» »பிறப்பு டூ இறப்பு வரை மர்மம் நிறைந்த முக்கோண சிவாலயங்கள்... எங்கே இருக்கு தெரியுமா ?

பிறப்பு டூ இறப்பு வரை மர்மம் நிறைந்த முக்கோண சிவாலயங்கள்... எங்கே இருக்கு தெரியுமா ?

Written By: Sabarish

உலகுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாய் போற்றப்படுபவன் சிவபெருமான். இயற்கையை அகமாகக் கொண்ட சிவன் அண்டத்தினை ஆளும் கடவுளாக கருதப்படுகிறார். இப்பூவுலகின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அவனது கட்டளைக்கு இனங்கே நடைபெறுகின்றது என்ற நம்பிக்கையும் உள்ளது. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இடைப்பட்ட வாழ்நாள் என ஒவ்வொரு அங்கத்தையும் அவன் வழிநடத்துவதாகவே பூஜிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சிவனின் ஆலயங்கள் இன்றளவும் பல்வேறு மர்மங்களை நிகழ்த்தி வருவது வியக்கத்தகுந்த ஒன்று.

மர்ம முடிச்சுக்கல்

மர்ம முடிச்சுக்கல்

இந்தியாவில் பெருன்பான்மையாக காணப்படும் சிவன் கோவில்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி ஒட்டுமொத்த பூலோகத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம். அதேப் போன்றே தமிழகத்தில் கிழக்கே அமையப்பெற்றுள்ள சிவன் கோவில்கள் மனித குளத்தின் மொத்த சரித்திரத்தையும் அடக்கிய மர்மம் நிறைந்த கோவிலாக காணப்படுகின்றனது.

Autharite

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்து நெல்லிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ளது பூலோகநாதர் கோவில். இது கங்கை கொண்ட சோழபுரத்தைக் கட்டிய இராஜேந்திர சோழரால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இதில் வியக்கத்தகுந்த விசயம் என்னவென்றால் இதன் அருகே ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிவன் கோவில்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளன.

பிறப்பு - இறப்பு

பிறப்பு - இறப்பு

நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள பூலோக நாதர் கோவிலுக்கு அருகில் சிவலோகம் மற்றும் கைலாயம் என முக்கோண வடிவிலான பிறப்பு முதல் வாழ்ந்து முக்தியை அடைவது வரை மூன்று நிலைகளை குறிக்கக்கூடிய ஆலயங்கள் உள்ளது. இவை, உலகில் வேறெங்கும் காண முடியாத அற்புதத் தலமாக விளங்குகிறது.

Ssriram mt

நிலப்பிரச்சனை தீர்க்கும் பூலோகர்

நிலப்பிரச்சனை தீர்க்கும் பூலோகர்


வீடு, நிலம் உள்ளிட்ட பிரச்சனைகள் நீண்ட நாட்களாக தொடர்ந்துகொண்டே இருப்பவர்கள், மண்ணுக்கு அதிபதியான பூலோகநாதரை வழிபடுவதன் மூலம் விரைவில் பிரச்சனைகள் தீரும் என்பது தொன்நம்பிக்கை. மண் தொடர்பான எந்தவிதமான பிரச்சனைகளையும் எளிதில் தீர்க்கும வல்லமைகொண்டவர் பூலோகநாதர்.

Ssriram mt

வேறெங்கும் கிடைக்காத வாய்ப்பு

வேறெங்கும் கிடைக்காத வாய்ப்பு


பல்வேறு சிறப்புகளையும், அதிச வடிவிலும் அமைந்துள்ள இக்கோவிலுக்கு வருவதன் மூலம் உலகில் வேறெங்கும் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது, ஒரே சமையத்தில் அண்டத்தில் ஆன்டவரான ஈஸ்வரனையும், பெருமாளையும் தரிசிக்கக் கூடிய உன்னத திருத்தலம் இது. மேலும், இத்திருத்தலத்தில் உள்ள புவானம்பிகை பெண்களுக்கு திருமனத் தடைகளை நீக்கி, சுமங்கலி வாழ்வழிக்கும் கடவுளாவார்.

Rashkesh

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்


கடலூரில் உள்ள இந்த முக்கோண வடிவ மூன்று கோவிலுக்கும் செல்ல திட்டமிட்டீர்கள் என்றால் கூடவே அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று வாருங்கள். ஆன்மீகப் பயணமாக மட்டுமின்றி வார இறுதி நாட்களில் குடும்பத்தினருடன் சற்று மனநிறைவுடன் ஊர் சுற்ற யாருதான் விரும்ப மாட்டார்கள். சரி, நெல்லிக்குப்பம், பண்ருட்டியைச் சுற்றிலும் என்னவெல்லாம் இருக்குதுன்னு வாங்க பார்க்கலாம்.

rajaraman sundaram

என்னவெல்லாம் உள்ளது ?

என்னவெல்லாம் உள்ளது ?


கடலூர் மாவட்டம் முழுக்க சுற்றுலாத் தலங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இதில், வெள்ளி கடற்கரை, செயிண்ட் டேவிட் கோட்டை, பாடலீஸ்வரர் கோவில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி, சிதம்பரம் நடராஜர் கோவில், மாங்கிரோவ் காடு, திருவதிகை வீரடநேச்வர் கோவில், திருச்சோபுரம் சுவாமி கோவில் போன்றவை இப்பகுதியில் குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்களாகும்.

