» »தமிழ்புத்தாண்டில் இந்த மூன்று ராசிக்காரர்களையும் செல்வ செழிப்பாக்கும் கோயில்கள் !

தமிழ்புத்தாண்டில் இந்த மூன்று ராசிக்காரர்களையும் செல்வ செழிப்பாக்கும் கோயில்கள் !

Written By: Sabarish

தமிழ் நாட்காட்டி ராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேஷத்தில் சூரியன் நுழையும் சித்திரையே தமிழ் ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்படுகிறது. புத்தாண்டு பிறக்கும் போது ரிஷப லக்னம் மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசு ராசியில் செவ்வாய் சனி, மகரத்தில் கேது, மீனம் ராசியில் சந்திரன், புதன் என இடம்மாறுகிறது. அவ்வாறு ராசி நட்சத்திரங்கள் இடம்மாறும் பொழுது எந்த ராசிக்காரர்கள் எந்தக் கோவிலுக்கு போய் வழிபட வேண்டும் என தெரியுமா ?

கடகம் டூ அடுத்த மூனு ராசிக்காரங்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் 'ஜாக்பாட்'.! #AstrologyTemple2

மேஷம்- மிதுனம்

மேஷம்- மிதுனம்


மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கும் அவரவர்களுக்கு என தனி கோவில்கள் உள்ளன. இவற்றில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்கள் கீழே வரும் திருத்தலங்களுக்கு சென்று வழிபட்டு வர இந்த வருடத்திலேயே நீங்கள் உட்சத்தை அடையலாம். சரி வாருங்கள், அவை எந்தக் கோவில், எங்கே உள்ளது என பார்க்கலாம்.

Ajayreddykalavalli

மேஷம்- சுப்பிரமணிய சுவாமி கோவில்

மேஷம்- சுப்பிரமணிய சுவாமி கோவில்


மேஷ ராசி உடையோர் மதுரை மாவட்டம், சோலைமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில்குச் சென்று தமிழ்புத்தாண்டு அன்று வழிபட்டு வர குருபகவான் மூலம் அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகள் உங்களது வீட்டில் நடைபெறும். வியாபாரத்திலும், பிற உத்தியோகத்திலும் கூடுதல் இலாபத்தை பெற்று செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியடைவீர்.

Ssriram mt

என்ன சிறப்பு ?

என்ன சிறப்பு ?


முருகனின் அறுபடை வீடுகளில் இக்கோவில் ஆறாவது வீடாகும். இங்கு கோவில் சன்னதியில் மூலவரான முருகன் தனது தம்பதியினருடன் காட்சியளிக்கிறார். திருமனத் தடை, குழந்தை பேறு உள்ளிட்டவற்றிற்கும் இங்கு பக்தர்கள் வழிபட்டுச்செல்கின்றனர்.

Ssriram mt

திருவிழாக்கள்

திருவிழாக்கள்


தமிழ்வருடப் பிறப்பு, கார்த்திகை, ஆவணி, முருகனுக்கு ஏற்ற கந்தசஷ்டி, பங்குனி உள்ளிட்ட சிறப்பு தினங்களில் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான முருகன் பக்தர்கள் இங்கே குவிவது வழக்கம்.

Raji.srinivas

எப்போது செல்ல வேண்டும் ?

எப்போது செல்ல வேண்டும் ?


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருத்தலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடை திறக்கப்படும். அதற்கு ஏற்றாவாறு உங்களது பயணத்தை திட்டமி வேண்டும்.

Jothi Balaji

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து மதுரைக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி இணைப்பு ரயில், ராமேஷ்வரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் சிறப்பு ரயில், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், திருக்குறல் அதிவேக ரயில் என ஏராளமான ரயில் சேவைகள் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எக்மோரில் இருந்து உள்ளது. விமான நிலையமும் இங்கே அமைந்துள்ளது. மதுரையில் இருந்து 24 கிலோ மீட்டர் உள்ளூர் பேருந்து அல்லது தனியார் வாகம் மூலம் பயணித்தால் கோவிலை அடையலாம்.

TAMIZHU

ரிஷபம்- முத்துமாரி துர்கை அம்மன்

ரிஷபம்- முத்துமாரி துர்கை அம்மன்


ரிஷப ராசி உடையோருக்கு சூரியன் இம்மாதம் 14ம் தேதியன்று பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார். தொடர்ந்து சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார். செவ்வாய் புதன், குரு, சனி, ராகு, கேது என மாற்றம் ஏதுமில்லாவிட்டாலும் குடும்பச் செலவுகள் உள்ளிட்ட சில தடங்கள்கள் மட்டும் தமிழ்புத்தாண்டில் உருவாவதால் தஞ்சாவூர், புன்னைநல்லூரில் உள்ள முத்துமாரி துர்கை அம்மனை வழிபட தேடிவந்த பிரச்சனைகள் விலகி ஓடும். அதுமட்டுமின்றி கடின உழைப்பும், தொலைநோக்குச் சிந்தனையும் என உங்களை நிரூபிக்கும் காலமாக இது இருக்கும்.

