிப்பாக, செகந்தராபாத் ஆங்கிலேயர்களின் ராணுவ தளவாடங்களைக் கொண்ட கன்டோன்மெண்ட் பகுதியாகவே உள்ளது. இது நிச்சயம் உங்களை விடுதலைப் போராட்ட காலத்திற்கு பயணிக்க வைக்கும்.

Mhdmzml

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X