Shankaran Murugan

வெள்ளி கடற்கரை

வெள்ளி கடற்கரை


கடலூரில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வெள்ளி கடற்கரை. இந்தக் கடற்கரையில் உள்ள நூற்றாண்டு கடந்த கலங்கரை விளக்கத்தினைக் காணவும், அருகே அமைந்துள்ள பிரிட்டிஸாரின் புனித டேவிட் கோட்டை, அடர்ந்த அலையாத்திக் காடுகள் உள்ளிட்டவற்றைக் காணவே வருடத்தின் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும்.

Karthik

செயிண்ட் டேவிட் கோட்டை

செயிண்ட் டேவிட் கோட்டை


கெட்டிலம் நதிக்கரையில் அமைந்துள்ள செயிண்ட் டேவிட் கோட்டையை எழிகு யேல் என்ற இந்து வியாபாரி 17-ம் நூற்றாண்டில் கட்டினார். ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை மராத்தியர்களிடமிருந்து விலைக்கு வாங்கி சில வருடங்களுக்கு தங்களுடைய தலைமையகமாக பயன்படுத்தி வந்தனர்கள். அப்பொழுது இந்த கோட்டை ராபர்ட் கிளைவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த கோட்டையை பிரெஞ்சுப் படைகள் 1758 மற்றும் 1782-ம் ஆண்டுகளில் கைப்பற்றிய போதும் ஆங்கிலேயர்கள் திரும்பப் பெற்றனர். அழிவுகள் மற்றும் வரலாற்று சின்னங்களை தாங்கிக் கொண்டு கெட்டிலம் நதிகளில் நின்று கொண்டிருக்கும் இந்த கோட்டையை கண்டிப்பாக நீங்கள் தவறவிட்டுவிடக் கூடாது.

பாடலீஸ்வரர் கோவில்

பாடலீஸ்வரர் கோவில்


பாடலீஸ்வரர் என்றழைக்கப்படும் சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கும் பாடலீஸ்வரர் கோவில் மிகவும் புனிதமான சைவத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலின் வரலாறு சோழர்களின் காலத்தைச் சேர்ந்தது. பிற்காலத்தில் இந்தக் கோவில் பல்லவ மன்னர்கள் மற்றும் பாண்டிய வம்சத்தினரால் புணரமைக்கப்பட்டது. இந்த கோவிலின் நான்கு சுவர்களிலும் அப்பர் என்ற சைவத்துறவியின் சைவம் தொடர்பான கருத்துகளைக் காணலாம். அப்பரை கல்லைக்கட்டி கடலில் போட்ட போதும் அவர் சிவபெருமானின் திருநாமத்தை உச்சரித்தவண்ணமாக கடலில் நீந்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

Nsmohan

நெய்வேலி பழுப்பு நிலக்கரி

நெய்வேலி பழுப்பு நிலக்கரி

கடலூரிலுள்ள நெய்வேலியில் நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ளன. இங்கு கிடைக்கும் நிலக்கரி எரிபொருள் இரண்டு அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலக்கரியிலிருந்து உரங்கள் மற்றும் குக்கிங் கோல் ஆகியவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன. மிகப்பெரிய திறந்தவெளி அச்சு சுரங்கத்தையுடைய இடமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி மையம் விளங்குகிறது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை அறிய ஆவலாக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக இவ்விடத்திற்கு சென்று வாருங்கள்.

Justinvijesh

சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்


நகரின் மையப்பகுதியில் ஒரு பிரமாண்ட நீள்சதுர அமைப்பில் வீற்றிருக்கும் இந்த கோவிலின் ஒட்டுமொத்த வளாகமும் கோட்டைச்சுவர்கள் போன்று 10 மீட்டர் உயரம் கொண்ட கருங்கல் சுவர்களால் பிரிக்கப்பட்ட அடுத்தடுத்த பிரகாரங்களாக கீழிறங்கி கொண்டே செல்கிறது. அதாவது கோயிலின் கருவறை அமைப்பு தரைமட்டத்திற்கு கீழே பாதாளவெளியில் வீற்றிருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இது நாடாண்ட சோழ வம்சத்தின் அடையாளச்சின்னம். அறத்துக்கும் ஆன்மீகத்துக்கும் திராவிட பூமியின் முன்னோர்கள் அளித்துச்சென்ற அங்கீகாரம்.

Serge Duchemin

மாங்கிரோவ் காடு

மாங்கிரோவ் காடு

பிச்சாவரம் மாங்கிரோவ் காடு கடலை ஒட்டி அமைந்திருக்கிறது. ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும் நிலம் சதுப்பு நிலங்களில் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது. அத்தகைய அலையாத்தி தாவரங்களைக் கொண்டதே மாங்கிரோவ் காடு. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பறவைகள் இங்கு வலசை வருகின்றன. செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் வரவு அதிகமாக இருக்கும். குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரை பிச்சாவரம் வரும் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.

Shankaran Murugan

திருவதிகை வீரடநேச்வர் கோவில்

திருவதிகை வீரடநேச்வர் கோவில்


திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் கடலூரில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிலொ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். மேலும், இந்த கோவில் தலத்தில் உள்ள சித்தி விநாயகர் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை கொண்டவர். எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்க சாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும் என்பது தொன்நம்பிக்கை.

Logic riches

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

சென்னையில் இருந்து கடலூரை அடைய கடற்கரை சாலையில் பாண்டிச்சேரி வழியாக பயணித்தால் சுமார் 176 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலூரை அடையலாம். அல்லது, மேல்மருவத்தூர் வழியாக 185 கிலோ மீட்டர், காஞ்சிபுரம் வழியாக 219 கிலோ முட்டர் பயணித்தும் கடலூரை அடையலாம். ராமேஷ்வரம் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், திருச்சி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரல் சேவைகளும் சென்னையில் இருந்து கடலூருக்கு உள்ளது.

Moshikiran

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்