Alain6963

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


பசுமை சூழ்ந்த வயல்களுக்கு நடுவே சோழர்களால் கட்டப்பட்ட இத்திருத்தலத்தில் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார் மாரியம்மன். சன்னதியில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது என்பதால் பிற கோவில்களைப் போல அபிஷேக வழிபாடுகள் நடத்தப்படுவதில்லை. மாறாக தைலக் காப்பு உள்ளிட்டவை படைக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது.

Harshap3001

திருவிழா

திருவிழா


வருடத்தின் சிறப்பு நாட்களான தமிழ் வருடப் பிறப்பு, பொங்கள், சதுர்த்தி உள்ளிட்ட தினங்களின் போது கோவிலில் விழா நடைபெறுகிறது. இதில், மிகவும் பிரபலமானது முத்துப்பலக்கு பெருவிழா. சுற்றுவட்டார ஊர் பொதுமக்கள் ஆயிரக் கணக்கானோர் இதில் பங்கேற்று வழிபாடு நடத்துவர்.

Saba rathnam

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து, ராமேஷ்வரம் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், மதுரை எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், திருச்சி எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளது. தஞ்சாவூரின் மிக அருகில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.

Josephben12345

மிதுனம்- வரதராஜப் பெருமாள்

மிதுனம்- வரதராஜப் பெருமாள்


தமிழ்புத்தாண்டின் தொடக்கம் முதல் 2019 பிப்ரவரி வரை ராகு இரண்டிலும், கேது எட்டிலும் தொடர்கிறது. எனவே, கடலூர் மாவட்டம், கண்ணங்குடியில் உள்ள அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்று மூலவருக்கு பூஜை செய்து வர சித்திரை, ஆவணி, கார்த்திகை மாதங்களில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சேர் மார்க்கெட், பங்குதாரர்கள் உள்ளிட்டவை மூலம் நல்ல வரவு கிடைக்கும்.

Ssriram mt

தலசிறப்பு

தலசிறப்பு


கண்ணங்குடி வரதராஜப் பெருமாள் கோவிலில் அம்மனாக ஸ்ரீதேவி, பூதேவி ஆகியார் வீற்றுள்ளனர். அளவில் சிறிய கோலாக காணப்பட்டாலும் கோவிலின் பின் உள்ள தீர்த்தக் குளம் பல்வேறு வரன்களை வழங்கக் கூடியதாக தொன்நம்பிக்கை நிலவுகிறது. காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும, மாலை 6 முதல் 8 மணி வரையிலும் நடை திறக்கப்படுகிறது.

Ssriram mt

வழிபாடு

வழிபாடு


குரு, சனி, ராகு, கேது உள்ளிட்ட நட்சத்திர பெயர்சிகளாலும், கிரக இடமாற்றத்தாலும் ஏற்படும் தீமைகளில் இருந்த விடுபடவும், திருமணத் தடை நீங்கி, ஐஸ்வர்யம் உண்டாக மூலவருக்கு துளசி மாலை அணிவித்து, படையல் வைத்து வழிபடுதல் சிறப்பு.

Fahad Faisal

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


ராமேஷ்வரம் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், திருச்சி, வாரணாசி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மூலம் சென்னையில் இருந்து கடலூரை அடையலாம்.

கடகம் டூ அடுத்த மூனு ராசிக்காரங்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் 'ஜாக்பாட்'.! #AstrologyTemple2

Moshikiran

தமிழ்புத்தாண்டில் இந்த மூன்று ராசிக்காரர்களையும் செல்வ செழிப்பாக்கும் கோயில்கள் !

கடகம் டூ அடுத்த மூனு ராசிக்காரங்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் 'ஜாக்பாட்'.! #AstrologyTemple2

துலாம் டூ தனுசு ராசிக்காரங்களே புத்தாண்டு உங்களுக்கு என்ன தரப்போகுது தெரியுமா? .. #Astrotemple3

மேட்டூர் அணை கட்டாமல் இருக்க 1 லட்சம் பவுன் நஷ்ட ஈடு கேட்ட விவசாயிகள்! #kaviri

மோடியோட ஊர்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்