Search
  • Follow NativePlanet
Share
» »தீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன்... எங்க இருக்கார் தெரியுமா..?

தீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன்... எங்க இருக்கார் தெரியுமா..?

PC : Ssriram mt

எல்லா டாக்டரையும் பாத்துட்டேனுங்க, மாத்திர மருந்துன்னு நல்லாதா சாப்டுட்டு இருக்கேன்... ஆனா என்னன்னுதா தெரியல. இந்த நோயிதா என்னைய விட்டுப் போக மாட்டிங்குது... இப்படியெல்லாம் மாதக்கணக்கா புலம்பிட்டு இருக்கீங்கலா ?. என்னதான் ஆயிரக் கணக்குல செலவழிச்சும் நோய் மட்டும் தீர்ந்த பாடில்லையா?. கவலைய விட்டுட்டு, இதயையும் ஒரு முறை ட்ரை பன்னிதான் பாருங்களேன்.

இந்த மாதம் அதிகம் படிக்கப்பட்ட கட்டுரைகள் கீழே

என்ன அது ?

என்ன அது ?

PC : Ssriram mt

வைத்தியநாதன் என்ற பெயரில் அருள்பாலிக்கும் சிவனை வணங்கினால் தீராதநோய்களும் தீரும் என்பது தொன்நம்பிக்கை. அவ்வாறாக நோய் நொடியால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வருவோர் பெரும்பாலும் வேண்டிச் செல்வது வைத்தீஸ்வரனையே.

தோஷம் நீக்கும் வல்லமை

தோஷம் நீக்கும் வல்லமை

PC : Ssriram mt

நோய் மட்டும் இல்லைங்க, திருமண தோஷம், செவ்வாய் தோஷம் என என்ன தோஷத்துனால நீங்க பாதிச்சு வருத்தப்பட்டுட்டு இருக்கீங்களோ அத எல்லாத்தையும் விலக்கி உங்கள செம்மைப்படுத்திடுவார் இந்த வைத்தியநாதன். இதனாலதான் என்னவோ, எமனையே காக்க வைக்கும் சக்தி படைத்த வைத்தீயநாதன் என எல்லாராலும் போற்றப்படுகிறார் இந்த மூலவர்.

எங்க இருக்கு தெரியுமா ?

எங்க இருக்கு தெரியுமா ?

PC : Mazhavai

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அடுத்து அமைந்துள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இது அப்பகுதியில் சிவன் கோவில் என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிறது. கடலங்குடியில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் கும்பகோணம்- சீர்காழி மாநில நெடுஞ்சாலையில் இக்கோவில் அமைந்துள்ளது.

தல வரலாறு

தல வரலாறு

PC : Nivedita

நவ கிரகங்களுள் ஒன்றான அங்காரகன், தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போது சிவன் வைத்தியநாதராக உருப்பெற்று அவரின் நோய்தீர்த்துள்ளார். இதனாலேயே இந்தக் கோவில் நவ கிரகங்கக் கோவில்களில் செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோவிலாக விளங்குகிறது. மேலும், சடாயு, வேதம், முருகவேள், சூரியனாம் உள்ளிட்ட நால்வரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியதால் இது புள்ளிருக்குவேளூர் என்றும் தனிச்சிறப்புடனும் அழைக்கப்படுகின்றது.

நோய் தீர்க்கும் தீர்த்தக் குளம்

நோய் தீர்க்கும் தீர்த்தக் குளம்

PC : Ssriram mt

வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள குளத்தில் நீராடி மூலவரை வழிப்பட்டால் நோய் மட்டும் நீங்காது, செவ்வாய் தோஷம், மாங்கல்யதோஷம் நீங்குவதோடு குழந்தை வரம் உள்ளிட்ட சகலவிதமான பாக்கியங்களும் கிடைக்கும் என பக்தர்களால் போற்றப்படுகிறது. முருக பெருமான் சூரபத்மனை வதைக்க யுத்தம் செய்தபோது பலவிதமான காயங்களுடன் அவதிப்பட்டு, இங்குள்ள குளத்தில் நீராடி, வைத்தியநாத சுவாமியை வழிபட்டுள்ளார். இதனால், காயங்கள் மறைந்து முத்துக்குமார சுவாமியாய் இன்றும் இங்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் முருகன்.

சுற்றுவட்டார ஆன்மீகத் தலங்கள்

சுற்றுவட்டார ஆன்மீகத் தலங்கள்

PC : Krishna Kumar

சீர்காழி உன்மையில் ஆன்மீகத் தலங்கள் நிறைந்த பகுதியாக திகழ்கிறது. இந்த ஊரைச் சுற்றிலும் பழமையான பல இந்துக் கோவில்கள் அமையப்பெற்றுள்ளன. அவற்றில் சீர்காழி சட்டைநாதசுவாமி கோவில், செங்கமேடு திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோவில், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவில், திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில், வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில், திருமணஞ்சேரி மற்றும் திருவாழி - திருநகரி விண்ணவர் கோவில்கள் பிரசிதிபெற்றவையாகும்.

எங்க இருக்கு தெரியுமா ?

எங்க இருக்கு தெரியுமா ?

PC : Map

சென்னையில் இருந்து கடற்கரை மார்க்கமாக 254 கிலோ மீட்டர் தூரத்திலும், விழுப்புரம் வழியாக 272 கிலோ மீட்டர் தூரத்திலும் சிதம்பரத்திற்கு அடுத்து அமைந்துள்ளது சீர்காழி. இந்தப் பயணத்தை ஒரு பொழுதுபோக்கு பயணமாக மாற்ற விரும்பினால் மாமல்லபுரம்- கடலூர் கடற்கரை மார்க்கமாக 241 கிலோ மீட்டர் பயணிப்பது சிறந்தது.

இந்தியாவில் இப்படியும் ஓர் அற்புதத்தீவு - ஆயிரம் ரூபாயில் அசத்தல் பயணம் போலாமா?

கன்னியாகுமரிக்கு மிக அருகில் இப்படி ஒரு கோவா பீச் இருக்கு தெரியுமா?

உலகமே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?

குடும்ப சாபம் இப்போதே நீங்க வேண்டுமா ?. அப்ப இந்த கோவிலுக்கு போங்க

கடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா? - ஆயிரமாயிர வருட நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள்

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more